Connect with us

Reviews

பில்லா 2 – விமர்சனம்

Published

on

தயாரிப்பு – இன் என்டெர்டெயின்மென்ட் இந்தியா லிமிடெட்

வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் லிமிடெட்

இயக்கம் – சக்ரி டோலெட்டி

இசை – யுவன் ஷங்கர் ராஜா

ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர்

படத்தொகுப்பு – சுரேஷ் அர்ஸ்

வசனம் – இரா முருகன், முகம்மது ஜாபர்

பாடல்கள் – நா.முத்துக்குமார்

நடிப்பு – அஜித்குமார்,பார்வதி ஓமனகுட்டன், புருணா அப்துல்லா, சுதன்ஷு பான்டே, வித்யுத் ஜம்வால் மற்றும் பலர்.

இன்றைய தேதியில் அஜித் போன்ற ஒரு மிகப் பெரிய மாஸ் ஓபனிங் உள்ள ஒரு ஹீரோ கிடைத்தால் ஒரு இயக்குனர் என்ன செய்வார், அருமையான கதையை தேர்ந்தெடுத்து, அட்டகாசமான திரைக்கதை அமைத்து , திரையரங்குகளில் ரசிகர்களின் ஆரவாரத்தை அள்ளிக் கொள்வார். இப்படியெல்லாம் இயக்குனர் சக்ரி டோலெட்டி செய்திருக்கிறாரா என்றால், அது ஒரு கேள்விக்குறிதான். ஒரு படத்தின் ஹீரோ ஒரு கேங்ஸ்டராக வர, ஆசைப்படுகிறார் என்றால், அவர் அப்படி மாறத் துடிப்பதற்கான மிகப் பெரிய ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணம் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். குடும்பத்தாரை இழந்திருக்க வேண்டும், அல்லது நண்பர்களை இழந்திருக்க வேண்டும், அல்லது காதலியை இழந்திருக்க வேண்டும், இப்படி ஏதோ ஒன்று காரணமாக அமைய வேண்டும்.

இந்த படத்தைப் பொறுத்த வரையில் அகதியாக இந்தியவிற்குள் வரும் அஜித், ஏன் கேங்ஸ்டராக மாறுகிறர் என்பதற்கு அழுத்தமான காரணம் எதுவுமில்லை. திடீர் திடீரென வெளிநாட்டிற்கு பயணிக்கும் காட்சிகளும், எடுத்ததுக்கெல்லாம் கத்தியாலோ , துப்பாக்கியாலோ சுட்டுக் கொண்டேயிருப்பது சரிதானா என கேள்வியை எழுப்பி விடுகிறது.

சரி, கதைக்கு வருவோம். இந்தியாவிற்குள் அகதியாக வருகிறார் அஜித். வந்து சேரும் அகதி முகாமிலேயே அவருடைய கோபத்தை வெளிப்படுத்த ஆரம்பிக்கிறார். அதனால் அகதி முகாமின் பாதுகாப்பு அதிகாரியை பகைத்துக் கொள்கிறார். அந்த அதிகாரி அஜித்தை பெரிய சிக்கலில் மாட்டி விட முயற்சிக்க அஜித், அதிலிருந்து தப்பி, அந்த சிக்கலையே அவருடைய வளர்ச்சிக்கு அச்சாரமாக அமைத்துக் கொள்கிறார். கடத்தல் வேலைகளை செய்யும் இளவரசுவிற்கு துணையாக இருந்து படிப்படியாக உயர்ந்து கோவாவில் இருக்கும் கடத்தல் மன்னனான சுதன்ஷு பான்டே கும்பலில் சேர்ந்து விடுகிறார். அவருடன் இருந்து சர்வதேச கடத்தல் வேலைகளை செய்யும் வித்யுத் ஜம்வாலுடன் ஆயுதக் கடத்தல் தொழிலில் ஈடுபட முயற்சிக்கிறார். இது பிடிக்காத சுதன்ஷு பான்டே அஜித்தையே கொலை செய்ய முயல்கிறார். ஆனால் அஜித், சுதன்ஷுவை கொன்று விட்டு, அவர் செய்த வேலைகளை இவர் செய்ய ஆரம்பிக்கிறார். சுதன்ஷுவுடன் வலது கையாக இருந்து வந்த மனோஜ் கே.ஜெயன், சர்வேதச கடத்தல் காரரான வித்யுத்துடன் கூட்டு சேர்ந்து அஜித்தை அழிக்கத் துடிக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை.

டேவிட் பில்லாவாக அஜித். வழக்கம் போல அவருடைய ஸ்டைலிஷான நடிப்பால் திரையை ஆக்கிரமித்துக் கொள்கிறார். அவருடைய பேச்சும், நடிப்பும் வழக்கம் போலவே அட்டகாசம்தான். ஆனால் அனைத்துமே ஏதோ வந்து போவது போலவே ஒரு உணர்வு. எடுத்ததுக்கெல்லாம் சுட்டுக் கொண்டேயிருப்பது ஒரு கட்டத்தில் சலிப்பை வரவழைத்து விடுகிறது. அஜித், இப்படி கேங்ஸ்டராக மாறுவதற்கு சரியான காரணத்தை வைத்திருந்தால் இதெல்லாமும் நமக்கும் பிடித்திருக்கும் போல.

அஜித்துக்கு ஜோடி வேண்டுமென்பதற்காக பார்வதி ஓமனகுட்டன். நடிக்க அதிக வாய்ப்பில்லை. இந்திய அழகிப் பட்டம் வென்றவர், ஆனால் திரையில் மிகவும் சாதாரணமாகத்தான் தெரிகிறார்.

ஒரு கேங்ஸ்டர் கூட்டத்தில் அரைகுறை ஆடையுடன் ஒரு பெண் இருக்க வேண்டும் என்ற வழக்கத்திற்கு புரூணா அப்துல்லா.

சுதன்ஷு பான்டே, வித்யுத் ஜம்வால், தினேஷ் லம்பா, மனோஜ் கே. ஜெயன், இளவரசு என நீ…….ண்ட நட்சத்திரப்பட்டியல்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பின்னணி இசை அமர்க்களம். மதுரை பொன்னு பாடல் மட்டுமே முழுமையாக வருகிறது.

ஆரம்பத்தில் மட்டுமே நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். போகப் போக நம்மையே துப்பாக்கியால் கொன்று விடுவார்களோ என பயப்படும் அளவிற்கு நூற்றுக்கணக்கான கொலைகள்..

இன்னும் பெயரிப்படாத அஜித்தின் அடுத்த படமாவது அஜித்தின் பெயரை ஓங்கி ஒலிக்கச் செய்யட்டும்.

Movie Reviews

சிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்

4 Tamil Cinema – Rating – 3.25/5

Published

on

By

சிவப்பு மஞ்சள் பச்சை - விமர்சனம் - 4 Tamil Cinema

கதை

அப்பா,  அம்மா இல்லாததால் சிறு வயதிலிருந்தே அத்தையின் ஆதரவில் தனியாக வளர்ந்து வருபவர்கள் அக்கா லிஜிமோள் ஜோஸ், தம்பி ஜி.வி.பிரகாஷ்குமார். ஜிவி பிரகாஷ் பைக் ரேசில் அக்காவுக்குத் தெரியாமல் அடிக்கடி கலந்து கொள்பவர். பைக் ரேஸ் ஓட்டி வரும் ஜிவி பிரகாஷை ஒரு நாள் டிராபிக் இன்ஸ்பெக்டரான சித்தார்த் பிடித்து அவமானப்படுத்துகிறார். அதனால் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் ஜிவி. மறுநாள் லிஜோமோளைப் பெண் பார்க்க வருகிறார்கள். அங்கு அக்காவைப் பெண் பார்க்க வந்தது சித்தார்த் என்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார் ஜிவி. சிறு வயதில் அக்காவுக்கு தான்தான் மாப்பிள்ளை பார்ப்பேன் என்று சத்தியம் வாங்கியதை நினைத்து அந்த திருமணத்தைத் தடுக்க நினைக்கிறார். ஆனால், அதையும் மீறி திருமணம் நடக்கிறது. அதன் பின்பாவது மாமனும், மச்சானும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.

நடிப்பு

ஒரு எமோஷனல் திரைப்படமாக இருப்பதால் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவருக்குமே நடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை அனைவருமே சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பொறுப்பான டிராபிக் இன்ஸ்பெக்டராக முதல் முறையாக அனைவரையும் கவரும் விதத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் சித்தார். அவரது நடிப்பில் வழக்கமா இருக்கும் ஒரு அலட்டல் இந்தப் படத்தில் துளியும் இல்லை. ஜிவி பிரகாஷின் நடிப்புக்கு இந்தப் படம்தான் திருப்புமுனையாக அமையும். அக்காவுக்குப் பொறுப்பான தம்பி. அக்கா மீது அவ்வளவு பாசம். ஆனால், பைக் ரேஸில் மட்டும் லோக்கலாக இறங்கும் இளைஞர் என மதன் கதாபாத்திரத்தில் அப்படியே தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.

ஜிவி பிரகாஷின் அக்காவாக லிஜோமோள் ஜோஸ். யதார்த்தமான முகம், யதார்த்தமான நடிப்பு. தமிழ் சினிமாவில் குடும்பத்து கதாநாயகியாக மிளிர்வதற்கு அனைத்துத் தகுதிகளும் அவருக்கு இருக்கிறது. கண்களிலேயே அதிகம் பேசுகிறார். ஜிவி பிரகாஷ் ஜோடியாக காஷ்மிரா. கிடைத்த குறைவான வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அத்தையாக ‘நக்கலைட்ஸ்’ தனம், தமிழ் சினிமாவுக்குப் புதிய அம்மா வரவு.

இசை, மற்றவை

சித்துகுமார் இசையில் சில பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. எமோஷனல் படத்தில் டெக்னிக்கல் விஷயங்கள் எப்படிஇருக்க வேண்டுமோ அப்படியே இருக்கின்றன.

+

மாமன் – மச்சான் உறவு பற்றிய கதை, அக்கா – தம்பி பாசம், அனைவரின் இயல்பான நடிப்பு

சினிமாத்தனமான கிளைமாக்ஸ்

Continue Reading

Movie Reviews

மகாமுனி – விமர்சனம்

Published

on

By

மகாமுனி - விமர்சனம் - 4 Tamil Cinema

கதை

சிறு வயதிலேயே பிரிந்து போன அண்ணன் தம்பி இரட்டையர்களாக இரு வேடங்களில் ஆர்யா. ஒருவர் சென்னைக்கு அருகில் கூலிக் கொலைகாரனாக இருக்கிறார். மற்றொருவர் ஈரோடு அருகில் ஒரு கிராமத்தில் பக்திமானாகவும், இயற்கை விவசாயியாகவும் இருக்கிறார். ஒரு கொலை வழக்கில் குற்றவாளியான கொலைகாரன் ஆர்யாவை போலீஸ் துரத்த, பக்திமான் ஆர்யா அவர்களிடம் தவறாக சிக்கிக் கொள்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நடிப்பு

இரு வேடங்களில் ஆர்யா. இரண்டுமே ஒன்றுக்கொன்று எதிரான குணநலன் கொண்ட கதாபாத்திரங்கள். ‘நான் கடவுள்’ படத்திற்குப் பிறகு ஆர்யாவின் நடிப்புத் திறமை இந்தப் படத்தில்தான் மீண்டும் வெளிப்பட்டிருக்கிறது. ஆர்யாவின் முக்கியமான பட வரிசையில் இந்தப் படத்திற்கும் நிச்சயம் இடம் உண்டு.

கொலைகாரன் ஆர்யாவின் மனைவியாக இந்துஜா. காதலித்து மணந்து கொண்டவர். அன்பான மனைவியாக அவ்வளவு யதார்த்தமாக நடித்திருக்கிறார். பக்திமான் ஆர்யாவைக் காதலிக்கும் பெரியார் படத்தை தன் அறையில் வைத்திருக்கும் ஜர்னலிசம் படிக்கும் பெண்ணாக மகிமா நம்பியார். முற்போக்கு சிந்தனை கொண்டவர். இவரும் இதுவரை நடித்த படங்களிலிருந்து மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இசை, மற்றவை

ஜிப்ரான் பின்னணி இசை, அருண் பத்மாநாபன் ஒளிப்பதிவு இரண்டுமே படத்தின் தரத்தை இன்னும் உயர்த்துகின்றன.

+

அனைவரின் நடிப்பு…

கொஞ்சம் மெதுவாக நகரும் திரைக்கதை.

 

Continue Reading

Movie Reviews

சாஹோ – விமர்சனம்

4 Tamil Cinema Rating – 2.75/5

Published

on

By

சாஹோ - விமர்சனம் - 4 Tamil Cinema

கதை

மிக புத்திசாலி திருடனான பிரபாஸ், அவரைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனி போலீஸ் படைக்குள் நுழைந்து தன்னை போலீஸ் அதிகாரி என நம்ப வைத்து, நீல் நிதின் முகேஷ்தான் திருடன்  என போலீசை நம்ப வைக்கிறார். உலகின் முக்கியமான கேங்ஸ்டர்களின் பணம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் லாக்கரைத் திறக்க உதவும் பிளாக் பாக்ஸ் ஒன்றை திருடவே பிரபாஸ் அப்படி நாடகமாடுகிறார். அதை எடுத்த பின் அவர் வெளிநாட்டிற்குத் தப்பிவிடுகிறார். அனைத்து உண்மையும் தெரிந்து போலீஸ் அவரைப் பிடிக்க திட்டம் போடுகிறார்கள். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

நடிப்பு

‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்து வெளிவந்துள்ள படம். படத்தில் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், அந்த மேன், இந்த மேன் என பல ஹாலிவுட் படங்களில் பார்த்த சூப்பர் ஹீரோக்களை அவர் ஒருவராகவே இந்தப் படத்தில் காட்டுகிறார். கிளைமாக்ஸில் பறந்து பறந்து, நிஜமாகவே ஒரு கருவி மூலம் பறந்து சண்டை போடுகிறார். லாஜிக்கையெல்லாம் பார்க்கவில்லை என்றால் பிரபாஸையும் படத்தையும் ரசிக்கலாம். நாயகி ஷ்ரத்தா கபூர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கும் பிரபாஸுக்கும் ஜோடிப் பொருத்தம் நன்றாகவே இருக்கிறது. நாயகனுக்கு உரிய கதையில் நாயகிக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். வில்லன்களில் சுன்கி பாண்டே, அருண் விஜய் இருவருக்கு மட்டுமே அதிக வாய்ப்பு. ஹேக்கர் ஆக இருந்து பிரபாஸுக்கு உதவும் கதாபாத்திரத்தில் முரளி ஷர்மா.

இசை, மற்றவை

சங்கர் எஷான் லாய், தனிஷ்க் பாக்சி, குரு ரந்தவா, பாட்ஷா என ஆறு பேர் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். ஜிப்ரான் பின்னணி இசையமைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் மதி, ஆக்ஷன் இயக்குனர்கள் கென்னி பேட்ஸ், பெங் ஷான்ங், பாப் பிரௌன், ஸ்டன்ட் சில்வா, ராம் லட்சுமண், திலீப் சுப்பராயன் ஆகியோர் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். இவர்கள்தான் இந்தப் படத்தைக் காப்பாற்றுபவர்கள்.

+

ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள், விஷுவல் எபெக்ட்ஸ், படத்தின் பிரம்மாண்டம்.

அழுத்தமான கதை இல்லை, எமோஷனலான காட்சிகள் இல்லை, ஆரம்பத்தில் வரும் நீளமான சண்டைக் காட்சி.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: