Connect with us

Tamil Cinema News

பெண்களைக் கொண்டாடும் படம் ‘96’, திருமுருகன் காந்தி பாராட்டு

Published

on

thirumurugan gandhi

மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, திரிஷா, படத்தின் இயக்குநர் பிரேம்குமார், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக் குழுவினர்களுடன் இயக்குநர்கள் சேரன், பார்த்திபன், சமுத்திரக்கனி, பாலாஜி தரணீதரன், பி எஸ் மித்ரன், லெனின் பாரதி மற்றும் சமூகப் போரளியும், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

திருமுருகன் காந்தி பேசுகையில்,

“இந்த வெற்றி விழாவிற்கு இயக்குநர் பிரேம்குமார் ஏன் எனக்கு அழைப்பு விடுத்தார் என்று தற்போது வரை புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் நாங்கள் சனிக்கிழமை ராஜபக்சேவிற்கு கருப்புக் கொடி காட்ட வேண்டும். ஞாயிற்றுக் கிழமை மோடிக்கு கருப்பு கொடி காட்டவேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் சூழலில் 96 படத்தின் நூறாவது நாள் விழாவில் என்னை கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். எங்களுக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

என்னுடைய தோழர்களின் வேண்டுகோளுக்கிணங்க, சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் நான் பார்த்த முதல் திரைப்படம் 96. படம் அற்புதமாக இருந்தது. ஆனால் இந்தப் படத்தில் இன்னும் சில விசயங்கள் சொல்லியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.

காதல் என்பது ஒரு அற்புதமான விசயம். இன்று நாம் பல செய்திகளை கேள்விப்படுகிறோம், பார்க்கிறோம். காதலித்த பெண்ணையே கொலை செய்து விடுகிறார்கள். ஆசிட் வீசுகிறார்கள். காதலித்த பெண்ணை எப்படி அப்படி செய்ய முடியும் ?.

எங்கே கோளாறு இருக்கிறது என்பதை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம். இது போன்ற தகவல்கள் ஊடகங்களில் அதிகமாக வெளியாகும் சமயத்தில், எப்படி காதலை கொண்டாடுவது, எப்படி பெண்களைக் கொண்டாடுவது, எப்படி இயற்கையை கொண்டாடுவது போன்றவற்றை பேசும் 96 படம் வெளியாகியிருக்கிறது.

காதல் என்பது மனிதர்களுக்குள் மட்டுமே வரக்கூடிய உணர்வு அல்ல, இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களிடத்திலும் இருக்கும் அடிப்படை குணாதிசயம்.

படத்தில் இடம் பெற்றிருக்கும் வசனத்தைப் போல் காதல் என்பது காலத்துடன் பிணைத்துக் கொண்டிருக்கிறது. காதல் என்பது காலத்தின் இனிமை, காதல் என்பது நேசத்துடன் கூடிய ஒரு உணர்வு.

படத்தில் நிகழ்காலம் முழுவதும் இரவிலும், கடந்த காலம் முழுவதும் பகலிலும் நடைபெறும் காட்சிகளாக இடம் பெற்றிருக்கும். இதுவும் நன்றாக இருந்தது. காதல் என்பது ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ முடிவதில்லை. அதையும் கடந்து அன்பு என்பது இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதை சொல்லியிருக்கிறார். அதை படத்தின் முதல் பாடலிலேயே தெளிவாக சொல்கிறார் இயக்குநர்.

காதலித்த பெண் கிடைக்கவில்லை என்றால்அந்த ஆண் வெறுப்புக்கு ஆளாகாமல், வன்மத்திற்கு இடம் கொடுக்காமல் இயற்கையை நேசிப்பவராக, பேரன்பு மிக்கவராக மாறுவதை அந்த முதல் பாடல் எடுத்துக் காட்டும் போது நாமும் மாறிவிடுகிறோம்.

அண்மைக் காலத்தில் எனக்கு பிடித்த நடிகராக விஜய்சேதுபதி இருக்கிறார். இதைத்தான் ஒரு பேட்டியிலும் சொன்னேன். இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக அவர் இருக்கிறார்.

இன்றைய சம கால இளைஞர்கள் என்ன மாதிரியான பிரச்சனைகளை எல்லாம் சந்திக்கிறார்களோ, எதையெல்லாம் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு எதுவெல்லாம் மேனரிஸமாக இருக்கிறதோ, எதெல்லாம் கனவாக இருக்கிறதோ அதையெல்லாம் திரையில் பிரதிபலிப்பவராக விஜய்சேதுபதி இருக்கிறார். இப்படிபட்ட ஒரு கலைஞனாகத்தான் விஜய்சேதுபதியை இந்தத் தருணத்தில் நான் பார்க்கிறேன்.

இன்றைய சினிமாவில் வரக் கூடிய ஹீரோக்கள் எல்லாம் சூப்பர் ஹியூமனாகவே இருக்கிறார்கள். ஆனால் விஜய் சேதுபதி நம்மைப் போன்ற சாதாரண மனிதராக திரையில் தோன்றுகிறார். அதனாலேயே அனைவராலும் நேசிக்கக் கூடிய கலைஞராக முடிகிறது. தற்போது மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் இவர்களைப் போன்றவர்கள் தான் மக்களிடத்தில் எளிதாக சென்றடைய இயலுகிறது.

திரிஷாவும் அற்புதமாக நடித்திருந்தார். இயக்குநருக்கும் என்னுடைய வாழ்த்துகள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது,

‘இரும்பு பிசிறாக நீளும்
நானிருக்க
நீ செல்லும் ரயில்’ என்ற அறிவுமதியின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

‘மல்லிகையின் வாசம்
மழையின் நேசம்
எதுவும் அதுவாக இல்லை.
எல்லாம் அவளின் நினைவுகளாகவே இருக்கிறது,” என்ற என்னுடைய நண்பரின் கவிதையும் நினைவிற்கு வருகிறது.

இன்றைய தேதியில் செல்போன் இருப்பதால் நாம் நினைத்ததை உடனடியாக பேசி விடுகிறோம். பிடித்ததையும், பேசிவிடுகிறோம். பிடிக்காததையும் பேசிவிடுகிறோம். ஆனால் செல்போன் இல்லாத காலத்தில் நாம் நினைத்ததை நேரடியாக சென்று சொல்லிய அல்லது சொல்லத் தவறிய அனுபவத்தை இந்த படம் அற்புதமாக பேசியிருக்கிறது.

இந்த படத்திற்கும் எங்களுக்கும் உள்ள தொடர்பு காதல் தான். நாங்கள் மனிதர்களைக் காதலிக்கிறோம். இயற்கையை நேசிக்கிறோம். அதனால் போராடுகிறோம். இது தான் உண்மை.” என்றார்.

விஜய் சேதுபதி பேசுகையில்,

“இந்த விழாவிற்கு திருமுருகன்காந்தி வருகை தந்திருப்பது எனக்கு பெரிய சர்ப்ரைஸ். நான் எதிர்பார்க்கவில்லை. அவரைக் காதலைப் பற்றிப் பேச வேண்டிய கட்டாயத்தை நாங்கள் அளித்துவிட்டோம். உங்களுடைய சிந்தனைக்கு நான் மிகப் பெரிய ரசிகன்.

நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் பாசம் சகோதரரைப் போல் இருக்கிறது. அது இன்னும் பரவவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். படித்த, புரிந்த, சிறந்த சிந்தனையாளரான நீங்கள், உங்களின் பேச்சு இன்னும் கமர்சியலாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது என்னுடைய வேண்டுகோள். என்னைத் தவறாக புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் பேசுகிறேன். எல்லா நல்ல விசயங்களும் அனைவரையும் சென்றடையவேண்டும். அது போய் சேரும் வகையில் உங்கள் பேச்சு இருக்க வேண்டும் என்று நான் உங்களின் ரசிகனாக எதிர்பார்க்கிறேன்.

இந்த படத்தை வெளியிட்ட செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘துக்ளக் ’ என்ற படத்தில் அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் நடிக்கிறேன்,”என்றார்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பார்த்திபன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, விஜய் சேதுபதியும் திரிஷாவும் மேடையேறி ஒருவரையொருவர் ஆரத் தழுவியது வருகைத் தந்திருந்த அனைவரையும் கவர்ந்தது.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மேடையில் இந்த படத்தின் ஜீவனாக இருந்த பின்னணியிசையை வாசித்து காட்டி ரசிகர்களை உற்சாகமடைய வைத்தார்.

Tamil Cinema News

தமன்னா நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’

Published

on

By

தமன்னா நடிக்கும் பெட்ரோமாக்ஸ் - 4 Tamil Cinema

ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் முதன்மைக் கதாநாயகியாக தமன்னா நடிக்கும் படம் ‘பெட்ரோமாக்ஸ்’.

பல வெற்றித் திரைப்படங்களை உலகெங்கும் விநியோகம் செய்த ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் நிறுவனம், இப்படத்தின் மூலம் முதல் முறையாக திரைப்படத் தயாரிப்பில் தடம் பதிக்கிறது. இப்படத்தை இயக்கும் ரோகின் வெங்கடேசன் ‘அதே கண்கள்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.

ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் தனது முதல் தயாரிப்பிலேயே பெண்களை முன்னிலைப்படுத்தும் ஒரு ஆழமான கதையை திகில் மற்றும் நகைச்சுவை கலந்து ஒரு ஜனரஞ்சகமான படமாக படைக்க இருக்கிறது.

நயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும் நோக்கில், பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்ற, பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். அந்த வரிசையில் முதல் படமாக இப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் யோகி பாபு, முனீஸ் காந்த், சத்தியன், காளி வெங்கட், மற்றும் சின்னத்திரை புகழ் டிஎஸ்கே, பிரேம், ஸ்ரீஜா, கே எஸ் ஜி வெங்கடேஷ், பேபி மோனிகா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை நிச்சயம் இருக்கும். அதைத் தீர்க்கும் நோக்கில் ஒவ்வொருவராக இணைந்து, இறுதியில் ஒரு பலமான கூட்டணியாகச் சேர்ந்து, தங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அந்த பிரச்சனை தீர்ந்ததா, அந்த பிரச்சனைகளுக்கு காரணம் யார், அவர்கள் அதை எப்படி வெற்றி கொண்டார்கள் என்பதை நகைச்சுவையும் திகிலும் கலந்து ஜனரஞ்சகமாக படமாக்கி வருகிறார் இயக்குனர் ரோகின்.

டேனி ரேமண்ட் ஒளிப்பதிவில், லியோ ஜான் பால் படத்தொகுப்பில், வினோத் ராஜ்குமார் கலை இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைக்கிறார். ஜிஆர் சுரேந்தர்நாத் வசனம் எழுத, ஹரி தினேஷ் சண்டை பயிற்சி அமைக்கிறார்.

இப்படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

Continue Reading

Tamil Cinema News

‘வெள்ளை யானை’ படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்

Published

on

By

வெள்ளை யானை படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்

தனுஷ் நடித்து 2003ம் ஆண்டில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான ‘திருடா திருடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுப்ரமணியம் சிவா.

அந்தப் படத்திற்குப் பிறகு ‘பொறி, யோகி, சீடன்’ ஆகிய படங்களை இயக்கினார். ‘வட சென்னை, அசுரன்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

சுப்ரமணியம் சிவா அடுத்து இயக்கி வரும் படம் ‘வெள்ளை யானை’. சமுத்திரக்கனி, ஆத்மியா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் இது. விவசாயத்தைப் பற்றியும், விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றிய படமாகவும் இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி அவருடைய இசைப் பணியை ஆரம்பித்துள்ளார்.

அது பற்றி சந்தோஷ் நாராயணன் கூறுகையில், “படம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் , இன்றைய விவசாயிகளின் வாழ்க்கையின் மிக முக்கியமான வரலாற்றுப் பதிவு இந்தப் படம். நம் தாய் மண்ணின் இசையோடு இந்தப் படத்திற்கு இசையமைக்க மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று கூறியுள்ளார் .

ஒயிட் லாம்ப் டாக்கீஸ் சார்பில் வினோத் குமார் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவை முடிந்ததும் படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

Continue Reading

Tamil Cinema News

தனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்

Published

on

By

தனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்

ஒய்நாட் ஸ்டுடியோஸ் அவர்களது 18வது படமாக கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில், தனுஷ் நாயகனாக நடிக்கும் புதிய தமிழ் படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயிண்மன்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.

‘பேட்ட’ படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படம் இது. தனுஷ் நாயகனாக நடிக்க, கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ள இந்தப் படம் பற்றிய அறிவிப்பு சில வருடங்களுக்கு முன்பே வெளியானது. ஆனாலும், கார்த்திக் சுப்பராஜ், ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தை இயக்கப் போய்விட்டார்.

கேங்ஸ்டர், திரில்லர் வகையைச் சார்ந்த இப்படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கிறார். இவர் மலையாளத்தில் சில வெற்றிப் படங்களில் நடித்தவர்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

இத்திரைப்படத்தில் பங்கு பெற உள்ள மற்ற நட்சத்திரங்கள், தொழிட்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரையிலேயே வெளியிடப்பட உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

இப்படத்தை முழுவதுமாக இங்கிலாந்தில் படமாக்க உள்ளார்கள்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!