Connect with us

Tamil Cinema News

ஆக்ஷன் படம் இயக்கத்தான் ஆசை – சுந்தர் .சி

Published

on

ஆக்ஷன் படம் இயக்கத்தான் ஆசை - சுந்தர் .சி

டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், சுந்தர் .சி இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஆக்ஷன்’.

இப்படம் பற்றி இயக்குநர் சுந்தர்.C கூறியதாவது,

விஷாலுடன் நான் முன்பே இணைந்து படம் செய்வதாக இருந்தது. இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாக இருந்தோம். இப்போது ‘ஆக்‌ஷன்’ படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளோம்.

நான் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைப் போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன். தற்போது நடிகர் விஷால் மூலம் அந்தஙக கனவு நிறைவேறியுள்ளது.

எழுபது சதவிகிதம் வெளிநாடுகளிலும், ஜெய்ப்பூர், டெல்லி, ஐதராபாத் மற்றும் சென்னையிலும் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. அதே போல் இதுவரை நான் இயக்கிய படங்களிலேயே ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமான திரைப்படம் இது தான். இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத சண்டைக் காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளன.

தொடர்ச்சியாக பேய் படங்கள், காமெடி படங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து ரசிக்கும் படியான படங்கள் தந்ததால் என்னை காமெடி இயக்குநர் ஆக்கிவிட்டார்கள். ஆனால் எனக்கு ஆக்சன் படம் செய்யத்தான் ஆசை.

நான் எப்போதும் வேலை செய்து கொண்டே இருப்பதில் தீவிரமாக இருப்பேன். ஒரு படத்தை இயக்கி ரிலீஸ் ஆவதற்குள் அடுத்த படத்தின் வேலைகளை துவங்கிவிடுவது எனது வழக்கம். எனக்கு , அனைத்து ஜானரிலும் படம் இயக்க ஆசை.

‘முறைமாமன்’ படத்தின் இயக்குனாராக அறிமுகமானபோது அது ஒரு ரீமேக் படம் ஆனால் அப்டத்தை வேறுவிதமாக கூறியிருந்தேன். ‘உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி’ என்று காதல் கலந்த காமெடி படத்தை இயக்கியதால் என்னை காமெடி படம் செய்யும் இயக்குநராக்கிவிட்டார்கள். ஆனால் நான் எல்லா பாணியிலும் படம் செய்துள்ளேன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘அருணாச்சலம்’ என்ற மிகப் பெரிய வெற்றிப் படத்தை இயக்கினேன். அப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக இருந்தது.

இந்த ‘ஆக்ஷன்’ படம் முழுக்க முழுக்க சண்டைக் காட்சி நிரம்பிய திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு ‘ஆக்‌ஷன்’ என்றே பெயர் வைத்துவிட்டோம். ஒரு படத்திற்கு வெகு முக்கியமானது டைட்டில் தான். படத்தின் மையத்தை அதில் சொல்லிவிட்டால் எதிர்பார்த்து வரும் ரசிகன் ஏமாற மாட்டான். அதுமட்டுமல்லாமல், தற்போது தமிழ் படங்களை இந்தி ரசிகர்களும் தெலுங்கு ரசிகர்களும் ஆதரித்து வருவதனால் இந்த தலைப்பு அணைத்து மொழிகளிலும் பொருத்தமாக இருக்கும் என்று திட்டமிட்டு வைத்துள்ளோம்.

இந்தக் கதைக்கு நல்ல உடல்வாகுடன் டூப் போடாமல், சண்டைக் காட்சிகளில் நடிக்க ஒரு கதாநாயகன் தேவைப்பட்டதால் நடிகர் விஷால் சரியாக இருப்பார் என்று படக்குழுவினருக்குத் தோன்றியது. மேலும் இப்படத்தில் சுபாஷ் என்கின்ற கதாபாத்திரத்தில் மிலிட்டரி ஆபீஸராக விஷால் நடிச்சிருக்கார்.

இவருக்கு ஜோடியாக தமன்னா, மிலிட்டரி கமாண்டோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து குடும்பப் பாங்கான பெண்ணாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மற்றும் அகான்ஸா பூரி என்பவர் பக்கா ரெளடித்தனம் செய்யும் கதாப்பாதிரத்தில் நடித்துள்ளார்.

இவர்களைத் தவிர, அரசியல்வாதியாக பழ.கருப்பையா, பாலிவுட் நடிகர் கபீர் சிங் வில்லனா டூயல் ரோல், ராம்கி, யோகி பாபு மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். முழுப் படப்பிடிப்பும் முடிந்த நிலையில் விரைவில் திரைக்கு வரும் முயற்சிகளில் இருக்கிறது ஆக்‌ஷன் திரைப்படம்.

இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது,” என்கிறார் சுந்தர் .சி.

Tamil Cinema News

சங்கத்தமிழன், இசை வெளியீடு

Published

on

By

சங்கத்தமிழன், இசை வெளியீடு

பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்‌ஷன்ஸ் 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம்.

விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி ‘சங்கத்தமிழன்’ படத்தை தயாரித்துள்ளார்.

விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நாசர், சூரி, ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீ ரஞ்ஜனி மற்றும் மைம் கோபி என பலர் நடித்துள்ளனர்.

இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 17 ஆம் தேதி சன் ஸ்டுடியோஸில் நடைபெற்றது .

இந்த விழாவில் ‘சங்கத்தமிழன்’ படக்குழுவினர்களான கதாநாயகன் விஜய்சேதுபதி, தயாரிப்பாளர் பி.பாரதி ரெட்டி, இயக்குனர் விஜய்சந்தர், ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், இசையமைப்பாளர்கள் விவேக் – மெர்வின், ஒளிப்பதிவாளர் வேல் ராஜ் , சூரி , ஸ்ரீமன், ஜான் விஜய், அகல்யா வெங்கடேசன், பாடலாசிரியர் விவேகா, நிர்வாக தயாரிப்பாளர்கள் ரவிச்சந்திரன், குமரன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Continue Reading

Tamil Cinema News

‘சைரா’ படத்தின் தமிழ் வெளியீடு அறிவிப்பு

Published

on

By

சைரா படத்தின் தமிழ் வெளியீடு அறிவிப்பு

சிரஞ்சீவி, விஜய் சேதுபதி, சுதீப், நயன்தாரா, தமன்னா, சிறப்புத் தோற்றத்தில் அமிதாப்பச்சன், அனுஷ்கா மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் ‘சைரா நரசிம்மா ரெட்டி’.

இப்படத்தை தமிழ் மொழியிலும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை பல வெற்றிப் படங்களைத் தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்தை டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். அக்டோபர் 2ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது. ஹைதராபாத்தில் வரும் ஞாயிறு 22ம் தேதி படத்திற்கான பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்த உள்ளார்கள். அதில் பவன் கல்யாண், ராஜமௌலி உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அதன் பின் சென்னையிலும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் கலந்து கொள்ள ரஜினிகாந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Continue Reading

Tamil Cinema News

பிகில் வெளியீடு – தயாரிப்பாளர் புதிய அறிவிப்பு

Published

on

By

பிகில் வெளியீடு - தயாரிப்பாளர் புதிய அறிவிப்பு

எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், இந்துஜா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பிகில்’.

இப்படத்தின் இசை வெளியீடு நாளை மாலை சென்னையில் நடைபெற உள்ளது.

இதனிடையே, படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி புதிய அறிவிப்பு ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில், “யூகங்களின் அடிப்படையில் வெளியீட்டுத் தேதி பற்றி தவறான வதந்திகளை தயவு செய்து பரப்பாதீர்கள். படத்தின் சென்சார் முடிந்த பிறகே அது பற்றி அறிவிப்போம். பாக்ஸ் ஆபிசில் புதிய சாதனை படைக்கும் விதத்தில் சரியான நாளைத்தான் தேர்வு செய்வோம் என்பதை நம்புங்கள்,” என்று பதிவிட்டுள்ளார்.

‘பிகில்’ படம் தீபாவளி தினமான அக்டோபர் 27ம் தேதி வெளியாகும் என்றும், அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக அக்டோபர் 25ம் தேதி வெளியாகும் என்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.

தற்போது தயாரிப்பாளர் தரப்பில் விளக்கமளித்துவிட்டதால் அது பற்றி இனி தவறான செய்திகள் வெளிவராது. தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: