Connect with us

Tamil Cinema News

பேய் இருந்தால் போலீஸ் இருக்காதே.. – பாக்யராஜ் பேச்சு

Published

on

பேய் இருந்தால் போலீஸ் இருக்காதே.. - பாக்யராஜ் பேச்சு

ஆர். பி .பிலிம்ஸ் சார்பில், ஆர். பி .பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகோரி ’.

இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் பாக்யராஜ், நடிகை கஸ்தூரி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். இவர்களுடன் நடிகர் மைம் கோபி, ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி. ஜி. முத்தையா, தயாரிப்பாளர் பி டி செல்வகுமார், படத்தின் தயாரிப்பாளரும் வசனகர்த்தாவுமான ஆர் பி பாலா, இணை தயாரிப்பாளர் சுரேஷ் கே மேனன், இயக்குநர் D.S.ராஜ்குமார் , ஒளிப்பதிவாளர் வசந்த், நடிகர்கள் சித்து, வெற்றி, கார்த்திக், ஷரத், விளம்பர வடிவமைப்பாளர் பவன் மற்றும் சண்டை பயிற்சியாளர் டேஞ்சர் மணி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் ஆர் .பி . பாலா பேசுகையில்,

“அகோரி என்னுடைய நீண்ட நாள் கனவுப் படம். இது 2012ஆம் ஆண்டில் திட்டமிட்டு, இதனைத் தொடங்க எண்ணியிருந்தேன். சில சூழல் காரணமாக என்னால் இந்த படத்தின் பணிகளைத் தொடங்க இயலவில்லை. இந்தப் படத்தைக் கடந்த ஆண்டு நாங்கள் நிறைவு செய்திருக்க வேண்டும். ஆனால் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் முழுமை அடையாததால், படத்தின் பணிகள் நிறைவடையவில்லை. கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காகத் தான் இந்த கால தாமதம் ஏற்பட்டது. நாங்கள் எதிர்பார்த்ததை விட கிராபிக்ஸ் காட்சிகள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன.

பாரதியார் படத்திற்கு பிறகு நடிகர் ஷாயாஜி ஷிண்டே இந்த படத்தில் அகோரியாக டைட்டில் ரோலில் நடித்திருக்கிறார். அவர் இந்தப்படத்தில் அகோரியாக நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். இந்த படத்தைத் தொடங்கும்போது சிறிய பட்ஜெட்டில் தொடங்கினேன். ஆனால் படத்தின் கதை மற்றும் தரத்திற்காக கூடுதலாகச் செலவு செய்து சிறப்பாக எடுத்து இருக்கிறேன். இதற்காக எனக்கு உதவியாக இணைந்த இணை தயாரிப்பாளர் சுரேஷ் கே மேனன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இன்றைய தேதியில் ஒரு படத்தைத் தொடங்கும் போது தயாரிப்பாளர் காரில் வந்து இறங்குவார். படம் வெளியீட்டின் போது அவர் சாலையில் நடந்து செல்வார். இதுதான் இன்றைக்கு தயாரிப்பாளர்களின் நிலைமை. இதனை நன்கு உணர்ந்து கொண்டதால், பொறுமையாகவும், சிக்கனமாகவும் திட்டமிட்டு இந்தப் படத்தை நிறைவு செய்து இருக்கிறேன்,” என்றார்.

சிறப்பு விருந்தினர் இயக்குநர் கே பாக்யராஜ் பேசும் போது,

“தமிழக மக்களை நினைத்தால் தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எந்தக் கட்சிக்காரன் காசு கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு, சத்தியம் செய்து கொடுக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். இவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று எண்ணி எண்ணியே எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ஆனால் இங்கே பேசிய கஸ்தூரி ஒரு ஏதோ ஒரு முடிவுடன் தான் இருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்தப்படத்தின் தயாரிப்பாளர் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களைப்பற்றியும் தெளிவாகவும், அழகாகவும் எடுத்துரைத்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

தயாரிப்பாளர் பாலா மொழி மாற்றுப் படங்களுக்கான வசனகர்த்தா என்று சொன்னார்கள். ‘புலி முருகன்’ மற்றும் ‘லூசிபர் ‘ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதி இருப்பதாகச் சொன்னார்கள். நான் ஒரே ஒரு டப்பிங் படத்திற்கு மட்டும்தான் வசனம் எழுதினேன். தாணுவின் வெளியீட்டில், ராம்சரண் நடித்த ‘மகதீரா’ என்ற படத்திற்கு மட்டும் தான் நான் தமிழில் வசனம் எழுதினேன். இதுவரைக்கும் நான் நேரடியாகத்தான் திரைப்படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறேன். மொழிமாற்று படங்களுக்கு எழுதியதில்லை. இதை ஒரு அனுபவமாக எண்ணி எழுத சம்மதித்தேன். அங்கு சென்றவுடன் தான் அதில் உள்ள சவால்களும், சங்கடங்களும் புரிந்தன.

அம்மா என்ற வார்த்தை எல்லாம் மொழியிலும் ஒன்றாகத் தான் இருக்கும். ஆனால் தெலுங்கில் அப்பாவுக்கு ‘நானா’ என்று அழைப்பார்கள். இதை எப்படி தமிழ் படுத்துவது என்று தெரியாமல் கஷ்டப்பட்டேன். இந்த தருணத்தில் தான் டப்பிங் பட வசனகர்த்தாக்கள் படும் சிரமத்தை உணர்ந்தேன். அதன் பிறகுதான் டப்பிங் படத்திற்கு வசனம் எழுதுவதற்கும் ஒரு திறமை வேண்டும் என்பதை உணர்ந்தேன்.

‘அகோரி ’படத்திற்கு இந்த டைட்டில் பெரிய பிளஸ். சில விஷயங்களைப் பற்றி பலர் எவ்வளவு பேசினாலும் நாம் அதைக் கேட்டுக் கொண்டே இருப்போம். பேயைப் பற்றி பலர் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருப்போம். எனக்கு மட்டும் ஒன்றே ஒன்று தோன்றும். பேய் இருப்பது உண்மை என்றால், இந்த நாட்டில் போலீஸ் ஸ்டேஷன் என்பது இருக்காது.

ஒருவரைக் கொலை செய்து விட்டால், அவர் பேயாக வந்து பழிக்குப் பழி வாங்கி கொன்றுவிடுவார். ஆனால் தற்போது கொலையாளியைப் போலீஸ்காரர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பேய் என்பது இல்லை என்று என்பது உறுதியாகிறது. ஆனால் பேய் வந்து பழிவாங்குகிறது என்று ஒரு கான்செப்ட் தற்போது மக்களால் ரசிக்கப்படுகிறது.

பேய் பற்றி அப்படி ஒரு படம் எடுத்தால், மக்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். பேய் போல தான் அகோரியும் இருக்கும் என்று நினைத்தேன். அதனுடைய ஒலி கூட எதிர்மறையாக இருந்தது. நமக்கு பைரவா என்றால், வில்லத்தனம் செய்யும் மந்திரவாதி நினைப்பு தான் வரும்.

‘மகதீரா’ படத்தில் ஹீரோவிற்கு பைரவா என்று பெயர் வைத்திருப்பார்கள். அது தமிழில் மொழிமாற்றம் செய்யும் போது ‘பார்த்திபா’ என்று உச்சரிப்புடன் பொருத்தமாக வசனத்தை எழுதி இருப்பேன். இந்த ‘பைரவா’வை ‘பார்த்திபா’வாக மாற்றுவதற்கு பெரும் போராட்டமாக இருந்தது.

அகோரி என்பதை நான் நெகட்டிவ் என்று நினைத்திருந்தேன். ஆனால் இவர்கள் அதனை பாசிட்டிவாக காட்டியிருப்பதாக நினைக்கிறேன். அகோரியை பற்றி எத்தனை பேர், எத்தனை வகையில் கதை சொன்னாலும் நாம் கேட்டுக் கொண்டுதான் இருப்போம். நாம் சில விஷயங்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றி மாற்றிச் சொல்லலாம். மக்கள் அதை ரசித்துக் கொண்டுதான் இருப்பார்கள். ‘அகோரி’ என்ற டைட்டிலுக்கு ஏற்ற வகையில் மக்கள் நம்பும் வகையில் லாஜிக்குடன் சொல்லவேண்டும். அப்படி சொல்லியிருப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த படம் வெற்றியைப் பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்,” என்றார்.

விழாவில் நடிகை கஸ்தூரி பேசும்போது ,

“தமிழர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அதனால்தான் எங்கு போனாலும் அவர்களுக்கு மதிப்பு மரியாதை இருக்கிறது. தங்கள் திறமையால் தான் உலகில் எங்கு சென்றாலும் முன்னணியில் இருக்கிறார்கள். ஜெயிக்கிறார்கள். இந்தத் திரைப்படத்திலும் பல திறமைசாலிகள் இருக்கிறார்கள். படத்தின் டிரைலர் டீசர் எல்லாம் பார்த்துவிட்டுப் பிடித்துப் போய் தான் இந்த விழாவிற்கு வந்தேன். இப்போதெல்லாம் பேய்ப் படம் ரசிக்கிற மாதிரி இருந்தால் மக்கள் ஆதரவு தருகிறார்கள்.

பேய்ப்படம் காமெடியாக இருப்பதைப்போல் வந்தால் மக்கள் மிகவும் ரசிக்கிறார்கள். காஞ்சனா இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த அகோரியும் அடுத்த காஞ்னாவாக இருக்கும் என்று நம்புகிறேன். கிராபிக்ஸ் காட்சிகளை பார்க்கும்போது பாகுபலிக்கு நிகரான காட்சிகளை உணர்ந்தேன்.ஏனென்றால் இந்த படத்தின் டிரைலர் டீசர் எல்லாம் பார்த்த நம்பிக்கையில் சொல்கிறேன். அகோரி பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார் கஸ்தூரி.

இவ்விழாவில் படத்தின் டிரைலரை கே பாக்யராஜ் வெளியிட, நடிகை கஸ்தூரி பெற்றுக்கொண்டார்.

Tamil Cinema News

விஷால் இயக்குனரின் நடிகர் – சுந்தர் .சி

Published

on

By

விஷால் இயக்குனரின் நடிகர் - சுந்தர் .சி

டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், சுந்தர். சி இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், விஷால், தமன்னா, ஐஸ்வர்ய லட்சுமி, அகன்ஷா பூரி மற்றும் பலர் நடிக்கும் ‘ஆக்ஷன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் இயக்குநர் சுந்தர்.சி. பேசும்போது,

இப்படம் என்னுடைய கனவு படம் என்றும் கூறலாம். முதன்முதலாக நான் எடுத்த படம் கிராம பின்னணி கொண்ட படம் இயக்கினேன். அப்படத்தைப் பார்த்த அனைவரும் இது உன்னுடைய படம் மாதிரி இல்லையே? என்று. இந்த கேள்வியை நான் ஒவ்வொரு படத்திலும் சந்தித்தேன்.

எதுதான் என்னுடைய படம்? என்னுடைய படமென்றால் எந்த பாணியில் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்? என்று குழப்பமடைந்தேன். ஆனால், இப்படம் மூலம் எல்லோருக்கும் இது என்னுடைய படமென்ற உணர்வு இருக்குமென்று நினைக்கிறேன்.

இதுபோன்ற பெரிய படங்களுக்கு தயாரிப்பாளர் ரவிசந்திரன் மாதிரி அமைவது வரம். சண்டைக் காட்சிகளில் தமன்னா டூப் போடாமல் அவரே தைரியமாக பணியாற்றினார். இதுவரை இப்படியொரு கதாநாயகி தமிழ் சினிமாவில் இருந்திருப்பார்களா? என்று சந்தேகம்தான். அக்கன்ஷாவும் ஒரு நிகழ்ச்சியில் பார்த்து தான் தேர்ந்தெடுத்தோம்.

விஷாலுக்கு பெண் வேடமிட்டால் அக்கன்ஷா மாதிரிதான் இருப்பார். அவரும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். தமன்னா, அக்கன்ஷா இருவரும் தினமும் படப்பிடிப்பு முடிந்து போகும்போது காயத்தோடு தான் போவார்கள். ஐஸ்வர்யா லக்ஷமி இப்படத்தில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் அவர் நடித்த எல்லா படம்மும் மாபெரும் வெற்றியடைந்தது. தமிழில் அவருக்கு இது முதல் படம். இப்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.,

சாயாசிங் சில காட்சிகளில் வந்தாலும் கண்ணியமாக நடித்திருப்பார். லட்சுமிகரமாக இருக்க வேண்டும், அனைவரின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்ற சவாலான கதாபாத்திரத்தைக் கூறியதும், சிறு புன்னகையுடன் ஒப்புக் கொண்டார்.

மேலும், இப்படத்தில் எனக்கு பக்க பலமாக அமைந்தது தேசிய விருது பெற்ற அன்பறிவு இருவரும் தான். அடுத்து ஹிப்ஹாப் ஆதி. முதலில் நான் ஆதிக்கு கொடுக்க கூடாது என்றிருந்தேன். ஆனால், என்னிடமிருந்து இசையமைப்பாளர் வாய்ப்பைப் பிடுங்கிச் சென்று இசையமைத்தார். நான் நினைத்ததைவிட வேகமாக தன் பணியை முடித்துவிட்டார் ஆதி.

மிலிட்டரி, தீவிரவாதம், அரசியல் என்று அனைத்தும் இப்படத்தில் இருக்கிறது. இப்படத்தில் வில்லி கிடையாது, வில்லன் தான். அந்த வில்லன் யார் என்பது தான் சஸ்பென்ஸ். அது படம் பார்க்கும்போதுதான் தெரியும்.

தமன்னாவை எனக்கு பிடிக்கும். எனது ஒவ்வொரு படத்திலும் அவரை நடிக்க வைக்க முயற்சி செய்தேன். அது இப்படத்தில்தான் நிறைவேறியது. ‘பாகுபலி’ படத்தில் தமன்னாவின் சண்டைக் காட்சிகளைப் பார்த்தேன். அவர் தான் இந்த படத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று அவரை நடிக்க வைத்தேன்.

இப்படத்தின் CG பணி செய்த அனைவருமே சென்னையைச் சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் தான். சென்னையில் இந்தளவு உயர்தரமான காட்சிகளைக் கொடுக்க முடியுமா ? என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும்.

மேலும், விஷால் இயக்குநரின் நடிகர். ஒருமுறை அவரை ஒப்பந்தம் செய்துவிட்டால் நாம் என்ன சொல்கிறோமோ அதை அர்ப்பணிப்போடு செய்வார். மேலிருந்து குதிக்கச் சொன்னேன். உடனே குதித்து விட்டார். விஷாலைத் தவிர வேறு யாராலும் இப்படிப்பட்ட பெரிய திரைப்படத்தை 6 மாத காலங்களிலேயே முடித்திருக்க முடியாது. அதற்கு தயாரிப்பாளரும் ஒத்துழைப்புக் கொடுத்தார் என்றார்.

நடிகர் விஷால் பேசும்போது,

சமூக சிந்தனைகள் இருந்தாலும் சம்பாத்தியம் தான் முதலில் முக்கியம் என்று எனக்கு புரிய வைத்தது இயக்குநர் சுந்தர்.சி தான். நாங்கள் மேடையில் அமர்ந்திருப்பதற்கும், இந்த அமைப்பைக் கொண்டு வருவதும் சாதாரணமான செயல் அல்ல. அதை டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவிசந்திரன் செய்திருக்கிறார்.

‘சங்க மித்ரா’ தான் சுந்தர்.சி-யின் கனவு திரைப்படம். ஆனால், அப்படம் தாமதமாவதால் இப்படத்தை எடுத்து விட்டோம். என் கேரியரிலேயே அதிகமான சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படமும், அதிகமாக அடிப்பட்ட திரைப்படமும் ‘ஆக்ஷன்’ தான். ஏனென்றால், ஒரு கணத்தில் என் சாவை என் கண்ணால் பார்த்தேன்.

ஒரு காட்சியில் என் கைகளை தடுக்க கொண்டு வரும்போது கையிலும், காலிலும் அடிப்பட்டு 5 மாதங்கள் படப்பிடிப்பு நடக்க விடாமல் செய்தது. அதன்பிறகு ஒரு கட்டத்தில் இயக்குநர் சுந்தர்.சி மற்றும் தயாரிப்பாளர் ரவி இருவரையும் எதிர்கொள்வது சிரமமாக இருந்தது. ஆனால், அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தாமல் எனக்காகக் காத்திருந்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தினார்கள்.

வருடம் ஒருமுறை சுந்தர்.சியுடன் பணியாற்றினால் உடல்நிலை நன்றாக இருக்கும். ஒவ்வொருவரும் ஈகோ பார்க்காமல் இயக்குநர் சுந்தர்.சியுடன் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும். ஒரு சாதாரண இடத்தையும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்துவார்.

90 நாட்களில் இப்படத்தை முடித்தது சவாலான விஷயம். உதவி இயக்குநராக நான் அவரிடம் நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இப்படத்தின் மூலம் எனக்கு அமைந்தது. அவரிடம் கற்றுக் கொண்டதை இனி வரும் என் படங்களில் பயன்படுத்துவேன். ஆதி மாதிரியான திறமையான இளம் இசையமைப்பாளர் பலர் வரவேண்டும்.

எனக்கு அடிபட்ட பிறகு, அன்புறிவு, சுந்தர்.சி இருவரும் சண்டைக் காட்சிகளில் டூப் போட வேண்டுமென்று எவ்வளவோ முயற்சி செய்தார்கள். ஆனால், நான் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், இப்படத்திற்கு இருந்த சவாலான விஷயம் படத்தொகுப்பு. அதை ஸ்ரீகாந்த் திறமையாக செய்து முடித்திருக்கிறார்.

சண்டைக் காட்சிகளில் எனக்கும் தமன்னாவுக்கு இருந்த கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது. அகன்ஷாபூரியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். நான் இதுவரை பெண்களை அடித்ததே கிடையாது. ஆனால், இப்படத்தில் வரும் காட்சிக்காக அகன்ஷாவை பல தடவை அடித்தேன். அதற்காக இந்த இடத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அடிபடாமல் இருப்பதற்காக சிறப்பு உடை கொடுப்பார்கள். ஆனால், அகன்ஷா அதைப்பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் அடிபட்ட அன்றே படப்பிடிப்பை நிறுத்தாமல் நடித்து முடித்தார்.

சாயாசிங் உடன் நடித்ததில் மகிழ்ச்சி. எனக்கு நல்ல நண்பர் கிடைத்திருக்கிறார். யூடியூப்-ல் சாரா உடைய குறும்படத்தைப் பார்த்தேன். தைரியமாக நடித்திருக்கிறார். மிகவும் திறமையான நடிகர். 15 வருடங்களுக்கு முன்பிருந்தது போல் இப்பொழுது இல்லை. இன்று யார் வேண்டுமானாலும் பத்திரிகையாளராக ஆகி விடுகிறார்கள்.

‘ஆக்ஷன்’ படத்தை பெரிய திரையில் காணுங்கள். இப்படத்தில் நடித்த அனைத்துப் பெண்களும் திறமையானவர்கள். ஐஸ்வர்யா லட்சுமி அனைவரிடமும் பேசப்படுவார் என்றார். ஒரே ஒரு வேண்டுகோள். ஒவ்வொருத்தரும் , மற்றவர்கு ஏதாவது ஒரு உதவி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் விஷால்.

Continue Reading

Tamil Cinema News

‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல்ஹாசன்

Published

on

By

தர்பார் மோஷன் போஸ்டரை வெளியிடும் பிரபலங்கள்

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘தர்பார்’.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் நாளை நவம்பர் 7ம் தேதி மாலை 5.30 மணிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.

தமிழ், தெலுங்கு போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் அவருடைய டிவிட்டரிலும், மலையாளப் போஸ்டரை நடிகர் மோகன்லால், ஹிந்தி போஸ்டரை நடிகர் மோகன்லால் அவர்களுடைய டிவிட்டரிலும் வெளியிடுகிறார்கள்.

இப்படத்தை 2020ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியிட உள்ளார்கள்.

 

Continue Reading

Tamil Cinema News

சிவாஜியும், கமலும் ஏன் நடிப்பு ராட்சசர்கள் – அருண் வைத்யநாதன்

Published

on

By

சிவாஜியும், கமலும் ஏன் நடிப்பு ராட்சசர்கள் - அருண் வைத்யநாதன்

தமிழ்த் திரையுலகில் பன்முகக் கலைஞனாய், சினிமாவை நேசிப்பவர்கள் மத்தியில் தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் கமல்ஹாசன்.

பல புதிய தொழில்நுட்பங்களை இந்தியத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர். அவரை நேசித்து அவருடைய சினிமாவால் ஈர்க்கப்பட்டு திரையுலகத்திற்குள் நுழைந்தவர்கள் பல பேர்.

இப்போது சினிமா பிரபலங்கள் ஆனாலும், தங்களை கமல்ஹாசனின் ரசிகன் என்று சொல்லிக் கொள்வதில் அவர்கள் பெருமைப்படுபவர்கள். அப்படி ஒருவர்தான் இயக்குனர் அருண் வைத்யநாதன். நாளை கமல்ஹாசனின் பிறந்தாளை முன்னிட்டு அவருடைய முகப்புத்தகத்தில் கமல்ஹாசனைப் பற்றி அவர் பதிவிட்டிருப்பதாவது,

“சிவாஜியும், கமலும் ஓவர் ஆக்டிங் என்று பிதற்றுபவர்களைப் பார்த்தால் , அவர்கள் செய்யும் பரிகாசத்தைப் பார்த்து பரிகாசிக்கவே தோன்றுகிறது. தமிழர்கள், பெரும்பான்மையாய் உணர்ச்சிவசப்படுவதில் மன்னர்கள். 

நாம் சட்டென கொதிப்போம், சிரிப்போம், அழுவோம். அந்தந்த காலத்தில் அவரவர் நடிப்பு…சற்று மிகையே என்று சில இடங்களில் இப்போது தென்பட்டாலும், அன்றைய பொழுதில் அந்த நடிப்பு சிலாகிக்கப்பட்டதே!

திரிசூலம் தொலைபேசிக் காட்சியை பலர் கிண்டல் அடித்திருப்பதை இப்போது பார்க்கிறேன் – ஆனால், மாயவரம் பியர்லெஸ்ஸில் எழுந்த கரவொலியும், விசில் சத்தமும் இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது. தெய்வமகனில் தந்தை சிவாஜி, கையை நீட்டி…தலையை உதறி, கால்களை டப் டப்பென்று தட்டுவார்…கோபத்தில்! ஏன், நவராத்திரியில் கடைசி காட்சிகளில் பேசாமலேயே கண்களால் நடிக்கத் தெரிந்த சிவாஜிக்கு, தெய்வமகனில் அடக்கி வாசிக்கத் தெரியாதா?

உதாரணத்திற்கு பார் மகளே பார் படத்தில் ஒரு காட்சியில் சிவாஜி அழ, படப்பிடிப்பு தளமே கண்கள் கலங்கி கரகோஷம் எழுப்ப, சோ மட்டும் சிரித்தபடி வெளியே சென்றாராம்.

சிவாஜி மேக்கப் அறைக்கு கூப்பிட்டு ‘என்னடா உனக்கு பிடிக்கலையா?’ என்று கேட்டாராம். சோ உடனே ‘ஆமாம்….எதுக்கு இப்படி அழணும்…கொஞ்சம் யதார்த்தத்தை மீறி இருக்கே!’ என்று கேட்க, சிவாஜி உடனே பத்து விதமாய் அந்தக் காட்சியை யதார்த்த பாணியில் நடித்துக் காட்டினாராம். கடைசியாக ‘என் மக்களுக்கு எத்தகைய நடிப்பு சென்றடையும்’ என்று தெரியும் என்று சொன்னாராம். சோவே சிலாகித்து எழுதிய விஷயம் இது!

இதே போன்று, கமல்ஹாசனுக்கும் என்னால் ஏன் ஏதற்கு எப்படி என்று எழுத முடியும்.

They are masters – They are legends. They know exactly what they are doing!

மகாநதியில் ஜெயில் கம்பிகளுக்குப் பின்னால், கண்கள் கலங்க, கட்டை விரலை வாய்க்குள் பக்கவாட்டில் நுழைத்து ‘ஏன்’ என்று குரல் கமறக் கேட்கத் தெரிந்த நடிப்புத் தகப்பனுக்கு, நாயகன் தகப்பனாய் எண்பதுகளில் ஏன் ஓலமிட்டார் என்பதற்கும் ஒரு காரணம் இருந்திருக்கும். இல்லையென்றால் அந்தப் படம் இன்றளவும் அப்படி பேசப்பட்டுக்கொண்டிருக்குமா?

சச்சின் இரண்டு முறை பரிசோதனையில் ஏதேனும் ஒரு ஷாட் அடித்து அவுட் ஆகும் போது, இந்த சச்சினே இப்படித்தான் என்று சொல்வது போல் ….அவர் அதே போல பல முயற்சிகளில் எத்தனையோ பரிசோதனைகள் செய்து வெற்றி பெற்றதை மறந்து விடுவோம். அது போலத் தான், இந்த விவாதங்கள்.

சிவாஜியும், கமலும் ஏன் நடிப்பு ராட்சசர்கள் என்றால்….ஒரு கதாபாத்திரத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொள்ளும் விதம்.

சின்னதாய் ஒரு விஷயம் எடுத்துக் கொள்வோம்….

எல்லோரும் கொண்டாடுவோம் என்று பாவமன்னிப்பில் ஒரு பாட்டு வரும், அதில் ஆரம்பித்து ‘உன்னை ஒன்று கேட்பேன்’ பாடலில் பியானோ, சாக்ஸபோன் என்று ஒவ்வொரு வாத்தியமாய் வாசிப்பார்.

அதே போல் நம்மவர் படத்தில் கமல்ஹாசன் பியானோ வாசிப்பார், அபூர்வ ராகங்களில் மிருந்தங்கம் …பாருங்கள். அதில் ஒரு நேர்த்தியும் மெனக்கெடலும் இருக்கும் – அதற்குப் பெயர் தான் உழைப்பு. செய்யும் தொழிலுக்கு நேர்மையுடன் பணிபுரியும் ஒரு உழைப்பாளியின் நேர்த்தி.

சிவாஜி, கமல் மேல் எனக்கு விமர்சனங்கள் இல்லையா…இருக்கின்றது…. சிவாஜி தவறான கதையமைப்பில், இயக்கத்தில் சில படங்களில் எண்பதுகளின் கடைசியில் செய்ய ஆரம்பித்தார். அதே கதையமைப்பில் சிறந்து விளங்கிய கமல், வேறு எந்தக் கதையாசிரியரையும், திறமையையும் தற்போதெல்லாம் சேர்த்துக் கொள்ளத் தவறி விட்டார். அதனால் தான் ஒரு வேட்டையாடு விளையாடு பல போராட்டங்களுக்குப் பின்னர் வந்தாலும், மிகப் புதியதானதொரு பரிமாணத்தில் கமல் வெளிப்படுகிறார். முழு பாராட்டும் கௌதம் மேனனுக்கே!

தமிழ்த்திரையுலகில் சிவாஜி,கமல் இருவரும் கடைசியாக நடித்த தேவர்மகனில் ‘தந்தை-மகன்’ வாக்குவாதக் காட்சி – இன்றளவும் யதார்த்த நடிப்பின் உச்சக்கட்டம்.

தமிழ்த்திரையுலகில் எந்த நாற்காலியையும் யாருக்கு வேண்டுமானால் கொடுத்து அமரச் செய்யுங்கள். பரிசோதனை முயற்சி, கதாபாத்திரத்திற்காக தன்னை தயார் செய்து கொள்வது, வெற்றி தோல்விகளைக் குறித்து கவலைப்படாமல் முன்னேறிக்கொண்டே இருந்தது என்ற விஷயங்களை எடுத்துக் கொண்டால்…அந்த சிம்மாசனம் சிம்மக்குரலோனுக்கும், அதற்குப் பிறகு அவரது கலையுலகப் பிள்ளை கமல்ஹாசனுக்கும் தான்.

தேவர் மகன் – ஒரு திரைப்படம் மட்டுமல்ல. சிவாஜி அமர்ந்த நாற்காலியில், அதுவரை பவ்யமாய் மரியாதை காட்டும் கமல், மறைவுக்குப் பிறகு அமருவார்.

கதையைக் கேட்டவுடன் ‘நீ ஏண்டா என் நாற்காலிக்கு ஆசைப்படறே’ என்று சிவாஜி கேட்க, ‘எனக்கு அது தான் வேணும்…அது மட்டும் போதும்!’ என்று கமல் பதில் சொன்னாராம்.

ஏனெனில், கமலுக்குத் தெரியும்…அது நாற்காலி அல்ல, சிம்மாசனம்!

They are masters – They are legends. They know exactly what they are doing!

 

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: