Connect with us

Trending

அனிதா மறைவு – நடிகைகள் இரங்கல் செய்தி

Published

on

anitha-demise-actressess-condolence

தங்களை ஹீரோக்கள் என சொல்லிக் கொண்டுத் திரியும், சில முன்னணி ஹீரோக்கள் மக்கள் பிரச்சனைகள் எதிலும் தங்களது கருத்துக்களைக் கூடச் சொல்ல மாட்டார்கள்.

அவர்களுக்கு முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்கு தமிழ் ரசிகர்கள் வேண்டும். அவர்கள் தரும் டிக்கெட் பணம் வேண்டும். ஆனால், தமிழ் ரசிகனின், தமிழ் மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளுக்கு தப்பித் தவறிக் கூடக் குரல் கொடுத்து விட மாட்டார்கள்.

அப்படிப்பட்ட பொய்யான ஹீரோக்களுக்கு மத்தியில், அனிதாவின் மறைவுக்கு சில நடிகைகளும் அவர்களது இரங்கலைத் தெரிவித்து, அந்த பொய்யான ஹீரோக்களின் முகத்திரையைக் கிழித்திருக்கிறார்கள்.

அனிதா மறைவு குறித்து வருத்தம் தெரிவித்து இரங்கல் வெளியிட்டுள்ள சில நடிகைகளின் பதிவுகள்

ஸ்ரீப்ரியா

அன்பு அனிதா…உன் கனவை பலியிட மனமில்லாது உன்னையே பலியிட்டாயோ ?. சிந்திக்க தவறினாயோ மகளே சித்தம் கலங்கும் உன் பெற்றோருக்கென்று…லட்சங்கள் வரலாம் நிதி-உன்
லட்சியத்திற்கு வருமா நீதி, சிறு விரல் கூட அதை தீண்டினால் உன் பெரும் தியாகம் சிதைந்து போகும்.

கஸ்தூரி

இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க போகிறீர்கள் ?. 1176/1200 எடுத்தவள் வாழ்க்கை 0/18 பதினெட்டில் சூனியம் ஆகிவிட்டது. எதேச்சதிகார மத்திய அரசும் தலையாட்டி பொம்மை மாநில அரசும் சேர்ந்து கொன்னே போட்டுடீங்களேய்யா !!! வயிறு எரிகிறது.

வரலட்சுமி சரத்குமார்

இப்படிப்பட்ட கல்விமுறையாக நமக்குத் தேவை…அனிதா மற்றும் அவரது குடும்பத்தாரை நினைத்து மனம் கலங்குகிறது.

ஸ்ரீதிவ்யா

இது மனதை உடைய வைக்கிறது. நீட் என்ற பெயரில் ஒரு திறமையான, படிப்பாளியான ஜீவன் ஒன்று கொலை செய்யப்பட்டுவிட்டது. அவருடைய குடும்பத்திற்கு என் அனுதாபங்கள்.

நிக்கி கல்ரானி

எதற்கும் தற்கொலை மட்டும் தீர்வு அல்ல. ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கை இப்படி முடிவுக்கு வந்தது மிகவும் வருத்தமானது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்.

சாய் தன்ஷிகா

இறந்தது அனிதா மட்டுமல்ல, அவருடைய நம்பிக்கை, அறிவு, அத்தனையும் கொன்றுவிட்டது.

ரித்திகா சிங்

அனிதாவைப் பற்றிக் கேள்விப்பட்டதும் மிகுந்த வருத்தமடைந்தேன். மாணவர்கள் மீது நமது கல்விமுறை தரும் அழுத்தத்திற்கு மற்றுமொரு உதாரணம். உங்கள் மதிப் பெண்கள், உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை என்பதை இளைஞர்களும் பெற்றோர்களும் உணர வேண்டும்.

சில புத்திசாலித்தனமான, பணக்காரர்கள் தோல்வியடைந்தவர்கள்தான். இது அவர்களை மட்டும் தடுத்து நிறுத்தாது என்றால், உங்களையும் கண்டிப்பாகத் தடுத்து நிறுத்தாது.

தேர்வுகள் முக்கியமானவதைதான், ஆனால், உங்களது வாழ்க்கையை விட வேறு எதுவும் முக்கியமானதல்ல.

அனிதா, 17 வயது மதிப்புள்ள பெண். அவளுக்கான மொத்த வாழ்க்கையும் அவள் முன்னால் இருந்தது. அவளுடைய முடிவு என் இதயத்தை உடைத்துவிட்டது.

புதிதாக வந்த ரித்திகா சிங் கூட இரங்கல் தெரிவிக்கிறார். ஆனால், தமிழ்நாட்டிலேயே பல வருடங்களாக தமிழ் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற சிலர் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ஒரு நாய் காணாமல் போனால் கூட அதை அவர்களுடைய டிவிட்டரில் பதிவிட்டு வருந்துவார்கள். அவர்களுக்கு அனிதாவின் மறைவு என்பதெல்லாம் கண்ணில் கூட படாது.

 

Trending

யு டியூப் பாடல் வரிகள் வீடியோவில் ‘சொடக்கு’ நம்பர் 1

Published

on

By

tsk-sodakku

யு டியூப் வந்த பிறகு, அதில் பலரும் அவர்களது படங்களின் வீடியோக்களைச் சேர்த்து அவரவர் படங்களை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

யார் டீசர், டிரைலர், பாடல்கள் அதிகப் பார்வைகளைப் பெறும் என்பதிலும் போட்டி நிலவி வருகிறது.

டீசர், டிரைலரில் இருந்த அந்த போட்டி இப்போது பாடல்களுக்கும் தொற்றிக் கொண்டது. ஒரு படம் வெளிவருவதற்கு முன்பாக அந்தப் படத்தின் பாடல்களை லிரிக் வீடியோவாக, அதாவது பாடல் வரிகள் என்னவென்று தெரிந்து கொள்ளும் விதத்தில் புகைப்படங்கள் அடங்கிய வீடியோ வெளியிடுவது சமீபத்திய டிரென்ட்.

அதில் இதுவரை ‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்ற ‘ஆளப் போறான் தமிழன்’… பாடலின் லிரிக் வீடியோதான் அதிகப் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. அந்த சாதனையை தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம் பெற்ற ‘சொடக்கு மேல…’ பாடல் முறியடித்துள்ளது.

‘சொடக்கு…’ பாடல் இதுவரை 4,15,62,752 பார்வைகளையும், ‘ஆளப் போறான்…’ பாடல் இதுவரை 4,15,32,688 பார்வைகளையும் பெற்றுள்ளது. இருந்தாலும் லைக் விஷயத்தில் ஆளப் போறான் பாடலை சொடக்கு பாடலால் மிஞ்ச முடியவில்லை.

சொடக்கு லிரிக் வீடியோ

ஆளப் போறான் தமிழன் லிரிக் வீடியோ

Continue Reading

Trending

ஸ்டெர்லைட் போராட்டம், சுத்தமில்லாத நீரைக் குடித்த சரத்குமார்

Published

on

By

sarathkumar-sterlite

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் இன்று 48வது நாளை எட்டியுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பலரும் களத்தில் குதித்து மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு மக்களுக்கு அவருடைய ஆதரவைத் தெரிவித்தார்.

மேலும் போராட்டக்களத்தில் குமரெட்டியாபுரம் மக்கள் பயன்படுத்தும் மாசு கலந்த நீரை அருந்தி அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் குழந்தைகள், சிறுவர்கள், சிறுமியர்கள், பெண்கள் என மக்கள் குடும்பம், குடும்பமாய் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்தப் பகுதியில் நிலம், நீர், காற்று ஆகியவை மாசுபட்டு வருவதாக மக்கள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

Trending

இங்கிலாந்து நாட்டில் விருது வென்ற ‘மெர்சல்’

Published

on

By

mersal-records-and-awards

இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் தேசிய திரைப்பட அகாடமி வழங்கும் 2018ம் ஆண்டு விருதுக்கான போட்டியில் சிறந்த அயல்நாட்டுப் படத்துக்கான விருதை ‘மெர்சல்’ படம் வென்றுள்ளது.

சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் ‘மெர்சல்’ படத்துடன் பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி, ஸ்வீடன், சிலி, தென்னாப்பிரிக்கா, லெபனான ஆகிய நாடுகளின் படங்களும் போட்டியில் இருந்தன. அவற்றிலிருந்து ‘மெர்சல்’ படம் தேர்வாகியுள்ளது.

சிறந்த துணை நடிகர் விருதுக்காக விஜய்யும் போட்டியில் இருந்தார். ஆனால், அவர் விருதுக்கு தேர்வாகவில்லை.

போட்டியாளர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆன்லைன் வாக்குப்பதிவு ஜனவரி 15 முதல் ஆரம்பமாகி 20ம் தேதி வரை நடைபெற்றது.

இந்த வருட ஆல்லைன் வாக்குப்பதிவில் 24 லட்சம் பேர் வாக்களித்துள்ளார்கள். மொத்தம் 18 பிரிவுகளுக்கான தேர்வு நடைபெற்றது.

4வது தேதிய திரைப்பட விருதுகளைப் பெற்றவர்களின் விவரம் நேற்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தேசிய திரைப்பட அகாடமி 1999ம் ஆண்டு அமைக்கப்பட்டது. திரையுலகத்தினருக்கான வளர்ச்சியில் அந்த அமைப்பு ஈடுபடுகிறது. பல திரைப்பட விழாக்கள், காட்சிகள், மாநாடுகள், பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை இந்த அமைப்பு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடத்தி வருகிறது.

‘மெர்சல்’ படம் விருது பெற்றது தமிழ்த் திரையுலகத்திற்கும் பெருமையான ஒன்று.

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்த ‘மெர்சல்’ 2017 தீபாவளியை முன்னிட்டு வெளியானது.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: