Connect with us

Television

காவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா ?

Published

on

காவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா ?

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து கடந்த சனிக்கிழமை, விதிகளை மீறியதாகச் சொல்லி மதுமிதாவை வெளியேற்றினார்கள்.

மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தார் என்று பல ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், மதுமிதாவுக்கு அன்றைய தினம் நடந்தது என்ன, எதற்காக அவரது கையில் கட்டு கட்டப்பட்டிருந்தது என்று நிகழ்ச்சியிலும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இதனிடையே, காவிரி பிரச்சினை பற்றிப் பேசித்தான் மதுமிதாக கையை அறுத்துக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக கருத்துகள் பதிவாகி வருகின்றன.

‘ஹலோ மொபைல் ஆப்’ டாஸ்க் ஒன்றில் அவர்களது பக்கங்களில் பதிவிடுவதற்காக போட்டியாளர்கள் ஏதாவது கருத்தைச் சொல்லலாம் என்றார்கள். அதில் கலந்து கொண்டவர்களில் மதுமிதா பேசியதைத் தவிர மற்றவர்களின் கருத்துக்கள் டிவியில் ஒளிபரப்பாகின. ஆனால், மதுமிதாவின் கருத்தை ஒளிபரப்பவேயில்லை. அதில்தான் மதுமிதா காவிரி பிரச்சினை பற்றி பேசினார் என்கிறார்கள்.

வேறு சிலரோ, அவர் சேரனுடன் காவிரி பிரச்சினை பற்றி விவாதித்துக் கொண்டிருந்த போது, வருணபகவானும் கர்நாடகாதான் போலிருக்கிறது. நமக்கு மழையும் வரவில்லை, காவிரியில் தண்ணீரும் வரவில்லை என மதுமிதா சொன்னாராம். அப்போது அதைக் கேட்ட ஷெரின், எப்படி இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசலாம் என சண்டை போட்டாராம்.

மதுமிதா மீது ஏற்கெனவே கடுப்பில் இருந்த ஐவர் அணியான கவின், சாண்டி, முகேன், தர்ஷன், லாஸ்லியா இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிரச்சினையை மேலும் பெரிதாக்கியிருக்கிறார்கள்.

தமிழ், தமிழ் எனப் பேச வேண்டாம் என்றும், அவ்வளவு பாசம் இருந்தால் காவிரிக்காக நீ உயிரை விடுவாயா என்று கேலி செய்தார்களாம். தன்னைக் கிண்டல் செய்ததைப் பொறுக்க முடியாத மதுமிதா கத்தியால் கையை அறுத்துக் கொண்டார் என்றும் சொல்கிறார்கள். அப்போது சேரன், கஸ்தூரி மட்டுமே மதுமிதாவுக்கு ஆதரவாகப் பேசி அவரைக் காப்பாற்றியிருக்கிறார்கள். அதனால்தான், நேற்று நாமினேஷனில் சேரன், கஸ்தூரி இருவரது பெயரையும் ஐவர் அணி பேசி வைத்து சேர்த்திருக்கிறது.

தமிழ் மக்களுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் காவிரி பிரச்சினை பற்றிப் பேசப் போய் கூட இருந்த மற்ற தமிழர்களாலேயே ஏளனத்துக்கு ஆளாகியுள்ளார் மதுமிதா என்கிறார்கள்.

நடந்தது என்ன என்பதை பிக் பாஸ் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் முழுமையாக ஒளிபரப்ப வேண்டும். காவிரி பிரச்சினையால்தான் மதுமிதா அப்படி நடந்து கொண்டார் என்றால், கமல்ஹாசன் அதை அப்படியே ஒளிபரப்ப சொல்லியிருக்கலாமே, அவரும் சேர்ந்து இதை ஏன் மறைக்க வேண்டும் என்றும் பலர்  சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள்.

தற்கொலை முயற்சி என்பது சாதாரண விஷயமல்ல. முதல் சீசனில் நீச்சல் குளத்தில் விழுந்து ஓவியா தற்கொலைக்கு முயன்றார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை நிகழ்ச்சியை விட்டு நீக்கினார்கள். இரண்டாவது சீசனில் டேனியிடம் தரக்குறைவாக சண்டை போட்ட மகத்தை ரெட் கார்டு காட்டி வெளியேற்றினார்கள்.

மூன்றாவது சீசனில் ஏற்கெனவே சரவணன் விமர்சனத்துக்கு ஆளாகி வெளியேற்றப்பட்டார். தாங்கள் நியாயமாக நடந்து கொள்கிறோம் என சொல்லிக் கொள்ளும் பிக் பாஸ் நிகழ்ச்சி அமைப்பாளர்கள், அந்த நியாயத்தை மதுமிதா விவகாரத்தில் காட்ட மறுப்பது ஏன் எனப் பலரும் கேள்வி கேட்கிறார்கள்.

Television

கோவையில் சூப்பர் சிங்கர் 7 இறுதிப் போட்டி

Published

on

By

கோவையில் சூப்பர் சிங்கர் 7 இறுதிப் போட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி, வரும் நவம்பர் 10ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, கோயம்பத்தூர் கொடிசியா வர்த்தக வளாகத்தில்  நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் மதியம் 3.30 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பாகும்.

கடந்த சில மாதங்களாக பல பாடகர்கள், இசைக் கலைஞர்கள், திரை நட்சத்திரங்கள், வாரம் ஒரு அட்டகாசமான தீம், அற்புதமான போட்டியாளர்கள் என அத்தனை இசை பரிட்சைகளையும் கடந்து வந்து இறுதிப் போட்டிக்கு புன்யா, விவேக், சாம் விஷால், கவுதம், மற்றும் முருகன் ஆகியோர் தேர்வாகி உள்ளார்கள்

இந்த சீசனின் நடுவர்களாக பாடகர்கள் உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயால், ஸ்வேதா  மோகன் ஆகியோர்  இந்த போட்டியாளர்களை ஊக்கப்படுத்தியும், உற்சாகப்படுத்தியும் வந்தனர்.

மேலும் இந்த சீசனின் மத்த டாப் போட்டியாளர்கள், சூப்பர்  சிங்கர் பிரபலங்கள், அற்புதமான நடுவர்கள் என பலர் இறுதிப் போட்டியில் இசை விருந்தளிக்க உள்ளார்கள்.

பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இறுதிப் போட்டியில்  இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொள்கிறார் .  மேலும் சூப்பர் சிங்கர் 7 ல் வெற்றி பெறும்  போட்டியாளர் இவரின் இசையமைப்பில் பாடும் வாய்ப்பைப் பெற உள்ளார். அதோடு அவருக்கு 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு வீடும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

Continue Reading

Television

கலைஞர் டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

Published

on

By

கலைஞர் டிவி - தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

கலைஞர் டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

அக்டோபர் 27, 2019, ஞாயிற்றுக்கிழமை

காலை 8 மணி

தில்லு முல்லு – நகைச்சுவையும் நையாண்டியும் நிறைந்த நிகழ்ச்சி

காலை 9 மணி

திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில், குடும்பத்தில் பிள்ளைகளின் விருப்பப்படி வாழ்வது ஆரோக்கியமா? ஆபத்தா? என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம்

காலை 10 மணி

பேரன்பு – திரைப்படம்

ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, சாதனா மற்றும் பலர் நடித்த படம்

மதியம் 1.30 மணி

சைக்கோ – பட சிறப்பு நிகழ்ச்சி

உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், இயக்குனர் மிஷ்கின், ராம் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்

மதியம் 2.30 மணி

நாளை இயக்குனர் சீசன் 6 – இறுதிச் சுற்று

மாலை 5.30 மணி

பசங்க – குழந்தைகள் மட்டுமே பங்கேற்கும் காமெடி நிகழ்ச்சி

Continue Reading

Television

தி வால் – விஜய் டிவியில் உலகின் நம்பர் 1 கேம் ஷோ

Published

on

By

தி வால் - விஜய் டிவியில் உலகின் நம்பர் 1 கேம் ஷோ

விஜய் டிவியில் வரும் அக்டோபர் 12ம் தேதி முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு தோறும் இரவு 9 மணிக்கு ‘தி வால்’ எனும் கேம் ஷோ ஒளிபரப்பாக உள்ளது.

உலகின் மிகச்சிறந்த கேம் ஷோவான ‘தி வால்’ என்பது நாற்பதடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட சுவர் போன்ற டிஜிட்டல் போர்டில் விளைவயாடும் அறிவு மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்த ஒரு விளையாட்டு நிகழ்ச்சியாகும்.

இதில் இரண்டு நபர்கள் ஜோடியாக விளையாட வேண்டும். இதன் பரிசுத்தொகை இதுவரை எவரும் அளித்திராத பிரம்மாண்ட தொகையாகும். இதில் அதிர்ஷடமும் அறிவும் கைகொடுத்தால் இரண்டரை கோடி ரூபாயை வெல்லலாம்.

ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள், நண்பர்கள் இந்த போட்டியில் ஜோடியாக கலந்து கொள்ள வேண்டும். நகைச்சுவையாகவும், கலகலப்பாகவும் தொகுத்து வழங்குபவர்கள் எனப் பெயர் பெற்ற மகாபா ஆனந்த், பிரியங்கா இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்கள்.

‘தி வால்’ ஒரு பிரம்மாண்ட டிஜிட்டல் போர்டு. அதன் மேல் மட்டத்தில் ஏழு ஸ்லாட்டுகள் இருக்கும். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வெள்ளை, பச்சை, சிவப்பு பந்துகளை ஆட்டத்திற்கு ஏற்றவாறு அதிலிருந்து செலுத்த வேண்டும். அந்த பந்துகள் இடையிடையே அமைக்கப்பட்டுள்ள இடறுகளைத் தாண்டி கீழே வந்து விழும். கீழ் வரிசையில் பல கூடைகள் அமைக்கப்பட்டிருக்கும். அதில் பல தரப்பட்ட பரிசு தொகைகள் ரூபாய் ஒன்றில் இருந்து இரண்டரை கோடி ரூபாய் வரை பண மதிப்புகள் அமைக்கப்பட்டிருக்கும்.

மேலிருந்து கீழ் வந்து விழும் பந்து எந்த கூடையில் விழுகிறதோ அதன்படி பரிசுத் தொகைகள் நிர்ணயிக்கப்படும். இந்தப் போட்டியில் மூன்று நிற பந்துகள் அளிக்கப்படும். வெள்ளை பந்துகள் மற்றும் பச்சை பந்துகள் பரிசுத் தொகையை அதிகரிக்கும். சிகப்புப் பந்துகள் வென்ற தொகையில் இருந்து பரிசுத்தொகையை கழித்துவிடும். போட்டியாளர்கள் சொல்லும் சரியான மற்றும் தவறான பதில்களின் அடிப்படையில் இந்த பந்துகளின் நிறங்கள் நிர்ணயிக்கப்படும்.

இவ்வாறாக போட்டி விறுவிறுப்பாக நடைபெறும். மேலும் முதல் 2 ரவுண்டில் மட்டுமே இரண்டு போட்டியாளர்கள் இணைத்து விளையாட முடியும். மூன்றாவது சுற்றில் இருந்து இருவரும் பிரிக்கப்படுவர். ஒருவர் வால் முன்பு நின்றும், மற்றொருவர் தனியறையில் இருந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் விளையாட்டைத் தொடரவேண்டும்.

கடைசி வரும் கட்டத்தில் ஒரு ஒப்பந்தக் கடிதம் தனியறையில் இருக்கும் போட்டியாளருக்குக் கொடுக்கப்படும். அவர் அதில் கையெழுத்து இடுகிறாரா அல்லது அதை கிழித்துப் போடுகிறாரா என்பதைப் பொறுத்து அவர்கள் சேர்த்த பரிசுத் தொகைகளை அவர்கள் எடுத்துச்செல்ல முடியும்.

மிகவும் விறுவிறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும் இந்த கேம் ஷோ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் ஒரு ஷோவாக இருக்குமாம்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: