Connect with us

Tamil Cinema News

பிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்

Published

on

பிக் பாஸ் 3 - நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் இன்று (5 ஆகஸ்ட் 2019) நடிகர் சரவணன் திடீரென வெளியேற்றப்பட்டார்.

கடந்த வாரம் மீரா மிதுன், சேரன் சம்பந்தப்பட்ட சண்டையில், கமல்ஹாசன் பேருந்துகளில் பெண்கள் பயணிப்பதைப் பற்றிப் பேசிய போது, சரவணன், கல்லூரியில் படித்த போது பெண்களை உரசுவதற்காக பேருந்தில் சென்றுள்ளேன் என்ற பொருள்படி பேசினார்.

அப்படிப் பேசியதற்கு பின்னர் மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கான நாமினேஷன் கூட முடிந்தநிலையில், இன்றைய நிகழ்ச்சியின் கடைசியில், கன்பெஷன் ரூமுக்கு நடிகர் சரவணனை அழைத்த பிக் பாஸ், பெண்களைப் பற்றித் தவறாகப் பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றுவதாக தெரிவித்து, அவரை அப்படியே வெளியே வரவழைத்தனர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் அவருடைய நெருங்கிய நண்பர்களான கவின், சாண்டி உள்ளிட்டவர்களுக்கும், மற்ற போட்டியாளர்களுக்கும் கூட வீட்டுக்குள் சென்று விடை பெறக் கூட முடியாமல் அவர் அப்படியே வெளியேறியுள்ளதாகத் தெரிகிறது.

எலிமினேஷனில் வெளியேற்றப்படாத காரணத்தால் அவர் வெளியேறும் போது கமல்ஹாசனிடம் கூட பேசிவிட்டுச் செல்ல முடியாது. கமல்ஹாசன் சொன்ன ஒரு உதாரணத்திற்கு நகைச்சுவையாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு அவர் இளம் வயதில் செய்த ஒரு விஷயத்தை சொல்லி மாட்டிக் கொண்டு இப்போது வெளியேறியிருக்கிறார் சரவணன்.

சரவணன் வெளியேறியது மற்ற போட்டியாளர்களுக்கு எப்படி இருந்தது என்பது நாளைய நிகழ்ச்சியில்தான் தெரிய வரும்.

Tamil Cinema News

சங்கத்தமிழன், இசை வெளியீடு

Published

on

By

சங்கத்தமிழன், இசை வெளியீடு

பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்‌ஷன்ஸ் 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம்.

விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி ‘சங்கத்தமிழன்’ படத்தை தயாரித்துள்ளார்.

விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நாசர், சூரி, ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீ ரஞ்ஜனி மற்றும் மைம் கோபி என பலர் நடித்துள்ளனர்.

இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 17 ஆம் தேதி சன் ஸ்டுடியோஸில் நடைபெற்றது .

இந்த விழாவில் ‘சங்கத்தமிழன்’ படக்குழுவினர்களான கதாநாயகன் விஜய்சேதுபதி, தயாரிப்பாளர் பி.பாரதி ரெட்டி, இயக்குனர் விஜய்சந்தர், ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், இசையமைப்பாளர்கள் விவேக் – மெர்வின், ஒளிப்பதிவாளர் வேல் ராஜ் , சூரி , ஸ்ரீமன், ஜான் விஜய், அகல்யா வெங்கடேசன், பாடலாசிரியர் விவேகா, நிர்வாக தயாரிப்பாளர்கள் ரவிச்சந்திரன், குமரன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Continue Reading

Tamil Cinema News

‘சைரா’ படத்தின் தமிழ் வெளியீடு அறிவிப்பு

Published

on

By

சைரா படத்தின் தமிழ் வெளியீடு அறிவிப்பு

சிரஞ்சீவி, விஜய் சேதுபதி, சுதீப், நயன்தாரா, தமன்னா, சிறப்புத் தோற்றத்தில் அமிதாப்பச்சன், அனுஷ்கா மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் ‘சைரா நரசிம்மா ரெட்டி’.

இப்படத்தை தமிழ் மொழியிலும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை பல வெற்றிப் படங்களைத் தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்தை டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். அக்டோபர் 2ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது. ஹைதராபாத்தில் வரும் ஞாயிறு 22ம் தேதி படத்திற்கான பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்த உள்ளார்கள். அதில் பவன் கல்யாண், ராஜமௌலி உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அதன் பின் சென்னையிலும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் கலந்து கொள்ள ரஜினிகாந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Continue Reading

Tamil Cinema News

பிகில் வெளியீடு – தயாரிப்பாளர் புதிய அறிவிப்பு

Published

on

By

பிகில் வெளியீடு - தயாரிப்பாளர் புதிய அறிவிப்பு

எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், இந்துஜா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பிகில்’.

இப்படத்தின் இசை வெளியீடு நாளை மாலை சென்னையில் நடைபெற உள்ளது.

இதனிடையே, படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி புதிய அறிவிப்பு ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில், “யூகங்களின் அடிப்படையில் வெளியீட்டுத் தேதி பற்றி தவறான வதந்திகளை தயவு செய்து பரப்பாதீர்கள். படத்தின் சென்சார் முடிந்த பிறகே அது பற்றி அறிவிப்போம். பாக்ஸ் ஆபிசில் புதிய சாதனை படைக்கும் விதத்தில் சரியான நாளைத்தான் தேர்வு செய்வோம் என்பதை நம்புங்கள்,” என்று பதிவிட்டுள்ளார்.

‘பிகில்’ படம் தீபாவளி தினமான அக்டோபர் 27ம் தேதி வெளியாகும் என்றும், அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக அக்டோபர் 25ம் தேதி வெளியாகும் என்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.

தற்போது தயாரிப்பாளர் தரப்பில் விளக்கமளித்துவிட்டதால் அது பற்றி இனி தவறான செய்திகள் வெளிவராது. தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: