Connect with us

Television

ஞானசம்பந்தன் வழங்கும் ‘பொம்மியும் திருக்குறளும்’

சுட்டி டிவியில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி

Published

on

ஞானசம்பந்தன் வழங்கும் ‘பொம்மியும் திருக்குறளும்’

சன் குழுமத்துடன் இணைந்து ‘கெஸ்டோ’ ஸ்டுடியோஸ் இணைந்து ‘பொம்மியும் திருக்குறளும்’ எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர்.

இந்தநிகழ்ச்சியில் பிரபல இலக்கியப் பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் தினமும் ஒரு திருக்குறளும், அதற்குரிய பொருளையும் அவருக்கே உரிய எளிய நடையில் இனிமை ததும்பும் வகையில் வழங்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் குட்டிக் கதையின் சாயல் இருக்கும். நகைச்சுவையின் மென்சுவை மிதக்கும். குழந்தைகளுக்கான மொழியில் அன்புரை இருக்கும்.

ஆறு நிமிட அளவில் அமைந்துள்ள இந்நிகழ்ச்சி ஒரு வித்தியாசமான முயற்சியாகும். கு.ஞானசம்பந்தன், கார்ட்டூன் கேரக்டர்களான பொம்மி மற்றும் அதன் நண்பர்களுடன் உரையாடுவது போல இந்நிகழ்ச்சி அரங்கேறவுள்ளது.

சன் குழுமத்துடன் இணைந்து ‘கெஸ்டோ’ ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் இந்த ‘பொம்மியும் திருக்குறளும்’ எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியானது இன்று திங்கட்கிழமை முதல் சுட்டி டி.வியில் அரங்கேற உள்ளது.

இது போன்ற கார்ட்டூன் கேரக்டர்களுடன் இணைந்து ஒரு தமிழறிஞர் திருக்குறளை, குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வகையில் வழங்கும் இது போன்ற நிகழ்ச்சி இதுவரையில் அரங்கேறியதே இல்லை. இதுதான் முதல் நிகழ்ச்சியாகும்.

இந்நிகழ்ச்சி பற்றி பேராசிரியர் கு ஞானசம்பந்தன் பேசும்போது,

“இது ஒரு புதுமையான அனுபவம் . இது திருக்குறளை குழந்தைகள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சி. இன்றைய குழந்தைகளுக்கு யாரைப் பிடிக்கும் என்றால் அப்பா அம்மாவை விட கார்ட்டூன் கதாபாத்திரங்களைத்தான் அதிகம் பிடிக்கிறது. அதன் வழியாக அவர்களிடம் திருக்குறளைக் கொண்டு சேர்க்கும் முயற்சிதான் இது. இதில் குறள், அதன் பொருள், சின்னதாக ஒரு கதை, இவ்வளவும் 5 நிமிடங்களில் இருக்கும்.

திருக்குறளை யாருக்கு கொண்டு சேர்க்க வேண்டுமோ அவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு நல்ல முயற்சி இரண்டடி உள்ள திருக்குறளை இரண்டடி உயரம் உள்ள குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் சரியான முயற்சி.

குழந்தைகளுக்குப் பிடித்த அனிமேஷன் உலகத்தில் பிரவேசித்து திருக்குறளைக் கொண்டு செல்கிறோம். இதற்கு எளிமையாக ஒரு கதையை அமைப்பது, திரைக்கதை அமைப்பது என்பது மிகவும் சிரமமான வேலைதான். ஏனென்றால் குழந்தைகளுக்கு எழுதுவது மிகவும் கடினமானது . செயலில் இறங்கிப் பார்த்தால்தான் எவ்வளவு கடினமானது என்பது புரியும்.

’இன்னா செய்தாரை ஒறுத்தல்’ என்று சொல்லும்போது குழந்தை கேட்கும் ’இன்னான்னா என்னா ?’ என்று. அப்போது அதற்கு விளக்கம் சொல்ல வேண்டும். குழந்தைகளுக்கு எழுதுவது என்பது ஒரு மாயக் கண்ணாடி போன்றது குழந்தைகளுடன் பேசும்போது பெரியவர்கள் நாம் குழந்தைகள் ஆகிவிடுவோம் அவர்கள் பெரியவர்கள் ஆகிவிடுவார்கள் இந்த மாயம் நிகழ்வதை உணர முடியும். அப்படி ஓர் அனுபவத்தை இந்த நிகழ்ச்சி எனக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது .

இப்படிக் குழந்தைகளுக்கு அவர்கள் மொழியில் அவர்கள் வழியில் திருக்குறளைக் கொண்டு சேர்க்கும் இந்நிகழ்ச்சி உண்மையிலேயே புதுமையான சுவையான ரசிக்கத்தக்க நிகழ்ச்சியாக இருக்கும் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.

Continue Reading

Television

தி வால் – விஜய் டிவியில் உலகின் நம்பர் 1 கேம் ஷோ

Published

on

By

தி வால் - விஜய் டிவியில் உலகின் நம்பர் 1 கேம் ஷோ

விஜய் டிவியில் வரும் அக்டோபர் 12ம் தேதி முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு தோறும் இரவு 9 மணிக்கு ‘தி வால்’ எனும் கேம் ஷோ ஒளிபரப்பாக உள்ளது.

உலகின் மிகச்சிறந்த கேம் ஷோவான ‘தி வால்’ என்பது நாற்பதடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட சுவர் போன்ற டிஜிட்டல் போர்டில் விளைவயாடும் அறிவு மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்த ஒரு விளையாட்டு நிகழ்ச்சியாகும்.

இதில் இரண்டு நபர்கள் ஜோடியாக விளையாட வேண்டும். இதன் பரிசுத்தொகை இதுவரை எவரும் அளித்திராத பிரம்மாண்ட தொகையாகும். இதில் அதிர்ஷடமும் அறிவும் கைகொடுத்தால் இரண்டரை கோடி ரூபாயை வெல்லலாம்.

ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள், நண்பர்கள் இந்த போட்டியில் ஜோடியாக கலந்து கொள்ள வேண்டும். நகைச்சுவையாகவும், கலகலப்பாகவும் தொகுத்து வழங்குபவர்கள் எனப் பெயர் பெற்ற மகாபா ஆனந்த், பிரியங்கா இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்கள்.

‘தி வால்’ ஒரு பிரம்மாண்ட டிஜிட்டல் போர்டு. அதன் மேல் மட்டத்தில் ஏழு ஸ்லாட்டுகள் இருக்கும். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வெள்ளை, பச்சை, சிவப்பு பந்துகளை ஆட்டத்திற்கு ஏற்றவாறு அதிலிருந்து செலுத்த வேண்டும். அந்த பந்துகள் இடையிடையே அமைக்கப்பட்டுள்ள இடறுகளைத் தாண்டி கீழே வந்து விழும். கீழ் வரிசையில் பல கூடைகள் அமைக்கப்பட்டிருக்கும். அதில் பல தரப்பட்ட பரிசு தொகைகள் ரூபாய் ஒன்றில் இருந்து இரண்டரை கோடி ரூபாய் வரை பண மதிப்புகள் அமைக்கப்பட்டிருக்கும்.

மேலிருந்து கீழ் வந்து விழும் பந்து எந்த கூடையில் விழுகிறதோ அதன்படி பரிசுத் தொகைகள் நிர்ணயிக்கப்படும். இந்தப் போட்டியில் மூன்று நிற பந்துகள் அளிக்கப்படும். வெள்ளை பந்துகள் மற்றும் பச்சை பந்துகள் பரிசுத் தொகையை அதிகரிக்கும். சிகப்புப் பந்துகள் வென்ற தொகையில் இருந்து பரிசுத்தொகையை கழித்துவிடும். போட்டியாளர்கள் சொல்லும் சரியான மற்றும் தவறான பதில்களின் அடிப்படையில் இந்த பந்துகளின் நிறங்கள் நிர்ணயிக்கப்படும்.

இவ்வாறாக போட்டி விறுவிறுப்பாக நடைபெறும். மேலும் முதல் 2 ரவுண்டில் மட்டுமே இரண்டு போட்டியாளர்கள் இணைத்து விளையாட முடியும். மூன்றாவது சுற்றில் இருந்து இருவரும் பிரிக்கப்படுவர். ஒருவர் வால் முன்பு நின்றும், மற்றொருவர் தனியறையில் இருந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் விளையாட்டைத் தொடரவேண்டும்.

கடைசி வரும் கட்டத்தில் ஒரு ஒப்பந்தக் கடிதம் தனியறையில் இருக்கும் போட்டியாளருக்குக் கொடுக்கப்படும். அவர் அதில் கையெழுத்து இடுகிறாரா அல்லது அதை கிழித்துப் போடுகிறாரா என்பதைப் பொறுத்து அவர்கள் சேர்த்த பரிசுத் தொகைகளை அவர்கள் எடுத்துச்செல்ல முடியும்.

மிகவும் விறுவிறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும் இந்த கேம் ஷோ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் ஒரு ஷோவாக இருக்குமாம்.

Continue Reading

Television

பிக் பாஸ் – 7 கோடி வாக்குகள் பெற்று வென்ற முகேன்

Published

on

By

பிக் பாஸ் 3 - 7 கோடி வாக்குகள் பெற்று வென்ற முகேன்

விஜய் டிவியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த ‘பிக் பாஸ் 3’ நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

நேற்றைய இறுதி நாளில் மலேசியாவைச் சேர்ந்த போட்டியாளர் முகேன் ராவ் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவருக்கு 7 கோடிக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்ததாகவும், இரண்டாவது இடத்தைப் பிடித்த நடன இயக்குனர் சாண்டிக்கு 5 கோடிக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்ததாகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கமல்ஹாசன் அறிவித்தார்.

இறுதிப் போட்டியில் அவர்கள் இருவரையும் மேடைக்கு அழைப்பதற்கு முன்பு, நான்கு இறுதிப் போட்டியாளர்களில் நான்காவது இடத்தைப் பிடித்த ஷெரின், மூன்றாவது இடத்தைப் பிடித்த லாஸ்லியா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

ஷெரினை கடந்த சீசனின் வெற்றியாளரான நடிகை ரித்விகாவும், லாஸ்லியாவை கமல்ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதிஹாசனும் வீட்டிற்குள் சென்று வெளியில் அழைத்து வந்தனர்.

பிக் பாஸ் போட்டியாளர்கள் வனிதா, கஸ்தூரி, அபிராமி, சாக்ஷி ஆகியோர் இறுதிப் போட்டியில் மேடையில் நடனமாடி சிறப்பித்தார்கள்.

இந்த சீசனின் போட்டியாளர்களில் பிக் பாஸால் வெளியேற்றப்பட்ட சரவணன், மதுமிதா ஆகியோர் மட்டும் இந்த இறுதிப் போட்டிக்கு அழைக்கப்படவில்லை. மற்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சீசனின் வெற்றியாளராக வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட தர்ஷனை, தங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளதாக கமல்ஹாசன் மேடையில் அறிவித்தார்.

பிக் பாஸ் சீசன் 3ல் வெற்றி பெற்ற முகேன் ராவுக்கு 50 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

Continue Reading

Television

விஜய் டிவியில் புதிய தொடர் ‘காற்றின் மொழி’

Published

on

By

விஜய் டிவியில் புதிய தொடர் காற்றின் மொழி

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய காதல் கலந்த, குடும்ப நெடுந்தொடர் காற்றின் மொழி.

இத்தொடர் அக்டோபர் 07 முதல் இரவு 9.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

கண்மணி பிறவியிலேயே வாய் பேச முடியாதவள். அவள் பிறந்தது குடும்பத்திற்கு துரதிஷ்டம் என்று ஜோதிடர் சொன்னதை வைத்து, அவளது பாட்டி மற்றும் குடும்பத்தினர் அவளை வீட்டில் இருந்து விலக்கி வைக்கின்றனர். கண்மணிக்கு அவள் அப்பா என்றால் கொள்ளை பிரியம்.

சந்தோஷ் கதையின் நாயகன். அமெரிக்காவில் படிப்பை முடித்து சொந்த ஊர் திரும்பும் இளைஞன். கண்மணியும் அவனும் குழைந்தைப் பருவ நண்பர்கள். சந்தோஷ், கண்மணியை பார்த்தவுடன் அவளின் குணத்தில், அழகில் மயங்கி அவளைக் காதலிக்கிறான்.

ஆனால், கண்மணி அவள் அப்பாவின் அன்பு மட்டும் கிடைத்தாலே போதும் என்று நினைக்கிறாள். சந்தோஷ், கண்மணியின் மனதில் இடம் பிடிப்பானா ?, கண்மணிக்கு அவள் அப்பாவின் அன்பு கிடைக்குமா ? என்பதுதான் இத் தொடரின் கதை.
ராம் குமார் இயக்கும் இத் தொடரில் ‘ராஜா ராணி’ தொடரின் நாயகன் சஞ்சீவ், பிரியங்கா, மனோகர், அனிலாஸ்ரீ மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: