Connect with us

Tamil Cinema News

உண்மைக் கதையுடன் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’

Published

on

உண்மைக் கதையுடன் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’

ஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’

மலையாளம் மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் முன்னணி நடிகர் ஆர் கே சுரேஷ், அர்சிதா ஸ்ரீதர், நேகா சக்சேனா, சார்மிளா, ரத்னவேலு, இயக்குநர் மஞ்சித் திவாகர், தயாரிப்பாளர் அப்துல் லத்தீப் வடுக்கோட், ஒளிப்பதிவாளர் அய்யப்பன், திரைக்கதையாசிரியர் ரிஜேஷ் பாஸ்கர், இசையமைப்பாளர் சிவ சுகுமாரன், தயாரிப்பு நிர்வாகி ஷாஜீன் ஜார்ஜ், கலை இயக்குநர் பீஜேஷ் நின்மாலா , தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் முருகன் கல்லூர், புகைப்படக் கலைஞர் அஜீஸ், நிதி நிர்வாக அதிகாரி ராஜீவ், சண்டைப் பயிற்சி இயக்குநர் ஜாக்கி ஜான்சன், நடிகர்கள் அபுபக்கர், மாஸ்டர் ஷகர் அப்துல் லத்தீப், பாடலாசிரியர் கானா வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

தயாரிப்பாளர் அப்துல் லத்தீப் வடுக்கோட் பேசும் போது,

‘சஸ்பென்ஸ் த்ரில்லராகத் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் தங்களின் பங்களிப்பை நேர்த்தியாக வழங்கியிருக்கிறார்கள். இது பெண்களுக்கான அழுத்தமான மெசேஜ் உள்ள படம். தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகியிருக்கிறது. அனைவரும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் மஞ்சித் திவாகர் பேசுகையில்,

“இது என்னுடைய இரண்டாவது படம். குருவாயூர் கோவிலில் முதல் நாள் படப்பிடிப்பைத் தொடங்கினேன். தற்போது வரை அவரின் அருள் இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன். தயாரிப்பாளர் அப்துல் சார் தான் இந்த படத்தை முடித்து, ஜூனில் வெளியிடுவதற்காக திட்டமிட்டு வருகிறார். இந்தப் படத்தின் கதையை

நான்காண்டுகளுக்கு முன் கதாசிரியர் ரிஜேஷ் கொச்சியில் சந்தித்து என்னிடம் சொன்னார். அப்போது சென்னை அம்பத்தூரில் 1993 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவம் பற்றிக் கூறினார். அதை மையமாக வைத்து தான் இதன் திரைக்கதையை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.ஷாதிகா என்ற கதாப்பாத்திரத்திற்கேற்ற நடிகைக்கான தேடலில் ஈடுபட்டோம். இறுதியில் அந்த கேரக்டரில் அர்சிதா ஸ்ரீதர் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் டைட்டில் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03 ’என்றதும், சிலர் இணையத்தில் ஷாதி என்றால் திருமணம் என்பதால் , இப்படத்தின் டைட்டிலை ட்ரோல் செய்தனர். ஆனால் அதற்கு நான் எந்த எதிர்வினையிலும் ஈடுபடாமல் அமைதியானேன். அதனையடுத்து இந்த படத்தில் போலீஸ் அதிகாரி அமீர் யூசுப்பாக ஆர் கே சுரேஷையும், டாக்டர் செரீனா தாமஸ் என்ற கதாபாத்திரத்தில் கன்னடத்து நடிகையான நேகா சக்சேனாவையும் ஒப்பந்தம் செய்தேன். லட்சுமி என்ற அம்மா கேரக்டரில் நடிகை சார்மிளா நடித்திருக்கிறார்.

‘ஷிகாரி சம்பவம்’ என்ற மலையாளப் படத்தில் நடிகர் ஆர். கே. சுரேஷின் நடிப்பைப் பார்த்து தான் இந்த கேரக்டரில் நடிக்க வைத்தேன். அற்புதமான திறமைக் கொண்ட நடிகர். அவர் நடித்த பிறகு தான் இந்த படத்தின் தோற்றமே மாறிவிட்டது. ‘கானா கொம்பத்து ’ என்ற படத்தில் நடித்த நடிகர் வினோத்தை, இந்த படத்தில் ரஞ்சன் என்ற கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறேன். இது போல் ஒவ்வொரு கேரக்டருக்கும் பொருத்தமான நடிகர் நடிகைகளைத் தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறோம்.

இந்தப் படத்தின் கதை கொச்சியிலிருந்து சென்னை நோக்கி பயணிக்கிற கதை. இதில் நாயகி, தன்னுடைய சொந்த பணிக்காக சென்னைக்கு வருகை தருகிறார். அவர் வரும் போது சந்திக்கும் சம்பவங்களும், அதன் விளைவுகளும் தான் திரைக்கதை. பொள்ளாச்சி சம்பவங்களுக்கும், இந்த படத்தின் திரைக்கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனாலும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் செய்தி ஒன்றையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறோம். அதனை கமர்சியல் அம்சங்களுடன் இணைத்து உருவாக்கியிருக்கிறோம்,” என்றார்.

நடிகர் ஆர்கே சுரேஷ் பேசும் போது,

“கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ படத்தில்  முதலில் நடிக்கத்தான் நான் ஒப்புக்கொண்டேன். ஆனால் படத்தை முடித்துவிட்டு டப்பிங்கில் பார்க்கும் போது, இயக்குநரிடம், ‘இதில் எழுபது சதம் தமிழ் இருக்கிறது. முப்பது சதம் தான் மலையாளம் இருக்கிறது.’ என்றேன். இதன் திரைக்கதை அனைவருக்கும் பொருந்தக்கூடியது. அதிலும் இந்தியாவிற்கு தற்போது தேவைப்படும் திரைக்கதை. சமுதாயம் நன்றாகஇருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட திரைக்கதை. அதனால் இதனை தமிழ் ரசிகர்களிடத்திலும் கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்று சொன்னேன். அவர்களும் ஒப்புக்கொண்டு இதனை தமிழிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக நான் ஊடகத்துறைக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நாம் சாதி ரீதியில் பிரிக்கப்பட்டிருந்தாலும், மத ரீதியில் பிரிக்கப்பட்டிருந்தாலும் இந்தியன் என்ற உணர்வில் ஒன்றாகவேயிருக்கிறோம். மலையாள மக்கள் என்னை இந்தளவிற்கு ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு மலையாள உலகம் புதிதாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பிற்காகக் கேரள மண்ணில் கால் வைத்தவுடன் அங்கு பணியாற்றும் அனைவரும் ஒரு குடும்பம் போல் ஒருங்கிணைந்து பணியாற்றினார்கள். அந்த உணர்வு தமிழ் திரையுலகில் இல்லை என்று
வெளிப்படையாக சொல்வேன். இருந்தாலும் தமிழ் நாடு என்னுடைய தாய் வீடு அல்லவா?.

இந்த படத்தின் படபிடிப்பின் போது ஒரு சம்பவம் நடைபெற்றது. தொழிலாளர்களுக்கான பணப்பட்டுவாடா செய்வதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள தொழிலாளர் அமைப்பு படப்பிடிப்பை நிறுத்திவிட்டது. உடனே நான் என்னுடைய சொந்த பணத்தை ஒரு லட்ச ரூபாயைக் கொடுத்தேன். ஆனால் அவர்கள் முதலில் வாங்க மறுத்தார்கள். நீங்கள் வேற்று மாநிலத்தவர்கள் என்றும், உங்களிடம் வாங்க மாட்டோம் என்றும் சொன்னார்கள். நான் உடனே நான் வேற்று
மாநிலத்தவன் அல்ல. சினிமாவின் நேசிப்பவன். சினிமாவிற்கு மொழி பேதம் கிடையாது. இதனை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டபிறகு அவர்கள் வாங்கிக் கொண்டார்கள்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு நானும் தயாரிப்பாளரும் நெருக்கமாகி விட்டோம். இதன் காரணமாக அவர் என்னை வைத்து அடுத்தடுத்து மூன்று படங்கள் தயாரிக்கும் அளவிற்கு, என்னுடைய நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார். இதற்காக நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு இங்குள்ள வரவேற்பு, தமிழ் நடிகர்களான விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களை அவர்கள் கொண்டாடுகிறார்கள், மதிக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் திரையுலகமும், மலையாள திரையுலகமும் ஒன்றிணைந்த சகோதரர்கள் போல் செயல்படுகிறார்கள்.

இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் எனக்கு பிடித்திருந்தது. நான் மலையாளத்தில் நாயகனாக நடிக்கும் முதல் படமிது. இந்த படத்தின் கதை ஒரு வருடத்திற்கு முன்னரே எழுதப்பட்டது. அதில் பொள்ளாச்சி சம்பவங்கள் போல் பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கிறது. பெண்கள் தங்களை எப்படியெல்லாம் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை சொல்லும் படமாகவும் தயாராகியிருக்கிறது.

தமிழகத்தில் மலையாளம், தெலுங்கு மொழியின் நேரடி படங்கள் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்று வருகின்றன. இங்கு பன்முக கலாச்சாரம் அறிமுகமாகியிருக்கிறது. இது சினிமாவை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.

அதன் பிறகு படக்குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து படத்தின் டிரைலரை வெளியிட்டனர்.

Tamil Cinema News

சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்

Published

on

By

சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்

புதிய கல்விக் கொள்கை குறித்த பல கருத்துக்களை நடிகர் சூர்யா சில தினங்களுக்கு முன்பு பேசியிருந்தார். நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வு ஆகியவற்றிற்கு சூர்யா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவருடைய கருத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

சூர்யாவின் கருத்துக்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு கிடைத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் அவரைப் பாராட்டி வருகிறார்கள். அன்புமணி ராமதாஸ், சீமான் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகர் கமல்ஹாசன் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

“ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்துவருகிறார்கள்.

எனவே கல்வி குறித்துப் பேசுவதற்கான உரிமை சூர்யாவுக்கு உண்டு.

புதிய கல்விக் கொள்கை குறித்த தம்பி சூர்யாவின் கருத்துகள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு.

மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்ற ‘வரைவு அறிக்கை’ மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப் போக்கினை மக்கள் நீதி மையம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

Tamil Cinema News

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்

Published

on

By

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - துல்கர் சல்மானின் 25வது படம்

வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஆண்டோ ஜோசஃப் ஃபிலிம் கம்பெனி தயாரிக்கும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’.

தேசிங் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி அகத்தியன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

படம் பற்றி வியாகாம் 18 ஸ்டுடியோஸின் தலைமை செயல் அதிகாரி அஜித் அந்தரே கூறும்போது,

“ஒரு திரைப்பட தயாரிப்பாளராக, மொழிகளைத் தாண்டி பார்வையாளர்களை ஈர்க்கக் கூடிய கதைகளைச் சொல்வதை விட திருப்தி எதுவும் இல்லை. தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு கொடுக்கப்படும் கதைகளைக் கண்டு நான் எப்போதுமே ஈர்க்கப்பட்டிருக்கிறேன். ஆண்டோ ஜோசஃப்புடன் இணைந்து நாங்கள் தயாரிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர், ஆண்டோ ஜோசஃப் கூறுகையில்,

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்‘ போன்ற ஒரு படத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் பெருமைப்படுகிறேன். இது வியாகாம் 18 ஸ்டுடியோஸ் உடன் எனது முதல் திரைப்படம், மற்றும் மூன்றாவது முறையாக நான் துல்கர் சல்மானுடன் பணிபுரியும் படம். இந்த படத்திற்கு இதை விட ஒரு சிறந்த கூட்டணி கிடையாது,” என்றார்.

இயக்குனர் தேசிங் பெரியசாமி கூறும்போது,

“எனது முதல் படம் இந்தியாவின் முன்னணி ஸ்டுடியோக்களில் ஒன்றான வியாயாகாம் 18 ஸ்டுடியோஸால் வெளியிடப்படுவது என் கனவு நனவான தருணம். இந்த திரைப்படத்தை தயாரித்த ஆண்டோ ஜோசஃப் பிலிம் நிறுவனத்துக்கும், அதை மேலும் உயர்த்திய வியாகாம் 18 ஸ்டுடியோவுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மிகவும் ரசிக்கப்படக் கூடிய ஒரு ஜாலியான இந்தப் படம் பார்வையாளர்களை மகிழ்விக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்,” என்றார்.

துல்கர் சல்மான் கூறுகையில்,

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ஒரு சுவாரஸ்யமான கதை. இதுபோன்ற அருமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் ஒரு பகுதியாக இருந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது எனது 25 வது படம் என்பது என்னை மேலும் சிறப்பாக உணர வைக்கிறது. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்துக்காக வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஆண்டோ ஜோசஃப் ஆகியோருடன் இணைந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்படம் சொல்லும் காதலை பார்வையாளர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.

Continue Reading

Tamil Cinema News

ஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’

Published

on

By

ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் - 4 Tamil Cinema

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெயின்மென்ட் அடுத்து தயாரிக்க உள்ள படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ‘பொன்மகள் வந்தாள்’ எனப் பெயர் வைத்துள்ளார்கள். இயக்குனர்கள் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள். இயக்குனர், நடிகர் பிரதாப் போத்தனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அறிமுக இயக்குனர் ஜேஜே. பிரட்ரிக் இப்படத்தை இயக்குகிறார். ‘96’ படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். பல தரமான படங்களை ஒளிப்பதிவு செய்த ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார், 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனரும் தயாரிப்பாளருமான சூர்யா, நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் ஹரி, பிரம்மா, முத்தையா, T.J.ஞானவேல், 2 D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, எஸ்.ஆர் பிரகாஷ் பாபு விநியோகஸ்தர் B.சக்திவேலன் ஆகியோரும், மற்றும் படத்தின் நட்சத்திரங்கள் ஜோதிகா, பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் படத்தின் இயக்குநர் பிரட்ரிக் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!