Connect with us

Tamil Cinema News

தேவி 2, ஏப்ரல் 12 வெளியீடு

Published

on

தேவி 2, ஏப்ரல் 12 வெளியீடு

ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் ‘தேவி 2’.

இந்த படத்தில் பிரபுதேவா, தமன்னா, நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடிக்கின்றனர். விஜய் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

இப்படத்தை ஏப்ரல் 12ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள்.

‘தேவி’ படம் 2016ல் வெளிவந்து நல்ல வசூலைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.

‘தேவி 2’ படம் பற்றி இயக்குனர் விஜய் கூறுகையில்,

“கோடை விடுமுறையில் குடும்பத்துடன் வந்து படம் பார்ப்பார்கள். இந்தப் படம் குடும்பத்துடன் வந்து ரசிக்கும்படியாகத்தான் உருவாக்கி இருக்கிறோம். காமெடி, சென்டிமென்ட், காதல், இசை, பொழுதுபோக்கு அம்சங்கள் படதில் உள்ளன.

பிரபுதேவா சாருடன் மீண்டும் இணைந்து பணிபுரியும் ஒரு வாய்ப்பை அளித்த பிரபுதேவா சாருக்கு நன்றி. அவரது எனர்ஜி அபாரமானது. முதல் பாகம் போலவே இந்தப் படத்திலும் அனைவரையும் ஈர்ப்பார்.

தமன்னா மிகச் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். முதல் பாகத்தில் அவரது நடிப்பை ரசிகர்கள் எவ்வாறு ரசித்தார்கள் என்பது அவருக்குத் தெரியும். இந்த படத்தில் அதை விடவும் சிறப்பாக நடிக்க முயற்சிகள் எடுத்தார்.

இந்தக் குழுவில் இருந்த எல்லோரும் அளித்த சிறந்த பங்களிப்புதான் குறித்த காலத்தில் படத்தை முடிக்கக் காரணமாக இருந்தது.

வரும் கோடைகாலத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படமாக ‘தேவி 2’ நிச்சயம் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.

Tamil Cinema News

அசுரன் – வியந்து பாராட்டும் இயக்குனர் வசந்தபாலன்

Published

on

By

அசுரன் - வியந்து பாராட்டும் இயக்குனர் வசந்தபாலன்

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து வெளிவந்த ‘அசுரன்’ படம் 100 நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.

அப்படம் பற்றி இயக்குனர் வசந்தபாலன் அவருடைய முகப்புத்தகத்தில் வியப்பான பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில்,

பூமணி அவர்கள் எழுதிய வெக்கை நாவல் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக மலர்ந்து 100 நாட்கள் கடந்து விஸ்வரூப வெற்றி அடைந்திருப்பதை பார்க்கிறபோது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

20 ஆண்டுகளுக்கு முன்பு கேகே நகர் அறையில் நானும் இயக்குனர் லிங்குசாமி உட்பட்ட சில திரைப்பட நண்பர்களும் வெக்கை நாவலை திரைப்படம் ஆக்குவது குறித்து பேசிக்கொண்டிருந்தோம். இது சிறிய கதையாக இருக்கிறது இதை எப்படி திரைப்படமாக மாற்றுவது என்று அதுகுறித்து பலவாறு யோசித்த வண்ணம் இருந்தோம். கடைசியில் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதன்பிறகு பல்வேறு சமயங்களில் நான் அடுத்த திரைப்படம் இயக்குவதற்கான சூழ்நிலை வரும்போது என்னுடைய நண்பன் வரதன் வெக்கை நாவலை திரைப்படமாக்கலாம் என்று கூறிக் கொண்டே இருப்பான்.

சிறிய கதையாக இருக்கிறது அதை விரிவாக ஆக்குவது எப்படி என்று தொடர்ந்து விவாதிப்போம். திட்டம் அவ்வப்போது கையில் எடுக்கப்பட்டு கைவிடப்படும் . என்னை போன்று திரை உலகம் முழுக்க வெக்கை நாவலை திரைப்படமாக ஆக்குகிற முயற்சிகள் தொடர்ந்து கையில் எடுக்கப்பட்டு கைவிடப்பட்டுக் கொண்டே இருந்தது.

ஒருசமயம் நடிகர் சத்யராஜ் அவர்கள் நடிக்க இருப்பதாக இருந்து திரைப்படம் கைவிடப்பட்டதாக திரை உலகத்தில் பல கதைகள் உலவும். நானும் விருதுநகர் செல்லும்போதெல்லாம் கோவில்பட்டிக்கு சென்று எழுத்தாளர் பூமணியை சந்தித்து வெக்கை நாவலை திரைப்படம் ஆக்குவது குறித்து உரையாடியிருக்கிறேன்.அவரும் திரைப்படமாக மாறினால் சந்தோஷம் என்று ஒரு விட்டேத்தியான மனநிலையோடு அந்த பேச்சைத் தொடர்வார் ஆனாலும் அவருக்குள் வெக்கை நாவல் திரைப்படமாக ஆகவேண்டும் என்ற எண்ணம் மிக வலுவாக இருந்தது.

அப்பொழுது சுசீந்திரன் அவர்கள் இயக்கத்தில் பாண்டிய நாடு திரைப்படம் வெளிவந்து இருந்தது. ஏறக்குறைய வெக்கை நாவலின் பல்வேறு கூறுகள் வேறு வடிவத்தில் பாண்டிய நாடு திரைப்படத்தில் இருப்பதை பரவலாக நண்பர்கள் அனைவரும் பேசிக் கொண்டோம்.பாண்டியநாடு திரைப்படத்தின் திரைக்கதை மூத்த மகன் கொலைக்கு, தந்தையும் இளைய மகனும் தனித்தனியாக பழி வாங்குவதாக அமைந்திருக்கும். ஆகவே இனிமேல் வெக்கை நாவலை திரைப்படம் ஆக்குவது குறித்து யோசிப்பது வீண் என்று என் நண்பர்கள் உட்பட நானும் அந்த முடிவுக்கு வந்துவிட்டோம்.

எழுத்தாளர் பூமணி அவர்களை சந்தித்தபோது பாண்டியநாடு திரைப்படத்தின் கதையை அவரிடம் விவரித்தேன். பூமணி மிகவும் வருத்தத்துக்கு உள்ளானார். இந்த சமயத்தில்தான் வெக்கை நாவலை வெற்றிமாறன் திரைப்படமாக எடுப்பது குறித்த அறிவிப்பு வெளியானது. மிகப்பெரிய ஆச்சரியமும், மிகப்பெரிய எதிர்பார்ப்பும் என்னிடம் உருவானது. எப்படி வெக்கை நாவலை ஒரு திரைப்படமாக வெற்றிமாறன் உருவாக்கப் போகிறார் என்ற பல்வேறு ஆச்சரியங்களும் கேள்விகளும் என் மனதில் சுழன்ற வண்ணம் இருந்தன. சிறிய கதையை வைத்துக்கொண்டு இவர் எப்படி திரைப்படமாக மாற்றுவார் என்று நான் யோசித்துக் கொண்டே இருந்தேன்.

பொல்லாதவன் திரைப்படம் கமர்ஷியல் தன்மையுடன் உள்ள திரைப்படம் அதன் திரைக்கதை வேறு வகை சேர்ந்தது. ஆடுகளம் திரைப்படத்தின் திரைக்கதையும் விசாரணை படத்தின் திரைக்கதையும் ஒரே வடிவமைப்பைக் கொண்டவை. வெற்றிமாறன் இரு சிறுகதைகளை ஒரே நேர்கோட்டில் இணைப்பதில் தேர்ந்தவர். .

ஆடுகளத்தில் பேட்டைக்காரனுக்கும் இன்ஸ்பெக்டருக்கும் நடக்கும் சண்டையை முதல் பாதியிலும் குருவுக்கும் சீடனுக்கும் நடக்கிற சண்டை இரண்டாம் பாதியிலும் அமைந்திருக்கும். அதே போன்று விசாரணை திரைப்படத்திலும் ஆந்திரா காவல்துறையிடம் மாட்டிக் கொண்ட இளைஞர்களை இன்ஸ்பெக்டர் மீட்பது முதல் பாதியிலும் , இரண்டாம் பாதியில் காவல் நிலையத்தை சுத்தம் செய்ய வந்த இளைஞர்கள் எப்படி என்கவுண்டர் செய்யப்பட்டனர் என்பது விவரிக்கப்பட்டிருக்கும்..

இப்படி திரைக்கதையில் இரு வேறு சம்பவங்களை அல்லது கதைகளை ஒன்றாக இணைத்து ஒரே திரைக்கதையாக எழுதுகிற ஆற்றல் வெற்றிமாறனுக்கு மிக எளிதாக கைகூடி வந்திருக்கிறது.வெற்றிமாறனுடைய கடந்த நான்கு படங்களை நாம் கூர்ந்து பார்க்கும் போது ஒரு சிறிய கதையை வைத்துக்கொண்டு மிக அழகாக திரைக்கதை அமைந்திருப்பதை கண்டிருக்கிறோம்.

ஒரு பைக் திருடு போன கதையை மட்டும் வைத்துக்கொண்டு பொல்லாதவன் மிக அழகான கமர்சியல் திரைக்கதையாக மாற்றியது. சேவற்சண்டையை வைத்துக்கொண்டு ஆடுகளம். அப்பாவி இளைஞர்கள் குற்றவாளிகளாக எப்படி ஆக்கப்படுகிறார்கள் என்பது விசாரணை. வடசென்னையை எடுத்துக்கொண்டால் பல்வேறு கதாபாத்திரங்களுடைய கதையை ஒரே நேர்கோட்டில் இணைக்கிற லாவகம் வெற்றிமாறனுக்கு எளிதாகவே உள்ளது.

ஆகவே வெக்கை நாவலை வெற்றிமாறன் மிக அழகான திரைக்கதையாக மாற்றி விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. திரைப்படம் வெளியான நாளில் திரைப்படத்தைக் கண்டபோது, அவர் விசாரணையிலும் ஆடுகளத்திலும் கையாண்ட அதே யுக்தியை அசுரன் திரைப்படத்திலும் கையாண்டு இருப்பதை பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்தது.

முதல் பாதி வெக்கை இரண்டாவது பாதி கீழ் வெண்மணி சம்பவம் மற்றும் பஞ்சமி நில மீட்பு என்று இருவேறு கதைகளை ஒரே நேர்கோட்டில் உணர்ச்சிகள் மாறாமல் கதையின் கருத்து மாறாமல் நிலம் சம்மந்தமான பிரச்சனையை அடிநாதமாக வைத்துக் கொண்டு மொத்த கதையையும் அழகாக எழுதியிருந்தார்.

திரைக்கதை அமைப்பில் மட்டுமல்ல அந்த படத்திற்கான படமாக்கத்திலும் உணர்வுக் கடத்தலை பார்வையாளனுக்கு கடத்தியது தான் வெற்றி. இந்த காலகட்டத்தில் அசுரனுடைய வெற்றி என்பது மிக முக்கியமானதாக நான் கருதுகிறேன் ஏனெனில் தமிழ் மண் மணத்துடன் கூடிய தமிழ் வாழ்க்கையை மிக அழகாக பதிவு செய்தது.

ஒரு நாவலில் இருந்து ஒரு தமிழ்த்திரைப்படம் உருவாவது மிக மிக ஆரோக்கியமான விஷயம். நாளைய உதவி இயக்குனர்களுக்கு புதிய வழிகாட்டியாக அசுரன் மாறி இருக்கிறது.

தமிழ்ச்சிறுகதைகள், தமிழ் நாவல்களில் இருந்து திரைப்படங்கள் உருவாக்குகிற புதிய பாணியை ( பழைய பாணி தான்.ஆனால் அசுரன் வெற்றி அதை புதிய பாணியை பார்க்க வைக்கிறது.) வெற்றிமாறன் வெற்றிகரமாக நிறுவியிருக்கிறார்.

அசுரன் திரைப்படத்தின் மூலம், அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அவர் அடுத்து இயக்க இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தைக் காண கோடிக்கண்களுடன் காத்திருக்கிறேன்,” என வியந்து பாராட்டியிருக்கிறார்.

 

Continue Reading

Tamil Cinema News

மாஸ்டர் – வாங்கியது யார், யார் ?

Published

on

By

விஜய் நடிக்கும் மாஸ்டர் - படப்பிடிப்பில்... 4 Tamil Cinema

எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’.

இப்படத்தின் வினியோக உரிமையை யார், யார் வாங்கியிருக்கிறார்கள் என்பதை பட நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாய் அறிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள படத்தின் வியாபாரத்தை ஜனவரி மாதத்திலேயே முடித்து திரையுலக வட்டாரங்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்கள்.

சென்னை ஏரியா

ஸ்ரீ கற்பக வினாயகா பிலிம் சர்க்யூட்ஸ்

செங்கல்பட்டு

தனம் பிக்சர்ஸ்

வட ஆற்காடு, தென்னாற்காடு

கே.செந்தில் (5 ஸ்டார்)

சேலம்

ஸ்ரீராஜ் பிலிம்ஸ்

கோவை

கந்தசுவாமி ஆர்ட்ஸ் சென்டர் பிலிம் டிஸ்டிரிபியூட்டர்ஸ்

திருச்சி, தஞ்சாவூர்

பிளஸ் மேக்ஸ் பிலிம்ஸ்

மதுரை

சுஷ்மா சினி ஆர்ட்ஸ்

திருநெல்வேலி, கன்னியாகுமரி

ஸ்ரீ சாய் கம்பைன்ஸ்

கேரளா

மலபார், கொச்சின்

பார்ச்சூன் சினிமாஸ்

திருவாங்கூர்

மேஜிக் பிரேம்ஸ்

ஆந்திரா, தெலங்கானா

ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்ஷன்ஸ்

கர்நாடகா

தீரஜ் என்டர்பிரைசஸ்

Continue Reading

Tamil Cinema News

‘மூக்குத்தி அம்மன்’ – 90 சதவீத படப்பிடிப்பு நிறைவு

Published

on

By

மூக்குத்தி அம்மன் - 90 சதவீத படப்பிடிப்பு நிறைவு

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில், ஆர்ஜே பாலாஜி, என்ஜே சரவணன் இணைந்து இயக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’.

நயன்தாரா இப்படத்தின் நாயகியாக நடிக்கிறார். மௌலி, ஊர்வசி மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு 44 நாட்களில் 90 சதவீதம் முடிந்துவிட்டது.

‘அவள்’ படத்தின் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ‘தானா சேர்ந்த கூட்டம்’” பட ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி ஆர்ஜே பாலாஜி கூறுகையில்,

“ஐசரி கணேஷ் போன்ற ஒரு தயாரிப்பாளர் நம் பக்கம் இருந்தால் எதுவும் சாத்தியமே. அவர் போன்ற ஒரு தயாரிப்பாளர் இருக்கும் போது நாம் படப்பிடிப்பில் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. நாம் கவலைகொள்ள வேண்டிய ஒரே விஷயம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அளவில்லா சுதந்திரத்தை எப்படி வீணாக்காமல் பயன்படுத்துவது என்பது தான். அதைப் படக்குழு தெளிவாக உணர்ந்து வேலை செய்திருக்கிறோம்.

படத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவது ஒன்று தான் எங்கள் குறிக்கோள். அவர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாகப் பூர்த்தி செய்வோம். மொத்த படக்குழுவும் படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறது. நவம்பர் 29, 2019 அன்று படப்பிடிப்பை துவக்கி 44 நாட்களில் 90 சதவீத படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். இன்னும் ஒரே ஒரு வார சென்னை படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கவுள்ளோம்.

இயக்குநர் என்ஜ சரவணன் இல்லையென்றால் இத்தனை சீக்கிரம் படப்பிடிப்பை முடித்திருக்க முடியாது. அவரது உழைப்பு அபாரமானது. நயன்தாரா இப்படத்திற்காக தந்திருக்கும் அர்ப்பணிப்பு வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. இந்த கதாபாத்திரத்திற்காக அவர் விரதம் இருந்திருக்கிறார். தன் முழு ஆத்மாவையும் ஒருங்கிணைத்து பணிபுரிந்திருக்கிறார். இப்படம் அவர் சினிமா வாழ்வில் வெகு முக்கியமான படமாக என்றென்றும் நிலைத்திருக்கும். மேலும் அவரது கதாபாத்திரம் படத்திற்கு பெரும் பலமாகவும் இருக்கும்,” என்றார்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: