Connect with us

Tamil Cinema News

‘தோனி கபடி குழு’ – கிரிக்கெட்டா ? கபடியா ?

Published

on

dhoni kabadu kuzhu

ஐயப்பன் இயக்கத்தில் ரோஷன் ஜேக்கப் இசையமைப்பில் அபிலாஷ், லீமா மற்றும் பலர் நடிக்கும் படம் தோனி கபடி குழு.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படத்தின் கதாநாயகி லீமா பேசுகையில்,

தலைப்பு போலவே, படமும் வித்தியாசமாக இருக்கும். மேலும், இப்படத்தின் மூலம் கபடியைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நிறைய அறிந்து கொண்டேன்,” என்றார்.

அப்புக்குட்டி பேசும் போது,

“பிற விளையாட்டுக்களை விட கபடியை கற்றுக் கொண்டால் தான் நடிக்க முடியும். எனக்கு அந்த அனுபவம் ‘வெண்ணிலா கபடி குழு’ வில் கிடைத்தது. கிரிக்கெட்டை விட கபடியில் தான் நம் நாட்டிற்கு அதிக பதக்கங்களை வென்றிருக்கிறோம். கிரிக்கெட்டிற்கும், கபடிக்கும் உள்ள வேற்றுமையைக் கூறும் படமாக இது இருக்கும். அபிலாஷின் சிறுவயது கனவு நனவாகியிருக்கிறது. சினிமாவில் வாய்ப்பு கேட்கும் அத்தனை பேராலும் நடிகராக முடியாது. வாய்ப்பு தேடும் அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்த வாய்ப்பை நிலைநிறுத்த அனைவரும் உழைக்க வேண்டும்,” என்றார்.

இணை தயாரிப்பாளர் கே.மனோகரன் பேசுகையில்,

“இப்படம் உருவாக அடித்தளம் அமைத்தது நானாக இருந்தாலும் முடித்தது நந்தகுமார் தான். இக்கதையைக் கூற இயக்குநர் ஐயப்பன் ஆறு மாத காலமாக என்னைப் பின் தொடர்ந்தார்,” என்றார்.

படத்தின் கதாநாயகன் அபிலாஷ் பேசுகையில்,

சிறுவயதில் ‘மைடியர் பூதம்’ நெடுந்தொடரில் ‘மூசா’ கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அதன் பிறகு 8 வருடங்கள் வாய்ப்புக்காக பல இடங்களிலும் முயற்சி செய்தேன். இஷாக் மூலம் தான் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. என்னைப் போலவே பல காலமாக வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நல்ல கருத்துக்களையும், கதைகளையும் மக்கள் எப்போதும் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இப்படத்தை எடுத்திருக்கிறோம்.

இயக்குநர் தன் குழந்தை பிறந்ததற்குக் கூட செல்லாமல் இப்படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார். தயாரிப்பாளரும் எங்களுக்குத் தேவையானதை முழுமையாக செய்துக் கொடுத்தார். அதேபோல், தெனாலியின் தந்தை படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில் இறந்துவிட்டார். ஆனால், அவர் நடித்து முடித்துவிட்டுத்தான் இறுதிச் சடங்கிற்குச் சென்றார்,” என்றார்.

படத்தின் இயக்குநர் ஐயப்பன் பேசுகையில்,

“இயக்குநர் A.வெங்கடேஷிடம் 5 படங்களில் பணிபுரிந்திருக்கிறேன். இப்படத்தின் கதையை முடிவு செய்த பிறகு எனது நண்பரான இப்படத்தின் தயாரிப்பாளரிடம் உதவி கேட்கச் சென்றேன். அவர் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு முன்பணம் கொடுத்தார். இப்படத்தை நான் தான் தயாரிப்பேன். அதுமட்டுமல்லாமல், இப்படத்தை வெளியிடும் செலவையும் நான் செய்கிறேன் என்றார். இப்படம் வாடிக்கையாக வரும் கதையாக இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது என்றும் கூறினார்.

எவ்வளவு விரைவாக இப்படத்தை எடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக இப்படத்தை எடுக்க வேண்டும் என்றார். அதுபோல, நான்கு மாதத்திலேயே இப்படத்தை எடுத்து முடித்தோம். நடிகர், நடிகைகள் மற்றும் மற்ற கதாபாத்திரங்களுக்கு புதுமுகங்களுக்கே வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அபிலாஷ் மற்றும் லீனா இருவரும் கதையைக் கேட்டவுடனேயே ஒப்புக் கொண்டனர். லீனா ‘மதராசபட்டிணம்’ படத்தில் ஆர்யாவிற்கு தங்கையாக நடித்திருப்பார்.

ஒரு ஊரில் ஏற்படும் பிரச்சனையைத் தீர்க்க கிரிக்கெட்டா ? கபடியா? இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நம் நாட்டிற்கு வருமானம் ஈட்டும் கிரிக்கெட்டா ? அல்லது மண்ணின் வீர விளையாட்டான கபடியா ? எதைத் தேர்வு செய்கின்றனர் என்பதே படத்தின் கதை.

இப்படத்திற்காக கள்ளக்குறிச்சி, பாதூர் போன்ற கபடி விளையாடும் ஊர்களுக்குச் சென்று அதன்படி ‘செட்’ அமைத்தோம். மற்றும் படப்பிடிப்பும் நடத்தினோம்,” என்றார் இயக்குனர்.

Tamil Cinema News

போஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’

Published

on

By

போஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’

பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்த போஸ் வெங்கட் ‘கன்னி மாடம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

அப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை சமீபத்தில் நடிகர் சூர்யா வெளியிட்டார்.

படம் பற்றி போஸ் வெங்கட் கூறுகையில்,

“நான் சென்னையில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கும் போது என் வாழ்க்கையில் நடந்த மற்றும் நான் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கினேன். இது பற்றி மேலும் துல்லியமாக சொல்லவேண்டும் என்றால் என் பக்கத்து வீட்டுக்காரரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம்தான் இந்த ‘கன்னி மாடம்’.

சாண்டில்யனின் ‘கன்னி மாடம்’ என்ற சரித்திர நாவல்தான் படத்தின் தலைப்புக்குத் தூண்டுதலாக அமைந்தது. மற்றொரு சூழலில் இந்த ‘கன்னி மாடம்’ என்பது ஒரு நினைவு இடமாக அனுசரிக்கப் படுகிறது.

மக்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கியவர்கள் மறைந்த பிறகு அவர்களை நினைவுகூறும் வகையில் விளக்குகளை ஏற்றி வைப்பர்.

ஸ்ரீராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை தயாரிக்கிறார். சென்னையில் உள்ள சூளைமேடு, மேட்டுக் குப்பம் மற்றும் விஜயராகவாபுரம் போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது

ஹரிஷ் சாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரோபோ ஷங்கர் மற்றும் அந்தோனி தாசன் இப்படத்தில் பாடல்கள் பாடியது இப்படத்தின் கூடுதல் சிறப்பு.

ஹரிஷ் J இனியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிஷல் ஜெய்னி எடிட்டிங், சிவ ஷங்கர் ஆர்ட், விவேகா பாடல், தினேஷ் சுப்புராயன் சண்டை என ஒவ்வொருவரும் அவர்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

மக்கள் அனைவரும் ரசிக்கும்படி இப்படம் இருக்கும்,” என்கிறார் இயக்குநர் போஸ் வெங்கட்.

Continue Reading

Tamil Cinema News

ஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை

Published

on

By

ஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ‘நேர்கொண்ட பார்வை’.

இப்படத்தை பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் உள்ள புகழ் பெற்ற ‘லீ கிரான்ட் ரெக்ஸ்’ தியேட்டரில் திரையிட்டார்கள்.

படத்தில் அஜித்தைப் பார்த்த ஆர்வக் கோளாறு ரசிகர்கள், தியேட்டர் ஸ்கிரீனை சேதப்படுத்தியுள்ளார்கள். அதைத் தொடர்ந்து அந்த தியேட்டர் நிர்வாகம் இனி தமிழ்ப் படங்களைத் திரையிட மாட்டோம் என அறிவித்துவிட்டதாம்.

இதை பிரான்ஸ் நாட்டில் உள்ள தமிழ்ப் படங்களின் வினியோக நிறுவனம் அவர்களது டுவிட்டரில் அறிவித்துள்ளது.

அந்த தியேட்டரில் இதற்கு முன்பு ‘கபாலி, மெர்சல், சர்கார், பேட்ட, விஸ்வாசம்’ உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை வெளியிட்ட வினியோகஸ்தரிடம் தியேட்டர் ஸ்கிரீனை மாற்றித் தரச் சொல்லி நிர்வாகம் கேட்டுள்ளதாம். 7000 யூரோ மதிப்பில், அதாவது 5 லட்சம் செலவில் அந்த ஸ்கிரீனை மாற்றித் தர அவர்களும் சம்மதம் சொல்லிவிட்டனராம்.

இனி, அந்த புகழ் பெற்ற தியேட்டரில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட மாட்டாது.

Continue Reading

Tamil Cinema News

சுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’

Published

on

By

சுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’

டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘ஆக்ஷன்’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு முழு நீள ஆக்ஷன் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறதாம்.

இப்படத்தில் விஷால் மிலிட்டரி கமாண்டோ ஆபீஸராக நடிக்கிறார். ஒரு உண்மையைக் கண்டு பிடிக்க பல நாடுகள் செல்கிறார். அங்கே ஆக்ஷ்ன், சேசிங் என விறுவிறுப்பான ஸ்டன்ட் காட்சிகளை அன்பறிவ் அமைத்துள்ளார்கள். சமீபத்தில் தேசிய விருது பெற்ற இவர்கள் இப்படத்தில் பல வித்தியாமான சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்களாம்.

இதில் பல காட்சிகளில் விஷால் டூப் போடலாமலேயே நடித்திருக்கிறாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கி, அசர்பைசான், கேப்படோசியா, பாகு, இஸ்தான்புல், தாய்லாந்து நாட்டில் உள்ள கிராபி தீவு, பேங்காக் உள்ளிட்ட இடங்களில் 50 நாள்கள் நடைபெற்றுள்ளன.

மேலும் இந்தியாவில் ஜெய்ப்பூர், ரிஷிகேஷ் ,டேராடூன், ஹைதராபாத், சென்னை, போன்ற இடங்களிலும் 50 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளதாம்.

விஷால் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக மலையாளத்தில் பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமி இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இவர்களுடன் யோகி பாபு, ராம்கி, சாயாசிங், ஷாரா, பழ .கருப்பைய்யா, பிரபல இந்தி நடிகர் கபீர் சிங் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: