Connect with us

Television

‘ஈரமான ரோஜாவே’ – விஜய் டிவியில் புதிய தொடர்

Published

on

eeramana rojave serial vijay tv

விஜய் டிவி ‘ஈரமான ரோஜாவே’ என்ற புதிய தொடர் ஜுலை 9 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2.30 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் ஏற்ற இறக்கங்கள்தான் இந்தத் தொடரின் முக்கிய கரு. இந்தத் தொடரை பிரான்சிஸ் கதிரவன் இயக்குகிறார். ஒளிப்பதிவு ரமேஷ் துரை, இசை எம்ஆர்.

ஒரு கிராமத்தில் அழகாக ஒற்றுமையாக இருக்கும் இரண்டு குடும்பங்கள், ஒரு பிரச்சனையில் பிரிய நேரிடுகிறது. அவர்கள் குடும்பத்தில் இருக்கும் இளம் தலைமுறையினர் மலர் மற்றும் மாறன் காதல் வலையில் விழுகின்றனர். தங்களது திருமணத்தின் வழியாக இரண்டு குடும்பங்களும் ஒன்று சேரும் என்று எண்ணுகிறார்கள். ஆனால், வாழ்கை வேறு திருப்பங்களுடன் காத்துக் கொண்டிருக்கிறது.

திருமணத்திற்கு முதல் நாள், மாறன் ஒரு விபத்தில் இறக்கிறான். மேலும், சூழ்நிலை காரணமாக மாறனின் தம்பி வெற்றியை திருமணம் செய்து கொள்கிறார் மலர். வெற்றிதான் மாறனின் இறப்பிற்கு காரணம் என்று எண்ணுகிறார் மலர்.

மலர் தான் தன் குடும்பத்திற்கு சாபம் என்று கருதும் வெற்றியின் தாயார் ஒருபுறம். இந்த மனவலிக்கு இடையே வெற்றியுடன் மலர் சேர்ந்து வாழ்க்கையை வாழ்வாரா என்பதுதான் இந்தத் தொடரின் கதை.

இந்த தொடர் கதையில் மலராக பவித்ரா நடிக்கிறார். இவர் ‘சரவணன் மீனாட்சி’ மற்றும் ‘ராஜா ராணி’ ஆகிய தொடர்களில் நடித்திருக்கிறார். வெற்றியாக திரவியம் அறிமுகமாகிறார்.

Television

கலைஞர் டிவி – 2020 புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

Published

on

By

கலைஞர் டிவி - 2020 புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

கலைஞர் டிவி புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

ஜனவரி 1, 2020 – புதன்கிழமை

காலை 6 மணி

மங்கள இசைக் கச்சேரி

காலை 8 மணி

அறம் பொருள் இன்பம்

சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்று இன்றைய நவீன வாழ்க்கைக்கு தேவையானவற்றை விளக்கும் சிறப்பு நிகழ்ச்சி

காலை 9 மணி

நம்ம வீட்டு நட்சத்திரம்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட நாயகி ஷில்பா மஞ்சுநாத் பங்கு பெறும் நிகழ்ச்சி

காலை 10 மணி

வாழ்வில் இனிமை சேர்ப்பது எது ? – திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்

காலை 11 மணி

அவெஞ்சர்ஸ் தில்லு முல்லு

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில், சூப்பர் ஹீரோ வேடமிட்டு சிங்கப்பூர் தீபன், முல்லை, கோதண்டம் உள்ளிட்ட காமெடிக் குழுவினரின் இடைவிடாத சிரிப்பு சரவெடி

நண்பகல் 12 மணி

வரலாம் வா

2019ல் அறிமுகமான நடிகர், நடிகைகள் இணைந்து புத்தாண்டை கொண்டாடிய கலகலப்பான சிறப்பு நிகழ்ச்சி, 2019ன் சிறந்த 10 படங்கள் எது ?, இளைஞர்கள் தேர்ந்தெடுக்கும் 2019ன் கனவுக் கன்னியை யார் ? உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள்

மதியம் 2.30 மணி

சகா – திரைப்படம்

சரண், கிஷோர், பிரித்விராஜன், ஸ்ரீராம், பாண்டி, ஐரா என இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ள படம்

Continue Reading

Television

‘ஸ்பீட், கெட் செட் கோ’ – விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி

Published

on

By

ஸ்பீட் கெட் செட் கோ - விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி

விஜய் டிவியில் ‘ஸ்பீட், கெட் செட் கோ’ என்ற தலைப்பில் மற்றொரு சுவாரசியமான விளையாட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பு தொடங்கி உள்ளது. இந்த விளையாட்டு நிகழ்ச்சியை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்குகிறார்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 1 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இந்நிகழ்ச்சியில் இரண்டு அணிகள் குழுவாக பங்கேற்கும். ஒவ்வொரு குழுவிலும் ஊடகத் துறையில் பிரபலமான மூன்று ஆண் மற்றும் பெண் பங்கேற்பாளர்கள் இடம்பெறுவர். இரு அணிகளும் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றியதுதான் இந்த ‘ஸ்பீட்’ விளையாட்டு நிகழ்ச்சி.

இரு அணிகளும் எதிர் கொள்ளும் பல கட்டங்கள் உள்ளன. முதல் சுற்றில் டம்ப் ஷரட்ஸ், ரிலே, ஆகியவையும், இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றுகள் கடும் போட்டிகள் நிறைந்த சுற்றாகவும் இருக்கும். இறுதிச் சுற்று போட்டியாளர்களின் திறனை அவர்களின் வேகத்தை சோதிக்கும் போட்டியாக இருக்கும்.

போட்டி சுற்றுகளில் ஒவ்வொரு அணியிலிருந்தும் ஒரு உறுப்பினர் ஒரே நேரத்தில் சில பணிகளைச் செய்வார். நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் டாஸ்க்குகளை விரைவாக முடிப்பதில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும்.

இந்நிகழ்ச்சி வேகம் மற்றும் விவேகம் நிறைந்த ஒரு விளையாட்டுப் போட்டியாகும். இது பார்வையாளர்களை மகிழ்விக்கும் மற்றும் கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 22 அன்று ஒளிபரப்பாகும் எபிசோடில் சூப்பர் சிங்கர் பாடகர்கள் ராஜலட்சுமி, மாளவிகா, சௌந்தர்யா, செந்தில், லோகேஷ், சத்யா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

 

Continue Reading

Television

விஜய் டிவி – ரசிகர்களைக் கவர்ந்த ‘காற்றின் மொழி’ தொடர்

Published

on

By

விஜய் டிவி - ரசிகர்களைக் கவர்ந்த காற்றின் மொழி தொடர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘காற்றின் மொழி’ தொடர் நேயர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதில் கண்மணி கதாபாத்திரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கண்மணிக்கு வாய் பேச இயலாத ஒரு கதாபாத்திரமாகும். ஆனால், கண்மணிக்கு கண் அழகாகப் பேசுகிறது என்று அவருக்கு இளையவர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.

ராம்குமார் இயக்கும் இத் தொடரில், கண்மணியாக பிரியங்கா ஜெயின், சந்தோஷ் ஆக சஞ்சீவ், அப்பா சுப்புவாக மனோகர், அம்மா ராஜியாக அனிலாஸ்ரீ ஆகியோர் நடிக்கின்றனர் .

கண்மணி, சந்தோஷ் இவர்களது காட்சிகள் தான் இத் தொடரில் அதிக வரவேற்பு பெறுபவையாக உள்ளன. வரும் வாரங்களில் கண்மணியின் அப்பா ஒரு எதிர்பாராத சதியால் லாக்கப்பில் வைக்கப்பட அவரை அதிலிருந்து கண்மணி எப்படி மீட்கிறாள் என்பது விறுவிறுப்பான காட்சிகள் மூலம் சொல்லப்பட உள்ளது.

சந்தோஷ் மாமாவின் சதியால் இது நடைபெறும் வேளையில் சந்தோஷ் தன் மாமாவின் கெடுபிடியை மீறி எப்படி கண்மணிக்கு உதவி செய்கிறான். மேலும் சந்தோஷுக்கு ஒரு எதிர்பாராத ஆபத்தும் நேரிட, அது யாரால் எப்படி நிகழப் போகிறது என்பதை சஸ்பென்ஸுடன் வரும் வாரங்களில் காணலாம்.

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ‘காற்றின் மொழி’ தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: