Connect with us

Upcoming Movies

எங்கே அந்த வான் – விரைவில்…திரையில்…

Published

on

எங்கே அந்த வான் - விரைவில்...திரையில்...

அபுண்டு ஸ்டூடியோஸ் (பி) லிட் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘எங்கே அந்த வான்’.

ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய புதிய காதல் உதயமாகும், அறிமுகமாகும். நம் மனசுக்கு இதமாக சுகமளிக்கும். அப்படி ஓர் காதல் படைப்புதான் இப்படம். காதலைத் தேடிய ஒரு பெண்ணின் கவிதையாய் ஒரு பயணம் ‘எங்கே அந்த வான்’.

கும்பகோணம் திருவையாறு ஊரில் பிறந்து சாதாரண பள்ளியில் படித்து, சென்னை ஐஐடி போன்ற படிப்பில் சேர்ந்து படிக்கிறார் கமலி. அவளின் வாழ்க்கை சார்ந்த பயணம், அதில் ஒரு அசாத்தியமான காதல் பயணிக்கிறது.

இதில் கமலியாக ஆனந்தி நடிக்கிறார். ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் அனைவராலும் பாராட்டுப் பெற்ற ஆனந்திக்கு இப்படம் மேலும் ஒரு மகுடம் சேர்க்கும். இவரது ஜோடியாக ரோஹித் சரப் அறிமுகமாகிறார். இவர் ஹிந்தியில் பரபரப்பாக ஓடிய ‘ஹிச்கி’ (HICHKI) படத்தில் நடித்துள்ளார். ராணி முகர்ஜி டீச்சராகவும் ரோஹித் சரப் மாணவனாகவும் நடித்திருந்தனர். மேலும் ஷாருக்கான் நடித்த ‘டியர் சிந்தகி’ படத்திலும் நடித்துள்ளார். இவர் தமிழில் நடிப்பதற்காக தமிழை சிறிது கற்றுக் கொண்டு நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரதாப் போத்தன், அழகம்பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இதன் படப்பிடிப்பு கும்பகோணம், கோபிசெட்டிபாளையம், சென்னை, ஹைதராபாத் போன்ற பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் உச்சக்கட்ட காட்சி டெல்லியில் படமாக்கப்பட்டு படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.

லிங்குசாமி, உதயசங்கர் போன்ற பிரபல டைரக்டர்களிடம் பணிபுரிந்த ராஜசேகர் துரைசாமி முதன் முறையாக தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

குறும்படம் மற்றும் விளம்பர படங்களுக்கு இசை அமைத்து வரும் தீனதயாளன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இசை – தீனதயாளன்
ஒளிப்பதிவு – ஜெகதீசன் லோகயன்
படத்தொகுப்பு- ஆர்.கோவிந்தராஜ்
கலை – தியாகராஜன்
பாடல்கள் – யுகபாரதி, மதன் கார்க்கி, கார்த்திக் நேத்தா
நடனம் – பாப்பி சதீஷ்
மக்கள் தொடர்பு – ஜான்சன்
தயாரிப்பு நிர்வாகம் – ஏ.ஜெய் சம்பத்
தயாரிப்பு – அபுண்டு ஸ்டூடியோஸ் பிரைவேட் லிமிடெட்

Upcoming Movies

மிருகா – விரைவில்…திரையில்…

Published

on

By

மிருகா - விரைவில்...திரையில்...

ஜாக்குவார் ஸ்டுடியோஸ் பி வினோத் ஜெயின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிருகா’.

சென்னையை மையமாகக் கொண்டு, பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு தமிழ், தெலுங்கு மொழிகளில் சுமார் 1000 எபிசொடுகளுக்கும் மேலாக நிகழ்ச்சி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த தயாரிப்பாளரான வினோத் ஜெயின், முதல் முறையாக திரைப்படத் துறையில் இப்படத்தின் மூலம் தடம் பதிக்கிறார்.

இத்திரைப்படம் ஒரு வித்தியாசமான குரூர எண்ணங் கொண்ட ஒரு கொலைகாரன், தனது அழகு, பண்பு ஆகியவற்றை முதலீடாக வைத்து, ஒரு ஒட்டுண்ணி போல பெண்களை ஏமாற்றி, வாழ்ந்து வருகிறான். அப்படி ஒரு முயற்சியின் போது, ஒரு பெண்ணை, காதலித்து திருமணமும் செய்து கொள்கிறான். அவளையும் ஏமாற்றிட நினைக்கும் போது, விதி வேறு விதமாக நினைக்கிறது. இப்படி ஒரு பூனையும் எலியும் கதை போல வேகமாக நகரும் கதையில், ஒரு கட்டத்தில் இவனது எல்லை மீறுகிறது. ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது ‘மிருகா’.

இப்படத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி உடன் இணைந்து தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எம். வீ பன்னீர்செல்வம் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகும் ஜே. பார்த்திபன், அடையாறு திரைப்படக் கல்லூரியில் டிஎஃப்டி பயின்றவர். பல விளம்பரப் படங்களை இயக்கி, இயக்குனர் பாலாவின் ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் பணியாற்றியவர்.

பொள்ளாச்சி, மூணாறு, தலைக்கோணம், சென்னை, ஊட்டி, மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் உருவாகியிருக்கும் ‘மிருகா’ வெகு விரைவில் வெளியாக இருக்கிறது.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்பக் கலைஞர்களும்:

ஸ்ரீகாந்த்
ராய் லக்ஷ்மி
தேவ் கில்
நைரா
வைஷ்ணவி சந்திரன் மேனன்
த்விதா
பிளேக் பாண்டி

தயாரிப்பு: ஜாக்குவார் ஸ்டுடியோஸ் பி வினோத் ஜெயின்
கிரியேடிவ் புரொட்யூசர்: எம் நரேஷ் ஜெயின்
இயக்கம்: ஜே பார்த்திபன்
கதை, திரைகதை, ஒளிப்பதிவு: எம் வி பன்னீர்செல்வம்
வசனம்: ஏ.ஆர்.பி.ஜெயராம்
படத்தொகுப்பு: சுதர்சன்
இசை: அருள் தேவ்
கலை: மிலன் & எஸ் ராஜமோகன்
சண்டை பயிற்சி: தளபதி தினேஷ், ஸ்ரீதர்,விஜய்
வி எஃப் எக்ஸ்: நேக் ஸ்டுடியோஸ்
தயாரிப்பு நிர்வாகம்: பழனியப்பன்
ஸ்டில்ஸ்: மோதிலால்
விளம்பர வடிவமைப்பு மற்றும் மோஷன் தீசர்–ஆர்-ஆர்ட் ஸ்டுடியோ
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

Continue Reading

Upcoming Movies

ஆண்கள் ஜாக்கிரதை – விரைவில்…திரையில்…

Published

on

By

ஆண்கள் ஜாக்கிரதை - விரைவில்...திரையில்...

ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’.

முத்துமனோகரன் இயக்கியுள்ள இந்த படத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ரோஜா, ஐஸ்வர்யா பழனி, மஹிரா, ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது,

“இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம். இந்த படத்திற்காக புதுக்கோட்டையில் ஒரு பழைய பங்களாவில் இரவு நேரத்தில் திகிலான காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கும் போது அந்த பங்களாவில் உண்மையான சில அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்ந்த கதாநாயகிகள் எங்களுக்கு பயமாக இருக்கிறது நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டனர். அதன் பிறகு அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்லி புரியவைத்து நடிக்க வைத்தோம்.

படப்பிடிப்பு முடிந்தவுடன் நானும் அதை உணர்ந்தேன். ஷூட்டிங் நடப்பதை பார்க்க அந்த ஊர் மக்களே வரவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

வழக்கமாக பேய் படங்களில் வரும் பங்களாவில் கதவு, ஜன்னல் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இதல் வித்தியாசமான காட்டவேண்டும் என்பதற்காக அந்த பங்களாவில் இருந்த கதவு, ஜன்னல்கள் அனைத்தையும் பல லட்சம் செலவு செய்து அப்புறபடுத்தி, பின் படப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டு வைத்துக் கொடுத்தோம். கதவு, ஜன்னல்கள் இல்லாத பேய்படம் இது. ராஜா காலத்து பங்களா என்பதால் அனைத்தும் தேக்கு மரங்களால் வைகப்பட்டிருந்தன.

முழுக்க முழுக்க இரவு நேரத்தில் மட்டும் தான் அந்த பங்களாவில் படப்பிடிப்பை நடத்தினோம். இது மிரட்டலான திரில்லர் படம் மட்டுமல்லாமல் இன்றய இளைய சமுதாயத்தின் நாடித்துடிப்பை எகிற வைக்கும் படமாக இந்த ‘ஆண்கள் ஜாக்கிரதை’ இருக்கும் என்கிறார் இயக்குனர் K.S.முத்துமனோகரன்.

சுஜி ஜீசஸ் பிலிம்ஸ் செந்தில்குமார் படத்தை பிரமாண்டாமான முறையில் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.
இசை – பாலகணேஷ்
ஒளிப்பதிவு – M.P.சிவகுமார்
எடிட்டிங் – G.V.சோழன்
விளம்பர வடிவமைப்பு – அயனன்
இணை தயாரிப்பு – க.முருகானந்தம்.
தயாரிப்பு – ஜெமினி ராகவா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – K.S.முத்துமனோகரன்

Continue Reading

Upcoming Movies

தண்டகன் – விரைவில்…திரையில்…

Published

on

By

தண்டகன் - விரைவில்...திரையில்...

ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் வி. இளங்கோவன் தயாரிக்க, கே.மகேந்திரன் இயக்கியிருக்கும் படம் ‘தண்டகன்’.

இது இவர்களுக்கு முதல் படம். மகேந்திரனுக்குச் சொந்த ஊர் திருப்பூர் . தொழில் துறையில் முத்திரை பதித்த இவரை சினிமா ஈர்க்கவே கலைத்துறையில் தண்டகன் மூலம் தடம் பதிக்க வந்துள்ளார்.

இந்திய இதிகாசங்களில் புகழ் பெற்ற ராமாயணத்தில் 4638 கதாபாத்திரங்கள் உள்ளன. அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் தான் ‘தண்டகன்’.

தண்டகனின் புதிரான குணச்சித்திரம் எப்படி இருக்கும் ? அதன் மன இயல்பு எத்தகையது என்பதை விளக்கும் படம்தான் ‘தண்டகன்’.

இப்படத்தில் அபிஷேக் கதாநாயகனாக நடிக்க, மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா இருவரும் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள் . ராட்சசன் வில்லன் ‘நான்’ சரவணன், எஸ்.பி. கஜராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, ஆதவ், ராம், வீரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

தண்டகன் என்பவனின் தீய குணம் கொண்ட ஒருவனால் பல கொடூரமான செயல்கள் மூலம் இந்த சமூகத்தில் எத்தகைய மோசமான சம்பவங்கள் நடக்கிறது என்ற மிகச் சிக்கலான கதையை நேர்த்தியான திரைக்கதை மூலம் விளக்குகிறது இந்த ‘தண்டகன்’.

பார்ப்பவர்களை ஒரு நிமிடம் கூட சலிப்பு தட்டாமல் மிகவும் விறுவிறுப்பான படமாக அமைந்துள்ளது என படக் குழுவினர் தெரிவித்தனர்.

படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. நான்கை மோகன் ராஜன் எழுத ஒன்றை இயக்குநர் எழுதி இருக்கிறார்.

இப்படத்தை விரைவில் திரையில் வெளியிட இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒளிப்பதிவு – தளபதி ரத்னம்
இசை – ஷ்யாம் மோகன்
எடிட்டிங் வசந்த் நாகராஜ்
சண்டைப் பயிற்சி – பில்லா ஜெகன்
நடனம் – ஸ்ரீசெல்வி
மக்கள் தொடர்பு – சக்தி சரவணன்

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: