Connect with us

Upcoming Movies

எதிர் வினையாற்று – விரைவில்…திரையில்…

Published

on

எதிர் வினையாற்று - விரைவில்...திரையில்...

தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ் இயக்கத்தில் அலெக்ஸ், சனம் ஷெட்டி, லட்சுமி ப்ரியா, ஆர்.கே.சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘எதிர் வினையாற்று’.

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக் கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ‘எதிர் வினையாற்று’ படம் உருவாகி உள்ளது.

எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணைக் காப்பாற்றுகிறான். அந்த பெண்ணுடன் சேர்ந்து, அவள் கொண்டு வரும் சிக்கல்களும், அவனைப் பின் தொடர்கின்றன. சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான் என்பதே ‘எதிர் வினையாற்று’ படத்தின் கதை.

இரவு தொடங்கி மறுநாள் இரவுக்குள் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களே விறுவிறுப்பான திரைக்கதையாகி உள்ளது. சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அந்த நபரின் அனுமதியுடன் படமாக்கி இருக்கிறார்கள்.

படத்தின் நாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்ற இவர், அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக சனம் ஷெட்டியும், அசிஸ்டெண்ட் கமிஷனராக ஆர்.கே.சுரேஷும் நடித்துள்ளனர். கதைக்கு மிகவும் முக்கிய திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் நடித்துள்ளார்.

இரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடித்துள்ளார். மேலும் சம்பத்ராம், அனுபமா குமார், ஜீ டிவி மதன், ஸ்டில்ஸ் விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இசை – ஷெரீப்
ஒளிப்பதிவு – மனோஜ் நாராயணன்
படத்தொகுப்பு – சந்திர சேகரன்
கலை – பாலா ஓம் பிரகாஷ்
தயாரிப்பு – தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ்
இயக்கம் – அலெக்ஸ், இளமைதாஸ்

Upcoming Movies

தண்டுபாளையம் – விரைவில்…திரையில்…

Published

on

By

தண்டுபாளையம் - விரைவில்...திரையில்...

வெங்கட் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வெங்கட் கதை, திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் படம் ‘தண்டுபாளையம்’.

கே.டி.நாயக் இயக்கியிருக்கும் இப்படத்தில் சுமன் ரங்கநாத், முமைத் கான், பேனர்ஜி, D.S.ராவ், ராக்லைன் சுதாகர், புல்லட் சோமு, அருண் பச்சன், சஞ்சீவ்குமார், ஜீவா, விட்டல், சினேகா, ரிச்சா சாஸ்திரி, சந்தோஷ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மேடை நாடக கலைஞர்கள் என்பது கூடுதல் சிறப்பு. இவர்களுடன் தயாரிப்பாளர் வெங்கட் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

படம் பற்றி இயக்குனர் K.T.நாயக் கூறியதாவது,

“இது முழுக்க முழுக்க உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ள படம். 1990 களில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள தண்டுபாளையம் என்ற ஊரில் இருந்து உருவான ஒரு கொள்ளை கும்பல் நாளடைவில் ஆசியாவிலேயே அதிக திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்களை நிகழ்த்திய கொடூர கும்பலாக மாறியது. அந்த கேங்கின் உண்மைச் சம்பவங்களை திரட்டி இந்த திரைக்கதையை உருவாக்கி உள்ளோம்.

இந்த ‘தண்டுபாளையம்’ ஏற்கனவே தெலுங்கு, கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. படம் வருகிற டிசம்பர் மாதம் தமிழ், மலையாளம், ஹிந்தி, போஜ்பூரி, மராட்டி என பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது,” என்றார்.

படத்தை ஸ்ரீ லட்சுமிஜோதி கிரியேஷன்ஸ் ஏ.என்.பாலாஜி உலகமெங்கு டிசம்பர் மாதம் வெளியிடுகிறார்.

இசை – ஆனந்த் ராஜா விக்ரம்
ஒளிப்பதிவு – R.கிரி
வசனம் – கிருஷ்ணமூர்த்தி
பாடல்கள் – மோகன்ராஜ்
கலை – ஆனந்த் குமார்
ஸ்டண்ட் – kunfu சந்துரு
நடனம் – பாபா பாஸ்கர்
எடிட்டிங் – பாபு ஸ்ரீவஸ்தா, பிரீத்தி மோகன்
தயாரிப்பு – வெங்கட்
இயக்கம் – K.T. நாயக்

Continue Reading

Upcoming Movies

ஆன்ட்ரியா நடிக்கும் ‘கா’ – படப்பிடிப்பில்…

Published

on

By

ஆன்ட்ரியா நடிக்கும் கா - படப்பிடிப்பில்... - 4 Tamil Cinema

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘கா’.

‘கா’ என்றால் காடு, கானகம் என்று பொருள். அம்ரிஷ் இசையமைக்கும் இப்படத்தில் ஆன்ட்ரியா முதன்மைக் கதாநாயகியாக நடிக்கிறார். படம் முழுவதுமே அவரை முன்னிலைப்படுத்தித்தான் இருக்கிறதாம்.

கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்குச் சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைஃப் போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் ஆன்ட்ரியா நடித்துள்ளார்.

சலீம் கௌஸ் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் நாஞ்சில் கூறுகையில்,

“முழுக்க முழுக்க காட்டை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கி வருகிறோம். தற்பொழுது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மூணாரில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது, அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கு யானை ஒன்று வந்துவிட்டது. அங்கிருந்த நாங்கள் அனைவரும் பயந்து ஒளிந்துகொண்டோம். நல்ல வேலையாக எங்களுடன் இருந்த வனக்காப்பாளர் அந்த யானையை விரட்டி எங்களை காப்பாற்றினார். அப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து நிறைய காட்சிகளை படமாக்கியிருக்கிறோம்.

30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இதுவரை யாரும் செல்ல முடியாத இடங்களுக்கு, வன அலுவலகத்தில் அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். அந்த காட்களை திரையில் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கும். எழில் கொஞ்சும் காட்டின் அழகை வித்தியாசமான ஒரு கோணத்தில் இதில் கண்டு ரசிக்கலாம்,” என்கிறார் இயக்குனர் நாஞ்சில்.
இசை – அம்ரிஷ்
ஒளிப்பதிவு – அறிவழகன்
தயாரிப்பு – ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நாஞ்சில்

Continue Reading

Upcoming Movies

மழையில் நனைகிறேன் – விரைவில்…திரையில்…

Published

on

By

மழையில் நனைகிறேன் - விரைவில்...திரையில்...

ராஜ்ஸ்ரீ வென்சர்ஸ் சார்பாக B. ராஜேஷ் குமார், ஶ்ரீவித்யா தயாரிப்பில், டி.சுரேஷ்குமார் இயக்கும் படம் ‘மழையில் நனைகிறேன்’.

இப்படத்தில் ஆன்சன் பால், ரெபா மோனிகா ஜான், சங்கர் குரு ராஜா, மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், சுஜாதா பஞ்சு, வெற்றிவேல் ராஜா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் சுரேஷ்குமார் கூறுகையில்,

“இது மனதை இலகுவாக்கும் காதல் கதை. அதே நேரம் காதல் பற்றிய முதிர்வான கருத்துக்களை பேசும் படமாகவும் இருக்கும். படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும், சூழ்நிலையை முதிர்ச்சியான மனநிலையில் அணுகுவார்கள்.

சினிமா வரலாறு முழுதும் தோல்வியடைந்த காதல் கதைகள் தான் வெகு பிரபலம். காதலர்கள் பிரிவதும், இறந்து போவதுமான காதல் கதைகள் வரலாற்றில் தொடர் வெற்றிக் கதைகளாக உலா வருகிறது. ஆனால் இப்படத்தில் ஒரு வித்தியாசமான முடிவை நீங்கள் பார்க்கலாம். இப்போது அதை வெளிப்படுத்த முடியாது. திரையில் அந்த உணர்வுகளோடு கண்டுகளியுங்கள்.

உண்மையான காதலை, காதலர்களை பிரதிபலிப்பவர்களாக ஆன்சன் பால், ரெபா மோனிகா ஜான் தங்கள் அற்புத நடிப்பை இப்படத்தில் வழங்கியுள்ளார்கள்,” என்கிறார்.

தொழில் நுட்ப கலைஞர்கள்

இயக்கம் – டி.சுரேஷ்குமார்
வசனம் – விஜி, கெவின் பாண்டியன்
இசை – விஷ்ணு பிரசாத்
ஒளிப்பதிவு – J. கல்யாண்
எடிட்டிங் – G.B. வெங்கடேஷ்
கலை – N. மகேந்திரன்
பாடல்கள் – லலிதானந்த், முத்தமிழ்
உடை வடிவமைப்பு – ஶ்ரீவித்யா ராஜேஷ்
சண்டைப்பயிற்சி – T. ரமேஷ்
ஸ்டில்ஸ் – P.M. கார்த்திக்

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: