Connect with us

Movie Reviews

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்

Published

on

ivanukku-engeyo-macham-irukku-review

இந்த விமர்சனத்தைக் கூட 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான்  படிக்க வேண்டும்.

தமிழ் சினிமாவில் ஆபாசப் படங்கள் வெளிவராத குறையை ‘ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்கள் தீர்த்து வைத்தன. அந்தப் படங்களுக்குக் கிடைத்த வரவேற்பால் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ போன்ற படங்கள் வெளிவந்துள்ளன.

படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை ஆபாசம் இல்லாத காட்சிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பார்த்து, பார்த்து எங்கெல்லாம் சேர்க்க முடியுமோ அங்கெல்லாம் சேர்த்து ஓவர் டோஸாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஏஆர் முகேஷ்.

படத்தில் கதையெல்லாம் பெரிதா ஒன்றுமில்லை. பகலில் மருந்துக் கடையில் வேலை செய்துவிட்டு, இரவில் சிறிய திருட்டுக்களில் ஈடுபடுபவர்கள் விமல், சிங்கம்புலி. கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் உள்ள ஒரு டப்பாவை ஒரு வீட்டில் இருந்து தெரியாமல் திருடிவிடுகிறார்கள். அதைத் தெரிந்து கொண்ட போதைப் பொருளுக்கு உரியவர்கள் விமல், சிங்கம்புலியைத் தேடித் துரத்துகிறார்கள். கூடவே, அவர்களிடம் தன் பணத்தைப் பறிகொடுத்த இன்ஸ்பெக்டர் மன்சூரலிகான், சப் இன்ஸ்பெக்டர் பூர்ணா மூலம் நடவடிக்கை எடுக்கிறார். பூர்ணாவிடம் சிக்கியவர்களிடம் இருந்து கடத்தல் கும்பல் அவர்களது டப்பாவை மீட்கிறதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இந்தப் படத்தில் படுக்கையறை நாயகன் என விமலை தாராளமாகச் சொல்லலாம். யார் கிடைத்தாலும் அவர்களை தன் வசப்படுத்த முயற்சிப்பதுதான் அவரது வேலை. கதாநாயகி ஆஷ்னாவைக் கூட காதலிக்காமல், காமவசம் செய்கிறார். இப்படிப்பட்ட படங்களில் நடித்தால் முன்னேறி விடலாம் என விமல் நினைத்துவிட்டார் போலிருக்கிறது.

படத்தின் நாயகி ஆஷ்னா சவேரி எதற்கு மேலாடை அணிந்திருக்கிறார் என்று அவருக்குத் தெரியாது போலிருக்கிறது. படம் முழுவதும் பாவாடை தாவணியில் வருபவர் தாவணியை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்று இயக்குனரிடம் கேட்டிருக்க மாட்டாரரோ அல்லது இயக்குனரோ அப்படித்தான் அணிய வேண்டும் என்று சொல்லியிருப்பாரோ ?. மதுரைப் பெண்களை இதைவிட மட்டமாக சித்தரிக்க முடியாது.

படத்தில் உள்ள எல்லா கதாபாத்திரங்களும் மோசமானவர்களாகவே இருக்கிறார்கள் சப் இன்ஸ்பெக்டர் பூர்ணாவைத் தவிர. அவரும் இன்ஸ்பெக்டரின் தனிப்பட்ட பிரச்சினைக்காகத்தான் கடமையாற்றுகிறார். மியா ராய் என்ற ஆங்கில நடிகை படத்தில் நடித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்றெல்லாம் விளக்கி சொல்ல முடியாத அளவிற்கு அசிங்கமானது.

சிங்கம்புலி நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரது பாணியில் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். அவரையும் காமெடி பண்ண வைக்காமல் காமநெடி பண்ண வைத்திருக்கிறார் இயக்குனர். அதிலும், அந்த கதை புத்தகம் படிக்கும் காட்சியெல்லாம் ஓவரோ ஓவர்.

மன்சூரலிகான், ஆனந்தராஜ், வெற்றிவேல்ராஜா என மற்ற கதாபாத்திரங்களில் கொஞ்சம் ஆபாசம் இல்லாமல் பேசி நடித்திருக்கிறார்கள்.

கண்டிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். இப்படி நான்கு படங்கள் வந்தால் போதும், தமிழ் சினிமா ரசிகர்களை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

Movie Reviews

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்

4 Tamil Cinema Rating – 3.5/5

Published

on

By

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்

கதை

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்படாமல் விட்ட குண்டுகள் சில இந்திய கடற்கரையில் கரை ஒதுங்குகின்றன. மாமல்லபுரத்தில் அப்படி கரை ஒதுங்கும் ஒரு குண்டு, சென்னைக்கு வந்து, அங்கிருந்து பாண்டிச்சேரிக்கு செல்கிறது. அந்த குண்டடை சென்னையிலிருந்து மற்ற இரும்பு சாமான்களுடன் ஏற்றிச் செல்லும் லாரி டிரைலர் தினேஷுக்கு அந்த குண்டு பற்றி தெரிய வருகிறது. அதை செயலிழக்க வைக்க அவர் முயற்சி செய்கிறார். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

நடிப்பு

தனக்கான கதையும், கதாபாத்திரங்களும் கிடைக்கும் போது தினேஷுக்குள் ஒளிந்திருக்கும் நடிகர் மிக யதார்த்தமாக எட்டிப் பார்க்கிறார். இந்தப் படத்தில் ஒரு நிஜமான இளம் லாரி டிரைவர் எப்படி இருப்பாரோ அப்படியே இருக்கிறார். வாயைத் திறந்தாலே பேசிக் கொண்டே இருக்கும் ஒரு குணம். பல காட்சிகள் அட, அசத்துகிறாரே என சொல்ல வைத்திருக்கிறார்.

நாயகி ஆனந்திக்கு தினேஷைக் காதலிப்பதும், குடும்பத்தினரிடம் திட்டு வாங்குவதும்தான் வேலை. இவருக்கும் தினேஷுக்குமான காதலில் இன்னும் கொஞ்சம் அழுத்தத்தைக் காட்டியிருக்கலாம்.

காயலான் கடை முதலாளியாக மாரிமுத்து, இவர் சொன்னதை அப்படியே செய்து காட்டும் முனிஷ்காந்த் மனதில் பதிகிறார்கள். மற்ற கதாபாத்திரங்களில் ரித்விகா அதிகம் கவர்கிறார். இன்ஸ்பெக்டர் லிஜேஷ் குறிப்பிட வைக்கிறார்.

இசை, மற்றவை

தென்மாவின் இசையில் கதையுடன் சேர்ந்து பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலத்தைக் கொடுத்திருக்கின்றன. கிஷோர் குமார் ஒளிப்பதிவு கதைக்கு என்ன தேவையோ அதனுடன் இயல்பாய் அமைந்துள்ளது. கலை இயக்குனர் ராமலிங்கம் தன் முழு உழைப்பை படத்தில் காட்டியிருக்கிறார்.

+

புதிய கதைக்களம், இயல்பான கதாபாத்திரங்கள், அதில் அனைவரின் சிறந்த நடிப்பு

இடைவேளைக்குப் பின் பயணத்திலேயே நகர்கிறது கதை. திரைக்கதை சிறப்பாக இருந்தாலும் இன்னும்  சில அழுத்தமான காட்சிகள் படத்தில் இருந்திருக்கலாம்.

Continue Reading

Movie Reviews

ஜடா – விமர்சனம்

4 Tamil Cinema Rating – 2.5/5

Published

on

By

ஜடா - விமர்சனம் - 4 Tamil Cinema

கதை

வட சென்னை பகுதியைச் சேர்ந்த கதிருக்கு கால்பந்து விளையாட்டு வீரராக வேண்டும் என ஆசை. அதே சமயம் தனக்கு கால்பந்து விளையாட சொல்லிக் கொடுத்து ‘செவன்ஸ்’ என்ற முரட்டுத்தமான கால்பந்து போட்டியில் மரணமடைந்த கிஷோருக்காக ‘செவன்ஸ்’ விளையாடி, அவரைக் கொன்றவர்களைப் பழி வாங்க நினைக்கிறார். அது நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நடிப்பு

‘பிகில்’ படத்திற்குப் பிறகு மீண்டும் கால்பந்து விளையாட்டு வீரராக கதிர். இந்தப் படத்தில் தனி நாயகனாக ஜொலிக்கிறார். கால்பந்து விளையாட்டில் தேர்ந்தவராக நடித்திருக்கிறார். கிளைமாக்சுக்கு முன்பாக ஆக்ஷனிலும் இறங்குகிறார். இரண்டாவது கதாநாயகன் போல படம் முழுவதும் வருகிறார் யோகி பாபு. ஆனால், அடிக்கடி காணாமல் போய்விடுகிறார். நாயகி ரோஷினி பிரகாஷுக்கு அதிக வேலையில்லை. வில்லனாக ஓவியர் எபி ஸ்ரீதர், தோற்றத்தில் மிரட்டுகிறார். கால்பந்து கோச்சாக கிஷோர், வழக்கம் போல மனதில் இடம் பிடிக்கிறார்.

இசை, மற்றவை

சாம் சிஎஸ் இசையில் ‘அப்படிப் பார்க்காதே’ பாடல் இனிமை. ஒளிப்பதிவாளர் கால்பந்து காட்சிகளிலும், இடைவேளைக்குப் பின் கிராமத்துக் காட்சிகளிலும் நன்றாக லைட்டிங் செய்திருக்கிறார்.

+

இடைவேளை வரையிலான படம்

இடைவேளைக்குப் பிறகான படம்

Continue Reading

Movie Reviews

தனுசு ராசி நேயர்களே – விமர்சனம்

4 Tamil Cinema Rating – 2.25/5

Published

on

By

தனுசு ராசி நேயர்களே விமர்சனம்

கதை

ஜோசியத்தின் மீது அதிக நம்பிக்கை உள்ளவர் ஹரிஷ் கல்யாண். ஏற்கெனவே ஒரு காதல் தோல்வியடைந்தவருக்கு டிகங்கனா சூர்யவன்ஷி மீது காதல் வருகிறது. ஆனால், டிகங்கனா மார்ஸ் கிரகத்திற்குச் செல்லும் ஆசையில் இருப்பவர். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

நடிப்பு

இந்தக் கதை மீதும், தன் கதாபாத்திரம் மீதும் எப்படி நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தார் என்று தெரியவில்லை. கொஞ்சம் நகைச்சுவை கலந்த கதாபாத்திரம். ஆனால், அவருக்கு அந்த நடிப்பே வரவில்லை. காதலில் மட்டும் கொஞ்சம் ஜொலிக்கிறார்.

நாயகி டிகங்கனா மிக அழகாக இருக்கிறார், சிரிக்கிறார், கொஞ்சம் நடிக்கிறார், கிளாமர் காட்டவும் தயங்காமல் இருக்கிறார். நல்ல படங்களைத் தேர்வு செய்தால் தமிழ் சினிமாவில் தனி இடத்தைப் பிடிக்கலாம். இந்தப் படத்தில் இவருக்குத்தான் ராசி வேலை செய்யும் போலிருக்கிறது.

யோகி பாபு, ஒரு நடிகராகவே வந்து படத்தைத் தொகுத்து வழங்குகிறார். இவருக்கும், படத்திற்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை. ரெபா மோனிக்கா ஜான், ரேணுகா, முனிஷ்காந்த் கொடுக்கப்பட்ட வேடத்தில் நடித்துக் கொடுத்துள்ளார்கள்.

இசை, மற்றவை

ஜிப்ரான் இசையில் பாடல்கள் ஒன்று கூட தேறவில்லை. மற்றவர்களின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.

+

நாயகி டிகங்கனா சூர்யவன்ஷி

மற்றவை எல்லாம்…

 

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: