Connect with us

Movie Reviews

எழுமின் – விமர்சனம்

Published

on

ezhumin-review

இன்றைய உலகத்தில் பெற்றோர்கள் பலர் அவர்களது பிள்ளைகளை படிக்க மட்டுமே வைத்தால் போதும் என நினைக்கிறார்கள். நன்றாகப் படித்து நிறைய மார்க் வாங்கி அவர்கள் டாக்டர் ஆகவோ, இஞ்சினியர் ஆகவோ ஆக வேண்டும் என்பதுதான் அவர்களது குறிக்கோளாக இருக்கிறது.

படிப்பைத் தவிர வாழ்க்கையில் வேறு எவற்றையும் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதைக் கூட அவர்கள் பிள்ளைகளின் மனதில் விதைப்பதில்லை. படிப்பு மட்டுமே வாழ்க்கையல்ல, அவற்றையும் மீறி விளையாட்டு உள்ளிட்ட கலைகள் உள்ளன என்பதை இன்றைய பெற்றோர்களுக்கு உணர்த்தும் ஒரு படம்தான் இந்த ‘எழுமின்’.

இயக்குனர் வி.பி.விஜி இதை ஒரு இயல்பான கதையுடன் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

விவேக், தேவயானி தம்பதியருக்கு ஒரே ஒரு மகன். குத்துச் சண்டையில் வீரனாக இருக்கும் அந்தச் சிறுவன் ஒரு முக்கிய போட்டியில் வெற்றி பெற்று மகிழ்ச்சியாக இருக்கிறான். அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதே, அதிக உற்சாகத்தால் திடீர் மரணம் அடைகிறான். மகனுடன் வேறு வேறு விளையாட்டுக்களில் பயிற்சி பெற்று வரும் ஏழை சிறுவர், சிறுமியர் அவர்களது பயிற்சி அகாடமியில் பணம் செலுத்த முடியாமல் தவிக்கிறார்கள். இதனால், விவேக், தேவயானி தம்பதியர் சொந்தமாகவே ஒரு பயிற்சி அகாடமியை ஆரம்பிக்கிறார்கள். அவர்களை போட்டிகளில் வெற்றி பெற வைக்கக் கூடாது என விளையாட்டு சங்கத் தலைவர் அழகம் பெருமாள் அரசியல் செய்கிறார். அந்த அரசியலை மீறி சிறுவர்கள், சிறுமிகள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

பாசமான பெற்றோர்களாக விவேக், தேவயானி. பணக்காரர்களாக இருந்தாலும் ஏழை சிறுவர், சிறுமியர்கள் மீது பாசம் வைத்திருக்கும் குணமான பெற்றோர். இப்படிப்பட்டவர்கள் இந்த நாட்டில் அதிகம் இருந்தால் பணக்காரர், ஏழை என்ற வித்தியாசம் இன்றைய இளம் தலைமுறையிடம் இருக்கவே இருக்காது. தங்களது கதாபாத்திரங்களில் விவேக், தேவயானி இருவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

படத்தில் தற்காப்புக் கலை தெரிந்த சிறுவர், சிறுமியர்களாக பிரவீண், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா. இவர்கள் பங்கு பெறும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை இன்றைய சில ஹீரோக்கள் கூட போட மாட்டார்கள். அவ்வளவு அற்புதமாக அந்த கிளைமாக்ஸ் காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கான பொருத்தமான தேர்வு இந்த சிறுவர், சிறுமியர்கள்.

கணேஷ் சந்திரசேகர் பாடல்களுக்கு இசையமைக்க, ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசையமைத்திருக்கிறார்.

இதுபோன்ற சிறிய பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்தால்தான் இப்படிப்பட்ட படங்கள் இன்னும் அதிகமாக வரும்.

உங்கள் வீட்டுப் பிள்ளைகளை இந்த விடுமுறைக்கு நீங்கள் அழைத்துக் கொண்டுச் செல்ல சரியான தேர்வு இந்த ‘எழுமின்’.

எழுமின் – வீரம்

Movie Reviews

கொரில்லா – விமர்சனம்

4 Tamil Cinema – Rating 3/5

Published

on

By

தயாரிப்பு – ஆல் இன் பிக்சர்ஸ்
இயக்கம் – டான் சாண்டி
இசை – சாம் சி.எஸ்.
நடிப்பு – ஜீவா, ஷாலினி பாண்டே, யோகி பாபு, சதீஷ், விவேக் பிரசன்னா, ராதாரவி மற்றும் பலர்

கதை

ஜீவா, ஒரு ஏமாற்றுக்காரர். காலையில் பஸ்ஸில் பணத்தை அடிப்பது, அடுத்து மருந்துக் கடையில் வேலை செய்து பணம் அடிப்பது, இரவில் போலி மருத்துவராக பணம் சம்பாதிப்பது என இருக்கிறார். அவருக்கு வேலையை இழந்த சதீஷ், சினிமாவில் நடிக்கத் துடிக்கும் விவேக் பிரசன்னா ஆகியோர் நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை பணம். அதை வங்கியில் கொள்ளையடித்து எடுக்க நினைக்கிறார்கள். அவர்களுடன் பக்கத்து அறையில் இருக்கும் ஒருவரும் சேர்ந்து கொள்கிறார். வங்கி ஒன்றிற்கு கொள்ளை அடிக்கச் சென்று அங்குள்ளவர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்து அரசாங்கத்திடம் 20 கோடி பணம், விவசாயக் கடன் தள்ளுபடி என கோரிக்கை வைக்கிறார்கள். அவர்கள் கேட்டது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நடிப்பு

லோக்கலாக பேசிக் கொண்டு நடிப்பது ஜீவாவுக்கு கை வந்த கலை. அதை இந்தப் படத்திலும் இயல்பாக செய்திருக்கிறார். சதீஷ், விவேக் பிரசன்னா ஆகியோர் சிரிக்க வைப்பதை விட, சில காட்சிகளில் மட்டும் வரும் யோகி பாபு அதைச் செய்து விடுகிறார். ஜீவாவின் காதலியாக ஷாலினி பாண்டே. அதிக வேலையில்லை. காவல் துறை அதிகாரியாக ராதாரவி, வழக்கம் போல் அவருடைய அனுபவம் பேசுகிறது.

இசை, மற்றவை

இசை உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள் படத்திற்கு பலத்தைக் கொடுக்கவில்லை. சிம்பன்சி காங்கிற்கு டிரைனிங் கொடுத்த டிரைனரை மட்டும் பாராட்டியே ஆக வேண்டும்.

 

படத்தில் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் நகைச்சுவைப் படத்தில் அதையெல்லாம் கவனிக்க மாட்டார்கள் என இயக்குனர் நினைத்திருப்பார் போலிருக்கிறது. விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யப் போராடுவதற்காக  இயக்குனரைப் பாராட்டலாம். குழந்தைகளுக்குப் பிடிக்கும் விதத்தில் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

 

‘கொரில்லா’ எனப் பெயர் வைத்துவிட்டு அதைச் சுற்றி கதை நகராமல் வங்கிக் கொள்ளை, விவசாயக் கடன் என எங்கெங்கோ நகர்கிறது. சிம்பன்சி காங்-கிற்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

Continue Reading

Movie Reviews

கூர்கா – விமர்சனம்

4 Tamil Cinema – Rating – 3/5

Published

on

By

கூர்கா விமர்சனம் - 4 Tamil Cinema

தயாரிப்பு – 4 மங்கிஸ் ஸ்டுடியோ
இயக்கம் – சாம் ஆண்டன்
இசை – ராஜ் ஆர்யன்
நடிப்பு – யோகி பாபு, எலிசா, சார்லி, ஆனந்தராஜ், மனோபாலா, ஆடுகளம் நரேன், ரவி மரியா மற்றும் பலர்

கதை

கூர்கா யோகி பாபுவுக்கு, போலீஸ் வேலையில் சேர வேண்டும். ஆனால், அது நடக்காமல் போக செக்யூரிட்டி வேலைக்குச் சேர்கிறார். ஒரு வீட்டில் அவருக்கு பணி கொடுக்கப்படுகிறது. அந்த வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் இருக்கும் அமெரிக்க தூதரக பெண் அதிகாரி மீது யோகி பாபு காதல் கொள்கிறார். பின்னர் யோகி பாபு ஒரு ஷாப்பிங் மாலில் பணி மாற்றப்படுகிறார். அங்கு சிலர் புகுந்து கொண்டு தியேட்டரில் படம் பார்ப்பவர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைக்கிறார்கள். அவர்களிடம் அந்த பெண் அதிகாரியும் மாட்டிக் கொள்கிறார். அவர்களைக் காப்பாற்ற யோகி பாபு களம் இறங்குகிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

நடிப்பு

‘தர்ம பிரபு’ படத்திற்குப் பிறகு யோகி பாபு நாயகனாக நடித்து வந்திருக்கும் படம். தனக்குப் பொருத்தமான கதாபாத்திரத்தைத் தேர்வு செய்தாலும், நகைச்சுவை நாயகனாக நடிக்கும் போது கூடுதல் நகைச்சுவைக் காட்சிகளை அவர் சேர்த்துக் கொள்வது நல்லது. அமெரிக்கத் தூதரக பெண் அதிகாரியாக எலிசா. அதிக வேலையில்லை. மற்ற நடிகர்களில் ஆனந்தராஜ் தான் கலக்குகிறார். அவருக்கும், யோகி பாபுவுக்கும் இடையிலான காட்சிகள்தான் படத்தின் ஹைலைட். ரவி மரியா எரிச்சலூட்டுகிறார்.

இசை, மற்றவை

‘கூர்கா’ பற்றிய கதை என்பதால் இரவு நேரத்தில் மட்டுமே காட்சிகள் நகர்கின்றன. ஒளிப்பதிவாளர் கடுமையாக உழைத்திருக்கிறார். இசையமைப்பாளர் ராஜ் ஆர்யன் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம்.

 

நகைச்சுவை படம் என்பது மட்டும்தான் படத்திற்கு பிளஸ். யோகி பாபு முடிந்தவரையில் படத்தைக் காப்பாற்றுகிறார். அவருக்கு உறுதுணையாக ஆனந்தராஜ் இருக்கிறார்.

 

காமெடி என்ற பெயரில் ரவி மரியா, மனோபாலா, மயில்சாமி, நமோ நாராயணன் ஆகியோர் செய்வது கடுப்பேத்துகிறது.

Continue Reading

Movie Reviews

வெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்

4 Tamil Cinema – Rating – 2.75/5

Published

on

By

வெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்

தயாரிப்பு – ஆல் இன் பிக்சர்ஸ்
இயக்கம் – செல்வ சேகரன்
இசை – செல்வ கணேஷ்
நடிப்பு – விக்ராந்த், அர்த்தனா பினு, பசுபதி, கிஷோர், அனுபமா குமார், சூரி மற்றும் பலர்

கதை

மியூசிக்கல் கடை வைத்திருப்பவர் விக்ராந்த். அவருடைய அப்பா கபடி மீது அதிக ஆர்வம் உள்ளார். அந்த ஆர்வத்தால், அவர் பார்த்த அரசு டிரைவர் வேலையிலிருந்து சஸ்பென்ட் ஆகிறார். கபடியே பிடிக்காத விக்ராந்த் இதனால், அப்பா மீது கோபம் கொள்கிறார். ஆனால், பசுபதி யார் என்று பிளாஷ் பேக் சொல்கிறார் அம்மா அனுபமா குமார். அதன் பின் பெற்றோர்களுக்குத் தெரியாமல் அப்பாவின் சொந்த ஊருக்குச் சென்று கபடி பயிற்சி எடுக்கிறார். அப்பா மீதான பழியைப் போக்க நினைக்கிறார். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

நடிப்பு

கிராமத்து இளைஞராக பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விக்ராந்த். அவருடைய காதலியாக அர்த்தனா பினு, பாவாடை தாவணியில் அழகாக வந்து போகிறார். விக்ராந்த் அப்பாவாக பசுபதிக்கு, கனமான கதாபாத்திரம். கண்களை நனைக்கிறார். கபடி பயிற்சியாளர் கிஷோர், கபடி ஆடும் சூரி ஆகியோரும் இயல்பாய் நடித்திருக்கிறார்கள்.

இசை, மற்றவை

செல்வகணேஷ் இசையில் பாடல்கள் பரவாயில்லை. ஒளிப்பதிவாளர் கிராமத்து அழகை அருமையாய் படமாக்கியிருக்கிறார்.

 

நம் மண்ணின் கதை, நம் மண்ணின் விளையாட்டு. அதற்காக முக்கியத்துவம் கொடுத்து யதார்த்தமாய் படமாக்கியிருக்கிறார் இயக்குனர். நடித்திருப்பவர்கள் அனைவருமே இயல்பாய் நடித்திருப்பது கூடுதல் பலம்.

 

படத்தின் திரைக்கதையில் திருப்பங்கள் அதிகமில்லை. இப்படித்தான் படம் முடியப் போகிறது என்பதை முன்னரே கணிக்க முடிகிறது.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!