Connect with us

Others

தென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com

Published

on

festoo launch

மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஆன்லைன் வர்த்தகத்தில் புதிய புரட்சியாக, கிடைக்காத பொருட்களே இல்லாத நிலையை உருவாக்கும் விதத்தில் தொடங்கப்பட்டிருக்கும் புதிய ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம். (festoo.com) சென்னையை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்நிறுவனம் தான் தென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியாவில் செயல்பட்டு வரும் சில ஆன்லைன் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களாகவும், வட இந்திய நிறுவனங்களாகவும் உள்ள நிலையில், தென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் நிறுவனமாக தொடங்கப்பட்டிருக்கும் festoo.com நிறுவனம் இன்று (பிப்.21) சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள், மாமிசங்கள், மீன் வகைகள், ஆடைகள் என 35000 க்கும் மேற்பட்ட பொருட்களைக் கொண்ட இந்நிறுவனத்தில் தோசை மற்றும் இட்லி மாவு போன்ற சாதாரண பொருட்களும் விற்கப்பட உள்ளது.

மேலும், வெளி மார்க்கெட்டில் விற்கப்படும் விலையை விட பல சலுகைகளோடு காய்கறிகள் விற்கப்படுவதோடு, தூய்மையான முறையில் பேக் செய்யப்பட்டு டெலிவரி செய்வது தான் festoo.com நிறுவனத்தின் தனிச்சிறப்பு.

மற்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்களிடம் வரும் ஆர்டரை வியாபாரிகளுக்கு அனுப்பி அவர்கள் மூலமாகவே பொருட்களை டெலிவரி செய்வார்கள். ஆனால், festoo.com நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் ஆர்டர் பொருட்களை தங்களது
நிறுவனத்திற்கு வர வைத்து, அவற்றின் தரத்தை சோதித்து பார்த்த பிறகே, பேக் செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.

இதற்காகவே சென்னை முழுவதும் 200 அவுட்லேட்களை இந்நிறுவனம் திறந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் festoo.com நிறுவனம் மூலம் ஆர்டர் கொடுக்கும் பொருட்கள் ஒரு மணி நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் சென்றடையும்.

தற்போது சென்னையில் அவுட்லேட்களை தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்தக்கட்டமாக தமிழகம் முழுவதும் தொடங்குவதோடு, கர்நாடகா, ஆந்திரா என்று தென்னிந்தியா முழுவதும் திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வியாபாரம் என்ற நோக்கில் மட்டும் செயல்படாமல், பிறருக்கு தொழில் செய்ய வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும் festoo.com நிறுவனம், தங்களது டெலிவரி அவுட்லேட்களை பிராஞ்சஸ் கொடுக்கவும் முடிவு செய்துள்ளது. இதனால் குறைந்த முதலீட்டில் நிரந்தர
லாபம் பெறும் தொழிலை பிறருக்கு ஏற்படுத்தி கொடுப்பதோடு, டெலிவரி பணியை மேற்கொள்பவர்களுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்பால், மறைமுகமாகவும் பலருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கிறது.

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட festoo.com நிறுவனம் தங்களது பிராண்ட் பிரத்யேகமாக இருக்க வேண்டும் என்பதற்காக சர்வதேச கட்டமைப்போடு தொடங்கப்பட்டுள்ளது.

Continue Reading

Others

என் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்

Published

on

By

என் மகனுக்கு நான் ரசிகன் - லிடியன் தந்தை வர்ஷன்

ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளுக்கென பிரத்யேக செய்தி மற்றும் கலை, புகைப்பட திறமையை ஊக்குவிக்கும் இரண்டு புதிய முயற்சிகளை ஆகஸ்ட் 6 ஆம் தேதி அறிமுகம் செய்தது.

கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற இரு புதிய முயற்சிகளை உலக மேடையில் புகழ் பெற்ற லிடியன் நாதஸ்வரம் துவங்கி வைத்தார்.

அறிமுக நிகழ்வை தொடர்ந்து லிடியன் நாதஸ்வரம் பள்ளி மாணவர்களுடன் உரையாடி, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். பின்னர் மாணவர்கள் முன்னிலையில் பியானோ வாசித்துக் காண்பித்து அவர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் லிடியனின் சகோதரி அமுர்த வர்ஷினி பாட்டு பாடினார்.

அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற சர்வதேச தரத்திலான புதிய முயற்சியை பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர் வடிவமைத்திருக்கிறார்.

இந்நிகழ்ச்சியில், புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்கள், ஓவியர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நக்கீரன் கோபால் பேசும்போது,

‘நான் புத்தக கண்காட்சிக்காக ஈரோடு வந்தேன். அப்போது தம்பி ஸ்ரீதர் என்னை அழைத்ததால் இங்கு வந்தேன். நான் இப்படிப்பட்ட மாணவர்களை பார்ப்பேன் என்று நினைக்கவில்லை, மிகவும் அருமையானவர்கள். நான் ஒரு சாதாரண பள்ளி கல்லூரியில் படித்தேன். பின் பிழப்புக்காக சென்னை வந்தேன். கற்பனை பண்ணாத அளவிற்கு இப்பள்ளியின் சுற்றுப்புற சூழல் அழகாக அமைந்திருப்பது பாராட்டக்குரியது. நான் பெரிய பாக்கியமாக நினைப்பது குட்டி புலி லிடியன் அருகில் இருப்பதுதான். ஏனென்றால் 12 வயதில் உலக சாதனையும் பாராட்டுகளையும் சேர்ப்பது சாதாரணம் அல்ல. எதும் நம்மால் முடியும் என்பதற்கு லிடியன் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார். இவர் பியானோ வாசிப்பதில் ஒரு ஸ்டைல் உள்ளது. ஆனால் இப்போது மிகச் சாதாரணமாக அமர்ந்திருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்தது லிடியனின் தந்தை. இவர்களுக்கு தமிழ் பெயர்களை வைத்திருப்பது. நானும் பிற்காலத்தில் இப்படிப்பட்ட பள்ளிக்கு வந்தேன் என்று பெருமை கூறிக் கொள்வேன்,’ என்றார்.

லிடியனின் தந்தையும் இசையமைப்பாளருமான வர்ஷன் சதீஷ் பேசும்போது,

‘நான் இங்கு இருப்பது மிகவும் மகிழ்ச்சி. எங்களை இங்கு அழைத்ததற்கு நிர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார் மற்றும் கிருத்திகா சிவகுமார் மற்றும் ஸ்ரீதர் அவர்களுக்கு நன்றி. பள்ளிப் பருவம் என்பது ஒரு அரிய வாய்ப்பு, அனைவரும் கூறும் படி லிடியன் உலக புகழ், பெருமைகளையும் பாராட்டுக்களையும் பெற்றாலும் என் மகனுக்கு நான் ரசிகன்.

லிடியன் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் பயிற்சி எடுக்கிறார். இந்த வயது மிகவும் அற்புதமான வயது. அதை டெக்னாலஜி எனும் செல்போன், யூடியூப், கேம்ஸ் ஆகியவற்றில் நேரத்தை செலவிடாமல் இருத்தல் நல்லது. என் மகனை நான் பள்ளிக்கு அனுப்பவில்லை, ஆனால் பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வருவது சச்சின் டெண்டுல்கர் போன்றோரைத்தான் பார்த்துள்ளேன். இப்போது என் மகன் அப்படி செல்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது,’’ என்றார்.

ஏ.பி.ஸ்ரீதர் பேசும்போது,

‘என் வாழ்வில் ஒரு சர்வதேச அளவிலான ஓவியக் கல்லூரி ஒன்று கட்ட வேண்டும் என்பது ஆசை. அதன் தொடக்கமாக இப்பள்ளியில் டிப்ஸ் கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி தொடங்கியுள்ளேன்.

லிடியனின் தந்தையைப் பார்க்கும் போது என் தந்தை ஞாபகம் வருகிறது. என் தந்தையும் இதே போன்றுதான் உற்சாகப்படுத்தினார். உலகம் மறக்கமுடியாத இசையமைப்பளார்களில் ஒருவராக லிடியன் இருப்பார். 2002ல் இருந்து ஏ.ஆர்.ரகுமான் அவர்களைத் தெரியும். அவரிடம் உள்ள அதே அன்பு, பணிவு, அளவற்ற திறமை லிடியனிடம் உண்டு. மேலும் லிடியனின் பெற்றோர்களை பெருமைப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இப்பள்ளியின் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைவர் டாக்டர் சின்னுசாமி, நி்ர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார் மற்றும் கிருத்திகா சிவகுமார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார் மற்றும் கிருத்திகா சிவகுமார் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.

Continue Reading

Others

வேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்

Published

on

By

vels kindle kids

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும் வேல்ஸ் கல்விக் குழும நிறுவனருமான டாக்டர் ஐசரி.கே.கணேஷ் ‘கிண்டில் கிட்ஸ்’ (Kindle Kids International Curriculum) என்ற பாடத் திட்டத்தை பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி அன்று ஈஞ்சம்பாக்கம் வேல்ஸ் சர்வதேசப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.

Hindu In-School நாளிதழ் ஆசிரியர் கிருத்திகா ரெட்டி தலைமை விருந்தினராகவும், டாக்டர் ஆண்டோனியோஸ் ரகுபான்ஸே, (தலைவர், பிரிட்டிஷ் கவுன்சில் கல்விப் பணி) சிறப்பு விருந்தினராய் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்த சர்வதேசப் பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரிய பணியாற்றிய பெருமக்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

உலகளாவிய பாலர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் உள்ள சி.பி.எஸ்.இ (CBSE), ஐ.சி.எஸ்.ஈ (ICSE), ஐ.பி (IB) போன்ற பல்வேறு பாடத் திட்டத்தை பயன்படுத்துவோரும் பின்பற்றும் வகையில் ஒரு முழுமையான பாடத் திட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள முதல் தரம் வாய்ந்த பாலர் பள்ளியான வேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் வெற்றிகரமாய் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வெற்றி ஆசியாவில் உள்ள பள்ளிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது மட்டுமன்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தலைசிறந்த கல்வியாளர்களும் கல்வி நிறுவனங்களின் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர் .

வேல்ஸ் கல்வி நிறுவனம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக 25000 – த்திற்கும் மேற்பட்ட மாணவர்களுடன் 25 கல்வி நிறுவனங்கள் மற்றும் 5000க்கும் மேற்பட்ட ஆசிரிய பெருமக்களுடன் கல்வித் துறையில் தனது சீரிய பணியை தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் சிங்கப்பூரில் பாலர் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை ‘ஒரே குடையின் கீழ் ‘ என்ற நிலையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

Continue Reading

Others

உச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…!

Published

on

By

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய புராடக்டை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார் ஆர்கே..

‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக இது உருவாகியுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பும் அதன் பயன் குறித்தும் ஆர்.கேவிடம் கேட்டோம்..

“இன்றைய தேதியில் எல்லோருமே நரைமுடி என்பதை கருப்பாக்க, கலராக்க வேண்டுமென நினைக்கிறார்கள். உலகத்திலேயே ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் இளமைக்கும் முதுமைக்குமான வித்தியாசத்தை உணர்த்துவது நரைமுடி தான். நரைமுடி வந்துவிட்டதற்காக வருத்தப்படுகிறவர்கள் பலரும் அதை மறைப்பதற்கு அதிகப்படியான நேரம், பணம் செலவிடுகிறார்கள்.

இன்றைக்கு நாற்பது சதவீத மக்கள் நரைமுடியை மறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்பெல்லாம் வயதானவர்களுக்கு நரை வந்தது போய், தற்போது டீனேஜில் உள்ள இளம் வயதினருக்கும் நரைமுடி வர ஆரம்பித்துவிட்டது. ஆக, இன்று நரைமுடி என்பது அழகைவிட மிகப்பெரிய பிரச்சனையாக இருந்துகொண்டு இருக்கிறது. ஒருவர் கருப்பா, சிவப்பா என்கிற அழகு பிரச்சனையையெல்லாம் தாண்டி இருதரப்பினருக்குமே பொதுவான பிரச்சனையாகவே நரைமுடி மாறிவிட்டது.

உலகம் முழுவதிலும் இதற்கு தீர்வாக இப்போதுவரை இருப்பது ‘டை அடித்தல்’ ஒன்று மட்டுமே. ஒரு பியூட்டி பார்லருக்கு சென்றால் அங்கே உள்ளவர்கள் கைகளில் க்ளவுஸ் அணிந்துகொண்டு, இரண்டுவிதமான கெமிக்கல்களை எடுத்து, அதை சரியான விகிதத்தில் கலந்து, அங்கேயே காற்றில் சற்று உலரவைத்து அதன்பின்னர் நமது தலைமுடியில் அதை அடித்துவிடும் முறை தான் தொழில் ரீதியாக இருக்கிறது.

ஆனால் பெரும்பாலான மக்கள் அங்கே ஒருமுறை செல்வதற்கே ஆயிரக்கணக்கில் செலவாகிறது என்பதாலும், மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் நினைக்கிறார்கள். அதனால் இதை பயன்படுத்திக்கொண்டு வியாபாரிகள் இதே பொருட்களை, மக்களே பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கடையில் விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.. ஆனாலும் கடைகளில் செய்வது போன்றே கைகளில் க்ளவுஸ் அணிந்துகொண்டு, இரண்டுவிதமான கெமிக்கல்களை எடுத்து அதை சரியான விகிதத்தில் கலப்பது, தனக்குத்தானே டை அடித்துக்கொள்ள முடியாதது என பலவித சிரமத்தை நாம் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.

அதுமட்டுமல்ல இந்த வகை டை கைகளில் ஓட்டும் தன்மை கொண்டவை. தோலில் ஒட்டும் டை தான் இன்றுவரை உலகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. அமோனியா அல்லது ஏதாவது ஒரு கெமிக்கல் அதில் கலந்திருக்கும்.. கண் எரிச்சல் ஏற்படும்.. சதவீத அடிப்படையில் சரியாக கலக்காவிட்டால் இருக்கும் முடியை இழந்துவிட கூடிய அபாயமும் இருக்கிறது. இதனாலேயே பலர் தங்களது முடியை இழந்து பரிதாபகரமான தோற்றத்தில் வலம் வருகிறார்கள்.

சரி டையே அடிக்கவேண்டாம் என விட்டுவிட்டால், நண்பர்கள் வட்டாரத்தில் அதற்கும் கேலிப்பேச்சுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதையும் மீறி டை அடித்துக்கொண்டுவந்தால் ‘கருப்பு ஹெல்மெட்’ போட்டிருக்கிறான் என பலர் கிண்டலுக்கு ஆளாவதும் உண்டு. எது அழகு என நினைக்கிறோமோ அதுவே நமக்கு அசிங்கமாக மாறிவிட கூடிய சூழல் தான் இதனால் உருவாகும்.

இதற்கெல்லாம் தீர்வாகத்தான் உலகத்திலேயே இதுவரை யாருமே கண்டுபிடிக்காத ஒரு புது தொழில்நுட்பத்தை நாம் கண்டுபிடித்திருக்கிறோம்.. அதுதான் விஐபி ஹேர் கலர் ஷாம்பூ இதை கண்டுபிடித்ததில் ஒரு இந்தியனாக, அதிலும் தமிழ்நாட்டில் இருந்து உலகத்திற்கு இந்த கண்டுபிடிப்பை கொண்டுசெல்லும் ஒரு தமிழனாக நான் பெருமைப்படுகிறேன்.

இதுவரை டை அடித்துவிட்டு குளிக்கும்போது ஷாம்பூ போடுவது தான் வழக்கமாக இருக்கிறது. ஆனால் ஷாம்பூ போட்டு குளித்தால் எப்படி அழுக்கெல்லாம் மறைகிறதோ, அதேபோல நரைமுடியும் மறைகின்ற மாதிரி கண்டிஷனருடன் சேர்த்தே இந்த ஷாம்பூவை வழங்குகின்றோம். இதற்கு கிளவுஸ் தேவையில்லை, கிண்ணம் தேவையில்லை, பிரஷ் தேவையில்லை, கண் எரிச்சல் கிடையாது, இன்னொருவரின் உதவி தேவையில்லை, தோலில், முகத்தில் கருப்பாக ஒட்டிக்கொள்ளுமே, பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்குமே என்கிற கவலை கிடையாது.

வழக்கமான ஷாம்பூவை பயன்படுத்துவதை போல இதை பயன்படுத்த முடியும்.. கைகளை தண்ணீரால் ஈரமாக்கிக்கொண்டு நமக்கு தேவையான அளவு விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை கைகளில் விட்டு, அதில் வரும் நுரையை உலர்ந்த நம் தலைமுடியில் ஷாம்பூ போலவே தேய்த்துக்கொண்டு கால்மணி நேரம் கழித்து குளித்துவிட்டு வந்தால் நரைமுடி இருந்த இடமே இல்லாம் போயிருப்பதை கண்கூடாக பார்க்கலாம். இதை ஒருமுறை பயன்படுத்தினால் சுமார் இருபது நாட்களுக்கு குறையாமல் நரைமுடியை தெரியவிடாமல் தடுக்கும்.

இன்று பல பிரபலங்கள் கைகளில் பார்த்தோம் என்றால் நரைமுடி இருக்காது.. காரணம் wax எனும் செயற்கை முறைதான். ஆனால் தலைமுடி, தாடி இவற்றையும் தாண்டி நெஞ்சு முடி, கை முடிக்கும் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை பயன்படுத்தலாம் என உலகத்திலேயே முதன்முறையாக நிரூபித்துள்ளோம். சுருக்கமாக சொன்னால் உச்சிமுதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு சரியான தீர்வுதான் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ” என பெருமை பொங்க கூறுகிறார் ஆர்கே…

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: