Warning: session_start(): open(/var/cpanel/php/sessions/ea-php70/sess_d34285b4aa429909d93ec7241a4b00ae, O_RDWR) failed: No such file or directory (2) in /home/tamilcin/public_html/wp-content/plugins/wccp-pro/preventer-index.php on line 2

Warning: session_start(): Failed to read session data: files (path: /var/cpanel/php/sessions/ea-php70) in /home/tamilcin/public_html/wp-content/plugins/wccp-pro/preventer-index.php on line 2
ஹீரோ விமர்சனம் - 4 Tamil Cinema
Connect with us

Reviews

ஹீரோ – விமர்சனம்

4 Tamil Cinema Rating – 3.5/5

Published

on

ஹீரோ விமர்சனம் - 4 Tamil Cinema

கதை

சென்னையில் போலி சான்றிதழ்களை அச்சடித்துக் கொடுக்கும் வேலை, இஞ்சினியரிங், மருத்துவக் கல்லூரிகளில் கமிஷனுக்கு மாணவ, மாணவிகளைப் பிடித்துக் கொடுக்கும் வேலைகளைச் செய்பவர் சிவகார்த்திகேயன். கல்லூரியில் படிக்க வேண்டும் என்று விரும்பிய அவர் பகுதியைச் சேர்ந்த இவானா, ஒரு புதிய கண்டுபிடிப்பு விஷயத்தில் ‘திருடி’ என்று சொல்லப்பட்டதால் தற்கொலை செய்து கொள்கிறார். திறமைசாலியான இவானாவின் தற்கொலைக்கு நியாயம் கிடைக்க, இவானாவின் மாஸ்டர் அர்ஜுன் ஆலோசனைப்படி சூப்பர் ஹீரோவாக மாறுகிறார் சிவகார்த்திகேயன். அதன் பின் அவர் என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நடிப்பு

வழக்கம் போல் பக்கத்து வீட்டுப் பையன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன். பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தும், அப்பாவின் உடல்நிலை காரணமாக சான்றிதழை விற்கிறார். அதிலிருந்தே அது போன்ற வேலைகளில் ஈடுபட்டு ‘பிராடு’ ஆக மாறுகிறார். இடைவேளை வரை சராசரியான இளைஞராக இருப்பவர், பின்னர் சூப்பர் ஹீரோவாக மாறுகிறார். முந்தைய படங்களுடன் ஒப்பிடும் போது ஆக்ஷன் ஹீரோவாக ஒரு படி முன்னேயியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன். அதிக வேலையில்லை, இவருடைய கதாபாத்திரத்தை இன்னும் கூடுதலான காட்சிகள் வரும்படி சேர்த்திருக்கலாம்.

சிவகார்த்திகேயனை சூப்பர் ஹீரோவாக மாற்றும் மாஸ்டர் ஆக அர்ஜுன். அவர் சொல்லிக் கொடுப்பது போல பள்ளி, விரும்பியதைப் படிக்கும் கல்வி முறை இருந்தால் இந்த நாடு இன்னும் முன்னேறும் என்றே தோன்றுகிறது.

வில்லனாக அபய் தியோல், ஒரு கார்ப்பரேட் ஏஜென்ட் ஆக மிரட்டுகிறார். இதற்கு முன் இம்மாதிரியான சில ஹை-பை வில்லன்களைப் பார்த்திருந்தாலும் தனி முத்திரை பதிக்கிறார் அபய்.

இசை, மற்றவை

யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் சிறப்பைத் தருகிறது. ஒளிப்பதிவு, அரங்க அமைப்புகள் பிரம்மாண்டமான உணர்வைத் தருகின்றன.

+

கதை, சொல்லியிருக்கும் விதம்

ஆங்காங்கே சில பல லாஜிக் சறுக்கல்கள்

Reviews

தர்பார் – விமர்சனம்

4 Tamil Cinema Rating – 3.5/5

Published

on

By

தர்பார் விமர்சனம் - 4 Tamil Cinema

கதை

மும்பை மாநகரில் போலீசாரின் கெடுபிடி அதிகம் இல்லாததால் போதைப் பொருள் கடத்தல், பெண்கள் கடத்தல் என பல அட்டூழியங்கள் நடக்கின்றன. அவற்றை முற்றிலுமாக ஒழிக்க போலீஸ் கமிஷனராக நியமிக்கப்படுகிறார் ரஜினிகாந்த். வந்ததுமே தனது அதிரடியை ஆரம்பித்துவிடுகிறார். போதைப் பொருள் கடத்தல், பெண்கள் கடத்தலுக்குக் காரணமான ஒருவனைக் கண்டுபிடித்து கைது செய்கிறார். ஆனால், அவனின் அப்பா ஆள் மாறாட்டம் செய்து வேறு ஒருவரை சிறையில் வைக்கிறார். அதைக் கண்டுபிடிக்கும் ரஜினிகாந்த் சமயோசிதமாக அவனை சிறைக்குள்ளேயே சுட்டுத் தள்ளுகிறார். அந்தக் கடத்தல்காரன் தான் படத்தின் வில்லனான சுனில் ஷெட்டியின் மகன். தன் மகனைக் கொன்ற ரஜினியைப் பழி வாங்க வெளிநாட்டிலிருந்து வருகிறார் சுனில். ஒரு விபத்தை ஏற்படுத்தி ரஜினியின் மகள் நிவேதா தாமஸைக் கொலை செய்கிறார். அதனால் துடித்துப் போகும் ரஜினிகாந்த், மகள் கொலைக்கு பழி வாங்க வீறு கொண்டு எழுகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

நடிப்பு

படத்தில் காட்சிக்குக் காட்சி ரஜினி, ரஜினி, ரஜினி, ரஜினி என நிறைந்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் மட்டும்தான் ரஜினி இல்லை. இருந்தாலும் அந்தக் காட்சிகளிலும் ரஜினியைப் பற்றித்தான் பேசுகிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியின் ஹீரோயிசத்தை அவரது ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் அளவிற்கு அட்டகாசமாய் கொடுத்திருக்கிறார் இயக்குனர் முருகதாஸ். ரஜினியிடம் என்ன ஒரு சுறுசுறுப்பு, விறுவிறுப்பு, பரபரப்பு. அவரது வேகத்திற்கு இன்றைய வேறு முன்னணி ஹீரோக்கள் கூட நிச்சயம் ஈடு கொடுக்க முடியாது. தனி ஒருவனாக தர்பார் படத்தை தாறுமாறாக ரசிக்க வைக்கிறார் ரஜினிகாந்த்.

ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ். ஒரு அப்பாவிற்கு இப்படிப்பட்ட மகள்கள் அமைவது வரம். இல்லையென்றால் அப்பாவிற்கு நயன்தாரா போன்ற பெண்ணைப் பார்த்து காதலிங்கப்பா என்று சொல்வார்களா ?. இருவர் சம்பந்தப்பட்ட சென்டிமென்ட் காட்சிகள் நெகிழ வைக்கும்.

ரஜினிக்கு ஒரு கதாநாயகி வேண்டும் என்பதற்காக நயன்தாராவை நடிக்க வைத்திருக்கிறார்கள். அவர் யார் என்ன என்பதெல்லாம் தேவையில்லை என இயக்குனர் நினைத்துவிட்டார் போலிருக்கிறது. சில காட்சிகளில் மட்டும்தான் வருகிறார் நயன்தாரா. அப்பா, மகள் சென்டிமென்ட் அலையில் அவர் காணாமல் போய்விடுகிறார்.

வில்லனாக சுனில் ஷெட்டி, ரஜினிக்கு எதிராக நடிக்க வேண்டுமென்றால் தனி பலம் வேண்டும். அது சுனிலிடம் குறைவாகவே இருக்கிறது. ஒரே ஒரு காட்சியில் மட்டும் தன் கொடூரத்தைக் காட்டுகிறார்.

ரஜினிக்கு உதவியாளராக யோகி பாபு. கிடைக்கும் கேப்பில் ரஜினியைப் பாராட்டியும், கொஞ்சம் நக்கலடித்தும் சிரிக்க வைக்கிறார்.

இசை, மற்றவை

அனிருத் இசையில் ‘சும்மா கிழி’ பாடல் மட்டுமே கிழிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். ஆனால், பின்னணி இசையில் ரஜினியின் ஒவ்வொரு காட்சியையும் ஒரு என்ட்ரி போல நினைத்து அதிரடி கொடுத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, ராம் லட்சுமண் சண்டைக் காட்சிகள் படத்திற்கு பக்கபலம்.

ரஜினி, ரஜினி, ரஜினி..ரஜினி மட்டுமே…

சில யூகிக்க முடிந்த காட்சிகள்

Continue Reading

Reviews

வி 1 மர்டர் கேஸ் – விமர்சனம்

4 Tamil Cinema – Rating – 3/5

Published

on

By

வி 1 மர்டர் கேஸ் விமர்சனம் - 4 Tamil Cinema

கதை

‘லிவிங் டு கெதர்’ முறையில் இருக்கும் லிஜேஷ் உடன் வசிக்கும் காயத்ரி வீட்டிற்கு வரும் வழியில் கொல்லப்படுகிறார். கொலையாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரிகள் ராம் அருண் காஸ்ட்ரோ, விஷ்ணுப்ரியா பிள்ளை களம் இறங்குகிறார்கள். இதனிடையே லிஜேஷ் திடீரென தற்கொலை செய்து கொள்கிறார். அடுத்து காயத்ரிக்கு காதல் தொல்லை கொடுத்த லிங்கா, காயத்ரி வீட்டருகில் உள்ள ஒரு இளைஞர், செயின் திருட்டு செய்யும் பணக்கார வீட்டு சிறுவன் போலீஸ் சந்தேக வலையில் சிக்குகிறார்கள். உண்மைக் குற்றவாளி யார் என்பதை ராம், விஷ்ணுப்ரியா எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நடிப்பு

ஒரு மிடுக்கான, தன் திறமை மீது அதிக நம்பிக்கை கொண்ட ஒரு போலீஸ் அதிகாரி எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறார் ராம் அருண் காஸ்ட்ரோ. நாயகி என்றால் காதலியாகவும், மனைவியாகவும்தான் இருக்க வேண்டுமா என்ன ?. சக தோழியாகவும் இருக்கலாமே. அப்படி ஒரு தோழியாக இருக்கிறார் விஷ்ணுப்ரியா பிள்ளை. வேலை செய்யும் இடத்தில் இப்படி ஒரு தோழி கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

விசாரணை குற்றவாளிகளாக, வெவ்வேறு குணாதிசயம் கொண்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக செய்திருக்கிறார்கள்.

இசை, மற்றவை

ஒரு த்ரில்லர் படத்திற்கு பின்னணி இசை முக்கியம். அதை உணர்ந்து செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ரோனி ரபேல். த்ரில்லர் படங்களில் ஒளி அமைப்பும், ஒளிப்பதிவும் முக்கியத்துவம் பெறும். அது கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவு மூலம் கிடைத்திருக்கிறது.

+

பரபரப்பான திரைக்கதை…

நாயகியின் கிளாமர் உடை

 

Continue Reading

Reviews

சில்லுக்கருப்பட்டி – விமர்சனம்

4 Tamil Cinema – Rating – 3.5/5

Published

on

By

சில்லுக்கருப்பட்டி விமர்சனம் - 4 Tamil Cinema

ஒரே படத்தில் நான்கு விதமான கதைகள், ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு நடிகர்கள், நடிகைகள். அவர்களுக்குள் வெளிப்படும் காதல் உணர்வுதான் இந்த ‘சில்லுக்கருப்பட்டி’.

கதை

பின்க் பேக்

பதின்ம வயதில் இருக்கும் குப்பை பொறுக்கும் ஒரு ஏழை சிறுவன். அவனுக்குக் கிடைக்கும் ஒரு பணக்கார வீட்டுச் சிறுமியின் மோதிரத்தைத் திருப்பித் தர நினைக்கிறான். அதை அவன் எப்படி திருப்பிக் கொடுத்தான், அதற்கு பதிலுக்கு அந்த சிறுமி என்ன செய்தாள் என்பதுதான் ‘பின்க் பேக்’.

‘மாஞ்சா’ என்றற குப்பை பொறுக்கும் ஏழை சிறுவனாக ராகுல். பணக்கார வீட்டு சிறுமி மிட்டி-யாக சாரா. ஒரு பக்கம் குப்பை மேடு, குடிசை, மறுபக்கம் மாட மாளிகை என இருவித வாழ்வியலில் இருக்கும் இரண்டு அன்பு உள்ளங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கதை இது.

காக்கா கடி

ஐ.டி. வேலையில் கை நிறைய சம்பாதிக்கும் இளைஞன் மணிகண்டன். அவருக்கு கேன்சர் என அதிர்ச்சியளிக்கிறார் டாக்டர். வாழ்க்கை அவ்வளவுதான் என நினைக்கும் அவரது வாழ்க்கையில் நம்பிக்கையூட்டும் விதமாக வருகிறார் நிவேதிதா சதீஷ். இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததா இல்லையா என்பதுதான் ‘காக்கா கடி’.

கஷ்டப்படும் நிலையில் இருக்கும் போது உண்மையில் ஆறுதல் சொல்ல வருபவர் மீது நமக்கு நேசம் தானாக வரும். ஒருவரிடம் இருக்கும் ஏதோ ஒரு விஷயம் நம்மை ஈர்க்கும். அப்படியான இரண்டு இந்தக் கதையில் வரும் மணிகண்டன், நிவேதிதா ஆகியோருக்கு வருகிறது. முன்பின் தெரியாத இருவர் எப்படி காதலில் விழுவார்கள் என்பதை அவ்வளவு யதார்த்தமாய் சொல்லியிருக்கும் கதை இது.

டர்ட்டிள்ஸ்

திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழும் வயதான பெண்மணி லீலா சாம்சன். அவரைப் பார்க்கும் வயதான ஆண் ஸ்ரீராமிற்கு லீலா மீது ஒரு ஈர்ப்பு. ஒரு கட்டத்தில் தன் காதலை சொல்லி விடுகிறார். வயதானவர்களுக்குள் காதலா என ஆச்சரியத்துடன் நாம் பார்க்க, அதற்கான காரணத்தை அழகுற சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

இப்படி ஒரு காதலை இதற்கு முன் தமிழ் சினிமாவில் பார்த்திருக்கிறோமா என யோசிக்க வைக்கிறார்கள். லீலா சாம்சனை சில படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், ஸ்ரீராம்-ஐ இப்போதுதான் பார்க்கிறோம். அந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார். அந்த வயதில் காதலைச் சொல்வதில் எவ்வளவு கண்ணியம் வேண்டும். அதை அவ்வளவு இயல்பாய் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஹே..அம்மு  

எப்போதும் வேலை, வேலை என்று சுற்றும் சமுத்திரக்கனி. அவரது மனைவி சுனைனா, இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள். இருப்பினும் மனைவி சுனைனாவிடம் காதலில்லாமல் இருக்கிறார் சமுத்திரக்கனி, ஆனால், காமம் இருக்கிறது. சுனைனா எதிர்பார்ப்பதோ காமம் அல்ல காதல். அந்தக் காதலை கணவர் சமுத்திரக்கனிக்கு எப்படி புரிய வைக்கிறார் என்பதுதான் இந்தக் கதை.

திருமணத்திற்கு முன்புதான் காதலா, திருமணத்திற்குப் பின்பும் காதல் இருக்கிறது. சின்னச் சின்ன விஷயங்களில் கூட காதல் இருக்கிறது என்பதைப் புரிய வைக்கும் கதை இது. திருமணம் முடிந்து குழந்தை பெற்றவர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் தாங்கள் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கண்டிப்பாகத் திருத்திக் கொள்வார்கள்.

ஒரு படத்தைப் பார்க்கும் போது ஒரே கதையில் வரும் சுவாரசியங்களை விட ஒரே படத்தில் இப்படி நான்கு கதைகளை, வெவ்வேறு எண்ணம் கொண்ட கதாபாத்திரங்களுடன் பார்ப்பது தனி உணர்வைத் தருகிறது. வித்தியாசமான முயற்சிகளை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் வரவேற்பார்கள். அது போல இந்தப் படத்தையும் வரவேற்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

சிறிய குறைகள் சில இருந்தாலும் அதைப் பெரிதாக சொல்ல முடியாமல் மற்ற நிறைவான விஷயங்கள் முன்னுக்கு வந்துவிடுகின்றன.

படத்தில் உள்ளவற்றை உணர்ந்து எழுதிய ஒருவரால்தான் இப்படி ஒரு படத்தைக் கொடுக்க முடியும், அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் இயக்குனர் ஹலிதா ஷமீம். அவரே படத்தொகுப்பையும் செய்திருக்கிறார்.

இசையமைப்பாளர் பிரதீப் குமார், ஒளிப்பதிவாளர்கள் அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி யக்னமூர்த்தி இயக்குனருக்கு உறுதுணையாய் இருந்திருக்கிறார்கள்.

2019 வருட முடிவில் ஒரு சிறந்த படத்தைப் பார்த்த திருப்பி வேண்டும் என நினைப்பவர்கள் இந்தப் படத்திற்கு தாராளமாகச் செல்லலாம்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: