Connect with us

Television

கலைஞர் டிவியின் ‘கண்ணாடி’

Published

on

கலைஞர் டிவியின் கண்ணாடி - 4 Tamil Cinema

கோபம், ஏமாற்றம், பேராசை, இன்பம், சலனம் இவை அனைத்தும் நமக்கும் நம் மனதிற்கும் புதிதல்ல அதனால் ஏற்படும்குற்றங்களும் தவறுகளும் தான் புதிது.

நம்மை அதிர்ச்சியடைய வைத்த சில நிகழ்வுகள் வெறும் செய்தியாகவே நம்மைக் கடந்து போயுள்ளன. அப்படி கடந்து சென்ற சில நிகழ்வுகள் ஒருநாள் நம் வாழ்க்கையிலும் நிகழ்ந்தால் என்ன ஆகும் .

அதனால் ஏற்படும் மாற்றம் நம் வாழ்க்கையையே திருப்பி போடுமானால் நம்மில் அது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் பின்னணியில் இருக்கும் உண்மையும் பொய்யும் என்ன என்பதை அலசும் ஒரு தளம் தான் ‘கண்ணாடி’.

அமித் பார்கவ் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

பல்வேறு திருப்பங்கள் மற்றும் திகில் கலந்து உருவாக்கப்படும் இந்த நிகழ்ச்சி சமூகத்தின் தற்போதைய நிலைமையை உணர்த்தும் ஒரு நிகழ்ச்சியாகும்.

Television

கோவையில் சூப்பர் சிங்கர் 7 இறுதிப் போட்டி

Published

on

By

கோவையில் சூப்பர் சிங்கர் 7 இறுதிப் போட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி, வரும் நவம்பர் 10ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, கோயம்பத்தூர் கொடிசியா வர்த்தக வளாகத்தில்  நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் மதியம் 3.30 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பாகும்.

கடந்த சில மாதங்களாக பல பாடகர்கள், இசைக் கலைஞர்கள், திரை நட்சத்திரங்கள், வாரம் ஒரு அட்டகாசமான தீம், அற்புதமான போட்டியாளர்கள் என அத்தனை இசை பரிட்சைகளையும் கடந்து வந்து இறுதிப் போட்டிக்கு புன்யா, விவேக், சாம் விஷால், கவுதம், மற்றும் முருகன் ஆகியோர் தேர்வாகி உள்ளார்கள்

இந்த சீசனின் நடுவர்களாக பாடகர்கள் உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயால், ஸ்வேதா  மோகன் ஆகியோர்  இந்த போட்டியாளர்களை ஊக்கப்படுத்தியும், உற்சாகப்படுத்தியும் வந்தனர்.

மேலும் இந்த சீசனின் மத்த டாப் போட்டியாளர்கள், சூப்பர்  சிங்கர் பிரபலங்கள், அற்புதமான நடுவர்கள் என பலர் இறுதிப் போட்டியில் இசை விருந்தளிக்க உள்ளார்கள்.

பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இறுதிப் போட்டியில்  இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொள்கிறார் .  மேலும் சூப்பர் சிங்கர் 7 ல் வெற்றி பெறும்  போட்டியாளர் இவரின் இசையமைப்பில் பாடும் வாய்ப்பைப் பெற உள்ளார். அதோடு அவருக்கு 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு வீடும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

Continue Reading

Television

கலைஞர் டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

Published

on

By

கலைஞர் டிவி - தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

கலைஞர் டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

அக்டோபர் 27, 2019, ஞாயிற்றுக்கிழமை

காலை 8 மணி

தில்லு முல்லு – நகைச்சுவையும் நையாண்டியும் நிறைந்த நிகழ்ச்சி

காலை 9 மணி

திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில், குடும்பத்தில் பிள்ளைகளின் விருப்பப்படி வாழ்வது ஆரோக்கியமா? ஆபத்தா? என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம்

காலை 10 மணி

பேரன்பு – திரைப்படம்

ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, சாதனா மற்றும் பலர் நடித்த படம்

மதியம் 1.30 மணி

சைக்கோ – பட சிறப்பு நிகழ்ச்சி

உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், இயக்குனர் மிஷ்கின், ராம் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்

மதியம் 2.30 மணி

நாளை இயக்குனர் சீசன் 6 – இறுதிச் சுற்று

மாலை 5.30 மணி

பசங்க – குழந்தைகள் மட்டுமே பங்கேற்கும் காமெடி நிகழ்ச்சி

Continue Reading

Television

தி வால் – விஜய் டிவியில் உலகின் நம்பர் 1 கேம் ஷோ

Published

on

By

தி வால் - விஜய் டிவியில் உலகின் நம்பர் 1 கேம் ஷோ

விஜய் டிவியில் வரும் அக்டோபர் 12ம் தேதி முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு தோறும் இரவு 9 மணிக்கு ‘தி வால்’ எனும் கேம் ஷோ ஒளிபரப்பாக உள்ளது.

உலகின் மிகச்சிறந்த கேம் ஷோவான ‘தி வால்’ என்பது நாற்பதடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட சுவர் போன்ற டிஜிட்டல் போர்டில் விளைவயாடும் அறிவு மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்த ஒரு விளையாட்டு நிகழ்ச்சியாகும்.

இதில் இரண்டு நபர்கள் ஜோடியாக விளையாட வேண்டும். இதன் பரிசுத்தொகை இதுவரை எவரும் அளித்திராத பிரம்மாண்ட தொகையாகும். இதில் அதிர்ஷடமும் அறிவும் கைகொடுத்தால் இரண்டரை கோடி ரூபாயை வெல்லலாம்.

ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள், நண்பர்கள் இந்த போட்டியில் ஜோடியாக கலந்து கொள்ள வேண்டும். நகைச்சுவையாகவும், கலகலப்பாகவும் தொகுத்து வழங்குபவர்கள் எனப் பெயர் பெற்ற மகாபா ஆனந்த், பிரியங்கா இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்கள்.

‘தி வால்’ ஒரு பிரம்மாண்ட டிஜிட்டல் போர்டு. அதன் மேல் மட்டத்தில் ஏழு ஸ்லாட்டுகள் இருக்கும். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வெள்ளை, பச்சை, சிவப்பு பந்துகளை ஆட்டத்திற்கு ஏற்றவாறு அதிலிருந்து செலுத்த வேண்டும். அந்த பந்துகள் இடையிடையே அமைக்கப்பட்டுள்ள இடறுகளைத் தாண்டி கீழே வந்து விழும். கீழ் வரிசையில் பல கூடைகள் அமைக்கப்பட்டிருக்கும். அதில் பல தரப்பட்ட பரிசு தொகைகள் ரூபாய் ஒன்றில் இருந்து இரண்டரை கோடி ரூபாய் வரை பண மதிப்புகள் அமைக்கப்பட்டிருக்கும்.

மேலிருந்து கீழ் வந்து விழும் பந்து எந்த கூடையில் விழுகிறதோ அதன்படி பரிசுத் தொகைகள் நிர்ணயிக்கப்படும். இந்தப் போட்டியில் மூன்று நிற பந்துகள் அளிக்கப்படும். வெள்ளை பந்துகள் மற்றும் பச்சை பந்துகள் பரிசுத் தொகையை அதிகரிக்கும். சிகப்புப் பந்துகள் வென்ற தொகையில் இருந்து பரிசுத்தொகையை கழித்துவிடும். போட்டியாளர்கள் சொல்லும் சரியான மற்றும் தவறான பதில்களின் அடிப்படையில் இந்த பந்துகளின் நிறங்கள் நிர்ணயிக்கப்படும்.

இவ்வாறாக போட்டி விறுவிறுப்பாக நடைபெறும். மேலும் முதல் 2 ரவுண்டில் மட்டுமே இரண்டு போட்டியாளர்கள் இணைத்து விளையாட முடியும். மூன்றாவது சுற்றில் இருந்து இருவரும் பிரிக்கப்படுவர். ஒருவர் வால் முன்பு நின்றும், மற்றொருவர் தனியறையில் இருந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் விளையாட்டைத் தொடரவேண்டும்.

கடைசி வரும் கட்டத்தில் ஒரு ஒப்பந்தக் கடிதம் தனியறையில் இருக்கும் போட்டியாளருக்குக் கொடுக்கப்படும். அவர் அதில் கையெழுத்து இடுகிறாரா அல்லது அதை கிழித்துப் போடுகிறாரா என்பதைப் பொறுத்து அவர்கள் சேர்த்த பரிசுத் தொகைகளை அவர்கள் எடுத்துச்செல்ல முடியும்.

மிகவும் விறுவிறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும் இந்த கேம் ஷோ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் ஒரு ஷோவாக இருக்குமாம்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: