Connect with us

Uncategorized

ரொம்ப அழகான படம் ‘கண்ணே கலைமானே’

படம் பார்த்து விஜய் சேதுபதி பாராட்டு

Published

on

kanne-kalaimane-news

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், தமன்னா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கண்ணே கலைமானே’.

படத்தைப் பார்த்துவிட்டு விஜய் சேதுபதி நெகிழ்ச்சியுடன் மனம் திறந்து கூறியதாவது,

“இயக்குனர் சீனு ராமசாமி சார் இயக்கத்துல, உதயநிதி ஸ்டாலின் சார் நடிச்ச கண்ணே கலைமானே படம் பார்த்தேன். இது ரொம்ப அன்பான, அழகான ஒரு திரைப்படம்.

நல்ல இன்பர்மேஷன் இருக்கு. அன்பைப் பத்தின அழகான பார்வை இந்த படம். உதய் சார் சூப்பரா நடிச்சுருக்காரு. நான் பர்ஸ்ட் டைம் அவர இப்படி பாக்குறேன். ரொம்ப நிதானமா, ரொம்ப அழகா நடிச்சுருக்கார்.

தமன்னாவா இருக்கட்டும், வடிவுக்கரசி அம்மா, ‘பூ’ ராமு சாரா இருக்கட்டும். எல்லாருமே ரொம்ப நல்லா நடிச்சுருக்காங்க. ரொம்ப நல்ல படம், அழகான வசனம். ரசிச்சு பார்க்க வேண்டிய ரொம்ப அழகான திரைப்படம் கண்ணே கலைமானே. மிஸ் பண்ணாம தியேட்டர்ல வந்து பாருங்க,” எனப் பாராட்டியுள்ளார்.

‘கண்ணே கலைமானே’ வரும் பிப்ரவரி 22ம் தேதி வெளியாகிறது.

Uncategorized

சைக்கோ – டீசர்

Published

on

By

மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ - டீசர் - 4 Tamil Cinema

டபுள் மீனிங் புரொடக்ஷன் தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதரி, ராம் மற்றும் பலர் நடிக்கும் படம் சைக்கோ.

Continue Reading

Uncategorized

நம்ம வீட்டுப் பிள்ளை – டிரைலர்

Published

on

By

நம்ம வீட்டுப் பிள்ளை - டிரைலர் - 4 Tamil Cinema

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், நட்ராஜ், சமுத்திரக்கனி, சூரி, பாரதிராஜா மற்றும் பலர் நடிக்கும் படம் நம்ம வீட்டுப் பிள்ளை.

Continue Reading

Uncategorized

அயோக்யா – விமர்சனம்

4 Tamil Cinema Rating – 3.5/5

Published

on

By

அயோக்யா - விமர்சனம் - 4 Tamil Cinema

வெங்கட் மோகன் இயக்கத்தில், சாம் சி.எஸ். இசையமைப்பில், விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ். ரவிக்குமார் மற்றும் பலர் நடிக்க வெளிவந்திருக்கும் படம் ‘அயோக்யா’.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமையைப் பற்றியும், அதற்கான உடனடித் தீர்வையும் சொல்லும் படம். தெலுங்கில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ‘டெம்பர்’ படத்தை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள். ஒரிஜனல் படத்தில் உள்ள கிளைமாக்சை மட்டும் மாற்றியிருக்கிறார்கள்.

அயோக்கியத்தனமாக செயல்படும் ஒரு இன்ஸ்பெக்டர் ஒரு பெண்ணுக்காக எப்படி மிக மிக யோக்கியத்தனமாக மாறுகிறார் என்பதுதான் படத்தின் ஒரு வரிக் கதை.

விஷால் ஒரு அனாதை. போலீசார்தான் அதிகாரத்தில் உள்ளவர்கள், அவர்கள் நினைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என சிறு வயதிலேயே அவர் மனதில் ஆழமாகப் பதிகிறது. பொய் சான்றிதழ் கொடுத்து இன்ஸ்பெக்டர் ஆகவும் ஆகிறார். சென்னையில் பல கடத்தல் வேலைகளைச் செய்யும் பார்த்திபன் அவருடைய தொழிலுக்கு தொந்தரவு செய்யாத இன்ஸ்பெக்டர் வேண்டும் என்பதற்காக அவருடைய ஏரியாவில் விஷாலை வேலைக்கு மாற்றிக் கொண்டு வருகிறார்.

பார்த்திபனுக்காக செய்யும் வேலைகளுக்கு பதிலுக்கு தன் பல தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார் விஷால். ஆனால், ஒரு பெண் கொலை வழக்கில் பார்த்திபனுக்கும், விஷாலுக்கும் பிரச்சினை வருகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஆக்ஷன் ஹீரோ கதாபாத்திரம் என்றால் கேட்கவே வேண்டாம். விஷால் வெளுத்து வாங்குகிறார். அயோக்கியத்தனம் செய்யும் ஒருவன் இப்படித்தான் இருப்பான் என யாரையும் மதிக்காமல் சுற்றி வருகீறார். அப்படிப்பட்டவரை காதலும், ஒரு பெண்ணின் கொலையும் மாற்றுகிறது. கிளைமாக்சை தன் இமேஜுக்காகவே விஷால் மாற்றியிருப்பார் போலிருக்கிறது. நெகிழ வைக்கும் கிளைமாக்ஸ்தான் என்றாலும் நம்பவே முடியாத ஒரு கிளைமாக்ஸ்.

‘நானும் ரௌடிதான்’ படத்திற்குப் பிறகு பார்த்திபனின் வில்லத்தனம் ரசிக்க வைக்கிறது. விஷாலை அசால்ட்டாக ஹேண்டில் செய்கிறார். இருவருக்குமிடையிலான வசன சண்டை ரசிக்க வைக்கிறது.

ராஷி கண்ணா விஷாலின் காதலியாக அழகுப் பதுமையாக வந்து போகிறார். கே.எஸ்.ரவிக்குமாரின் கதாபாத்திரமும் அதில் அவருடைய நடிப்பும் போலீஸ் மீதான மரியாதையை இன்னும் அதிகமாக்குகிறது.

சாமி சிஎஸ் பின்னணி இசையில் அசத்துகிறார். ஒளிப்பதிவும், சண்டைக் காட்சிகளும் படத்திற்கு பக்கபலம்.

பக்காவான கமர்ஷியல் படத்தை சில லாஜிக் மீறல்களுடன் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் மோகன்.

அயோக்யா – ஆக்ஷன் படம்யா…

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: