Connect with us

Tamil Cinema News

5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் வராது – யுகபாரதி

Published

on

5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் வராது - யுகபாரதி

விமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிக்க, எஸ்.முத்துக்குமரன் இயக்கத்தில் விமல், வரலட்சுமி, பாண்டியராஜன், யோகி பாபு, ரோபோ சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கன்னி ராசி’.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் எஸ்.செல்வகுமார், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பாடலாசிரியர் யுகபாரதி பேசும்போது,

‘கன்னிராசி படத்தை ஒரு தயாரிப்பாளர் தயாரித்த படம் என்பதை விட ஒரு பத்திரிகையாளர் தயாரித்த படம் என்றே சொல்லலாம். தயாரிப்பாளர் நிறைய பத்திரிகைகளில் வேலை செய்துள்ளார். இது போன்ற படங்களை இயக்குநர் முத்துக்குமரன் நிறைய தர வேண்டும். விருது வாங்கும் அளவிற்கு படங்கள் எல்லாம் தேவையில்லை. ஏன் என்றால் நாம் எப்படி எடுத்தாலும் விருது கிடைக்காது. 5 வருடம் இதுதான் நிலைமை. இப்படத்தில் இயக்குநர் ஒரு அற்புதமான கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதாவது காதலித்து தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்ற கருத்தைச் சொல்லிருக்கிறார்,” என்றார்.

ரோபோ சங்கர் பேசும்போது,

‘தயாரிப்பாளர் எங்களுக்கு மிகவும் பிடித்த இடத்தில் சூட்டிங் வைத்து வாரவாரம் பிரியாணி போட்டார். அவருக்கும் மிகவும் நன்றி. இயக்குநர் மிக கூலான மனிதர். காலையில் 11 மணிக்குத் தான் எங்களை சூட்டிங் கூப்பிடுவார். வரலட்சுமி இந்தப் படத்தில் ஒரு பொண்ணாக நடித்துள்ளார். அது எப்பவாவது தான் அமையும். என் மாப்பிள்ளை விமலுக்கு இந்தப்படம் பெரிய வெற்றிகரமாக அமையும்,” என்றார்.

இயக்குநர் முத்துக்குமரன் பேசும்போது,

‘இந்தப்படம் தான் எனக்கு முதல் படம். வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் சூப்பராக வொர்க் பண்ணி கொடுத்தார். அடுத்தப் படத்திலும் அவரோடு இணைவேன். மேலும் எடிட்டிர் ராஜா முகமது, ஒளிப்பதிவாளர் செல்வகுமார், பாடலாசிரியர் யுகபாரதி அண்ணனுக்கும் நன்றி. பெரிய போராட்டத்திற்குப் பிறகுதான் இந்தப்படம் வெளிவர இருக்கிறது. யோகிபாபு, ரோபோ சங்கர் அண்ணன் இருவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். வரலட்சுமி இந்தப் படத்திற்கு என்ன தேவையோ அதை நடித்துக் கொடுத்தார். எந்தச் சிரமம் இருந்தாலும் அனுசரித்து நடித்துக் கொடுத்தார். நாம் என்ன சொன்னாலும் அதைச் அப்படியே செய்யக்கூடியவர் விமல். அதுபோல் நான் இயக்குநராக ஆனதற்கு முக்கியக் காரணம் அவர்தான். விமல் இல்லையென்றால் இப்படம் உருவாகி இருக்காது,’ என்றார்.

வரலட்சுமி பேசும்போது,

‘பொதுவாகவே புது இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். ஸ்கிரிப்ட் படிக்கும் போதே விழுந்து விழுந்து சிரித்தேன். இந்த டீம் செம எனர்ஜியாக இருந்தது. படமும் அதே எனர்ஜியாக இருக்கும். இந்த படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நான் இவ்வளவு நடிகர்களுடன் சேர்ந்து நடித்தது இல்லை. பாண்டியராஜன் சார், யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து ஜாலியாக நடித்தேன். விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. இப்படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் ஒரு ஜாலியான படம்,’ என்றார்.

விமல் பேசும்போது,

‘இந்தப்படம் மிக அருமையாக வந்திருக்கு. யோகிபாபு, ரோபோ சங்கர், காளி வெங்கட் எல்லோர் கூடவும் எனக்கு காம்பினேஷன் சீன்ஸ் இருக்கு. அதனால படம் ரொம்ப ஜாலியாக இருக்கும். இயக்குநர் முத்துக்குமரன் எப்போதும் பத்து பெண்களோடு தான் இருப்பார். அதனால் அவர் அடுத்த வருடம் கண்டிப்பாக கல்யாணம் செய்துவிடுவார். மேலும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறேன். பல படங்களில் பல கதாநாயகிகளுடன் நடித்துள்ளேன். ஆனால், இந்த படத்தில் முதல் முறையாக ஒரு ஆம்பளயோட நடித்திருக்கிறேன் என்று வரலட்சுமியை பற்றி கலகலப்பாகக் கூறினார்

Tamil Cinema News

போஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’

Published

on

By

போஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’

பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்த போஸ் வெங்கட் ‘கன்னி மாடம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

அப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை சமீபத்தில் நடிகர் சூர்யா வெளியிட்டார்.

படம் பற்றி போஸ் வெங்கட் கூறுகையில்,

“நான் சென்னையில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கும் போது என் வாழ்க்கையில் நடந்த மற்றும் நான் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கினேன். இது பற்றி மேலும் துல்லியமாக சொல்லவேண்டும் என்றால் என் பக்கத்து வீட்டுக்காரரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம்தான் இந்த ‘கன்னி மாடம்’.

சாண்டில்யனின் ‘கன்னி மாடம்’ என்ற சரித்திர நாவல்தான் படத்தின் தலைப்புக்குத் தூண்டுதலாக அமைந்தது. மற்றொரு சூழலில் இந்த ‘கன்னி மாடம்’ என்பது ஒரு நினைவு இடமாக அனுசரிக்கப் படுகிறது.

மக்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கியவர்கள் மறைந்த பிறகு அவர்களை நினைவுகூறும் வகையில் விளக்குகளை ஏற்றி வைப்பர்.

ஸ்ரீராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை தயாரிக்கிறார். சென்னையில் உள்ள சூளைமேடு, மேட்டுக் குப்பம் மற்றும் விஜயராகவாபுரம் போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது

ஹரிஷ் சாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரோபோ ஷங்கர் மற்றும் அந்தோனி தாசன் இப்படத்தில் பாடல்கள் பாடியது இப்படத்தின் கூடுதல் சிறப்பு.

ஹரிஷ் J இனியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிஷல் ஜெய்னி எடிட்டிங், சிவ ஷங்கர் ஆர்ட், விவேகா பாடல், தினேஷ் சுப்புராயன் சண்டை என ஒவ்வொருவரும் அவர்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

மக்கள் அனைவரும் ரசிக்கும்படி இப்படம் இருக்கும்,” என்கிறார் இயக்குநர் போஸ் வெங்கட்.

Continue Reading

Tamil Cinema News

ஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை

Published

on

By

ஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ‘நேர்கொண்ட பார்வை’.

இப்படத்தை பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் உள்ள புகழ் பெற்ற ‘லீ கிரான்ட் ரெக்ஸ்’ தியேட்டரில் திரையிட்டார்கள்.

படத்தில் அஜித்தைப் பார்த்த ஆர்வக் கோளாறு ரசிகர்கள், தியேட்டர் ஸ்கிரீனை சேதப்படுத்தியுள்ளார்கள். அதைத் தொடர்ந்து அந்த தியேட்டர் நிர்வாகம் இனி தமிழ்ப் படங்களைத் திரையிட மாட்டோம் என அறிவித்துவிட்டதாம்.

இதை பிரான்ஸ் நாட்டில் உள்ள தமிழ்ப் படங்களின் வினியோக நிறுவனம் அவர்களது டுவிட்டரில் அறிவித்துள்ளது.

அந்த தியேட்டரில் இதற்கு முன்பு ‘கபாலி, மெர்சல், சர்கார், பேட்ட, விஸ்வாசம்’ உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை வெளியிட்ட வினியோகஸ்தரிடம் தியேட்டர் ஸ்கிரீனை மாற்றித் தரச் சொல்லி நிர்வாகம் கேட்டுள்ளதாம். 7000 யூரோ மதிப்பில், அதாவது 5 லட்சம் செலவில் அந்த ஸ்கிரீனை மாற்றித் தர அவர்களும் சம்மதம் சொல்லிவிட்டனராம்.

இனி, அந்த புகழ் பெற்ற தியேட்டரில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட மாட்டாது.

Continue Reading

Tamil Cinema News

சுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’

Published

on

By

சுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’

டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘ஆக்ஷன்’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு முழு நீள ஆக்ஷன் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறதாம்.

இப்படத்தில் விஷால் மிலிட்டரி கமாண்டோ ஆபீஸராக நடிக்கிறார். ஒரு உண்மையைக் கண்டு பிடிக்க பல நாடுகள் செல்கிறார். அங்கே ஆக்ஷ்ன், சேசிங் என விறுவிறுப்பான ஸ்டன்ட் காட்சிகளை அன்பறிவ் அமைத்துள்ளார்கள். சமீபத்தில் தேசிய விருது பெற்ற இவர்கள் இப்படத்தில் பல வித்தியாமான சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்களாம்.

இதில் பல காட்சிகளில் விஷால் டூப் போடலாமலேயே நடித்திருக்கிறாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கி, அசர்பைசான், கேப்படோசியா, பாகு, இஸ்தான்புல், தாய்லாந்து நாட்டில் உள்ள கிராபி தீவு, பேங்காக் உள்ளிட்ட இடங்களில் 50 நாள்கள் நடைபெற்றுள்ளன.

மேலும் இந்தியாவில் ஜெய்ப்பூர், ரிஷிகேஷ் ,டேராடூன், ஹைதராபாத், சென்னை, போன்ற இடங்களிலும் 50 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளதாம்.

விஷால் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக மலையாளத்தில் பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமி இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இவர்களுடன் யோகி பாபு, ராம்கி, சாயாசிங், ஷாரா, பழ .கருப்பைய்யா, பிரபல இந்தி நடிகர் கபீர் சிங் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: