Connect with us

Upcoming Movies

கேணி – விரைவில்…திரையில்…

Published

on

keni movie

ப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பாக சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேணி’.

தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் எம்.ஏ.நிஷாத். இவர் இதற்கு முன் மலையாளத்தில் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர்.

கேரளா – தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த தேசத்திற்கான முக்கிய பிரச்சனையாக இருக்கக் கூடிய தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் இது. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகைகள் ஜெயப்பிரதா, ரேவதி, அனுஹாசன், ரேகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் மற்றும் நாசர் நடிக்க, இவர்களுடன் ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு நௌஷாத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எம். ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். தாஸ் ராம் பாலா வசனம் எழுதியிருக்கிறார். ராஜாமுகமது எடிட்டிங் செய்துள்ளார். பாடல்களை பழனிபாரதி எழுதியுள்ளார். ‘விக்ரம் வேதா’ படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பின்னணி இசை அமைக்கிறார். ‘தளபதி’ படத்திற்குப் பிறகு 25 ஆண்டுகள் கழித்து பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ஜேசுதாஸ் இருவரும் இணைந்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் எம்.ஏ. நிஷாத் கூறுகையில்,

“கேணி’ எனது முதல் தமிழ்ப்படம். இதற்கு முன் கேரளாவில் நான் இயக்கிய ஏழு படங்களுமே சமூக சிந்தனை கொண்ட படங்கள் தான். அந்த வகையில் ‘கேணி’யும் முழுக்க முழுக்க இந்த சமூகத்திற்கான படமாகவே இருக்கும். எதிர்காலத்தில் மக்களுக்கு பிரதானமான பிரச்சனையாக மாறப் போகிற தண்ணீர் குறித்தான விழிப்புணர்வை நிச்சயமாக ‘கேணி’ ஏற்படுத்தும். காற்றைப் போல, வானம் போல தண்ணீர் எல்லா உயிரினங்களுக்குமே பொதுவானது. அதை உரிமை கொண்டாடவும், அணைகள் கட்டி ஆக்கிரமிக்கவும் யாருக்கும் உரிமையில்லை என்பதை இப்படத்தின் வாயிலாக ஆணித்தரமாகப் பேசியிருக்கிறோம். அதே சமயம் கமர்சியல் சினிமாவிற்கு உண்டான அத்தனை அம்சங்களும் இத்திரைப்படத்தில் நிச்சயமாக இருக்கும்,” என்கிறார்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்

ஒளிப்பதிவு – நௌஷாத் ஷெரிப்
இசை – எம். ஜெயச்சந்திரன்
பின்னணி இசை – சாம் சி.எஸ்
படத்தொகுப்பு – ராஜாமுகமது
வசனம் – தாஸ் ராம்பாலா
பாடல்கள் – பழனிபாரதி
நடனம் – தினேஷ்
மக்கள் தொடர்பு – குமரேசன்
தயாரிப்பு – சஜீவ் பீ.கே – ஆன் சஜீவ்
கதை, திரைக்கதை, இயக்கம் – எம்.ஏ.நிஷாத்

Upcoming Movies

மயூரன் – விரைவில்…திரையில்…

Published

on

By

மயூரன் - விரைவில்...திரையில்...

PFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் K.அசோக்குமார்P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘மயூரன்’.

இயக்குனர் பாலாவின் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் உதவியாளராகப் பணியாற்றிய நந்தன் சுப்பராயன் இப்படத்தை இயக்குகிறார்.

மயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள்.

வேலாராமமூர்த்தி, ஆனந்த்சாமி (லென்ஸ் ), அமுதவாணன்( தாரை தப்பட்டை ), அஸ்மிதா ( மிஸ் பெமினா வின்னர் ) மற்றும் கைலாஷ், சாஷி, பாலாஜிராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர். குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் பற்றி இயக்குனர் நந்தன் சுப்பராயன் கூறியதாவது,

“சாதாரண குடும்பத்தின் கனவுகளை சுமந்துகொண்டு விடுதியில் தங்கி பொறியியல் உயர்கல்வி படிக்க வரும் மாணவன், ஒரு நள்ளிரவில் காணாமல் போனால் என்னவாகும் என்பதே கதை.

மொத்த குடும்பத்தின் ஒற்றை ஆதாரமான அவனைத் தேடிச் செல்கையில் காணாமல் போனதின் மர்ம முடிச்சுகள் மேலும், மேலும் இறுகி, அது சிக்கல்களையும், பிரச்சனைகளையும் உருவாக்குகின்றது. கல்லூரி விடுதிகள் என்பது வெறும் தங்கிப் போகும் வாடகை சத்திரம் அல்ல, அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம். அவர்களது எதிர்காலத்தை நல்ல விதமாகவோ மோசமானதாகவோ மாற்றும் ரசவாதக் கூடம்.

நட்பு, அன்பு, நெகிழ்வு, குற்றப் பின்னணி, குரூர மனம், எனும் பல்வேறு மனித இழைகளால் நெய்யப்பட்ட உலகம்தான் கல்லூரி விடுதிகள்.

சாதாரண கூழாங்கற்கள், வைரக்கற்களாகவும், வைரக்கற்கள் கண்ணிமைக்கும் வினாடிகளில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடம். அங்கு ஏற்படும் பிரச்சனைகள் ஒரு தனி மனித வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்துப் போடுகிறது என்பதைப் பற்றி பேசும்
படம் தான் மயூரன். ஒரு அருமையான கதைக் களத்தை விறுவிறுப்பான திரைக்கதை தேன் தடவி உருவாக்கியிருக்கிறோம்.

படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது,’‘ என்கிறார் இயக்குனர் நந்தன் சுப்பராயன்.

ஒளிப்பதிவு – பரமேஷ்வர் ( இவர் சந்தோஷ்சிவனிடம் உதவியாளராக பணியாற்றியவர் )
இசை – ஜுபின் ( பழைய வண்ணாரப்பேட்டை ) மற்றும் ஜெரார்ட் இருவரும்.
பாடல்கள் – குகை மா.புகழேந்தி
எடிட்டிங் – அஸ்வின்
கலை – M.பிரகாஷ்
ஸ்டன்ட் – டான்அசோக்
நடனம் – ஜாய்மதி
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – K.அசோக்குமார், P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நந்தன் சுப்பராயன்

Continue Reading

Upcoming Movies

பூவே போகாதே – விரைவில்…திரையில்…

Published

on

By

பூவே போகாதே - விரைவில்...திரையில்...

கோல்ட் டைம் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சத்யபிரமீலா தயாரிக்கும் படம் ‘பூவே போகாதே’.

நவீன் நயனி இயக்கும் இப் படத்தில் தருண் தேஜ் கதாநாயகனாகவும், லாவண்யா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மற்றும் கிடார் ஷங்கர், அஜெய் கோஸ், சீனியர் சூர்யா, சத்யகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது..

“இது 1980களில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட காதல் திரைப்படம். முழுக்க முழுக்க நாயகன், நாயகியைச் சுற்றி நடக்கும் திரைக்கதை. கல்லூரியில் படிக்கும் நாயகன், நாயகி இருவருக்கும் காதல் மலர்கிறது. அதனால் அவர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் மற்றும் எதிர்ப்புகளை எப்படி கையாள்கிறார்கள். அந்த காலகட்டத்தில் காதலை இந்த சமூகம் எப்படிப் பார்த்தது என்பதை அழுத்தமாகப் பதிவிட்டுள்ளோம்.

தங்களின் காதலுக்கு வந்த எதிர்ப்புக்களை மீறி எப்படி காதல் ஜோடி சேர்ந்தார்கள் என்பதை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறோம்,” என்கிறார் இயக்குனர் நவீன் நயனி.

இசை – சபு வர்கீஸ்
ஒளிப்பதிவு – ஸ்ரீனிவாஸ் வின்னகொட்டா
பாடல்கள் – விவேகா, டாக்டர் லிங்கேஸ்வர்
எடிட்டிங் – ஜே.பி
நடனம் – நரேஷ் ஆனந்த்
ஸ்டன்ட் – ராம் சுங்கரா, நபா சுப்பு.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நயனி.

Continue Reading

Upcoming Movies

மோசடி – விரைவில்…திரையில்…

Published

on

By

மோசடி - விரைவில்...திரையில்...

JCS மூவீஸ் பட நிறுவனம் தயாரிப்பில் ஜெகதீசன் இயக்கும் படம் ‘மோசடி’.

இந்த படத்தில் விஜூ நாயகனாக நடிக்க, நாயகியாக பல்லவி டோரா நடித்துள்ளார். மற்றும் அஜெய்குமார், N.C.B.விஜயன், வெங்கடாச்சலம், நீலு சுகுமாரன், O.S.சரவணன், மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இது முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படமாம்.

படம் பற்றி இயக்குனர் ஜெகதீசன் கூறியதாவது,

“கடந்த 2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி இரவு 8 மணியளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து பெரும் புள்ளிகள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எப்படி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றினார்கள். அதனால் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள். இந்த அறிவிப்பைப் பயன்படுத்தி எப்படி குறுக்கு வழியில் மோசடி செய்தார்கள். இந்த அறிவிப்பு சரியா? தவறா? என்பதை கிரைம் மற்றும் திரில்லருடன் கமர்ஷியல் கலந்து உருவாக்கி உள்ளேன்,” என்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவு – R.மணிகண்டன்
இசை – ஷாஜகான்
பாடல்கள் – மணிஅமுதவன், K.ஜெகதீசன்
எடிட்டிங் – S.M.V.சுப்பு, கோபி ரா நாத்
நடனம் – விமல், பாலா
தயாரிப்பு – JCS மூவீஸ்
கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் – K.ஜெகதீசன்

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!