Connect with us

Movie Reviews

கேஜிஎப் – விமர்சனம்

Published

on

kgf-tamil-movie-review

கன்னடத்திலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகி வரும் படங்கள் மிக மிகக் குறைவு. எப்போதோ ஒரு முறைதான் அப்படி படங்கள் வரும். அவையும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றதில்லை. அதை இப்போது பொய்யாக்க வந்திருக்கும் படம்தான் ‘கேஜிஎப்’.

கன்னட சினிமாவில் இப்படிப்பட்ட ஒரு படத்தைக் கொடுக்க தயாரிப்பாளரும், இயக்குனரும், நடிகரும் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. ஒரு டப்பிங் படம் பார்க்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் இப்படத்தை ரசிக்க வைத்திருப்பதே படக்குழுவினருக்கு கிடைத்துள்ள பெரும் வெற்றி.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் இது. டிவி நடிகராக இருந்து சினிமாவில் அறிமுகமாகி இன்றை முன்னணி கன்னட நடிகர்களில் ஒருவராக இருபபவர் யாஷ்.

ஆங்கிலத்தில் கேஜிஎப் என அழைக்கப்படும் கோலார் தங்க வயல் பற்றிய ஒரு கதைதான் இந்தப் படம். அந்த தங்க வயலில் தமிழர்கள்தான் அதிகம் வேலை பார்த்தார்கள் என்பது ஒரு வரலாற்று உண்மை. அந்தத் தங்கச் சுரங்கம் 2002ம் ஆண்டு மூடப்பட்டது. அந்த தங்கச் சுரங்கத்தை மையமாக வைத்து கற்பனை கலந்து மிரட்டலான ஒரு படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நீல்.

அப்பா யார் என்று தெரியாத, அம்மாவை சிறு வயதில் இழந்த யாஷ், வேலை தேடி மும்பை செல்கிறார். அங்கு பல வேலைகளைச் செய்து யாராலும் அடக்க முடியாத ஒரு தாதாவாக வளர்ந்து நிற்கிறார். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டவர்கள் அவரிடம் கேஜிஎப்-ல் தங்கச் சுரங்கம் வைத்து நடத்தும் ஒருவரைக் கொலை செய்யும் வேலையை ஒப்படைக்கிறார்கள். அந்த வேலையை ஏற்றுக் கொண்டு, ஒரு கூலித் தொழிலாளியாக அடிமை வேலை செய்ய அந்த சுரங்கத்துக்குள் செல்கிறார் யாஷ். அங்கு சென்ற பின் அவர் அந்த சுரங்கத்தின் முதலாளியைக் கொன்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

மும்பைப் பின்னணியில் கதை நடக்கும் போது ஒரு அதிரடியான தாதா கதையாகத்தான் நடக்கிறது. அதன்பின் கதை கேஜிஎப் நகர்ந்ததும் விஷுவலாக படத்தைப் பார்க்கும் போது என்ன ஒரு பிரம்மாண்டம். அந்த சுரங்கம், அதில் வேலை செய்யும் அடிமைகள், கொடூரமான அடக்கு முறை மிரட்டலான வேறு ஒரு படத்தைக் கண்டு முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.

யாஷின் தோற்றமும் அவருடைய நடை, உடையும் அவரை மிகப் பெரும் தாதா என பார்த்த உடனேயே சொல்ல வைக்கின்றன. தமிழ் சினிமாவில் கூட இப்படி ஒரு தாதாவைக் காட்டியதில்லை என சொல்லும் அளவிற்கு அவருடைய கதாபாத்திரத்தை மிரட்டலாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நீல். தெலுங்குப் படங்களில் பாலகிருஷ்ணா  ஆக்ஷனில் மிரட்டுவதை விட அதிகம் மிரட்டுகிறார் யாஷ். படம் முழுவதையுமே இவர் ஆக்கிரமித்திருக்கிறார். அதனால், மற்றவர்களின் நடிப்பு கூட அதிகம் வெளித் தெரிய வாய்ப்பில்லை.

நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி. இவரைக் காதலிப்பதில் கூட முரட்டுத்தனத்தைத்தான் வெளிப்படுத்துகிறார் யாஷ். யாஷ் பற்றி முதலில் தெரியாமல் வெறுத்து ஒதுக்கும் ஸ்ரீநீதி, ஒரு கட்டத்தில் யாஷைப் புரிந்து கொண்டு காதலிக்க ஆரம்பிக்கிறார்.

வித்தியாசமான தோற்றங்களில் சில வில்லன்கள் வருகிறார்கள். அவர்கள் பெயர் என்ன என்று தெரியவில்லை, இருந்தாலும் ஒவ்வொருவரையும் பார்ப்பதற்கே கொஞ்சம் பயமாக இருக்கிறது. அவ்வளவு முரட்டுத்தனமாய் இருக்கிறார்கள்.

ரவி பர்சுர் பின்னணி இசை, ஒளிப்பதிவு, கலை அமைப்பு, படத் தொகுப்பு, ஆக்ஷன் என ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர்களும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அசோக்கின் வசனம் ஒவ்வொன்றும் டப்பிங் படம் என்பதையும் மீறி நேரடிப் படத்தைப் பார்க்கும் உணர்வைத் தருகின்றன.

படத்தில் உள்ள அளவுக்கதிகமான வன்முறைதான் படத்திற்கு மைனஸ், பிளஸ். ரத்தம் தெறிக்க தெறிக்க சண்டையிடுகிறார்கள். அடுத்தடுத்த பாகங்கள் எப்போது வரும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது இந்த முதல் பாகம்.

கேஜிஎப் – Kannada Gold Film

Continue Reading

Movie Reviews

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்

4 Tamil Cinema Rating – 3.5/5

Published

on

By

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்

கதை

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்படாமல் விட்ட குண்டுகள் சில இந்திய கடற்கரையில் கரை ஒதுங்குகின்றன. மாமல்லபுரத்தில் அப்படி கரை ஒதுங்கும் ஒரு குண்டு, சென்னைக்கு வந்து, அங்கிருந்து பாண்டிச்சேரிக்கு செல்கிறது. அந்த குண்டடை சென்னையிலிருந்து மற்ற இரும்பு சாமான்களுடன் ஏற்றிச் செல்லும் லாரி டிரைலர் தினேஷுக்கு அந்த குண்டு பற்றி தெரிய வருகிறது. அதை செயலிழக்க வைக்க அவர் முயற்சி செய்கிறார். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

நடிப்பு

தனக்கான கதையும், கதாபாத்திரங்களும் கிடைக்கும் போது தினேஷுக்குள் ஒளிந்திருக்கும் நடிகர் மிக யதார்த்தமாக எட்டிப் பார்க்கிறார். இந்தப் படத்தில் ஒரு நிஜமான இளம் லாரி டிரைவர் எப்படி இருப்பாரோ அப்படியே இருக்கிறார். வாயைத் திறந்தாலே பேசிக் கொண்டே இருக்கும் ஒரு குணம். பல காட்சிகள் அட, அசத்துகிறாரே என சொல்ல வைத்திருக்கிறார்.

நாயகி ஆனந்திக்கு தினேஷைக் காதலிப்பதும், குடும்பத்தினரிடம் திட்டு வாங்குவதும்தான் வேலை. இவருக்கும் தினேஷுக்குமான காதலில் இன்னும் கொஞ்சம் அழுத்தத்தைக் காட்டியிருக்கலாம்.

காயலான் கடை முதலாளியாக மாரிமுத்து, இவர் சொன்னதை அப்படியே செய்து காட்டும் முனிஷ்காந்த் மனதில் பதிகிறார்கள். மற்ற கதாபாத்திரங்களில் ரித்விகா அதிகம் கவர்கிறார். இன்ஸ்பெக்டர் லிஜேஷ் குறிப்பிட வைக்கிறார்.

இசை, மற்றவை

தென்மாவின் இசையில் கதையுடன் சேர்ந்து பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலத்தைக் கொடுத்திருக்கின்றன. கிஷோர் குமார் ஒளிப்பதிவு கதைக்கு என்ன தேவையோ அதனுடன் இயல்பாய் அமைந்துள்ளது. கலை இயக்குனர் ராமலிங்கம் தன் முழு உழைப்பை படத்தில் காட்டியிருக்கிறார்.

+

புதிய கதைக்களம், இயல்பான கதாபாத்திரங்கள், அதில் அனைவரின் சிறந்த நடிப்பு

இடைவேளைக்குப் பின் பயணத்திலேயே நகர்கிறது கதை. திரைக்கதை சிறப்பாக இருந்தாலும் இன்னும்  சில அழுத்தமான காட்சிகள் படத்தில் இருந்திருக்கலாம்.

Continue Reading

Movie Reviews

ஜடா – விமர்சனம்

4 Tamil Cinema Rating – 2.5/5

Published

on

By

ஜடா - விமர்சனம் - 4 Tamil Cinema

கதை

வட சென்னை பகுதியைச் சேர்ந்த கதிருக்கு கால்பந்து விளையாட்டு வீரராக வேண்டும் என ஆசை. அதே சமயம் தனக்கு கால்பந்து விளையாட சொல்லிக் கொடுத்து ‘செவன்ஸ்’ என்ற முரட்டுத்தமான கால்பந்து போட்டியில் மரணமடைந்த கிஷோருக்காக ‘செவன்ஸ்’ விளையாடி, அவரைக் கொன்றவர்களைப் பழி வாங்க நினைக்கிறார். அது நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நடிப்பு

‘பிகில்’ படத்திற்குப் பிறகு மீண்டும் கால்பந்து விளையாட்டு வீரராக கதிர். இந்தப் படத்தில் தனி நாயகனாக ஜொலிக்கிறார். கால்பந்து விளையாட்டில் தேர்ந்தவராக நடித்திருக்கிறார். கிளைமாக்சுக்கு முன்பாக ஆக்ஷனிலும் இறங்குகிறார். இரண்டாவது கதாநாயகன் போல படம் முழுவதும் வருகிறார் யோகி பாபு. ஆனால், அடிக்கடி காணாமல் போய்விடுகிறார். நாயகி ரோஷினி பிரகாஷுக்கு அதிக வேலையில்லை. வில்லனாக ஓவியர் எபி ஸ்ரீதர், தோற்றத்தில் மிரட்டுகிறார். கால்பந்து கோச்சாக கிஷோர், வழக்கம் போல மனதில் இடம் பிடிக்கிறார்.

இசை, மற்றவை

சாம் சிஎஸ் இசையில் ‘அப்படிப் பார்க்காதே’ பாடல் இனிமை. ஒளிப்பதிவாளர் கால்பந்து காட்சிகளிலும், இடைவேளைக்குப் பின் கிராமத்துக் காட்சிகளிலும் நன்றாக லைட்டிங் செய்திருக்கிறார்.

+

இடைவேளை வரையிலான படம்

இடைவேளைக்குப் பிறகான படம்

Continue Reading

Movie Reviews

தனுசு ராசி நேயர்களே – விமர்சனம்

4 Tamil Cinema Rating – 2.25/5

Published

on

By

தனுசு ராசி நேயர்களே விமர்சனம்

கதை

ஜோசியத்தின் மீது அதிக நம்பிக்கை உள்ளவர் ஹரிஷ் கல்யாண். ஏற்கெனவே ஒரு காதல் தோல்வியடைந்தவருக்கு டிகங்கனா சூர்யவன்ஷி மீது காதல் வருகிறது. ஆனால், டிகங்கனா மார்ஸ் கிரகத்திற்குச் செல்லும் ஆசையில் இருப்பவர். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

நடிப்பு

இந்தக் கதை மீதும், தன் கதாபாத்திரம் மீதும் எப்படி நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தார் என்று தெரியவில்லை. கொஞ்சம் நகைச்சுவை கலந்த கதாபாத்திரம். ஆனால், அவருக்கு அந்த நடிப்பே வரவில்லை. காதலில் மட்டும் கொஞ்சம் ஜொலிக்கிறார்.

நாயகி டிகங்கனா மிக அழகாக இருக்கிறார், சிரிக்கிறார், கொஞ்சம் நடிக்கிறார், கிளாமர் காட்டவும் தயங்காமல் இருக்கிறார். நல்ல படங்களைத் தேர்வு செய்தால் தமிழ் சினிமாவில் தனி இடத்தைப் பிடிக்கலாம். இந்தப் படத்தில் இவருக்குத்தான் ராசி வேலை செய்யும் போலிருக்கிறது.

யோகி பாபு, ஒரு நடிகராகவே வந்து படத்தைத் தொகுத்து வழங்குகிறார். இவருக்கும், படத்திற்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை. ரெபா மோனிக்கா ஜான், ரேணுகா, முனிஷ்காந்த் கொடுக்கப்பட்ட வேடத்தில் நடித்துக் கொடுத்துள்ளார்கள்.

இசை, மற்றவை

ஜிப்ரான் இசையில் பாடல்கள் ஒன்று கூட தேறவில்லை. மற்றவர்களின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.

+

நாயகி டிகங்கனா சூர்யவன்ஷி

மற்றவை எல்லாம்…

 

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: