Connect with us

Television

‘காஃபி வித் டிடி’யில் ஜோதிகா

Published

on

முன்னாள் முன்னணி ஹீரோயினான ஜோதிகா திருமணத்திற்குப் பிறகு நடிக்கும் முதல் திரைப்படமான ’36 வயதினிலே’ விரைவில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்திற்காக தனி கவனம் செலுத்தி வருகிறார் ஜோதிகா. அவர் உச்சத்தில் இருந்த போது அபூர்வமாகத்தான் டிவி பேட்டிகளைத் தருவார். நமக்குத் தெரிந்து ராஜ் டிவியில் ஒரே ஒரு முறை சூர்யா – ஜோதிகா இருவரும் இணைந்து தந்த பேட்டி ஒளிபரப்பாகியிருக்கிறது. அந்த பேட்டிகளில் எல்லாம் ஜோதிகா ஆங்கிலத்தில்தான் பேசியிருப்பார்.

அதன் பின் சன் டிவியில் ஒரு முறை ஜோதிகாவின் பேட்டி ஒளிபரப்பாகியிருக்கிறது. பேட்டிகள் எதுவும் இல்லாமலே அவர் அப்போது முன்னணியில் இருந்து வந்தார்.

இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தில் நடித்துள்ளதால் இப்போதைய டிரென்ட் படி ஜோதிகா பேட்டிகளைத் தர முன் வந்துள்ளார். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘காஃபி வித் டிடி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவருடைய சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

’36 வயதினிலே’ பட இசை வெளியீட்டின் போதே தமிழில் பேசி அசத்தியவர் இந்த நிகழ்ச்சியிலும் தமிழிலேயே பேசியுள்ளாராம். ஜோதிகாவின் தமிழ்ப் பேச்சை, அனைவரும் கேட்க ரசிகர்கள், குறிப்பாகப் பெண்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிறு 26ம் தேதியன்று இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

Television

விஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’

Published

on

By

விஜய் டிவியில் புதிய தொடர் ஆயுத எழுத்து - 4 Tamil Cinema

விஜய் டிவியில் வரும் ஜூலை 15 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’.

ஒரு கிராமத்தில் கம்பீரமாக வாழும் பெண் காளியம்மாள், அவருக்கு படிப்பறிவின் மேல் மிகுந்த நம்பிக்கை இல்லை. அந்த கிராமத்திற்கு தான் செய்வதுதான் நல்லது என்று எண்ணுபவர். அரசு அதிகாரிகளின் மீது நம்பிக்கை இல்லாதவர். வெளி ஆட்கள் மீதும் பெரிதாக அபிப்பிராயம் இல்லாதவர். அவருக்கு மாறாக இந்திரா என்னும் படித்த தைரியமான பெண் சப் கலெக்டராக அந்த கிராமத்தினுள் வருகிறார். அந்த கிராமம், காளியம்மாள் சொல்வதைக் கேட்டு செயல்படுவது இந்திராவுக்கு பிடிக்கவில்லை. படிப்பின் பயனை சொல்ல விரும்புகிறார். அதற்காக இந்திரா செய்யும் செயல்கள் காளியம்மாவிற்கு பிடிக்காமல் போய்விடுகிறது.

இந்திராவிற்கும் காளியம்மாவிற்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை உருவாகிறது. இதனிடையே, காளியம்மாவின் மகன் சக்திவேலுக்கும் இந்திராவுக்கும் காதல் மலர்கிறது. ஆனால், அவர் காளியம்மாவின் மகன் என்பது இந்திராவிற்குத் தெரியாது. படித்த கலக்டர் பெண்ணான இந்திராவை தன் மருமகளாக ஏற்பாரா காளியம்மாள். இந்திராவிற்கு உண்மை தெரியும் போது என்ன நடக்கும் ?, இதுதான் ‘ஆயுத எழுத்து’.

பிரம்மா இயக்கும் இத் தொடரில் ஸ்ரீது கிருஷ்ணன் இந்திராவாக நடிக்கிறார். இவர் கல்யாணமாம் கல்யாணம் மற்றும் ஜோடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலம் ஆனவர்.

மௌனிகா, காளியம்மாவாக நடிக்கிறார். அம்ஜத் கான், ஷக்திவேலாக நடிக்கிறார்.

Continue Reading

Tamil Cinema News

பிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்

Published

on

By

பிக் பாஸ் 3 - போட்டியாளர்கள் முழு விவரம்

விஜய் டிவியில் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ள, கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு வீட்டுக்குள் ஒவ்வொருவராக நுழைந்தவர்கள் விவரம்…

பாத்திமா பாபு – செய்தி வாசிப்பாளர்
லாஸ்லியா – இலங்கை டிவி செய்தி வாசிப்பாளர்
சாக்ஷி அகர்வால் – நடிகை
மதுமிதா – நடிகை
கவின் – நடிகர்
அபிராமி – மாடல் மற்றும் நடிகை
சரவணன் – நடிகர்
வனிதா விஜயகுமார் – நடிகை
சேரன் – இயக்குனர், நடிகர்
ஷெரின் – நடிகை
மோகன் வைத்யா – கர்நாடக இசைப் பாடகர்
தர்ஷன் – இலங்கை மாடல்
சாண்டி – நடன இயக்குனர்
முகின் – மலேசியா பாடகர்
ரேஷ்மா – நடிகை

கடந்த 2 சீசன்களில் முதல் சீசனில் 16 போட்டியாளர்களும், இரண்டாவது சீசனில் 15 போட்டியாளர்களும் நுழைந்திருக்கிறார்கள். இந்த 3வது சீசனில் 15 போட்டியாளர்கள் நுழைந்திருக்கிறார்கள்.

கடந்த 2 சீசன்களில் வெளிநாட்டைச் சேர்ந்த போட்டியாளர்கள் இல்லை. ஆனால், இந்த சீசனில் இலங்கையிலிருந்து இருவரும், மலேசியாவிலிருந்து ஒருவரும் கலந்து கொள்கிறார்கள்.

இந்நிகழ்ச்சி இன்று திங்கள் முதல் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

Continue Reading

Television

விஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி

Published

on

By

விஜய் டிவியில் ஸ்டார்ட் மியூசிக் புதிய நிகழ்ச்சி

விஜய் டிவியில் அடிக்கடி பல புதுமையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவது வழக்கம். அந்த வரிசையில் தற்போது ‘ஸ்டார்ட் மியூசிக்’ என்ற புதிய நிகழ்ச்சியை ஞாயிறு மதியம் 1 மணிக்கு ஆரம்பித்துள்ளார்கள்.

கடந்த வாரம் மே 26ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது.

இசையை மையமாக கொண்டு கேளிக்கையும் கலந்து நடக்கப்படும் கேம் ஷோ தான் இந்த ‘ஸ்டார்ட் மியூசிக்’ நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை பிரியங்கா தேஷ்பான்டே தொகுத்து வழங்குகிறார்.

ஒவ்வொரு வாரமும் இரண்டு நட்சத்திர அணிகள், நான்கு கலகலப்பான சுற்றுகள். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வெற்றி பெறும் அணியிலிருந்து ஒருவல் ‘லக்கி ரூமிற்கு’ செல்வார். உள்ளே சென்ற போட்டியாளர் வெளியில் வைக்கப்பட்டுள்ள நான்கு ‘போடியத்தில்’ ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு போடியத்திலும் ஒரு குறிப்பிட்ட பரிசுத் தொகை இருக்கும். அது என்ன என்பது ரூமிற்குள் சென்றவருக்குத் தெரியாது.

பிற போட்டியாளர்கள் அவரை பெரிய டிவி மூலம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு சுற்றிற்கும் பரிசுத் தொகை அதிகரித்துக்கொண்டே போகும். நான்கு சுற்றின் முடிவில் எந்த அணி அதிக பரிசுத் தொகையுடன் உள்ளார்களோ அவர்களே அந்த வாரத்தின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இந்த நிகழ்ச்சியில் ருபாய் ஒரு லட்சம் வரை வெற்றி பெறலாம்.

கடந்த வாரம் ஒளிபரப்பான முதல் நிகழ்ச்சியில் மகேஷ், பாலாஜி, கிரேஸ், சேது ஒரு அணியாகவும், ரேமா, சதிஷ், யோகி, ரக்ஷன் மற்றொரு அணியிலும் போட்டியிட்டார்கள். இதில் மகேஷ் அணி தோல்வியைத் தழுவியது.

இனி, ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மதியம் 1 மணிக்கு இந்த கலகலகப்பான நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!