Connect with us

Tamil Cinema News

கிருஷ்ணசாமி மீது வழக்கு, கே.ஈ.ஞானவேல்ராஜா அறிவிப்பு…

Published

on

தற்போதைய சூழ்நிலையில் ஒரு திரைப்படம் எந்த தங்கு தடையுமின்றி வெளிவருவது என்பது மிகப் பெரிய சாதனையாகிவிட்டது. படத்தை ஆரம்பிக்கும் போது எதையும் கண்டு கொள்ளாத சிலர், அந்தப் படத்தின் வெளியீட்டிற்கு சில நாள் முன்பாக எதிர்ப்பு, அறிக்கை, வழக்கு என படத்தை வெளிவராமல் தடுக்க பல வழிமுறைகளைக் கையாள்கிறார்கள்.

அந்த விதத்தில் சமீபத்தில் ‘கொம்பன்’ படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி படத்திற்கு எதிராக சென்சார் போர்டிடம் புகார் மனு கொடுத்தது, கண்டன அறிக்கை, வழக்கு என்ற பல ரூபங்களில் படத்தைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் இறங்கினார்.

கடைசியில் தமிழ்த் திரைப்படக் கூட்டமைப்பு சார்பாக தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், ஃபெப்சி, தியேட்டர்காரர்கள் ஆகியோருடன் இணைந்து படத்திற்கு எதிரான விஷயங்களை சமாளிப்போம், இனி இம்மாதிரியான விஷயங்கள் நடைபெறாமல் இருக்க, சட்டரீதியான அணுகுமுறையைத் தொடங்குவோம் என்று அறிவித்தார்கள்.

அதன் பின் நீதிமன்றத் தீர்ப்பின்படி ‘கொம்பன்’ திரைப்படம் வெளிவந்து தற்போது மாபெரும் வெற்றி பெற்று நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்று அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக படத்தின் வெற்றிச் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா படத்தை முடக்குவதற்காக கிருஷ்ணசாமி செயல்பட்ட விதத்தில் நிறைய பண இழப்பு ஏற்பட்டதாகவும் அதை ஈடுகட்டும் விதத்தில் அவர் மீது வழக்கு தொடரப் போவதாகம் அறிவித்தார்.

“படத்திற்கான வழக்குச் செலவுகள் அனைத்தையும் நாங்களே ஏற்க வேண்டியதாக இருந்தது. ஒரு பொய்யான தகவலைப் பரப்பி படத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அவர்கள் இறங்கியதன் விளைவாக சுமார் 100 திரையரங்குகளுக்கும் மேல் படத்தை வெளியிட முடியாமல் போனது. வெளிநாடுகளில் திரையிடுவதற்காக போட்ட ஒப்பந்தத்தின்படி படத்தைத் தர முடியாததால் அதிலும் குறிப்பிட்ட தொகையை நாங்கள் இழப்பீட்டுத் தொகையை தர வேண்டியதாயிற்று.

இப்போது ‘கொம்பன்’ படத்தின் மீது எந்தக் காரணத்திற்காக வழக்கு போட்டார்களா, அந்த ஊர்களில் எல்லாம் படம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. என அவர்கள் சொன்னது போல எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. எனவே எங்கள் மீது போட்ட வழக்கால் எங்களுக்கு இழப்பும், தேவையற்ற மன உளைச்சலும் ஏற்பட்டது. அதற்காக கிருஷ்ணசாமி மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளோம். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் ஒரு பிரதியாக இணைய உள்ளார்கள். எல்லோரும் என்னை புலி வாலை பிடித்து விட்டதாகச் சொல்கிறார்கள். கொம்பன் படத்தை விட்டு விட்டார்கள், இப்போது என்னை பிடித்துக் கொண்டுள்ளார்கள்,” என்று ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா பேசினார்.

Continue Reading

Tamil Cinema News

சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்

Published

on

By

சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்

புதிய கல்விக் கொள்கை குறித்த பல கருத்துக்களை நடிகர் சூர்யா சில தினங்களுக்கு முன்பு பேசியிருந்தார். நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வு ஆகியவற்றிற்கு சூர்யா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவருடைய கருத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

சூர்யாவின் கருத்துக்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு கிடைத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் அவரைப் பாராட்டி வருகிறார்கள். அன்புமணி ராமதாஸ், சீமான் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகர் கமல்ஹாசன் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

“ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்துவருகிறார்கள்.

எனவே கல்வி குறித்துப் பேசுவதற்கான உரிமை சூர்யாவுக்கு உண்டு.

புதிய கல்விக் கொள்கை குறித்த தம்பி சூர்யாவின் கருத்துகள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு.

மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்ற ‘வரைவு அறிக்கை’ மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப் போக்கினை மக்கள் நீதி மையம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

Tamil Cinema News

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்

Published

on

By

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - துல்கர் சல்மானின் 25வது படம்

வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஆண்டோ ஜோசஃப் ஃபிலிம் கம்பெனி தயாரிக்கும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’.

தேசிங் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி அகத்தியன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

படம் பற்றி வியாகாம் 18 ஸ்டுடியோஸின் தலைமை செயல் அதிகாரி அஜித் அந்தரே கூறும்போது,

“ஒரு திரைப்பட தயாரிப்பாளராக, மொழிகளைத் தாண்டி பார்வையாளர்களை ஈர்க்கக் கூடிய கதைகளைச் சொல்வதை விட திருப்தி எதுவும் இல்லை. தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு கொடுக்கப்படும் கதைகளைக் கண்டு நான் எப்போதுமே ஈர்க்கப்பட்டிருக்கிறேன். ஆண்டோ ஜோசஃப்புடன் இணைந்து நாங்கள் தயாரிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர், ஆண்டோ ஜோசஃப் கூறுகையில்,

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்‘ போன்ற ஒரு படத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் பெருமைப்படுகிறேன். இது வியாகாம் 18 ஸ்டுடியோஸ் உடன் எனது முதல் திரைப்படம், மற்றும் மூன்றாவது முறையாக நான் துல்கர் சல்மானுடன் பணிபுரியும் படம். இந்த படத்திற்கு இதை விட ஒரு சிறந்த கூட்டணி கிடையாது,” என்றார்.

இயக்குனர் தேசிங் பெரியசாமி கூறும்போது,

“எனது முதல் படம் இந்தியாவின் முன்னணி ஸ்டுடியோக்களில் ஒன்றான வியாயாகாம் 18 ஸ்டுடியோஸால் வெளியிடப்படுவது என் கனவு நனவான தருணம். இந்த திரைப்படத்தை தயாரித்த ஆண்டோ ஜோசஃப் பிலிம் நிறுவனத்துக்கும், அதை மேலும் உயர்த்திய வியாகாம் 18 ஸ்டுடியோவுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மிகவும் ரசிக்கப்படக் கூடிய ஒரு ஜாலியான இந்தப் படம் பார்வையாளர்களை மகிழ்விக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்,” என்றார்.

துல்கர் சல்மான் கூறுகையில்,

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ஒரு சுவாரஸ்யமான கதை. இதுபோன்ற அருமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் ஒரு பகுதியாக இருந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது எனது 25 வது படம் என்பது என்னை மேலும் சிறப்பாக உணர வைக்கிறது. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்துக்காக வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஆண்டோ ஜோசஃப் ஆகியோருடன் இணைந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்படம் சொல்லும் காதலை பார்வையாளர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.

Continue Reading

Tamil Cinema News

ஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’

Published

on

By

ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் - 4 Tamil Cinema

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெயின்மென்ட் அடுத்து தயாரிக்க உள்ள படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ‘பொன்மகள் வந்தாள்’ எனப் பெயர் வைத்துள்ளார்கள். இயக்குனர்கள் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள். இயக்குனர், நடிகர் பிரதாப் போத்தனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அறிமுக இயக்குனர் ஜேஜே. பிரட்ரிக் இப்படத்தை இயக்குகிறார். ‘96’ படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். பல தரமான படங்களை ஒளிப்பதிவு செய்த ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார், 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனரும் தயாரிப்பாளருமான சூர்யா, நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் ஹரி, பிரம்மா, முத்தையா, T.J.ஞானவேல், 2 D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, எஸ்.ஆர் பிரகாஷ் பாபு விநியோகஸ்தர் B.சக்திவேலன் ஆகியோரும், மற்றும் படத்தின் நட்சத்திரங்கள் ஜோதிகா, பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் படத்தின் இயக்குநர் பிரட்ரிக் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!