Connect with us

Tamil Cinema News

குழந்தைகள் ‘எலி மாமா’ என்றார்கள் – எஸ்ஜே சூர்யா மகிழ்ச்சி

Published

on

குழந்தைகள் ‘எலி மாமா’ என்றார்கள் - எஸ்ஜே சூர்யா மகிழ்ச்சி

பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன் மற்றும் பலர் நடித்த படம் மான்ஸ்டர்.

மே 17ல் வெளிவந்த இந்தப் படம் சிறியவர் முதல் பெரியவர் வரை கவர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. அதற்கு படக்குழுவினர் நன்றி தெரிவிக்க இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும் போது,

“படத்தின் முதல் வரியை எழுதும்போது இந்தளவு வெற்றி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. குழந்தைகள் படமாக இருக்கும் என்றும் நினைக்கவில்லை. நம் வீட்டைச் சுற்றி இருக்கும் எலியை பிரம்மாண்டமாக காட்ட வேண்டும் என்று தான் எடுத்தேன்.

பத்திரிகையாளர்கள் எழுதிய விமர்சனத்தில் எஸ்.ஜே.சூர்யாவைத் தவிர யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று இருந்தது. படம் வெளியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன் சிறிது பதட்டம் இருந்தது. கோடை விடுமுறையில் வெளியாகிறது. அனைவரிடமும் பணம் இருக்குமா என்ற அளவுக்கு யோசிப்பேன். பத்திரிகையாளர்கள் காட்சியை பார்த்த பிறகு தான் எனக்கு நம்பிக்கை வந்தது.

இந்தக் குழுவில் இருக்கும் அனைவருக்கும் நன்றி. எல்லோரும் தங்களுக்கு கொடுத்த பணிகளைதாண்டி பணியாற்றினார்கள். இதேபோல் தரமான படங்களை இயக்குவேன்,” என்றார்.

வசனகர்த்தா சங்கர் பேசுகையில்,

மே மாதம் வெற்றி மாதமாக இருக்கிறது. அரசியலில் எல்லோரும் நான் வெற்றி பெற்றேன் என்று கூறுகிறார்கள். நாங்களும் இப்படம் மூலம் வெற்றி அடைந்திருக்கிறோம். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நோக்கம் குடும்பத்தோடு வந்து பார்க்க வேண்டும் என்று இருக்கிறது. ஏவிஎம்-ற்கு பிறகு இவர்களுக்குத்தான் அந்த நோக்கம் இருக்கிறது என நினைக்கிறேன். வேறு நிறுவனமும் இருக்கலாம், ஆனாலும் இவர்களை நான் நேரிடையாகப் பார்க்கிறேன். பெரிய பத்திரிகைகளில் எனது பெயர் வந்ததில் மகிழ்ச்சி.

கதை என்பது ஆத்மா. தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் பிரம்மாக்கள் தான். ஒரு திரைப்படத்திற்கு மிகவும் முக்கியமானது வசனம் என்று நினைக்கிறேன். நல்ல இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு திரைப்படம்தான் சரியான தேர்வு.

நல்ல வசனங்களையும், இலக்கியங்களையும் திரைப்படத்தில் கொண்டு வரவேண்டும். அதற்கு நெல்சன் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.

எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்திற்கு இந்தளவு பொருத்தமாக இருப்பார் என்ற நினைக்கவில்லை. ‘ஒரு நாள் கூத்து‘ குழுவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றியிருப்பதில் மகிழ்ச்சி,” என்றார்.

கருணாகரன் பேசும் போது,

ஒரு எளிமையான படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக்கிய பத்திரிகையாளர்களுக்கு நன்றி. இதுபோல தரமான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் நெல்சனுக்கு நன்றி. எஸ்.ஜே.சூர்யா, அவருடன் நடிப்பவர்களை கதாபாத்திரத்திற்கேற்றவாறு இயல்பாக வைத்துக் கொள்வார். பிரியாவும் நன்றாக பழகுவார்,” என்றார்.

எஸ்.ஜே.சூர்யா பேசுகையில்,

முதல் வாரம் வெற்றி, இரண்டாவது வாரம் இரட்டிப்பு வெற்றியானதில் மகிழ்ச்சி. நாயகனைத் தேர்ந்தெடுத்து படம் பார்க்கும் காலத்தில், கதைக்காக பார்க்க வருகிறார்கள் மக்கள். இப்படத்தில் கதைதான் நாயகன்.

அனைத்து திரையரங்கிலும் சென்று பார்த்தோம். தாத்தா, பாட்டி, குழந்தைகள் என்று குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். என்னைப் பார்த்து எலி மாமா என்று ஒரு குழந்தை கூறினான். அந்தச் சிறுவனை புகைப்படம் எடுத்து எனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன்.

இம்மாதிரி குழந்தைகளைப் பார்க்கும்போது இன்னும் 10 வருடங்கள் இதேபோல் தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன்.

பாகுபலிக்கு பிறகு இப்படத்திற்கு தான் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எந்த உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற வள்ளலாரின் வரிகள் குழந்தைகள் மனதில் ஆழமாக பதியச் செய்ததே இயக்குநரின் வெற்றி. குழந்தைகள் மனதில் அன்பை விதைத்திருக்கிறார் இயக்குநர்.

இப்படம் மூலம் என்னை உயரத்திற்கு கொண்டு வந்ததற்கு நெல்சனுக்கும், பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸுக்கும் நன்றி. இசையும் நன்றாக உதவி புரிந்திருக்கிறது. இதே குழுவுடன் மீண்டும் ஒரு படம் நடிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது,

ஒரு படத்தை உருவாக்குவதற்கு கதை மட்டுமே என்பதைத்தாண்டி, எந்த பிரச்னை வந்தாலும், தடையில்லாமல் வெளியாகும் வரை போராட்டம்தான். இதை இயக்குநர் நெல்சன் நன்றாக செய்திருக்கிறார். ஒரு நல்ல படம் திரையரங்கிற்கு செல்வதில் சிரமம் இருக்கும். ஆனால், முதல் கட்டமாக உதவி புரிந்தது பத்திரிகையாளர்கள்தான். முதல் நாளிலிருந்தே இப்படத்திற்கு ஆதரவளித்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி. சிறிய படங்களுக்குத் திரையங்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

ஆனால், இப்படத்திற்கு திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதேபோல் தரமான படங்களை கொடுக்க வேண்டும். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி,” என்றார்.

Tamil Cinema News

திட்டம் போட்டு திருடுற கூட்டம் – என்ன புதுமை ?

Published

on

By

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - என்ன புதுமை ?

டு மூவி பஃப் நிறுவனம் தயாரிப்பில் சுதர் இயக்கத்தில் பார்த்திபன், கயல் சந்திரன் மற்றும் பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’.

இப்படத்தை SDC பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 27ம் தேதியன்று வெளியிடுகிறது.

படம் பற்றி இயக்குனர் சுதர் கூறுகையில்,

“கிரிக்கெட் உலகக் கோப்பையை திருடுவதே ஒரு தனித்துவமான யோசனை தான். அதையும் தாண்டி திட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் நான் என்ன தனித்துவம் பார்க்கிறேன் என்றால், இதில் எல்லா காட்சிகளும் இதுவரை யாரும் பார்க்காத காட்சிகளாக இருக்கும்.

பொதுவாக மற்ற படங்களில் சென்டிமென்ட் காட்சியோ, காதல் காட்சியோதான் பொதுவாக இருக்கும், நடிகர்கள் மட்டும் தான் ஒவ்வொரு படத்திற்கும் மாறிக் கொண்டிருப்பாரகள். ஆனால் இந்தப் படத்தில் காட்சிக்கு காட்சி புதுமை இருக்கும். ஒவ்வொரு காட்சியும் வேறு எந்த படத்திலும் எந்த வடிவிலுமே பார்த்திருக்காத வகையில் இருக்கும்.

கலை இயக்கத்தை பற்றி சொல்லியாக வேண்டும், எங்கள் கலை இயக்குனர் மிகச் சிறப்பாக தன் பங்கை அளித்துள்ளார். மியூசியம் செட் ஒன்று படத்தில் உள்ளது. அது செட் என்றே தெரியாத வகையில் அத்தனை வெண்கல சிற்பங்களை கொண்டு துல்லியமாக வடிவமைத்து உள்ளார்.

எங்கள் ஒளிப்பதிவாளர் அவரின் ஒளிப்பதிவின் மூலம் படத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றுள்ளார். படம் அவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும்,” என்கிறார்.

Continue Reading

Tamil Cinema News

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்

Published

on

By

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன்பென்ச் பிலிம்ஸ், ‘மேயாத மான், மெர்க்குரி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஒரே சமயத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்களைத் தயாரிக்கிறது.

இரண்டு படங்களுமே நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள். ஒரு படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார்.

அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை ரதீந்திரன் ஆர் பிரசாத் இயக்குகிறார்.

பிரித்வி சந்திரசேகர் இசையமைக்க. இத்தாலிய ஒளிப்பதிவாளர் ரொபர்டோ ஸஸ்ஸாரா ஒளிப்பதிவு செய்கிறார்.

ஒரு த்ரில்லர் படமாக உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் ஆரம்பமாகியுள்ளது.

தொடர்ந்து நடைபெற்று அடுத்து ஆண்டு துவக்கத்தில் படத்தை வெளியிட உள்ளார்கள்.

Continue Reading

Tamil Cinema News

பாதுகாப்பு அதிகாரியின் பரபரப்பு ‘காப்பான்’

Published

on

By

பாதுகாப்பு அதிகாரியின் பரபரப்பு காப்பான் - 4 Tamil Cinema

‘அயன், மாற்றான்’ ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குனர் கே.வி.ஆனந்த், சூர்யா இணைந்துள்ள மூன்றாவது படம் ‘காப்பான்’.

ஒரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படம் இந்த வாரம் செப்டம்பர் 20ம் தேதி வெளியாகிறது.

படத்தின் சிறப்புகள் பற்றி இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறியதாவது,

1987, 88 கால கட்டங்களில் நாவல் ஆசிரியர்களான சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோர் எழுதிய நாவல்களுக்கு அட்டைப்பட புகைப்படங்கள் எடுத்து கொடுத்திருக்கிறேன்.

இயக்குனர் ஆன பிறகு சுபா அவர்களுடன் இணைந்து பல படங்கள் பணியாற்றினேன். பட்டுக்கோட்டை பிரபாகருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நினைத்த போது இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், அவர்களின் சாகசம் ஆகியவற்றைப் பற்றிய கரு ஒன்று கிடைத்தது.

‘அயன், மாற்றான்’ படங்களில் என்னுடன் இணைந்த சூர்யாவிடம் ‘காப்பான்’ கதையைச் சொன்னேன். அவருக்கும் பிடிக்கவே இப்படம் ஆரம்பமானது.

பிரமதராக மோகன்லால், அவருடைய பாதுகாப்பு சிறப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். அவர் பிரதமரைக் காப்பாற்றுகிறாரா, வேறு சதி செய்கிறாரா, கொலை செய்ய நினைக்கிறாரா, தனது உயிரை விடவும் தயாராக இருக்கிறாரா என பல கோணங்களில் இந்தக் கதை நகர்கிறது.

இப்படத்திற்காக டில்லியில் உள்ள தேசிய பாதுகாப்புப்படை பிரிவில் துப்பாக்கி சுடுதல், உடற்பயிற்சி உள்ளிட்ட சில பயிற்சிகளை சூர்யா மேற்கொண்டார்.

போலீஸ், மிலிட்டரி வேலைகளும், தேசிய பாதுகாப்புப் படை பணியும் வெவ்வேறானாவை. இவர்கள் யாருடைய அதிகாரத்திற்கும் கட்டுப்படத் தேவையில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கலாம்.

போலீஸ், மிலிட்டரி, எல்லை பாதுகாப்புப் படை ஆகியவற்றில் பணியாற்றும் திறமையான, விசுவாசமான வீரர்களை பல கட்ட தேர்வுக்குப் பின் இந்த பாதுகாப்புப் பிரிவுக்குத் தேர்வு செய்வார்கள்.

த்ரில்லர் பாணியில் இந்தப் படத்தின் கதை இருக்கும். இப்போதெல்லாம் படம் பார்க்க வருபவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். திரைக்கதை வேகமாகப் போக வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்கேற்பட இந்தப் படத்தில் காட்சிகளை வைத்திருக்கிறேன்.

மோகன்லால் வித்தியாசமான ஒரு நடிகர். சினிமா மீது அவ்வளவு காதல் இருப்பதால்தான் இன்றும் நடித்துக் கொண்டிருக்கிறார். ரொம்பவும் இயல்பாக நடிப்பார். மிகவும் டெடிகேஷனாக நடிப்பார்.

இப்படத்தில் சமுத்திரக்கனி சூர்யாவுன் பணிபுரியும் சக அதிகாரியாக நடிக்கிறார். ஆர்யாவும் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ரசிகர்களுக்கும் எனக்கும் செட்டாகவில்லை என்று தெரிந்தால் சினிமாவை விட்டு வேறு வேலைக்குப் போய்விட வேண்டும் என்பது என் பாலிசி,” என்கிறார்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: