Connect with us

Upcoming Movies

மோசடி – விரைவில்…திரையில்…

Published

on

மோசடி - விரைவில்...திரையில்...

JCS மூவீஸ் பட நிறுவனம் தயாரிப்பில் ஜெகதீசன் இயக்கும் படம் ‘மோசடி’.

இந்த படத்தில் விஜூ நாயகனாக நடிக்க, நாயகியாக பல்லவி டோரா நடித்துள்ளார். மற்றும் அஜெய்குமார், N.C.B.விஜயன், வெங்கடாச்சலம், நீலு சுகுமாரன், O.S.சரவணன், மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இது முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படமாம்.

படம் பற்றி இயக்குனர் ஜெகதீசன் கூறியதாவது,

“கடந்த 2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி இரவு 8 மணியளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து பெரும் புள்ளிகள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எப்படி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றினார்கள். அதனால் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள். இந்த அறிவிப்பைப் பயன்படுத்தி எப்படி குறுக்கு வழியில் மோசடி செய்தார்கள். இந்த அறிவிப்பு சரியா? தவறா? என்பதை கிரைம் மற்றும் திரில்லருடன் கமர்ஷியல் கலந்து உருவாக்கி உள்ளேன்,” என்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவு – R.மணிகண்டன்
இசை – ஷாஜகான்
பாடல்கள் – மணிஅமுதவன், K.ஜெகதீசன்
எடிட்டிங் – S.M.V.சுப்பு, கோபி ரா நாத்
நடனம் – விமல், பாலா
தயாரிப்பு – JCS மூவீஸ்
கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் – K.ஜெகதீசன்

Upcoming Movies

மெய் – ஜுன் 23 முதல் திரையில்…

Published

on

By

மெய் - ஜுன் 23 முதல் திரையில்...

சுந்தரம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், எஸ்.ஏ. பாஸ்கரன் இயக்கத்தில், அறிமுக நாயகன் நிக்கி சுந்தரம், ஐஸ்வரியா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மெய்’.

சித்திக், ஜித்து ஜோசப், கமல்ஹாசன் ஆகியோரிடம் துணை இயக்குனராகப் பணியாற்றியயவர் எஸ்.ஏ. பாஸ்கரன்.

மனிதர்களின் உயிர் காக்கும் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் இன்று மலிந்து போய் கிடக்கும் ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் படம் இது. சமுதாய விழிப்புணர்ச்சியுடன் கூடிய கதை.

சார்லி, கிஷோர், வினோத் கிருஷ்ணன், அஜய் கோஷ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

நிக்கி சுந்தரம் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் கலையின் மீது உள்ள ஆர்வத்தால், இங்கு வந்து தமிழ் படித்து, இந்தப் படத்திற்கு தேவையான வகையில் முழு ஈடுபாட்டுடன் தன்னை தயார்படுத்தி கொண்டு நடித்துள்ளார்.

இப்படத்தின் கதை மற்றும் தனது கதாபத்திரத்தின் வலிமையும் முக்கியத்துவமும் கண்டு புதுமுகத்துடன் இணைந்து நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அமெரிக்க வாழ் பிரித்வி குமார் இப்படத்திற்கு இசை அமைக்க, அணில் ஜான்சன் பின்னணி இசை அமைத்துள்ளார்.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:

நிக்கி சுந்தரம்
ஐஸ்வரியா ராஜேஷ்
சார்லி
கிஷோர்
அஜய் கோஷ்
வினோத் கிருஷ்ணன்
E.ராமதாஸ்
கவிதாலயா கிருஷ்ணன்
ஜார்ஜ் மரியான்
அருள் D ஷங்கர்
அபிஷேக் வினோத்
தங்கதுரை
மதன் கோபால்
A.S.ரவிபிரகாஷ்
ஜெய்ஸ்ரீ

தயாரிப்பு : சுந்தரம் புரொடக்ஷன்ஸ்
நிர்வாக தயாரிப்பு : வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ்
சுரேஷ் பாலாஜி,ஜார்ஜ் பயஸ்
தயாரிப்பு உறுதுணை : சித்தாரா சுரேஷ்
இசை : பிரித்வி குமார்
படத்தொகுப்பு : பிரீத்தி மோகன்
கலை : செந்தில் ராகவன்
ஒளிப்பதிவு : VN மோகன்
பின்னனி இசை : அனில் ஜான்சன்
பாடல்கள் : கிருஷ்டோபர் பிரதீப்
ஆடியோகிராபி : M.R.ராஜகிருஷ்ணன்
நடனம் : விஜி சதிஷ்
ஸ்டண்ட் : மகேஷ் மேத்யு
உடைகள் : தாரா மரியா ஜார்ஜ்
கதை, வசனம்,இணை இயக்கம் : சேந்தா முருகேசன்
திரைகதை, இயக்கம் : எஸ்.ஏ. பாஸ்கரன்

Continue Reading

Upcoming Movies

நானும் சிங்கிள்தான் – விரைவில்…திரையில்…

Published

on

By

நானும் சிங்கிள்தான் - விரைவில்...திரையில்...

த்ரி இஸ் எ கம்பெனி என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நானும் சிங்கிள்தான்’.

இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

“இது முழுக்க முழுக்க காதல், கமர்ஷியல் படம். வித்தியாசமான திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் கோபி. ஒரு புது மாதிரியான ஒரு கிளைமாக்ஸ் காட்சி இந்த படத்தில் உள்ளது. அது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக நிச்சயம் இருக்கும்.

லண்டனில் இருக்கும் தமிழ் டான் கதாபாத்திரத்தில் மொட்ட ராஜேந்திரன் காமெடியில் கலக்கி இருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு அருமையான காமெடி விருந்தாக இருக்கும். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் முதல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்,” தயாரிப்பாளர் ஜெயகுமார்.

சென்னை மற்றும் லண்டன், ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

ஒளிப்பதிவு – டேவிட் ஆனந்த்ராஜ்
இசை – ஹித்தேஷ் மஞ்சுநாத்
பாடல்கள் – கபிலன் வைரமுத்து
ஸ்டன்ட் – கனல் கண்ணன்
கலை – ஆண்டனி ஜோசப்
எடிட்டிங் – ஆதித்யன்
நடனம் – அபீப் உஷேன்
இணை தயாரிப்பு – ஜெயகுமார், புன்னகை பூ கீதா
தாயாரிப்பு – த்ரி இஸ் எ கம்பெனி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கோபி

Continue Reading

Upcoming Movies

எங்கே அந்த வான் – விரைவில்…திரையில்…

Published

on

By

எங்கே அந்த வான் - விரைவில்...திரையில்...

அபுண்டு ஸ்டூடியோஸ் (பி) லிட் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘எங்கே அந்த வான்’.

ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய புதிய காதல் உதயமாகும், அறிமுகமாகும். நம் மனசுக்கு இதமாக சுகமளிக்கும். அப்படி ஓர் காதல் படைப்புதான் இப்படம். காதலைத் தேடிய ஒரு பெண்ணின் கவிதையாய் ஒரு பயணம் ‘எங்கே அந்த வான்’.

கும்பகோணம் திருவையாறு ஊரில் பிறந்து சாதாரண பள்ளியில் படித்து, சென்னை ஐஐடி போன்ற படிப்பில் சேர்ந்து படிக்கிறார் கமலி. அவளின் வாழ்க்கை சார்ந்த பயணம், அதில் ஒரு அசாத்தியமான காதல் பயணிக்கிறது.

இதில் கமலியாக ஆனந்தி நடிக்கிறார். ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் அனைவராலும் பாராட்டுப் பெற்ற ஆனந்திக்கு இப்படம் மேலும் ஒரு மகுடம் சேர்க்கும். இவரது ஜோடியாக ரோஹித் சரப் அறிமுகமாகிறார். இவர் ஹிந்தியில் பரபரப்பாக ஓடிய ‘ஹிச்கி’ (HICHKI) படத்தில் நடித்துள்ளார். ராணி முகர்ஜி டீச்சராகவும் ரோஹித் சரப் மாணவனாகவும் நடித்திருந்தனர். மேலும் ஷாருக்கான் நடித்த ‘டியர் சிந்தகி’ படத்திலும் நடித்துள்ளார். இவர் தமிழில் நடிப்பதற்காக தமிழை சிறிது கற்றுக் கொண்டு நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரதாப் போத்தன், அழகம்பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இதன் படப்பிடிப்பு கும்பகோணம், கோபிசெட்டிபாளையம், சென்னை, ஹைதராபாத் போன்ற பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் உச்சக்கட்ட காட்சி டெல்லியில் படமாக்கப்பட்டு படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.

லிங்குசாமி, உதயசங்கர் போன்ற பிரபல டைரக்டர்களிடம் பணிபுரிந்த ராஜசேகர் துரைசாமி முதன் முறையாக தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

குறும்படம் மற்றும் விளம்பர படங்களுக்கு இசை அமைத்து வரும் தீனதயாளன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இசை – தீனதயாளன்
ஒளிப்பதிவு – ஜெகதீசன் லோகயன்
படத்தொகுப்பு- ஆர்.கோவிந்தராஜ்
கலை – தியாகராஜன்
பாடல்கள் – யுகபாரதி, மதன் கார்க்கி, கார்த்திக் நேத்தா
நடனம் – பாப்பி சதீஷ்
மக்கள் தொடர்பு – ஜான்சன்
தயாரிப்பு நிர்வாகம் – ஏ.ஜெய் சம்பத்
தயாரிப்பு – அபுண்டு ஸ்டூடியோஸ் பிரைவேட் லிமிடெட்

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: