Connect with us

Tamil Cinema News

80 லட்சம் பேர் பார்த்தால் மெகா ஹிட் – சூர்யா

Published

on

moviebuff contest

மூவிபப் பர்ஸ்ட் கிளாப் சீசன்-2 குறும்படப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வெற்றியாளர்களை க்யூப் சினிமா (பி) லிட் அறிவித்துள்ளது.

இதற்கான நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா, 2 D ராஜசேகர கற்பூரசுந்தரபாண்டியன், மூவி பப் செந்தில்குமார், க்யூப் சினிமா டெக்னாலஜி அரவிந்த் ரங்கநாதன், நாக் ஸ்டுடியோஸ் நிர்வாகி கல்யாணம், எடிட்டர் ரூபன், சென்சார் அதிகாரி லீலா மீனாட்சி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழையும் பரிசுத் தொகையையும் வழங்கினார்கள்.

இந்த குறும்பட போட்டியில் ‘கல்கி’யை இயக்கிய விஷ்ணு இடவன் முதல் பரிசான ரூ.3 லட்சத்தைப் பெற்றார். அவருக்கு சூர்யாவின் 2 D நிறுவனத்தில் ஸ்கிரிப்ட் சொல்வதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது.

இவருக்கு அடுத்ததாக ‘கம்பளிப் பூச்சி’ இயக்குனர் வி.ஜி.பாலசுப்ரமணியன் 2 லட்சம் பரிசுத்தொகையும், ‘பேரார்வம்’ குறும்படத்திற்காக சாரங் தியாகு ரூ.1 லட்சம், ‘குக்கருக்கு விசில் போடு’ குறும்படத்தை இயக்கிய ஷ்யாம் சுந்தர் மற்றும் ‘மயிர்’ குறும்படத்தை இயக்கிய யோகி ஆகியோர் தலா ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையும் பெற்றார்கள்.

2D என்டர்டெயின்மென்ட் ராஜசேகர கற்பூரசுந்தரபாண்டியன் பேசும்போது,

“இப்படி ஒரு நிகழ்வில் எங்களது பங்கும் இருப்பதற்கு மகிழ்ச்சி. நிறைய திறமையாளர்களால் ஆன்லைன் மூலமாக கூடத் தங்களது திறமையை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. அப்படிப்பட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியாகத்தான் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. சீசன்-3 இதைவிட பிரம்மாண்டமாக இருக்கும்.

இந்த குறும்படங்களை பார்த்து சரியான நேரத்தில் சென்சார் செய்து சான்றிதழ் தர ஒத்துழைத்த சென்சார் அதிகாரி லீலா மீனாட்சிக்கு நன்றி. முன்பெல்லாம் ரிலீஸ் தேதியை பிக்ஸ் செய்துவிட்டு குறித்த நேரத்தில் சென்சார் சான்றிதழ் பெறுவது கொஞ்சம் கடினமாக இருந்தது. இப்போது லீலா மீனாட்சி வந்தபிறகு, திரையுலகினர் தைரியமாக எங்களது ரிலீஸ் தேதியை முன்கூட்டியே அறிவிக்க முடிகிறது,” என பாராட்டினார்.

விழாவில் நடிகர் சூர்யா பேசுகையில்,

“ஒரு படம் எடுப்பது சுலபம். ஆனால், நல்ல படம் எடுப்பது போருக்கு போவது மாதிரி. அதையம் தாண்டி ‘கல்ட்’ படங்கள் எடுப்பது என்பதெல்லாம் பேரதிசயம் மாதிரி. இந்த விழாவிற்கு வந்திருப்பது ஏதோ கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு வந்தது போல உணர்கிறேன். இந்த வயதில் யாராவது உதவி பண்ணினால் மேலே வந்துவிடலாம். ஆனால் இந்த வயதில் இருப்பவர்கள் தான் இனி வரும்நாட்களில் புதிய முயற்சிகளை உருவாக்கப் போகிறவர்கள். நானெல்லாம் எழுபதுகளின் குழந்தைப் பருவத்தை பார்த்தவன். ஆனால் இப்போதிருக்கும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு அனுபவம் கிடைக்கிறது.

எந்த ஒரு விஷயம் பண்ணும்போதும், இன்னும் கொஞ்சம் நன்றாக பண்ணியிருக்கலாமோன்னு நினைத்தால் அதை அப்போதே உடனே சரி செய்து விடவேண்டும். எங்கேயும் குறைவந்துவிடக் கூடாது என இயக்குனர் பாலா அண்ணன் அடிக்கடி சொல்வார். அதனால் குறும்படங்கள் என்றாலும் அதில் சிறிய குறைகூட வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் வாழ்நாளையும் தாண்டி இதுதான் உங்களுக்கான முக்கியமான பதிவாக இருக்கப் போகிறது.

நிஜத்தில் நமக்கு நீதி கிடைக்கிறதோ இல்லையோ இது போன்ற குறும்படங்களின் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும். ‘கம்பளிப்பூச்சி’ குறும்படத்தில் காட்டப்பட்டுள்ளது போல, அதைப் பார்த்து ஒரு சில நபர்கள் மனம் திருந்தினாலே அது நமக்குக் கிடைத்த வெற்றிதான். பெற்றோர், பள்ளிக்கூடம், இந்த சமூகம் சொல்லி கேட்காதவர்கள் சினிமா பார்த்து திருந்தினேன் என்று சொன்னால் அதுதான் சினிமாவின் பலம்.

இன்று எட்டு கோடி மக்களில் 50 லட்சம் பேர் படம் பார்த்தால் படம் ஹிட். 80 லட்சம் பேர் பார்த்தால் அது மெகா ஹிட். கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு அந்தப் படம் பார்த்தவர்கள் மத்தியில் விவசாயிகள் குறித்த பார்வையை மாற்றியிருக்கும் என்பது தான் சந்தோசம்.

எது உங்கள் மனதுக்கு நெருக்கமாக அதை செய்யுங்கள். இந்த மார்க்கெட் ஓப்பனனானது. இதில் பாலும் விற்கலாம் கள்ளும் விற்கலாம், இரண்டுமே விலைபோகும். ஆனால் எதை விற்கவேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்,” என்றார் சூர்யா.

முன்னதாக ரசிகர்கள் ‘என்ஜிகே’ படம் தீபாவளிக்கு வெளியாகாமல் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து சூர்யாவிடம் கேட்ட போது,

“இந்த குறும்படங்களை போல ஒரு வித்தியாசமான முயற்சியாகத்தான் ‘என்ஜிகே’ உருவாகி வருகிறது. சில நேரங்களில் எங்களையும் மீறி ஒரு விஷயம் நடக்கும் போது நாம் அமைதியாக ஒத்துழைப்பு கொடுத்துதான் ஆகவேண்டும். உங்களுடைய ஆதங்கம் புரிகிறது. இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க” என்றார் சூர்யா.

Tamil Cinema News

சங்கத்தமிழன், இசை வெளியீடு

Published

on

By

சங்கத்தமிழன், இசை வெளியீடு

பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்‌ஷன்ஸ் 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம்.

விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி ‘சங்கத்தமிழன்’ படத்தை தயாரித்துள்ளார்.

விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நாசர், சூரி, ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீ ரஞ்ஜனி மற்றும் மைம் கோபி என பலர் நடித்துள்ளனர்.

இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 17 ஆம் தேதி சன் ஸ்டுடியோஸில் நடைபெற்றது .

இந்த விழாவில் ‘சங்கத்தமிழன்’ படக்குழுவினர்களான கதாநாயகன் விஜய்சேதுபதி, தயாரிப்பாளர் பி.பாரதி ரெட்டி, இயக்குனர் விஜய்சந்தர், ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், இசையமைப்பாளர்கள் விவேக் – மெர்வின், ஒளிப்பதிவாளர் வேல் ராஜ் , சூரி , ஸ்ரீமன், ஜான் விஜய், அகல்யா வெங்கடேசன், பாடலாசிரியர் விவேகா, நிர்வாக தயாரிப்பாளர்கள் ரவிச்சந்திரன், குமரன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Continue Reading

Tamil Cinema News

‘சைரா’ படத்தின் தமிழ் வெளியீடு அறிவிப்பு

Published

on

By

சைரா படத்தின் தமிழ் வெளியீடு அறிவிப்பு

சிரஞ்சீவி, விஜய் சேதுபதி, சுதீப், நயன்தாரா, தமன்னா, சிறப்புத் தோற்றத்தில் அமிதாப்பச்சன், அனுஷ்கா மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் ‘சைரா நரசிம்மா ரெட்டி’.

இப்படத்தை தமிழ் மொழியிலும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை பல வெற்றிப் படங்களைத் தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்தை டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். அக்டோபர் 2ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது. ஹைதராபாத்தில் வரும் ஞாயிறு 22ம் தேதி படத்திற்கான பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்த உள்ளார்கள். அதில் பவன் கல்யாண், ராஜமௌலி உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அதன் பின் சென்னையிலும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் கலந்து கொள்ள ரஜினிகாந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Continue Reading

Tamil Cinema News

பிகில் வெளியீடு – தயாரிப்பாளர் புதிய அறிவிப்பு

Published

on

By

பிகில் வெளியீடு - தயாரிப்பாளர் புதிய அறிவிப்பு

எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், இந்துஜா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பிகில்’.

இப்படத்தின் இசை வெளியீடு நாளை மாலை சென்னையில் நடைபெற உள்ளது.

இதனிடையே, படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி புதிய அறிவிப்பு ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில், “யூகங்களின் அடிப்படையில் வெளியீட்டுத் தேதி பற்றி தவறான வதந்திகளை தயவு செய்து பரப்பாதீர்கள். படத்தின் சென்சார் முடிந்த பிறகே அது பற்றி அறிவிப்போம். பாக்ஸ் ஆபிசில் புதிய சாதனை படைக்கும் விதத்தில் சரியான நாளைத்தான் தேர்வு செய்வோம் என்பதை நம்புங்கள்,” என்று பதிவிட்டுள்ளார்.

‘பிகில்’ படம் தீபாவளி தினமான அக்டோபர் 27ம் தேதி வெளியாகும் என்றும், அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக அக்டோபர் 25ம் தேதி வெளியாகும் என்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.

தற்போது தயாரிப்பாளர் தரப்பில் விளக்கமளித்துவிட்டதால் அது பற்றி இனி தவறான செய்திகள் வெளிவராது. தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: