Connect with us

Upcoming Movies

நாடோடிகள் 2 – விரைவில்…திரையில்…

Published

on

nadodigal 2

2009 ம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அனன்யா நடிப்பில் வெளிவந்த ‘நாடோடிகள்’ படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது .

அந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் ‘நாடோடிகள் 2’ படம் உருவாகி முடிந்துள்ளது.

இந்தப் படத்தில் சசிகுமார் – அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ளார்கள். மற்றும் அதுல்யா, பரணி, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோரும் நடித்துள்ளார்கள். முக்கிய வேடத்தில் படத்தின் இயக்குனர் சமுத்திரகனி நடிக்கிறார்.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தின் கதை இருக்காது. இந்தக் கால இளைஞர்கள் எப்படி சாதி மறுப்புக் கொள்கையில் இருக்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. தொடர்ந்து படமும் விரைவில் வெளிவர இருக்கிறது.

இசை – ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு – ஏகாம்பரம்
கலை – ஜாக்கி
எடிட்டிங் – ரமேஷ்
பாடலாசிரியர் – யுகபாரதி
சண்டை பயிற்சி – திலீப் சுப்புராயன்
நடனம் – திணேஷ், ஜான்
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி
தயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன்
தயாரிப்பு – எஸ்.நந்தகோபால்
எழுத்து, இயக்கம் – சமுத்திரக்கனி

Upcoming Movies

சீமான் நடிக்கும் ‘தவம்’ – நவம்பர் 8 திரையில்…

Published

on

By

சீமான் நடிக்கும் ‘தவம்’ - நவம்பர் 8 திரையில்...

ஆஸிப் பிலிம் இண்டர்நேசனல் தயாரிப்பில், ஆர்.விஜயானந்த் ஏ.ஆர்.சூரியன் இருவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தவம்’.

இந்தப் படத்தில் இயக்குநர், நடிகர், நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நாயகனாக புதுமுகம் வசி நடிக்க, நாயகியாக பூஜாஸ்ரீ நடித்துள்ளார். மற்றும் அர்ச்சனா சிங், சிங்கம்புலி, போஸ் வெங்கட், சந்தானபாரதி, பிளாக்பாண்டி, கூல் சுரேஷ், தெனாலி, கிளி ராமச்சந்திரன், வெங்கல்ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

“விவசாயத்தைக் காத்து எதிர்கால சந்ததியினருக்கு இந்த பூமியை வளமாக வைத்திருக்க வழி செய்யும் விதமான திரைக்கதை அமைப்போடு தயாராகியிருக்கிறது ‘தவம்’.

முழுக்க முழுக்க கதையை நம்பித்தான் இந்தப் படத்தை எடுத்துள்ளோம். விவசயாத்தின் முக்கியத்துவத்தையும், பெண்களின் பெருமையையும் உணர்த்தும் படமாக இருக்கும். எல்லோரும் மறந்த ஒரு காதலை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம். அது நிச்சயம் பெரிய வரவேற்பைப் பெறும்.

படத்தை பார்த்த சென்ஸார் அதிகாரிகள் அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது. முக்கியமாக கதாநாயகன் வசி புதுமுக நடிகர் போல் தெரியவில்லை. அந்த பாத்திரமாகவே மாறி இருந்தார் என்று வெகுவாகப் பாராட்டினார்கள். அது மட்டுமல்லாமல், இந்த காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான ஒரு படம் இது என்றும் கூறினார்கள்,” என்கிறார்கள் இயக்குனர்கள்.

இந்தப் படத்தை நிறைய முன்னணி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பார்த்து பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 8 ம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியாகிறது.

இசை – ஸ்ரீகாந்த் தேவா
பாடல்கள் – இந்துமதி, எழில்வேந்தன், கோவிந்த்
ஒளிப்பதிவு – வேல்முருகன்
கலை – ராஜு
எடிட்டிங் – எஸ்.பி.அகமது
நடனம் – ரவிதேவ்
ஸ்டண்ட் – ஆக்ஷன் பிரகாஷ்
தயாரிப்பு மேற்பார்வை – குமரவேல்,சரவணன்
தயாரிப்பு – வசி ஆஸிப்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஆர்.விஜயானந்த், ஏ.ஆர்.சூரியன்

Continue Reading

Upcoming Movies

பட்லர் பாலு – நவம்பர் 8 திரையில்…

Published

on

By

பட்லர் பாலு - நவம்பர் 8 திரையில்... - 4 Tamil Cinema

தோழா சினி கிரியேஷன் தயாரிப்பில், சுதிர் இயக்கத்தில், கணேஷ் ராகவேந்திரா இசையமைப்பில், யோகி பாபு, இமான் அண்ணாச்சி, மயில்சாமி, ரோபோ சங்கர், தாடி பாலாஜி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பட்லர் பாலு’.

இந்தப் படத்தில் காமெடியனாக முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்துள்ளார்.

முழுக்க முழுக்க நகைச்சுவையை அடித்தளமாகக் கொண்ட இப்படத்தில் யோகிபாபுவிற்கு கல்யாண வீடுகளில் சமையல் செய்யும் சமையல்காரர் வேடம்.

யோகி பாபு சமையல் வேலைக்காகச் சென்ற திருமண மண்டபத்தில், மணப்பெண்ணை யோகிபாபுவின் நண்பர்கள் கடத்தி விடுகிறார்கள். அதனால் போலீஸ் அவரைக் கைது செய்துவிடுகிறது. யோகி பாபு, போலீசிடம் இருந்து எப்படி வெளியே வந்தார் என்பதை ஒரு இரவுக்குள் நடக்கும் காமெடி கலந்த திரைக்கதையாகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுதிர்.

அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இது இருக்குமாம்.

முகேஷ் பிலிம்ஸ் நிறுவனம் நவம்பர் 8ம் தேதி உலகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது.

ஒளிப்பதிவு – பால் லிவிங்க்ஸ்டன்
இசை – கணேஷ் ராகவேந்திரா
வசனம் – S.P.ராஜ்குமார்
தயாரிப்பு – தோழா சினி கிரியேஷன் கிருத்திகா

Continue Reading

Upcoming Movies

கருத்துக்களை பதிவு செய் – விரைவில்…திரையில்…

Published

on

By

கருத்துக்களை பதிவு செய் - விரைவில்...திரையில்...

RPM சினிமாஸ் தயாரிப்பில், SSR. ஆர்யன் நாயகனாக நடிக்க, உபாசனா R.C நாயகியாக நடிக்க ஜித்தன் 2 படத்தை இயக்கிய ராகுல் பரமஹம்சா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருத்துக்களை பதிவு செய்’.

சமூக வலைதளங்களில் உருவாகும் பொய்யான காதல் பற்றியும், அதன் மூலம் பெண்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதும்தான் படத்தின் கதை. அப்படி மாட்டிக் கொண்ட ஒரு அப்பாவி பெண் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார். அந்த நயவஞ்சக கும்பலை என்ன செய்கிறார், என்பதே இந்த ‘கருத்துக்களை பதிவு செய்’ திரைப்படம்.

இப்படத்தை பார்த்த சென்சார் போர்டு தலைமை அதிகாரி இம் மாதிரியான படங்கள், இந்த கால தலைமுறைக்கு அவசியம் என்று சொல்லி பாராட்டி எனக்கு வாழ்த்து கூறினார் என படத்தின் இயக்குனர் ராகுல் தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்கு U/A சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை நவம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

இயக்கம் – ராகுல்
கதை, திரைக்கதை, வசனம் – ராஜசேகர்
இசை: கணேஷ் ராகவேந்திரா,
பின்னணி இசை: பரணி,
பாடல்கள் – சொற்கோ
எடிட்டர்: கணேஷ்.D
ஒளிப்பதிவாளர்: மனோகரன்

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: