Connect with us

Tamil Cinema News

பாம்பின் சாகசங்கள் நிறைந்த ‘நீயா 2’

Published

on

பாம்பின் சாகசங்கள் நிறைந்த நீயா 2 - 4 Tamil Cinema

ஜம்போ சினிமாஸ்-ன் ஏ. ஸ்ரீதர் தயாரிக்க, சுரேஷ் இயக்கத்தில், ஷபீர் இசையமைப்பில், ஜெய், கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் நீயா 2.

கிராபிக்சில் ஒரு கருநாகத்தை உருவாக்கி படத்தில் அதன் காட்சிகள் 40 நிமிடங்கள் இடம் பெறும் அளவிற்கு படத்தில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

இது பற்றி கிராபிக்ஸ் நிபுணர் வெங்கடேஷ் கூறியதாவது?

“தற்போது சின்னத்திரையில் பல தொடர்கள் பாம்பை மையமாக வைத்து வருகிறது. அதனுடைய சாயல் வெள்ளித்திரையில் இருக்கக் கூடாது என்பதற்காகவும், அதற்கு வேறுபட்டும் பிரம்மாண்டமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவும், இந்தோனேசியாவிற்கு சென்று அங்கிருக்கும் கருநாகத்தின் பயிற்சியாளரை சந்தித்து பாம்பைப் பற்றிய தகவல்களை சேகரித்தோம்.

இந்திய அளவில் சுமார் 20 அடி முதல் 28 அடி வரை இந்த பாம்பு இருக்கும். படத்திற்காக நாங்கள் 25 அடி பாம்பை தேர்வு செய்தோம். கருநாகத்தின் குணாதிசயங்களை பயிற்சியாளரைக் கொண்டு படம் பிடித்தோம். பயிற்சியாளர் கை நீட்டியதும் இந்த கருநாகம் 3 அடி உயரத்திற்கு ஏறியது. மேலும், இப்படத்தில் கருநாகத்தை வைப்பதற்கு காரணம் அது ஞாபக சக்தி உடையது. நாய்க்குதான் இந்த குணம் இருக்கும். தன்னுடைய முதலாளியை அடையாளம் கண்டு பணியும். அதைப்போல் இந்த கருநாகமும் பயிற்சியாளரின் கட்டளைக்கு பணிந்ததை நேரடியாக கண்டோம். படத்திலும் அது போன்ற ஒரு காட்சி வருவதால் கருநாகத்தை தேர்ந்தெடுத்தோம்.

பாம்பு வாய் திறக்கும் போது வாயின் உடற்கூறு, பற்கள், அதனுடைய நாக்கை 4 இஞ்ச் அளவிற்கு வெளியே நீட்டும் என்பது போன்ற விஷயங்களைக் காட்டி இருக்கிறோம். கருநாகத்தின் முகம் பெரியதாக இருக்கும் என்பதால் ஒரு பொருளை உடைக்கும் அளவிற்கு திறன் கொண்டது. மேலும், மரத்தை சுற்றி கொள்வதுபோல், ஒரு மனிதனை சுற்றிக் கொள்ளும். இதுபோன்ற விஷயங்களை குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு படத்தில் உபயோகப்படுத்தினோம்.

கதாபாத்திரத்திற்கு தொடர்பு ஏற்படுத்துவதற்காக போலியான பாம்பை வைத்து படப்பிடிப்பு நடத்தினோம். பிறகு அதைக் கொண்டு கிராபிக்ஸ் செய்தோம். அனிமேஷனுக்கு மட்டும் 1 வருடம் 2 மாத காலம் ஆயிற்று. தயாரிப்பாளர் அதனை புரிந்து கொண்டு எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்ததால்தான் இந்த அளவு தரமான கிராஃபிக்ஸ் செய்ய முடிந்தது.

இயக்குநர் நிஜ பாம்பு போலவே இருக்க வேண்டும் என்று கூறியதால், சில காட்சிகளை கிரீன் மேட் கொண்டு எடுத்தோம். பாம்பைத் தவிர அணில், கழுகு, நாய், போன்றவற்றையும் கிராஃபிக்ஸ் செய்திருக்கிறோம்.

இதற்கெல்லாம் இயக்குநரும், தயாரிப்பாளரும் முழு ஆதரவு கொடுத்தார்கள்,” என்கிறார் வெங்கடேஷ்.

இயக்குநர் எல்.சுரேஷ் கூறியதாவது,

“பாம்பிற்காக நாங்கள் பல இடங்களில் தேடி அலைந்து இறுதியாக பாங்காக்கில் உள்ள கோப்ரா வில்லேஜ் என்ற இடத்தில் உள்ள பாம்பைத்தான் தேர்வு செய்தோம். இது எங்களுக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது.

முதலில் நிஜ பாம்பை வைத்து எடுக்கத்தான் முடிவு செய்தோம். ஆனால், அங்குள்ள பாம்பிற்கு ஒரு வார காலம் தான் நிஜ உருவம் இருக்கும். அதற்கு மேல் தோல் உரிவதும் வளர்வதுமாக இருப்பதால் படப்பிடிப்பிற்கு உகந்ததாக இருக்காது என்று கிராஃபிக்ஸ் செய்ய முடிவெடுத்தோம்.

இப்படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை தான். அதுமட்டுமில்லாமல், பாம்பின் சாகச காட்சிகளும் இருக்கும்.

மேலும், ‘நீயா’ படத்தில் நல்ல பாம்பு இடம் பெற்றிருக்கும். அதைவிட அதிகமாக பயம் ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்தப் படத்தில் கருநாகத்தைத் தேர்ந்தெடுத்தோம்.

அதேபோல், ‘நீயா’ படத்திற்கும் இந்த படத்திற்கும், மூன்று சம்பந்தம் உள்ளது. ‘பெயர்’, ‘பாம்பு’ மற்றும் ‘ஒரே ஜீவன்’ பாடல் இவை மூன்று தவிர அந்த கதைக்கும், இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நீயா படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமாக உருவம் மாறி பழி வாங்கும். ஆனால், இந்த படத்தில் அப்படி இருக்காது. இப்படத்தில் பாம்புக்கென்று பெயர் கிடையாது,” என்றார் இயக்குனர் சுரேஷ்.

Tamil Cinema News

பிகில் – வழக்கு தொடர்ந்த உதவி இயக்குனரின் பதிவு

Published

on

By

பிகில் - வழக்கு தொடர்ந்த உதவி இயக்குனரின் பதிவு

‘பிகில்’ படத்தின் கதை சம்பந்தமாக உதவி இயக்குனர் கே.பி. செல்வா என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அது பற்றி கே.பி. செல்வா அவருடைய பேஸ்புக் பக்கத்தில் தற்போது பதிவிட்டிருப்பதாவது,

“ஒரு தயாரிப்பாளர் கிட்ட கதையை கொடுத்துட்டு வந்ததுக்கப்பறம் அவங்க கிட்ட இருந்து ஒரு கால் வராதா நம்ம வாழ்க்க மாறாதான்னு யோசிக்கிற நிறைய உதவி இயக்குனர்கள்ல நானும் ஒருத்தன்,

போன தீபாவளிக்கு இந்த நேரம் எங்களுக்குள்ள இந்த கதை பிரச்னை தொடங்குச்சு !! உங்க கிட்ட நான் காசு கேட்டு வந்தனா இல்ல எதுக்கு வந்தேன்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல ஏன்னா நானும் உங்க ஆட்களும் பேசின conversation வாய்ஸ் ரெகார்ட் உங்க கிட்ட இருக்கு ஒரு வேல மறந்து இருந்தா அத கேளுங்க !! அண்ட் இது விஷயமா ஜனவரி 2019 எழுத்தாளர் சங்கத்துல நான் புகார் கொடுத்த !!

அப்ப அவங்க ஷூட்டிங் கூட ஆரம்பிக்கல, அப்புறம் உண்மையாவே அந்த இயக்குனர் ஜூலை 2019 கதை பதிவு பண்ணி இருந்தா ஏன் என்கிட்ட அத பத்தி எழுத்தாளர் சங்கம் என்னோட புகாரை விசாரிக்கும் போதே இத சொல்லல !! எதுக்கு என்ன நீதிமன்றத்துக்கு போங்கன்னு எழுத்தாளர் சங்கம் சொல்லணும் !!

இப்ப வர அவங்க கிட்ட இருந்து எந்த பதிலும் வரல !! நாங்க படத்தை தடை செய்யணும்ன்னு ஒரு விதத்துலையும் நினைக்கல !! எங்க நோக்கமும் அது இல்ல !! காசுக்காக விளம்பரத்துக்காக வர்றான், இவனுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு இவ்ளோ பெரிய இயக்குனர பத்தி பேசன்னு நிறைய பேர் சொல்றீங்க, என் உரிமையை எனக்கான அங்கீகாரத்தை கேக்கணும்ன்னு நெனச்ச கேட்ட அவ்ளோதான், இதுக்காக ஒவ்வொரு நாளும் அந்த இயக்குனர் ஆபீஸ் வாசல்ல நிக்கும்போது அவரோட ஆட்கள், செக்யூரிட்டி என்ன பாக்குற விதம் இருக்கே அந்த வலி யாருக்கும் புரியாது, எங்க நோக்கம் இவ்ளோ கோடி இன்வெஸ்ட்மென்ட் பண்ண படத்தை தடை செய்றது இல்ல, அந்த மாதிரி ஒரு கேவலமான எண்ணம் உள்ள ஆட்களும் நாங்க இல்ல, எனக்கு கடவுள் தொணைக்கு இருக்காரு,
நீங்க என்ன பத்தி பொய்யா பேசி உங்க தரத்தை நீங்களே கொறச்சிக்காதிங்க !! Respect your enemy !! அதனால உண்மையா நேர்மையா பேசுங்க !! அதவிட்டுட்டு பணம் கேட்டான் அத கேட்டான்னு சில்ற மாதிரி பேசாதீங்க !!
Ignore negativity !! படத்துல கூட negative கேரக்டர் இல்லனா positive character ஹீரோவுக்கு வேலையும் இல்ல valueவும் இல்ல !! So im happy that im in negative shade in your point of view !! End of the day நான் உங்கள ஜெயிக்கல ஆனா உங்களுக்கு நிகரா சண்ட செஞ்ச !! அது போதும் நெறைய கத்துக்கிட்டு எக்கச்சக்க அனுபவம் இந்த ஒரு வருஷத்துல இது நீங்க சொல்ற காச விட பெருசு so எல்லாத்துக்கும் நன்றி !!

Kp.Selvah

என அவர் பதிவிட்டுள்ளார்.

Continue Reading

Tamil Cinema News

பிகில் – அமெரிக்காவில் எவ்வளவு தியேட்டர்களில் ரிலீஸ்

Published

on

By

பிகில் - அமெரிக்காவில் எவ்வளவு தியேட்டர்களில் ரிலீஸ்

எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராப், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பிகில்’.

இப்படம் அடுத்த வாரம் அக்டோபர் 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

அமெரிக்காவில் இப்படத்தை இதற்கு முன் இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

அது பற்றி அமெரிக்காவில் படத்தை வெளியிடும் பிரைம் மீடியா நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 24ம் தேதியே அமெரிக்காவில் பிரிமீயர் காட்சிகளை நடத்த உள்ளார்களாம். மேலும் அக்டோபர் 25ம் தேதி அமெரிக்கா முழுவதும் 41 மாநிலங்களில், 160 நகரங்களில் 250க்கும் அதிகமான தியேட்டர்களில் படத்தை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

வரும் திங்கள் கிழமை அது பற்றிய முழு விவரத்தையும் அளிக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

Continue Reading

Tamil Cinema News

பிகில், கைதி – அக்டோபர் 25ல் ரிலீஸ்

Published

on

By

பிகில், கைதி - அக்டோபர் 25ல் ரிலீஸ்

2019ம் வருடத்தின் தீபாவளி வெளியீடாக விஜய் நடிக்கும் ‘பிகில்’, கார்த்தி நடிக்கும் ‘கைதி’ ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.

இந்த வருடத்தின் தீபாவளி அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு முன்னதாகவே அந்தப் படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இன்று மாலை இரண்டு படங்களின் வெளியீடு பற்றியும் அடுத்தடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

அதன்படி ‘பிகில், கைதி’ படங்கள் அக்டோபர் 25ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ளன.

இந்த வருட தீபாவளி சினிமா கொண்டாட்டம் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பமாகிறது.

விஜய், கார்த்தி படங்கள் முதல் முறையாக ஒரே நாளில் போட்டியில் குதிக்கின்றன.

கார்த்தியின் ‘கைதி’ பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தான், விஜய்யின் அடுத்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

 

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: