தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதாவின் மரணம் என்பது தமிழகத்தையும் தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியெடுத்த நிகழ்வு.
உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெ.ஜெயலலிதாஅங்கே 75 நாட்கள் நடத்திய மரணப்போராட்டம் பதைபதைப்பின் உச்சம். ஜெயலலிதாவுக்கு என்ன ஆனது ?, அவருக்கு என்ன பிரச்னை ?, என்ன மாதிரியான உயர்தர சிகிச்சைகள்தரப்பட்டன ?, அப்படிப்பட்ட சிகிச்சைகள் ஏன் ஜெயலலிதாவை உயிரோடு மீட்கத் தவறின ?, என்பன போன்ற கேள்விகள் ஜெயலலிதாவின் மரணத்தைச் சுற்றி சுழல்கின்றன.
இவற்றில் சில கேள்விகளுக்குப் பகுதி அளவிலான பதில்கள் வருகின்றன. பல பதில்கள் புதிய புதிய கேள்விகளை எழுப்புகின்றன. சில பதில்கள் உண்மை என்று நாம் நம்பக்கூடிய பல செய்திகளின் மீது சந்தேகத்தைப் பாய்ச்சுகின்றன. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைதேடும் முகமாகவே ஓய்வு பெற்ற நீதிபதிஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை குறித்த செய்திகள் தொடர்ச்சியாக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி புதிய முயற்சியைத்தொடங்கியது. அதன்பெயர், ‘ஆபரேஷன் ஜெ.ஜெ’.
ஜெயலலிதாவின் மரணம் என்பது ஒரே நாளில் நடந்த நிகழ்வாக இருக்கலாம். ஆனால் அந்த மரணத்துக்குக் காரணமான நோய்கள் ஒரே இரவில் உருவானவையல்ல என்பது உறுதி. எனில், எப்போது முதல் ஜெயலலிதாவை நோய்கள் பாதிக்கத்தொடங்கின ? அந்த நோய்களுக்கு என்ன காரணம் ?.
அன்றாடப் பணிகள் மட்டும்தான் ஜெயலலிதாவை உருக்குலைத்தனவாஅல்லது அதைத் தாண்டிய அரசியல் காரணங்களும் உள்ளனவா ?. ஜெயலலிதாவின் மரணப் போராட்டம் போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் தொடங்கியதாஅல்லது பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆரம்பித்ததா ?.
இன்னும் இன்னும் பலகேள்விகள் விடையற்றுக் கிடக்கின்றன. அப்படியான சில கேள்விகளின் மீது வெளிச்சம் பாய்ச்சி, விடைதேட முயற்சித்திருக்கிறது, நியூஸ்18 தமிழ்நாடு.
இப்படிப்பட்ட முயற்சியை எந்தவொரு தமிழ் தொலைக்காட்சியும் செய்திடாத நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் பதிவானஆவணங்கள், வாக்குமூலங்கள் ஆகியவற்றின் துணையோடும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் துறை சார் வல்லுநர்களின் உதவியோடும் ‘ஆபரேஷன் ஜெ.ஜெ’ என்ற நிகழ்ச்சியை உருவாக்கியிருக்கிறது நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி.
இந்நிகழ்ச்சியின் முதல் பகுதி இன்று ஜுலை 20 சனிக்கிழமை இரவு 7 மணி முதல் 8 மணிக்கும், இரண்டாம் பகுதி, அடுத்த வாரம் ஜுலை 27 அன்று இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் ஒளிபரப்பாக உள்ளது.