Warning: session_start(): open(/var/cpanel/php/sessions/ea-php70/sess_5d001e23f291ea1166f89b99189793c9, O_RDWR) failed: No such file or directory (2) in /home/tamilcin/public_html/wp-content/plugins/wccp-pro/preventer-index.php on line 2

Warning: session_start(): Failed to read session data: files (path: /var/cpanel/php/sessions/ea-php70) in /home/tamilcin/public_html/wp-content/plugins/wccp-pro/preventer-index.php on line 2
பள்ளிப் பருவத்திலே - விரைவில்...திரையில்...
Connect with us

Upcoming Movies

பள்ளிப் பருவத்திலே – விரைவில்…திரையில்…

Published

on

palli paruvathile movie

வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக D.வேலு தயாரிக்கும் படம் ‘பள்ளிப் பருவத்திலே’.

இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

நாயகியாக வெண்பா நடித்துள்ளார். முக்கிய கதாப்பாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி நடிக்கிறார்கள். தம்பி ராமையா , கஞ்சா கருப்பு இருவரும் கலகலப்பான காமெடி வேடத்தில் நடிக்க, பொன்வண்ணன், ஆர்.கே.சுரேஷ், பேராசிரியர் ஞானசம்பந்தம், பருத்தி வீரன் சுஜாதா, வேல்முருகன், பூவிதா, E.ராம்தாஸ், புவனா, வைஷாலி ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

படம் பற்றி இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர் கூறியதாவது,

“ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே நமக்கு சொல்லித் தரப்பட்ட ஒரு விஷயம் மாதா, பிதா, குரு, தெய்வம். அப்படிப்பட்ட மாதா, பிதாவுக்கு அடுத்து குருவைத்தான் சொல்லிருக்காங்க. அதுக்கு அடுத்து தான் தெய்வத்தையே சொல்லிருக்காங்க. ஆரம்பக் காலத்துல இருந்து, மாணவ மாணவிகள் பெற்றோர்களுக்குப் பிறகு குருவான ஆசிரியர்களுடன்தான் அதிகம் இருந்திருக்கின்றோம். அப்படிப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களை எப்படி வழி நடத்துகிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் அந்த மாணவர்களின் எதிர்காலம் அமையும். அப்படிப்பட்ட கதைக் கருவை கொண்ட படம் தான் இந்த ‘பள்ளிப் பருவத்திலே.

ஒரு ஆசிரியரால்தான் ஒரு மாணவனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் என்பதை இந்தப் படத்தில் கூறியுள்ளேன். இத்திரைப்படத்தை உலகில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் சமர்ப்பணமாக வெளியிடுகிறோம். ஆசிரியர்களுக்கு இப்படம் மணிமகுடமாக அமையும்.

கிராமத்துக்குச் சென்று டாக்டர் சேவை செய்வதைப் பற்றி ‘தர்மதுரை’ படம் கூறி தேசிய விருது பெற்றதோ அதுபோல், இத்திரைப்படமும் ஆசிரியர்கள் பற்றிய பெருமையைக் கூறி தேசிய விருது பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்கிறார் இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர்.

படம் இம்மாதம் 15 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

ஒளிப்பதிவு – வினோத்குமார்
இசை – விஜய்நாராயணன். இவர் இளையராஜா, A.R.ரகுமான் ஆகியோரிடம் உதவியாளராக இருந்தவர்.
பாடல்கள் – வைரமுத்து, வாசுகோகிலா,எம்.ஜி.சாரதா
எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்
நடனம் – தினா
ஸ்டன்ட் – சுப்ரீம்சுந்தர்
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி
தயாரிப்பு மேற்பார்வை – பொள்ளாச்சி M.ராஜா.
தயாரிப்பு – D.வேலு
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – வாசுதேவ் பாஸ்கர்.

Upcoming Movies

வால்டர் – விரைவில்…திரையில்…

Published

on

By

வால்டர் - விரைவில்...திரையில்...

11:11 புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அன்பு இயக்கத்தில் தர்ம பிரகாஷ் இசையமைப்பில் சிபி சத்யராஜ், சமுத்திரக்கனி, நட்டி, ஷிரின் கான்ச்வாலா மற்றும் பலர் நடிக்கும் படம் வால்டர்.

படம் பற்றி இயக்குனர் அன்பு கூறுகையில்,

“சிபிராஜ் திறமை குறித்து புதுமுகமான நான் கூறி தெரிய வேண்டியதில்லை. மொத்த சினிமா உலகமும் அறியும். அவரது திறமை குறித்து கூற வேண்டுமெனில் வெறும் முகப்பூச்சு செய்து கேமாரா முன் நிற்பவரல்ல அவர். அவரது தொழில்நுட்ப அறிவும், கதாபாத்திரத்தை அவர் கையாளும் விதமும், திரைப்படம் பற்றிய அவரது தெளிவும் அளப்பரியது. அவர் ‘வால்டர்’ படத்தில் போலீஸ் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

‘வால்டர்’ படத்தின் முக்கியமான பாத்திரத்திற்கு இயக்குநர் கௌதம் மேனனை அணுகியது அனைவரும் அறிந்ததே. அவரும் இந்த கதாபாத்திரத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு, நடிக்க ஒப்புக்கொண்டார். அவரது பிற படங்களை இயக்கும் பணிகளின் காரணத்தால் அவரது கால்ஷீட் எங்கள் படத்திற்கு ஒத்துவராமல் போனது. அதன் பிறகு பல நடிகர்களை இக்கதாபாதிரத்திற்கு பரிசீலித்தோம். கடைசியில் நடிகர் நட்டி அவர்களை இக்கதாபாத்திரத்திற்கு அணுகினோம்.

வரும் வாய்ப்புகளில் நல்லதை மட்டுமே செய்வேன் என்ற கொள்கையில் அவர் இருந்தார். கதையை முழுதாகக் கேட்ட பின்பே இப்படத்தில் நடிப்பதை பற்றிப் பேச முடியும் என்றார். கதை கேட்டதன் முடிவில் படத்தின் மீதும் அவரது பாத்திரம் மீதும் அவருக்கு பெரும் நம்பிக்கை வந்து உடனடியாக நடிக்க சம்மதித்தார். அவரது பாத்திரம் சம்பந்தமான காட்சிகளை 15 நாட்கள் முன்னதாக தொடங்கி கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை ஆகிய இடங்களில் படமாக்கியுள்ளோம்.

அவரது பாத்திரம் முழுக்க வில்லன் என சொல்லமுடியாது. ஆனாலும் படத்தில் அவர் நேர்மையானவரா அல்லது எதிர்மறையானவரா என கடைசி வரை ரசிகர்கள் குழம்பும்படி, அவரது கதாபாத்திரம் இருக்கும். கண்டிப்பாக ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெறும் பாத்திரமாக இருக்கும்,” என்றார்.

‘வால்டர்’ டீசர் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தொழில் நுட்பக் கலைஞர்கள் விபரம்

இயக்கம் – அன்பு
இசை – தர்மா பிரகாஷ்
ஒளிப்பதிவு – ராசாமதி
படத்தொகுப்பு – S. இளையராஜா
பாடல்கள் – அறிவுமதி, அருண் பாரதி, உமா தேவி
கலை இயக்கம் – A.R. மோகன்
நடனம் – தாஸ்தா
சண்டைப்பயிற்சி இயக்கம் – விக்கி
தயாரிப்பு மேற்பார்வை – K மனோஜ் குமார்
புகைப்படம் – தேனி முருகன்
டிசைன்ஸ் – J சபீர்

Continue Reading

Upcoming Movies

தமிழரசன் – விரைவில்…திரையில்…

Published

on

By

தமிழரசன் - விரைவில்...திரையில்... - 4 Tamil Cinema

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்க, பாபு யோகேஸ்வரன் இயக்கும் படம் ‘தமிழரசன்’.

இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கிறார்.

மற்றும் சுரேஷ்கோபி, ராதாரவி, சோனு சூட், யோகிபாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்

படம் பற்றி இயக்குனர் பாபு யோகேஸ்வரன் கூறுகையில்,

“படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஜய்ஆண்டனி சூழ்நிலை காரணமாக ஒரு போராளியாக மாறுவதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

இசைஞானி இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப் பெரிய பலம். இந்த படத்திற்காக S.P.B ஒரு பாடலையும், 12 வருடங்களுக்குப் பிறகு இளையராஜாவின் இசையில் கே.ஜே.யேசுதாஸ் ஒரு பாடலையும் பாடி இருக்கிறார்கள். அந்த பாடல்கள் 2020 ம் ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களாக வலம் வரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை,” என்கிறார்.

படம் இம்மாதம் வெளியாக உள்ளது.

தொழில்நுட்பக் கலைஞர்கள்

இசை – இளையராஜா
ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர்
பாடல்கள் – பழனிபாரதி, ஜெய்ராம்
கலை – மிலன்
ஸ்டண்ட் – அனல் அரசு
எடிட்டிங் – புவன் சந்திரசேகர்
நடனம் – பிருந்தா சதீஷ்
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி
தயாரிப்பு மேற்பார்வை – ராஜா ஸ்ரீதர்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் – பாபு யோகேஸ்வரன்
தயாரிப்பு – கெளசல்யா ராணி

Continue Reading

Upcoming Movies

மாஸ்டர் – படப்பிடிப்பில்…

Published

on

By

விஜய் நடிக்கும் மாஸ்டர் - படப்பிடிப்பில்... 4 Tamil Cinema

எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’.

மற்றும் சாந்தனு, அர்ஜுன் தாஸ், அழகம்பெருமாள், ரம்யா சுப்ரமணியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் .

மாஸ்டர் படத்தின் முதல் பார்வை ஜனவரி 31 அன்று வெளியிடப்பட்டது. படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதம் படத்தைத் திரையிட திட்டமிட்டுள்ளனர்.

படப்பிடிப்பு ஆரம்பமான நாள் – 3 அக்டோபர் 2019

முதல் பார்வை வெளியிடப்பட்ட நாள் – 31 டிசம்பர் 2019

தொழில் நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் – லோகேஷ் கனகராஜ்
தயாரிப்பு – சேவியர் பிரிட்டோ ( XB பிலிம் கிரியேட்டர்ஸ்)
இசை – அனிருத்
வசனம் – லோகேஷ் கனகராஜ், ரத்ன குமார், பொன் பார்த்திபன்
ஒளிப்பதிவு – சத்யன் சூரியன்
படத்தொகுப்பு – பிலோமின் ராஜ்
லைன் புரொடியூசர்ஸ்- லலித் – ஜெகதீஷ்
நிர்வாகத் தயாரிப்பு – R .உதயகுமார்
சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா
விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா
ஆடை வடிவமைப்பு – பல்லவி சிங்
நடனம் – தினேஷ் , சதிஷ்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: