Connect with us

Television

பெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி

Published

on

பெப்பர்ஸ் டிவி - ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி

சினிமா என்பது மிகப்பெரிய கடல் மாதிரி. இதில் வெற்றிபெறுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. சினிமாவில் நுழைவதற்கு ஒரு லட்சம் பேர் ஆசைப்படலாம். ஆனால் இதில் ஆர்வத்துடன் நுழைபவர்கள் ஐம்பதாயிரம் பேர்தான்.

இதிலும் விடாமுயற்சியாக போராடி வாய்ப்பை பெறுகிறவர்கள் என்னவோ ஆயிரம் பேர் தான். இந்த ஆயிரம் பேரில், படம் எடுத்து, அந்தப்படமும் தங்குதடையின்றி ரிலீஸாகி மக்கள் மனதில் பதிகிறவர்கள் என பார்த்தால் வெறும் பத்து பேர் தான். இப்படி ஜெயித்தவர்களை கணக்கிட்டால் லட்சத்தில் பத்து பேர்தான் சினிமாவில் இன்னும் இருந்து வருகிறார்கள்.

இப்படி சினிமாவில் சாதனை புரிந்தவர்களை, அடுத்து அவர்கள் படம் ரிலீசாகும் அந்தந்த வாரங்களில் அவர்கள் கடந்து வந்த வெற்றிப்பயணத்தை முழுமையாக 30 நிமிடங்களில் சொல்லும் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சிதான் ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் அந்தந்த வாரங்களில் வெளியாகின்ற படத்தின் இயக்குனர், அந்தப் படத்தின் கதாநாயகன், நாயகி, இசையமைப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினருடன் கலந்து கொண்டு அந்தப்படம் உருவானது எப்படி, அதை படமாக்க அவர்கள் பட்ட சிரமங்கள், நல்லது கெட்டது மற்றும் அந்தப் படத்தின் மூலம் புதிதாக சொல்லவரும் விஷயம் என படத்தை பற்றிய சுவாரசியமான செய்திகளை பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி பெப்பர்ஸ் டிவியில் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை சுவைபட தொகுத்து வழங்குபவர் சுமையா.

Television

விஜய் டிவியின் புதிய தொடர் ‘தேன்மொழி’

Published

on

By

விஜய் டிவியின் புதிய தொடர் தேன்மொழி - 4 Tamil Cinema

விஜய் டிவியில் மற்றுமொரு புதிய தொடராக ‘தேன்மொழி’, திங்கள் முதல் சனி வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

ஒரு அழகிய கிராமத்தில் வாழும் தேன்மொழி, ஒரு சுட்டித்தனமான, கவலைகள் ஏதும் வைத்துக் கொள்ளாத ஒரு பெண். அப்பாவின் அளவுக்கடங்காத பாசத்தைக் கொண்ட தேன்மொழி, சூழ்நிலைகள் காரணமாக கிராமத்து பஞ்சாயத்துத் தலைவர் போட்டிக்கு நிற்கிறார்.

தேன்மொழிக்கு அருள் என்னும் ஒரு அரசியல் சார்ந்த பணக்கார வீட்டு பையன் மீது காதல் ஆசை ஏற்படுகிறது, அவனுக்கும் தன் மீது காதல் இருப்பதாக நினைத்துக் கொள்கிறார். தேன்மொழி தேர்தலில் வெற்றி பெறுவாள் என கணித்து அவளை அருளுக்குத் திருமணம் செய்து தேன்மொழியை மருமகளாக ஆக்க நினைக்கிறது அருளின் குடும்பம். தேன்மொழிக்கும் அருளுக்கும் திருமணமாகிறது. அருளுக்கு தேன்மொழி மீது காதல் மலருமா ?, தேன்மொழி தனது அரசியல் வாழ்க்கையில் வெற்றி பெறுவாரா ?என்பதுதான் இத் தொடரின் கதை.

இந்த தொடரில் தேன்மொழியாக பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகை ஜாக்குலின் நடிக்கிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு தொலைக்காட்சியில் மீண்டும் களமிறங்கியுள்ளார். அருள் ஆக சித்தார்த் நடிக்கிறார்.

இத் தொடரை கதிரவன் இயக்குகிறார். சிரிப்பு, காதல், மோதல் என பல அம்சங்கள் கொண்ட தொடராக ‘தேன்மொழி’ ஒளிபரப்பாகி வருகிறது.

Continue Reading

Television

காவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா ?

Published

on

By

காவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா ?

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து கடந்த சனிக்கிழமை, விதிகளை மீறியதாகச் சொல்லி மதுமிதாவை வெளியேற்றினார்கள்.

மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தார் என்று பல ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், மதுமிதாவுக்கு அன்றைய தினம் நடந்தது என்ன, எதற்காக அவரது கையில் கட்டு கட்டப்பட்டிருந்தது என்று நிகழ்ச்சியிலும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இதனிடையே, காவிரி பிரச்சினை பற்றிப் பேசித்தான் மதுமிதாக கையை அறுத்துக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக கருத்துகள் பதிவாகி வருகின்றன.

‘ஹலோ மொபைல் ஆப்’ டாஸ்க் ஒன்றில் அவர்களது பக்கங்களில் பதிவிடுவதற்காக போட்டியாளர்கள் ஏதாவது கருத்தைச் சொல்லலாம் என்றார்கள். அதில் கலந்து கொண்டவர்களில் மதுமிதா பேசியதைத் தவிர மற்றவர்களின் கருத்துக்கள் டிவியில் ஒளிபரப்பாகின. ஆனால், மதுமிதாவின் கருத்தை ஒளிபரப்பவேயில்லை. அதில்தான் மதுமிதா காவிரி பிரச்சினை பற்றி பேசினார் என்கிறார்கள்.

வேறு சிலரோ, அவர் சேரனுடன் காவிரி பிரச்சினை பற்றி விவாதித்துக் கொண்டிருந்த போது, வருணபகவானும் கர்நாடகாதான் போலிருக்கிறது. நமக்கு மழையும் வரவில்லை, காவிரியில் தண்ணீரும் வரவில்லை என மதுமிதா சொன்னாராம். அப்போது அதைக் கேட்ட ஷெரின், எப்படி இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசலாம் என சண்டை போட்டாராம்.

மதுமிதா மீது ஏற்கெனவே கடுப்பில் இருந்த ஐவர் அணியான கவின், சாண்டி, முகேன், தர்ஷன், லாஸ்லியா இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிரச்சினையை மேலும் பெரிதாக்கியிருக்கிறார்கள்.

தமிழ், தமிழ் எனப் பேச வேண்டாம் என்றும், அவ்வளவு பாசம் இருந்தால் காவிரிக்காக நீ உயிரை விடுவாயா என்று கேலி செய்தார்களாம். தன்னைக் கிண்டல் செய்ததைப் பொறுக்க முடியாத மதுமிதா கத்தியால் கையை அறுத்துக் கொண்டார் என்றும் சொல்கிறார்கள். அப்போது சேரன், கஸ்தூரி மட்டுமே மதுமிதாவுக்கு ஆதரவாகப் பேசி அவரைக் காப்பாற்றியிருக்கிறார்கள். அதனால்தான், நேற்று நாமினேஷனில் சேரன், கஸ்தூரி இருவரது பெயரையும் ஐவர் அணி பேசி வைத்து சேர்த்திருக்கிறது.

தமிழ் மக்களுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் காவிரி பிரச்சினை பற்றிப் பேசப் போய் கூட இருந்த மற்ற தமிழர்களாலேயே ஏளனத்துக்கு ஆளாகியுள்ளார் மதுமிதா என்கிறார்கள்.

நடந்தது என்ன என்பதை பிக் பாஸ் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் முழுமையாக ஒளிபரப்ப வேண்டும். காவிரி பிரச்சினையால்தான் மதுமிதா அப்படி நடந்து கொண்டார் என்றால், கமல்ஹாசன் அதை அப்படியே ஒளிபரப்ப சொல்லியிருக்கலாமே, அவரும் சேர்ந்து இதை ஏன் மறைக்க வேண்டும் என்றும் பலர்  சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள்.

தற்கொலை முயற்சி என்பது சாதாரண விஷயமல்ல. முதல் சீசனில் நீச்சல் குளத்தில் விழுந்து ஓவியா தற்கொலைக்கு முயன்றார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை நிகழ்ச்சியை விட்டு நீக்கினார்கள். இரண்டாவது சீசனில் டேனியிடம் தரக்குறைவாக சண்டை போட்ட மகத்தை ரெட் கார்டு காட்டி வெளியேற்றினார்கள்.

மூன்றாவது சீசனில் ஏற்கெனவே சரவணன் விமர்சனத்துக்கு ஆளாகி வெளியேற்றப்பட்டார். தாங்கள் நியாயமாக நடந்து கொள்கிறோம் என சொல்லிக் கொள்ளும் பிக் பாஸ் நிகழ்ச்சி அமைப்பாளர்கள், அந்த நியாயத்தை மதுமிதா விவகாரத்தில் காட்ட மறுப்பது ஏன் எனப் பலரும் கேள்வி கேட்கிறார்கள்.

Continue Reading

Television

போங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’

Published

on

By

போங்கு ஆட்டம் ஆடும் பிக் பாஸ் - 4 Tamil Cinema

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இதற்கு முந்தைய இரண்டு சீசன்களை விட இந்த சீசனில் தனது தரத்தைக் குறைத்துக் கொண்டு வருகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு போட்டியாளரான சரவணன் வெளியேற்றப்பட்டார். அவர் கல்லூரியில் படித்த போது பேருந்தில் உரசுவதற்காகச் சென்றுள்ளேன் என்று சொன்னதை பெண்களுக்கு அவமரியாதை எனக் கருதி அவரை வெளியேற்றியதாகச் சொன்னார் பிக் பாஸ்.

ஆனால், கமல்ஹாசன் அது குறித்து எதுவுமே சொல்லாமல் சரவணன் வெளியேற்றப்பட்டதை சர்வ சாதாரணமாகக் கடந்து போனார்.

கவின், சாண்டி ஆகியோர் ஒவ்வொரு நாளும் பெண் போட்டியாளர்களை அவமரியாதை செய்தும், கிண்டலடித்தும் வருகிறார்கள். அவர்கள் மீது இதுவரை பிக் பாஸ் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கமல்ஹாசனும் கவின் பேசுவதை காமெடியாக எடுத்துக் கொண்டு அவருக்கு மேலும் ஊக்கம் கொடுக்கிறார்.

கடந்த வாரம் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் பரவின. கை மணிக்கட்டில் கட்டு போட்ட நிலையில் அவருக்கு என்ன நடந்தது என்று நிகழ்ச்சியில் காட்டாமலேயே அவர் விதிகளுக்கு மீறி செயல்பட்டதாகவும் அதனால் அவரை வெளியேற்றுவதாகவும் அறிவித்தார் பிக் பாஸ். கமல்ஹாசனும் அது குறித்து எதையும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.

மதுமிதாவுக்கு நடந்த ‘கொடுமை’ யாரால், எதனால் நடந்தது என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. எப்போதோ பேசியது இப்போது தவறாகத் தெரிந்து சரவணனை வெளியேற்றினார்கள். ஆனால், மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தார் என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதற்குக் காரணமானவர்களை நிகழ்ச்சியை விட்டு உடனடியாக வெளியேற்றாமல் அதை மூடி மறைக்கிறார்கள்.

அடுத்து, கடந்த வாரம் விருந்தாளியாக வருகிறார் வனிதா என்றார்கள். நேற்றைய நிகழ்ச்சியில் ‘வைல்டு கார்டு என்ட்ரி’ மூலம் வந்திருக்கிறார் வனிதா, அதனால் அவரை இந்த வாரம் நாமினேட் செய்ய முடியாது என்று பிக்பாஸ் அறிவிக்கிறார். இதை கடந்த வாரம் அவர் வரும் போதே வைல்டு கார்டு மூலம் மீண்டும் வருகிறார் வனிதா என்று சொல்லியிருக்கலாமே.

மேலும், இந்த நிகழ்ச்சியை விட்டு இரண்டாவது நபராக மக்களால் வாக்களிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர் வனிதா. அவரை மீண்டும் வைல்டு கார்டு மூலம் வரவழைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம் ?.

ஆக, இந்த மூன்றாவது சீசனில் பிக் பாஸ் நிறையவே ‘போங்கு ஆட்டம்’ ஆடுகிறார்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: