Connect with us

Tamil Cinema News

மலையாளத்தில் வில்லன் ஆன பிரஜின்

Published

on

மலையாளத்தில் வில்லன் ஆன பிரஜின் - 4 Tamil Cinema

சன் மியுசிக் சேனலில் தொகுப்பாளராக இருந்து சின்னத் திரை நடிகராகவும், பெரிய திரை நடிகராகவும் உயர்ந்தவர் பிரஜின்.

மலையாளத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த ‘லவ் ஆக்ஷன் டிராமா’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

நிவின் பாலி, நயன்தாரா ஆகியோர் நடித்த படத்தில் வில்லன் என்பது அவருக்கு சிறப்பு சேர்த்துள்ளது.

அப்படத்தில் நடித்தது பற்றி பிரஜின் கூறுகையில்,

மலையாளத்தில் சமீபத்தில் வெளியான ‘த்ரில்லர்’ படம் உட்பட 4 படங்களில் நடித்துள்ளேன்,, சண்டக்கோழி வில்லன் நடிகர் லால் டைரக்ஷனில் மலையாளத்தில் ‘டோர்னமெண்ட்’ என்கிற படத்தில் வில்லனாக நடித்தபோது அந்த படத்தை பார்த்த நகைச்சுவை நடிகர் அஜு வர்கீஸ், எனது நடிப்பை மனதார பாராட்டினார். அப்போது தான் அவரும் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்கிற படத்தில் நிவின்பாலியுடன் இணைந்து அறிமுகமாகியிருந்த சமயம். அதன் பிறகு கடந்த ஆறு வருடங்களில் முன்னணி கதாநாயகனாக மாறிவிட்ட அஜு வர்கீஸ் தான், இந்த லவ் ஆக்ஷன் ட்ராமா படத்தில் இணை தயாரிப்பாளராக இணைந்து தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்க நடிகரைத் தேடிக் கொண்டிருந்தபோது இத்தனை வருடங்களாக என்னை மறக்காமல் நினைவு வைத்திருந்த அஜு வர்கீஸ் உடனே கேரளாவிற்கு கிளம்பி வரச்சொன்னார். அங்கே போனதும்தான், இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தார்கள்.

இந்தப்படத்தின் இயக்குநர் தயன் சீனிவாசன் பிரபல இயக்குநர் மற்றும் நடிகரான சீனிவாசனின் மகன் அதுமட்டுமல்ல, இயக்குநர் வினீத் சீனிவாசனின் தம்பியும் கூட.. இதுவரை ஹீரோவாக சில படங்களில் நடித்து வந்தவர் இந்த படத்தின் மூலம் டைரக்ஷன் துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.. அவரது தந்தை, அண்ணனை போலவே இவருக்கும் நடிப்பு டைரக்சன் என்பது ரத்தத்திலேயே ஊறிப் போய் இருந்ததால் அவர் தற்போது இயக்குநராக மாறியுள்ளார்.

முதல் படம் என்றாலும் நிவின்பாலி நயன்தாரா என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணி அமைத்து, கிடைத்த முதல் வாய்ப்பில் சிக்ஸர் அடித்துள்ளார். ஒரு சிலர் இப்படி பிரம்மாண்ட கூட்டணி அமையும்போது அந்த வாய்ப்பை கோட்டை விட்ட நிகழ்வுகளும் உண்டு. ஆனால் தயன் சீனிவாசன் கதையையும் அதற்கேற்ற கதாபாத்திரங்களையும் கச்சிதமாக தேர்வு செய்து முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றுள்ளார்.

இந்த படத்தின் ஹீரோவான நிவின்பாலி, ஒரு வடக்கன் செல்பி படத்திற்கு பிறகு நீண்ட நாள் கழித்து இப்படி ஒரு ஜாலியான படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில், தான் ஒரு முன்னணி ஹீரோ என்றாலும் அதற்கான எந்தவித ஒரு பந்தாவும் இல்லாமல் மிக இயல்பாகப் பழகினார். தமிழில் இருந்து வரும் நடிகர்களுக்கு நல்ல வாய்ப்பு தரவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

நயன்தாரா உடன் இந்தப் படத்தில் இரண்டு காட்சிகளில் இணைந்து நடித்துள்ளேன். ஒரு காட்சியில் அவரை எதிர்த்துப் பேசுவது போல வசனம் பேசியிருந்தேன். ஆனால் ஒரு சில காரணங்களால் அது படத்தில் இடம்பெறவில்லை.

இந்த படத்தை பார்த்தவர்கள் மலையாளத்தில் ஒரு முக்கியமான படத்தில் வில்லனாக நடித்திருப்பது கண்டு ஆச்சரியப்பட்டு பாராட்டினார்கள். முக்கியமாக எனது நடிப்பைப் பாராட்டி அஜூ வர்க்கீஸ் காஸ்ட்லியான TAGHUER வாட்ச் ஒன்றை பரிசளித்தார். கேரளாவின் மிகப்பெரிய விருதைப் பெற்றதுபோல் உணர்ந்தேன்.

பொதுவாக ஒரு மிகப்பெரிய படத்தில் வில்லனாக நடிக்கும்போது அதில் மிகப்பெரிய ரீச் கிடைக்கும். அதுமட்டுமல்ல ஒரு நடிகருக்கு எல்லா மொழிகளிலும் நடிப்பது ரொம்பவே முக்கியம். அப்போது தான் மற்ற மொழிகளில் இருந்தும் நம்மை தேடி வாய்ப்புகள் வரும்..

தற்போது தமிழில் சீனு ராமசாமியின் உதவியாளர் இயக்கியுள்ள ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ என்கிற படத்தில் நடித்துள்ளேன். இன்னும் இரண்டு மாதங்களில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இது தவிர தற்போது மிகப் பெரிய கம்பெனி ஒன்றில் ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

லவ் ஆக்சன் ட்ராமாவை தொடர்ந்து, இனி மலையாளத்திலும் நல்ல வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கிறேன். இன்னொரு பக்கம் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் விஜய் டிவியில் மீண்டுமொரு பிரமாண்டமாக தொடரில் என்னை எதிர்பார்க்கலாம். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன,” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் பிரஜின்.

Tamil Cinema News

விக்ரம் 58 படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்

Published

on

By

விக்ரம் 58 படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

2006 ஆம் ஆண்டு, லாகூர் நகரத்தில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களை வீழ்த்தி, ஹாட்ரிக் எடுத்து சாதனை புரிந்தவர் இர்பான்.

‘டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள்’ ஆகிய இரண்டு வெற்றி படங்களைக் கொடுத்தவர் இப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

ஏஆர் ரகுமான் இசையமைக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் மேலும் ஒரு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் பல வெளிநாடுகளிலும் இந்தியாவின் பல இடங்களிலும் படமாக்கப்பட இருக்கிறது.

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தில் பணியாற்ற இருக்கும் மற்ற கலைஞர்களின் விவரங்களை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.

Continue Reading

Tamil Cinema News

ஸ்ரீகாந்த், தினேஷ் நடிக்கும் ‘சம்பவம்’

Published

on

By

ஸ்ரீகாந்த், தினேஷ் நடிக்கும் சம்பவம் - 4 Tamil Cinema

“மைனா, சாட்டை, மொசக்குட்டி, சௌகார்பேட்டை, பொட்டு” ஆகிய படங்களைத் தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ் ஜான் மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் ‘சம்பவம்’.

இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர்.

மேலும் இவர்களுடன், பக்ரீத் படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடிக்க உள்ளனர்.

நேர்மையுடன், மனசாட்சிக்கு உட்பட்டு வாழும் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நேர்மைக்குப் புறம்பாக தள்ளப்படும் போது ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி, சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குனராக இருந்த ரஞ்சித் பாரிஜாதம் கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார். அம்ரிஷ் இப்டத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் கதையின் நாயகன்கள் ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ், கதாநாயகிகள் பூர்ணா, சிருஷ்டி டாங்கே, தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ், இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் உள்ளிட்ட படக்குழுவினரும், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ஜாக்குவார் தங்கம், இயக்குனர்கள் பேரரசு, ஏ.வெங்கடேஷ், தரணி, திருமலை, நடிகர் நட்ராஜ், நாஞ்சில் சம்பத், தயாரிப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், கே.ராஜன் உள்ளிட்ட பிரபலங்களும் பலர் கலந்து கொண்னர்.

Continue Reading

Tamil Cinema News

தமன்னா நடிக்கும்….என்பதை ஏற்க மறுக்கும் தமன்னா

Published

on

By

தமன்னா நடிக்கும்....என்பதை ஏற்க மறுக்கும் தமன்னா

தெலுங்கில் 2017ல் வெளிவந்த வெற்றி பெற்ற ‘ஆனந்தோ பிரம்மா’ என்ற படத்தை தமிழில் ‘பெட்ரோமாக்ஸ்’ என்ற பெயரில் தயாரித்து அக்டோபர் 11ம் தேதி வெளியிட உள்ளார்கள்.

‘அதே கண்கள்’ படத்தை இயக்கிய ரோகின் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் தமன்னா, யோகி பாபு, காளி வெங்கட், முனிஷ்காந்த், சத்யன், திருச்சி சரவணகுமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

படத்திற்கான விளம்பரங்களில் ‘தமன்னா நடிக்கும்’ என்றுதான் குறிப்பிட்டு வருகிறார்கள். ஆனால், அதை பெருந்தன்மையுடன் ஏற்க மறுக்கிறார் தமன்னா.

‘‘பெட்ரோமாக்ஸ்’ படத்தோட கதைதான் முதன் முதல்ல என்னை ஈர்த்த ஒரு விஷயம். தெலுங்குல பார்க்கும் போதே இந்தக் கதையை தமிழ் ரசிகர்கள் கண்டிப்பா ரசிப்பாங்கன்னு புரிஞ்சுது.

என்னோட பேரு, படத்தோட விளம்பரங்கள்ல முதல்ல இருக்கிறத என்னால ஏத்துக்க முடியலை. ஏன்னா, இந்தப் படத்துல நடிச்சிருக்கிற நடிகர்கள், மொத்த குழுவினரும் காரணம். அந்த அளவுக்கு ஒவ்வொருத்தரும் ஈடுபாட்டோட நடிச்சிருக்காங்க. நானும் அவங்களை மாதிரி ஒரு பகுதியாதான் இந்தப் படத்துல இருக்கேன்.

‘பாகுபலி, சைரா’ மாதிரி பெரிய படமா கூட இருக்கலாம். நமக்கு என்ன கதாபாத்திரம் கிடைக்குதா அதை நேர்மையா பண்ணணும்னு நினைப்பேன்.

31 நாள்ல ஒரு படத்தை முடிக்கிறது பெரிய விஷயம். படத்தோட இயக்குனர் ரோகினுக்கு இது இரண்டாவது படமா இருந்தாலும் சிறப்பா வேகமா செஞ்சி முடிச்சாரு. நல்ல கதை அமைஞ்சால் திரும்பவும் அவர் படத்துல நடிப்பேன்.

தமிழ் சினிமாவுல நிறைய ஹாரர் காமெடி இதுக்கு முன்னாடி வந்திருக்கு. இந்தப் படம் பண்ணலாமான்னு முதல்ல நம்பிக்கை இல்லாம இருந்தேன். படம் நல்லா இருந்துச்சி, அதனால கண்டிப்பா பண்ணனும்னு முடிவு பண்ணேன். இந்தப் படத்துல நடிச்சது நல்ல அனுபவமா இருந்தது,” என்றார் தமன்னா.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: