Connect with us

Tamil Cinema News

Puli Murugan comes to Tamil

Published

on

puli murugan

Mohanlal’s latest release Puli Murugan is all set to be dubbed and released in Tamil.

Popular production house in Kerala Mulakupadam will release the movie in Tamil.

The movie crossed the 100 crore mark in Malayalam cinema. Kamalini Mukherjee, Jagapati Babu and Namitha played important roles.

Directed by Vysakh, the movie was made at a cost of over Rs 37 crore. It not just collected big but also won acclaims for its technical brilliance.

The movie has cinematography by Shajikumar, stunts by Peter Hein and music by Gopi Sundar. Lyrics are by Snehan and R P Bala.

Tamil Cinema News

‘டெடி’ படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா ?

Published

on

By

டெடி படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா ?

ஸ்டுடியோ க்ரீன் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிப்பில், சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ஆர்யா, சாயிஷா, கருணாகரன், சதீஷ், மகிழ் திருமேனி, மாசூம் ஷங்கர், சாக்‌ஷி அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘டெடி’.

படம் பற்றி இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன் பகிர்ந்து கொண்டவை….

“டெடி பியர் பொம்மைக்கும் ஆர்யாவுக்கு கதையில் ஒரு பெரிய இணைப்பிருக்கிறது. அதனால், நிறைய பெயர்கள் யோசித்தோம். இறுதியில் பரிச்சயமான வார்த்தையான ‘டெடி’ என்ற பெயரையே வைக்கலாம் என முடிவு பண்ணினேன்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்தீர்கள் என்றால் அதற்கான காரணம் விளங்கிவிடும் என நினைக்கிறேன். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை டெடி பியர்களை எப்படி கொஞ்சி மகிழ்வார்களோ, அதே போல் அடுத்தாண்டு இந்த ’டெடி’ படத்தையும் பார்த்து மகிழ்வார்கள். அப்படியொரு விருந்து வைக்கத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு வார்த்தையில் படத்தின் ஜானரைச் சொல்லிவிட முடியாது. படத்தின் நாயகனோடு ஒரு கம்யூட்டர் சம்பந்தப்பட்ட கதாபாத்திரம் கூடவே இருக்கும். முழுமையாக அதை கிராபிக்ஸில் மட்டுமே பண்ண முடியும். அப்படிப்பட்ட ஒரு டெடி பியர் கேரக்டர். அதுவே புதுமையான விஷயம் என நினைக்கிறேன்.

படத்தின் 2-வது முக்கிய கேரக்டர் இது தான் என்று சொல்லலாம். முழுக்க தொழில்நுட்பத்தை வைத்தே செயற்கையாக உருவாக்கி, நடிக்க வைக்கிறோம், சண்டை போட வைக்கிறோம். அது தான் பார்வையாளர்களுக்கு புதுமையாக இருக்கும்.

திருமணத்துக்குப் பிறகு ஆர்யா – சாயிஷா ஜோடியை நடிக்க வைக்க முதலில் பயந்தேன். கல்யாணத்துக்கு முன்பு ஒரு படம் சேர்ந்து பண்ணியிருந்தாங்க. ‘காப்பான்’ படத்தில் ஜோடியாக இல்லாவிட்டாலும், இணைந்து நடித்திருந்தார்கள். அடுத்தடுத்து கேட்டால் பண்ணுவார்களா என்ற சந்தேகத்தில்தான் போய் கேட்டேன். சாயிஷாவின் கேரக்டர் ரொம்பவே முக்கியமானது. கதையைக் கேட்ட ஒரே வாரத்தில் தேதிகள் கொடுத்துவிட்டார்கள்.

கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அசர்பைஜான் நாட்டின் தலைநகரான பாகூ, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய ஊர்களில் ஷுட் பண்ணியிருக்கேன். ரொம்பவே பழமையான நாடு. ஒரு காலத்தில் அதுதான் ரஷ்யாவாக இருந்தது. ரஷ்யாவாக இருக்கும் போது, இந்தியப் படங்கள் மீது பயங்கர ஆர்வமாக இருந்துள்ளார்கள்.
சாயிஷா மேடம் திலீப் குமாருடைய பேத்தி. அதைத் தெரிந்து கொண்டவர்கள் ஷுட்டிங் நடந்த இடத்துக்கு வந்து, ’திலீப் குமார், திலீப் குமார்’ என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

கருப்பு – வெள்ளை காலத்து இந்திப் படங்களைப் பற்றிக் கேட்டால் அவ்வளவு விஷயம் சொல்கிறார்கள். எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. தமிழ்ப் படங்கள் சில இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு, யூ-டியூப் பக்கத்தில் இருக்கிறது. அதை இன்றுவரை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அங்கு ஒரு பாட்டி, ஆர்யா சாரை இழுத்து இழுத்து சத்தமாக பேசிக் கொண்டிருந்தது. நாங்கள் ஏன் இப்படி தொந்தரவு செய்கிறார் என தடுக்கப் போனோம். உடனே ‘மதராசப்பட்டினம்’ டிவிடியை எடுத்து ஆர்யாவிடம் காட்டி ‘இது நீ தானே’ என்று காட்டிக் கொண்டிருந்தது.

பொதுவாகவே இந்தியப் படங்கள் மீது அவ்வளவு காதல் வைத்திருக்கிறார்கள். அங்கு 15 நாட்கள் ஷுட் பண்ணியிருக்கோம்.

‘டிக்:டிக்:டிக்’ படத்துக்கு அப்புறம் ஞானவேல்ராஜா சாரை சந்தித்தேன். பட்ஜெட், எத்தனை நாள் ஷுட்டிங் என எதுவுமே கேட்காமல் படம் பண்ணலாம் என்று சொன்னார். படத்தின் பட்ஜெட் இது தான் என இப்போது வரை முடிவு பண்ணவே இல்லை. படத்துக்கு என்ன தேவையோ, கொடுத்துக்கிட்டே இருக்கார்.

‘மதராசப்பட்டினம்’ படத்துக்குப் பிறகு ஆர்யா சாருக்கு ஒரு பெரிய பட்ஜெட் படமாக இந்தப் படம் இருக்கும். முழுமையான சுதந்திரம் கொடுத்திருக்கார். கண்டிப்பாக அவருடைய நிறுவனத்துக்கு நிறைய மைல்கல் படங்கள் இருக்கிறது. அதில் ‘டெடி’ இணையும் என்று சொல்வேன்.

’நாணயம்’ படத்தில் 2-வது யூனிட் கேமராமேனாக யுவராஜ் பணிபுரிந்திருந்தார். அப்போதிலிருந்தே பழக்கம். அவர் கேமராமேனாக பணிபுரிந்த ‘ஜாக்சன் துரை’ மற்றும் ‘ராஜா ரங்குஸ்கி’ படங்கள் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. ஆகையால் இந்தப் படத்தில் அவரை ஒப்பந்தம் செய்தேன். உண்மையிலேயே காட்சிகள் எல்லாம் மிரட்டலாக வந்துள்ளது.

இசையமைப்பாளராக இமான், சண்டை இயக்குநராக சக்தி சரவணன், எடிட்டராக சிவநந்தீஸ்வரன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தொழில்நுட்ப ரீதியாக ரொம்ப ஸ்ட்ராங்கான படம்.

’குறும்பா’ என்ற பாடல் ‘டிக்:டிக்:டிக்’ படத்துக்கு ஒரு பெரிய பலமாக இருந்தது. அதே போல் ‘டெடி’ படத்திலும் இமான் இசை பேசப்படும்.

கிராபிக்ஸ் வேலைகள் மட்டும் 4 மாதம் முழுமையாக நடக்கப் போகிறது. ‘டிக்:டிக்:டிக்’ படத்துக்கு கிராபிக்ஸ் பணிகளை ஒருங்கிணைத்த அருண்ராஜ் தான் இந்தப் படத்துக்கும் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்ள உள்ளார். நெக்ஸ்ட் ஜென் நிறுவனம் செய்யவுள்ளது. இப்போதே ஷுட்டிங் முடிச்சுட்டோம். ஆனால், மார்ச் மாதம் வரை கிராபிக்ஸ் வேலை மட்டும் நடக்கப் போகுது. அது ஏன் என்பதை எல்லாம் படமாகப் பார்க்கும் போது புரியும்,” என்றார்.

Continue Reading

Tamil Cinema News

ரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் – யார் ஜோடி ?

Published

on

By

ரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் - யார் ஜோடி ?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்களின் அறிவிப்பு நேற்று முதல் வெளியானது.

நேற்று கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போவதாக அறிவித்தார்கள். அடுத்து பிரகாஷ் ராஜ் நடிக்கப் போவதாகவும் அறிவித்தார்கள்.

இன்று மீனா, குஷ்பு ஆகியோர் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

1995ம் ஆண்டு வெளிவந்த ‘முத்து’ படத்திற்குப் பிறகு 24 வருடங்கள் கழித்து ரஜினிகாந்த், மீனா மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார்கள். அது போல, 1992ம் ஆண்டுவெளிவந்த ‘பாண்டியன்’ படத்திற்குப் பிறகு 27 வருடங்கள் கழித்து ரஜினிகாந்த்துடன் குஷ்பு நடிக்க உள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா நடிகை மேனகா, 1981ல் ரஜினிகாந்த் ஜோடியாக ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்துள்ளார்.

பிரகாஷ்ராஜ் 1999ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘படையப்பா’ படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். ஒரு முழுமையான கதாபாத்திரத்தில் ரஜினியுடன் அவர் நடித்ததில்லை.

இப்படி பெரிய இடைவெளிக்குப் பிறகு சிலர் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க உள்ளார்கள். கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் இமான், இயக்குனர் சிவா முதல் முறையாக ரஜினியுடன் பணிபுரிய உள்ளார்கள்.

படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு என மூன்று முக்கிய நடிகைகள் இருப்பதால் இவர்களில் யார் ரஜினி ஜோடியாக நடிக்கப் போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

ரஜினிகாந்த் 168 படத்தில் நடிப்பது பற்றி கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு கூறியிருக்கும் வீடியோக்கள்…

Continue Reading

Tamil Cinema News

தம்பி – ஜோதிகா, கார்த்தி திறமையானவர்கள் – ஜீத்து ஜோசப்

Published

on

By

தம்பி, ஜோதிகா, கார்த்தி திறமையானவர்கள் - ஜீத்து ஜோசப்

வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் மைன்ட்ஸ் தயாரிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், நிகிலா விமல் மற்றும் பலர் நடிக்கும் படம் தம்பி.

கமல்ஹாசன், கௌதமி நடித்த ‘பாபநாசம்’ படத்திற்குப் பிறகு ஜீத்து ஜோசப் மீண்டும் தமிழில் அவர் இயக்கியிருக்கும் படம்தான் ‘தம்பி’.

இப்படம் குறித்த அனுபவங்களை ஜீத்து ஜோசப் பகிர்ந்தவை…

“நான் மும்பையில் இருக்கும் சமயத்தில் இந்த கதையைக் கூறினார்கள். கதையைக் கேட்டதும் மிகவும் பிடித்து விட்டது. அதேபோல், கார்த்தியும் ஜோதிகாவும் இக்கதையை கேட்டதும் நடிக்க சம்மதித்துவிட்டார்கள் என்றதும் மகிழ்ச்சி கூடிவிட்டது. அப்போதே இது ஒரு பெரிய திரைப்படமாக இருக்கும் என்பது உறுதியாகி விட்டது. உடனே இப்படத்தை இயக்க ஒப்புக்கொண்டேன். ஏனென்றால், இருவருமே திறமை வாய்ந்த நடிகர்கள். மேலும், இப்படத்தை நான் ஒப்புக் கொள்ளும் முன்பே கார்த்தி, ஜோதிகா இருவரும் இந்த தயாரிப்பாளர் சூரஜுக்கு ஒப்பந்தமாகி இருந்தார்கள்.

இப்படத்தின் கதை இரண்டு குடும்பத்தின் கதை, இரண்டு குடும்பங்களின் உறவுகளுக்கு இடையே நடக்கும் ஒரு கதை. அடிப்படையில் குடும்பக் கதையாக இருந்தாலும் இதில், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை தருணங்கள் என காட்சிகள் நிறைந்திருக்கும்.

‘தம்பி’ படத்தைப் பார்க்க வருபவர்கள் படத்துடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள், எதிர்பாராது நடக்கும், காட்சிகளை ரசிப்பார்கள். படம் முழுவதும் ஆர்வத்துடன் பார்க்க வேண்டும் என்பதால் கதைக்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறேன்.

ஒவ்வொரு படத்திற்கு ஒவ்வொரு மாதிரி வித்தியாசத்தைக் கொடுத்து வருகிறேன். இப்படத்திற்கு திரைக்கதை ரின்சில் டிசில்வா எழுதியிருந்தாலும், என்னுடைய உள்ளீடும் இருக்கிறது.

நான் கேரளாவைச் சேர்ந்தவன், ரின்சில் டிசில்வா மும்பையிலிருந்து வந்தவர். ஆனால், கதையோ தமிழ் கலாச்சாரத்தை சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும். ஆகையால், மணிகண்டனை (விக்ரம் வேதா படத்திற்காக வசனம் எழுதியவர்) ஈடுபடுத்தி இருக்கிறோம். அவருடைய யோசனைகளையும் சேர்த்திருக்கிறோம். நான்கு பேருடைய மூளையையும் பயன்படுத்தி திரைக்கதை அமைந்திருக்கிறது. இதுதான் இப்படம் நன்றாக வருவதற்குக் காரணமாக இருக்கிறது.

அம்மா, அப்பா என்று பல உறவுகள் இப்படத்தில் இருந்தாலும், அக்கா, தம்பி உறவை மையப்படுத்தி இக்கதை அமைந்திருப்பதால் கார்த்திக்கும், ஜோதிகாவிற்கும் சரிசமமான முக்கியத்துவம் இருக்கும். இயற்கையாக ஒரு மனிதன் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு மாதிரியான மனிதனாக காணப்படுவான். அதுதான் கார்த்தியின் கதாபாத்திரம். மேலும், இதில் சஸ்பென்ஸ் நிறைந்திருக்கும்.

கார்த்தி திறமையான நடிகர். தன்னுடைய கதாபாத்திரம் என்னவென்பதைப் புரிந்து கொண்டு நேர்மையாகவும், கடின முயற்சியும் எடுத்து நடிக்கக் கூடிய மனிதர். சண்டைக் காட்சிகள், சென்டிமெண்ட் காட்சிகள் என எல்லாவற்றையும் திறமையாக செய்யக்கூடியவர் கார்த்தி.

ஜோதிகா திறமையான அனுபவம் மிக்க நடிகை என்பதை ஏற்கனவே நிரூபித்துவிட்டார். அவருடைய நடிப்பு பாணியும், தன்னுடைய கதாபாத்திரத்தைக் கையாளும் விதமும் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த படத்திலும் சிறப்பான நடிப்பைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பே தன்னுடைய வசனங்களைப் பெற்று கொண்டு பயிற்சி எடுப்பார்.

தம்பி, ஜோதிகா, கார்த்தி திறமையானவர்கள் - ஜீத்து ஜோசப்

கார்த்தி, ஜோதிகா இருவருமே தொழிலில் திறமைவாய்ந்த வல்லுநர்கள். தங்களுடைய கதாபாத்திரங்களை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டுமென்பதற்காக எந்த அளவுக்கும் கடின முயற்சி எடுக்கக் கூடியவர்கள்.

சத்யராஜ், அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வழக்கமான அப்பாவாகவும் இல்லாமல், அதேசமயம் தேவையற்ற கதாபாத்திரமாகவும் இல்லாமல் இருக்கும். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரத்தில் ஆர்வமாக இருக்கிறார். அவருடைய நடிப்பும் நன்றாக வந்திருக்கிறது.அதே போல், இப்படத்திலுள்ள அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு முக்கியத்துவம், ஒரு நோக்கம் மற்றும் தொடர்பு இருக்கும்.

கார்த்தியின் ஜோடியாக நிகிலா விமல் நடித்திருக்கிறார். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் முக்கியத்துவம் இருக்கும். ஒவ்வொரு நடிகர்களிடமும் உங்களுடைய பாத்திரம் இதுதான் என்று முன்பே கூறிதான் நடிக்க வைத்திருக்கிறோம். ஒரு சிறிய கதாபாத்திரத்தைக் கூட நீக்கி விட்டு இப்படத்தை எடுக்க முடியாது.

நான் பரிபூரணமாக இப்படத்தை இயக்கி இருக்கிறேனா என்பது தெரியாது. ஆனால், திரில்லர் கதை என்பதால் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தெளிவாக எழுதி, நன்றாக படித்துவிட்டுத்தான் இயக்கியிருக்கிறேன். முதலில் பெரிய கதையாக இருந்தது. பின்பு அதைத் திருத்தி சிறிது சுருக்கினேன். அதனால், தொடர்பு விட்டுப் போனது, பின்பு மீண்டும் சிறு சிறு காட்சியாக கோர்த்து, எங்கள் குழுவுடன் ஆலோசித்து எடுத்தோம்.

எனக்கு தமிழ் முழுமையாக தெரியாததால், ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும், இந்த காட்சியை எப்படி எடுக்க வேண்டும் என்று ஆலோசித்து எடுத்தோம். இப்படம் குழுவாக இணைந்துதான் எடுத்தோம்.

தம்பி, ஜோதிகா, கார்த்தி திறமையானவர்கள் - ஜீத்து ஜோசப்

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையில் படத்தில் 3 பாடல்கள் உள்ளது. மூன்றும் வெவ்வேறு விதமாக நன்றாக வந்திருக்கிறது. இப்படம் திரில்லர் படம் என்பதால், பின்னணி இசைக்கு முக்கியத்துவம் இருப்பதை உணர்ந்து சிறப்பாக தன்னுடைய செயல்திறனைக் காட்டியிருக்கிறார்.

ஒளிப்பதிவைப் பற்றி ஆர்.டி.ராஜசேகரிடம் நான் எதுவும் கூறவில்லை. காட்சியமைப்புகள் நன்றாக வந்திருக்கிறது.

திரைப்படத்திற்கு மொழி என்றுமே தடையாக இருந்ததில்லை. கார்த்தி அவருடைய வசனங்களை மலையாளத்திலேயே எழுதிக் கொடுங்கள். என்னுடைய உதவியாளரை வைத்து நான் மொழி மாற்றம் செய்து கொள்கிறேன் என்றார். எனது தாய்மொழி மலையாளம் என்பதால், தமிழ் எனக்கு எளிமையாக தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. ஹிந்தி எனக்கு தெரியும். ஆனால், சரளமாக பேசத் தெரியாது. ஆகையால், ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்து நடிக்க வைத்தேன்.

நான் பார்த்த வரையில் மோகன்லால் மாதிரி கார்த்தியும், ஜோதிகாவும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள்.

அனைவரும் திரையரங்கிற்கு வந்து திரைப்படம் காணுங்கள். நல்ல பொழுதுபோக்கான குடும்ப உறவுகளை மையமாக வைத்து சஸ்பென்ஸ் நிறைந்த அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். மேலும், படம் பார்த்துவிட்டு திரும்பும்போது சந்தோஷமாக திரும்புவீர்கள் என்பதை தைரியமாகக் கூறுவேன்,” என்கிறார்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: