Connect with us

Tamil Cinema News

‘மீ டூ’ பணக்காரர்கள் பிரச்சினை – இயக்குனர் கரு பழனியப்பன்

Published

on

rajavukku raja karu palaniappan

அக்கூஸ் புரொடக்ஷன் சார்பில் பி.டி. சையது முகமது தயாரித்துள்ள படம் ‘ ராஜாவுக்கு ராஜா’ .

ஏ.வசந்தகுமார் இயக்கியுள் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர், இயக்குநர் தியாகராஜன் வெளியிட இயக்குநர்கள் ஏ.வெங்கேஷ் , கரு.பழனியப்பன் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் கரு.பழனியப்பன் பேசும் போது

“இந்த விழாவுக்கு என்னை நடிகை சோனா தான் அழைத்தார். அவர் நான்கு ஆண்டுகளுக்குப் பின் இதற்காகப் போன் செய்தார். படத்தின் இயக்குநர் எப்படியாவது கரு.பழனியப்பனை அழைத்து வர வேண்டும் என்று கூறினார் என்றார். இப்போதெல்லாம் பிரச்சினைகளை ஆடியோ விழாவில்தான் பேசவேண்டியுள்ளது.

இன்று ‘மீ டூ’ பற்றிப் பேசுகிறார்கள். இவர்கள் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பற்றிப் பேசுவதுண்டா ?. ராஜலட்சுமிக்கு நேர்ந்த அந்தக் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா ?. ‘மீ டூ’ என்பது இரண்டு பணக்காரர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதை அவர்களே பேசித் தீர்த்துக் கொள்வார்கள். மீடியாக்கள் ‘மீ டூ’ பற்றி இவ்வளவு பேசுகிறார்கள். எந்த மீடியாவாவது ஒடுக்கப்பட்டவர்களுக்கு, எளிய மக்களுக்கு, இப்படி எங்கு பார்த்தாலும் நடக்கும் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா ?. அதை சாதாரணமாகக் கடந்து போகும் ஒன்றாகத்தான் பார்க்கிறார்கள்.

மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு வெள்ளிக்கிழமை தோறும் படம் வரும். அதுபோல இந்த நடிகர் மக்கள் நண்பன் விநாயக் தயாரிப்பாளர், இயக்குநர், திரையரங்கு உரிமையாளர் அனைவருக்கும் நண்பனாகி வெற்றி பெற வாழ்த்துக்கள்,” என்றார்.

விழாவில் இயக்குநர் பேரரசு பேசும் போது

“சினிமாவை பொழுது போக்கு என்று பார்த்த காலம் போய் இன்று சினிமாக்காரர்களின் வாழ்க்கை மக்களுக்குப் பொழுதுபோக்காகி விட்டது. மீ டூ விஷயத்தில் எது பொய் ? எது உண்மை ? என்பதே தெரியவில்லை. சினிமாவில் எத்தனையோ சங்கங்கள் இருக்கின்றன. அவை எத்தனையோ பிரச்சினைகளைத் தீர்த்துள்ளன. மீ டூவால் பிரச்சினை தீராது. சங்கம்தான் தீர்வைத் தேடித் தரும். பிரச்சினை இருந்தால் சங்கத்தை அணுகலாம். அதை விட்டு விட்டு நமக்கு நாமே சினிமாவைக் கேவலப்படுத்தக் கூடாது. சினிமாவை சினிமாக் காரர்களே களங்கப்படுத்தக் கூடாது,” என்றார்.

விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சையத் முகமது, பட நாயகன் வி.ஆர் விநாயக், படத்தின் இயக்குனர் ஏ. வசந்தகுமார், இயக்குநர்கள் ஏ.வெங்கடேஷ் , தருண் கோபி, நடிகர்கள் மகாநதி சங்கர், ரியாஸ்கான், பவர் ஸ்டார் சீனிவாசன், தியாகராஜன், நடிகைகள் சோனா, சிந்து, ஒளிப்பதிவாளர் காசி விஷ்வா, இசையமைப்பாளர் ஜெயக்குமார், படத்தின் பாடலாசிரியர் காவியன், கவிஞர் சினேகன், தயாரிப்பாளர் ஸ்டார் குஞ்சுமோன், மொய்தீன்கான், அஜ்மல் ,ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

Tamil Cinema News

பிகில் – வழக்கு தொடர்ந்த உதவி இயக்குனரின் பதிவு

Published

on

By

பிகில் - வழக்கு தொடர்ந்த உதவி இயக்குனரின் பதிவு

‘பிகில்’ படத்தின் கதை சம்பந்தமாக உதவி இயக்குனர் கே.பி. செல்வா என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அது பற்றி கே.பி. செல்வா அவருடைய பேஸ்புக் பக்கத்தில் தற்போது பதிவிட்டிருப்பதாவது,

“ஒரு தயாரிப்பாளர் கிட்ட கதையை கொடுத்துட்டு வந்ததுக்கப்பறம் அவங்க கிட்ட இருந்து ஒரு கால் வராதா நம்ம வாழ்க்க மாறாதான்னு யோசிக்கிற நிறைய உதவி இயக்குனர்கள்ல நானும் ஒருத்தன்,

போன தீபாவளிக்கு இந்த நேரம் எங்களுக்குள்ள இந்த கதை பிரச்னை தொடங்குச்சு !! உங்க கிட்ட நான் காசு கேட்டு வந்தனா இல்ல எதுக்கு வந்தேன்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல ஏன்னா நானும் உங்க ஆட்களும் பேசின conversation வாய்ஸ் ரெகார்ட் உங்க கிட்ட இருக்கு ஒரு வேல மறந்து இருந்தா அத கேளுங்க !! அண்ட் இது விஷயமா ஜனவரி 2019 எழுத்தாளர் சங்கத்துல நான் புகார் கொடுத்த !!

அப்ப அவங்க ஷூட்டிங் கூட ஆரம்பிக்கல, அப்புறம் உண்மையாவே அந்த இயக்குனர் ஜூலை 2019 கதை பதிவு பண்ணி இருந்தா ஏன் என்கிட்ட அத பத்தி எழுத்தாளர் சங்கம் என்னோட புகாரை விசாரிக்கும் போதே இத சொல்லல !! எதுக்கு என்ன நீதிமன்றத்துக்கு போங்கன்னு எழுத்தாளர் சங்கம் சொல்லணும் !!

இப்ப வர அவங்க கிட்ட இருந்து எந்த பதிலும் வரல !! நாங்க படத்தை தடை செய்யணும்ன்னு ஒரு விதத்துலையும் நினைக்கல !! எங்க நோக்கமும் அது இல்ல !! காசுக்காக விளம்பரத்துக்காக வர்றான், இவனுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு இவ்ளோ பெரிய இயக்குனர பத்தி பேசன்னு நிறைய பேர் சொல்றீங்க, என் உரிமையை எனக்கான அங்கீகாரத்தை கேக்கணும்ன்னு நெனச்ச கேட்ட அவ்ளோதான், இதுக்காக ஒவ்வொரு நாளும் அந்த இயக்குனர் ஆபீஸ் வாசல்ல நிக்கும்போது அவரோட ஆட்கள், செக்யூரிட்டி என்ன பாக்குற விதம் இருக்கே அந்த வலி யாருக்கும் புரியாது, எங்க நோக்கம் இவ்ளோ கோடி இன்வெஸ்ட்மென்ட் பண்ண படத்தை தடை செய்றது இல்ல, அந்த மாதிரி ஒரு கேவலமான எண்ணம் உள்ள ஆட்களும் நாங்க இல்ல, எனக்கு கடவுள் தொணைக்கு இருக்காரு,
நீங்க என்ன பத்தி பொய்யா பேசி உங்க தரத்தை நீங்களே கொறச்சிக்காதிங்க !! Respect your enemy !! அதனால உண்மையா நேர்மையா பேசுங்க !! அதவிட்டுட்டு பணம் கேட்டான் அத கேட்டான்னு சில்ற மாதிரி பேசாதீங்க !!
Ignore negativity !! படத்துல கூட negative கேரக்டர் இல்லனா positive character ஹீரோவுக்கு வேலையும் இல்ல valueவும் இல்ல !! So im happy that im in negative shade in your point of view !! End of the day நான் உங்கள ஜெயிக்கல ஆனா உங்களுக்கு நிகரா சண்ட செஞ்ச !! அது போதும் நெறைய கத்துக்கிட்டு எக்கச்சக்க அனுபவம் இந்த ஒரு வருஷத்துல இது நீங்க சொல்ற காச விட பெருசு so எல்லாத்துக்கும் நன்றி !!

Kp.Selvah

என அவர் பதிவிட்டுள்ளார்.

Continue Reading

Tamil Cinema News

பிகில் – அமெரிக்காவில் எவ்வளவு தியேட்டர்களில் ரிலீஸ்

Published

on

By

பிகில் - அமெரிக்காவில் எவ்வளவு தியேட்டர்களில் ரிலீஸ்

எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராப், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பிகில்’.

இப்படம் அடுத்த வாரம் அக்டோபர் 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

அமெரிக்காவில் இப்படத்தை இதற்கு முன் இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

அது பற்றி அமெரிக்காவில் படத்தை வெளியிடும் பிரைம் மீடியா நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 24ம் தேதியே அமெரிக்காவில் பிரிமீயர் காட்சிகளை நடத்த உள்ளார்களாம். மேலும் அக்டோபர் 25ம் தேதி அமெரிக்கா முழுவதும் 41 மாநிலங்களில், 160 நகரங்களில் 250க்கும் அதிகமான தியேட்டர்களில் படத்தை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

வரும் திங்கள் கிழமை அது பற்றிய முழு விவரத்தையும் அளிக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

Continue Reading

Tamil Cinema News

பிகில், கைதி – அக்டோபர் 25ல் ரிலீஸ்

Published

on

By

பிகில், கைதி - அக்டோபர் 25ல் ரிலீஸ்

2019ம் வருடத்தின் தீபாவளி வெளியீடாக விஜய் நடிக்கும் ‘பிகில்’, கார்த்தி நடிக்கும் ‘கைதி’ ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.

இந்த வருடத்தின் தீபாவளி அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு முன்னதாகவே அந்தப் படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இன்று மாலை இரண்டு படங்களின் வெளியீடு பற்றியும் அடுத்தடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

அதன்படி ‘பிகில், கைதி’ படங்கள் அக்டோபர் 25ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ளன.

இந்த வருட தீபாவளி சினிமா கொண்டாட்டம் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பமாகிறது.

விஜய், கார்த்தி படங்கள் முதல் முறையாக ஒரே நாளில் போட்டியில் குதிக்கின்றன.

கார்த்தியின் ‘கைதி’ பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தான், விஜய்யின் அடுத்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

 

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: