Connect with us

Movie Reviews

சண்டகோழி 2 – விமர்சனம்

Published

on

sandakozhi-2-review

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த படங்களில் சில மறக்க முடியாத படங்கள் என ஒரு பட்டியல் உண்டு. அந்தப் பட்டியலில் 2005ம் ஆண்டு வெளிவந்த ‘சண்டக்கோழி’ படத்திற்கும் உண்டு.

சுமார் 13 வருடங்கள் கழித்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘சண்டக்கோழி 2’ இன்று வெளிவந்துள்ளது. அடுத்தடுத்த பாகப் படங்கள் என்றாலே முதல் பாகத்துடன் ஒப்பீடு இருப்பது வழக்கம். அந்த விதத்தில் இந்தப் படத்திற்கும் முதல் பாகத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் விறுவிறுப்பிலும், ஆக்ஷனிலும் குறையில்லை, ஆனால், மீரா ஜாஸ்மினின் துறுதுறுப்பு, லாலின் வில்லத்தனம் ஆகிய முதல் பாகத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் இரண்டாம் பாகத்தில் இல்லை. இருப்பினும் இந்த ‘சண்டக்கோழி 2’ படத்தை ஒரு பொழுதுபோக்குப் படமாக ரசிக்கலாம்.

முதல் பாகத்தில் வில்லன் கதைக்குள் நுழைவதும், அவரை நாயகன் எதிர்ப்பதும் மிகவும் யதார்த்தமாக இருக்கும். அது படத்திற்கு அவ்வளவு உயிரோட்டமாக இருந்தது. இந்தப் படத்தில் யாரை நாயகன் எதிர்க்கப் போகிறார் என்பது படத்தின் ஆரம்பத்திலேயே தெரிந்துவிடுவதால் அந்த உயிரோட்டம் கதையுடன் சேரவில்லை. இதைச் சரிக்கட்டி இருந்தால் இந்த ‘சண்டக்கோழி 2’ முதல் பாகத்தை விட டபுள் மடங்கு வெற்றியைக் கொடுக்கும்.

ஊர் திருவிழாவிற்காக வெளிநாட்டிலிருந்து ஏழு வருடம் கழித்து வருகிறார் விஷால். திருவிழாவிற்கான பஞ்சாயத்தில் அப்பாவை எதிர்த்துப் பேசியவனை எதிர்த்து அடிக்க நினைக்கிறார்.  அந்தத் திருவிழாவில் ஏழு வருடங்களுக்கு முன்பு தனது கணவனைக் கொலை செய்தவனின் வம்சத்தை அழித்து, அதில் மிச்சமிருக்கும் ஒருவரை தற்போது நடக்கும் திருவிழாவில் கொல்லத் துடிக்கிறார் வரலட்சுமி. வரலட்சுமி யாரைக் கொல்லத் துடிக்கிறாரோ அவர் விஷால் அப்பா ராஜ்கிரணின் ஆதரவில் இருக்கிறார். அந்தக் குடும்பத்து வம்சத்தைக் காப்பதறாக ராஜ்கிரண் வாக்கு கொடுத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் வரலட்சுமி நினைத்தது நடக்கிறதா, விஷால் குடும்பம் அவரைக் காக்கிறதா என்பதுதான் படத்தின் கதை.

‘சண்டக்கோழி’யாக பறந்து பறந்து அடிக்கிறார் விஷால். அவருடைய ஆக்ஷன் காட்சிகள் ஒவ்வொன்றும் அதிரடியாக அமைந்துள்ளன. இப்படிப்பட்ட கிராமத்து ஆக்ஷன் படங்கள் விஷாலுக்கு எப்போதுமே நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளன. அது இந்தப் படத்திலும் தொடரும்.

முதல் பாகத்தில் மீரா ஜாஸ்மின் செய்த மேஜிக்கை கீர்த்தி சுரேஷும் செய்ய முயற்சிக்கிறார். அவருக்கெனவும் ஒரு ரசிகர் கூட்டம் தயாராகிவிட்டது என்பது படத்தில் அவர் அறிமுகமாகும் காட்சியில் கிடைக்கும் கைத்தட்டலில் தெரிகிறது. மதுரை வட்டாரப் பேச்சைப் பேசி துறுதுறுப்பாகத்தான் நடித்திருக்கிறார் கீர்த்தி.  விஷாலை யார் என்று தெரியாமல் அவர் கிண்டல் செய்யும் காட்சிகள்தான் படத்தின் சுவாரசியமான காமெடிக் காட்சிகள். அதிலும் அவரது உயரத்தைப் பற்றி கிண்டலடிப்பது கிராமத்துக் குசும்பு.

படம் வெளிவருவதற்கு முன்பு வரலட்சுமிதான் படத்தின் வில்லி என்றதும், ‘திமிரு’ ஈஸ்வரி மாதிரி இருக்குமோ என பலரும் சந்தேகப்பட்டார்கள். ஆனால், வரலட்சுமி அவருடைய உடல்மொழியிலும், திமிரான பார்வையிலும், ஷார்ப் ஆன வசனங்களிலும் பேச்சி ஆக எழுச்சி ஆக நடித்திருக்கிறார்.

முதல் பாகத்தில் பார்த்த அதே கம்பீரம், அதே பாசமான உணர்வுடன் ராஜ்கிரண். படத்தில் முதல் பாகத்தில் இருந்த தென்னவன், சண்முகராஜன், கஞ்சா கருப்பு ஆகியோரும் உண்டு. இன்னும் சில ஊர் பெரியவர்களும் இருக்கிறார்கள். 13 வருடங்களுக்குப் பிறகும் பலரும் இன்னும் அதே தோற்றத்தில் இருப்பது ஆச்சரியம். இரண்டாம் பாகத்தில் கூடுதலாக டிரைவர் ஆக முனிஷ்காந்த்.

யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. ‘கம்பத்துப் பொண்ணு, செங்கரட்டான் பாறையிலே…’ ஆட்டம் போட வைக்கின்றன.

திருவிழாக் காட்சிகள் ‘செட்’ போடப்பட்டு படமாக்கப்பட்டுள்ளன. அவை நிஜ திருவிழாவைப் போன்ற வடிவமைக்கப்பட்டுள்ளன. சக்திவேல் ஒளிப்பதிவு படத்திற்குப் பெரிய பலம்.

இடைவேளை வரை படம் நகர்வதே தெரியவில்லை. இடைவேளைக்குப் பின் ராஜ்கிரண் அடிபட்டதும் படத்தின் வேகம் கொஞ்சம் குறைகிறது. கிளைமாக்சில் அதை ஈடு செய்து விடுகிறார்கள்.

சண்டக்கோழி 2 – சீற்றம்

Movie Reviews

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்

4 Tamil Cinema Rating – 3.5/5

Published

on

By

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்

கதை

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்படாமல் விட்ட குண்டுகள் சில இந்திய கடற்கரையில் கரை ஒதுங்குகின்றன. மாமல்லபுரத்தில் அப்படி கரை ஒதுங்கும் ஒரு குண்டு, சென்னைக்கு வந்து, அங்கிருந்து பாண்டிச்சேரிக்கு செல்கிறது. அந்த குண்டடை சென்னையிலிருந்து மற்ற இரும்பு சாமான்களுடன் ஏற்றிச் செல்லும் லாரி டிரைலர் தினேஷுக்கு அந்த குண்டு பற்றி தெரிய வருகிறது. அதை செயலிழக்க வைக்க அவர் முயற்சி செய்கிறார். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

நடிப்பு

தனக்கான கதையும், கதாபாத்திரங்களும் கிடைக்கும் போது தினேஷுக்குள் ஒளிந்திருக்கும் நடிகர் மிக யதார்த்தமாக எட்டிப் பார்க்கிறார். இந்தப் படத்தில் ஒரு நிஜமான இளம் லாரி டிரைவர் எப்படி இருப்பாரோ அப்படியே இருக்கிறார். வாயைத் திறந்தாலே பேசிக் கொண்டே இருக்கும் ஒரு குணம். பல காட்சிகள் அட, அசத்துகிறாரே என சொல்ல வைத்திருக்கிறார்.

நாயகி ஆனந்திக்கு தினேஷைக் காதலிப்பதும், குடும்பத்தினரிடம் திட்டு வாங்குவதும்தான் வேலை. இவருக்கும் தினேஷுக்குமான காதலில் இன்னும் கொஞ்சம் அழுத்தத்தைக் காட்டியிருக்கலாம்.

காயலான் கடை முதலாளியாக மாரிமுத்து, இவர் சொன்னதை அப்படியே செய்து காட்டும் முனிஷ்காந்த் மனதில் பதிகிறார்கள். மற்ற கதாபாத்திரங்களில் ரித்விகா அதிகம் கவர்கிறார். இன்ஸ்பெக்டர் லிஜேஷ் குறிப்பிட வைக்கிறார்.

இசை, மற்றவை

தென்மாவின் இசையில் கதையுடன் சேர்ந்து பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலத்தைக் கொடுத்திருக்கின்றன. கிஷோர் குமார் ஒளிப்பதிவு கதைக்கு என்ன தேவையோ அதனுடன் இயல்பாய் அமைந்துள்ளது. கலை இயக்குனர் ராமலிங்கம் தன் முழு உழைப்பை படத்தில் காட்டியிருக்கிறார்.

+

புதிய கதைக்களம், இயல்பான கதாபாத்திரங்கள், அதில் அனைவரின் சிறந்த நடிப்பு

இடைவேளைக்குப் பின் பயணத்திலேயே நகர்கிறது கதை. திரைக்கதை சிறப்பாக இருந்தாலும் இன்னும்  சில அழுத்தமான காட்சிகள் படத்தில் இருந்திருக்கலாம்.

Continue Reading

Movie Reviews

ஜடா – விமர்சனம்

4 Tamil Cinema Rating – 2.5/5

Published

on

By

ஜடா - விமர்சனம் - 4 Tamil Cinema

கதை

வட சென்னை பகுதியைச் சேர்ந்த கதிருக்கு கால்பந்து விளையாட்டு வீரராக வேண்டும் என ஆசை. அதே சமயம் தனக்கு கால்பந்து விளையாட சொல்லிக் கொடுத்து ‘செவன்ஸ்’ என்ற முரட்டுத்தமான கால்பந்து போட்டியில் மரணமடைந்த கிஷோருக்காக ‘செவன்ஸ்’ விளையாடி, அவரைக் கொன்றவர்களைப் பழி வாங்க நினைக்கிறார். அது நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நடிப்பு

‘பிகில்’ படத்திற்குப் பிறகு மீண்டும் கால்பந்து விளையாட்டு வீரராக கதிர். இந்தப் படத்தில் தனி நாயகனாக ஜொலிக்கிறார். கால்பந்து விளையாட்டில் தேர்ந்தவராக நடித்திருக்கிறார். கிளைமாக்சுக்கு முன்பாக ஆக்ஷனிலும் இறங்குகிறார். இரண்டாவது கதாநாயகன் போல படம் முழுவதும் வருகிறார் யோகி பாபு. ஆனால், அடிக்கடி காணாமல் போய்விடுகிறார். நாயகி ரோஷினி பிரகாஷுக்கு அதிக வேலையில்லை. வில்லனாக ஓவியர் எபி ஸ்ரீதர், தோற்றத்தில் மிரட்டுகிறார். கால்பந்து கோச்சாக கிஷோர், வழக்கம் போல மனதில் இடம் பிடிக்கிறார்.

இசை, மற்றவை

சாம் சிஎஸ் இசையில் ‘அப்படிப் பார்க்காதே’ பாடல் இனிமை. ஒளிப்பதிவாளர் கால்பந்து காட்சிகளிலும், இடைவேளைக்குப் பின் கிராமத்துக் காட்சிகளிலும் நன்றாக லைட்டிங் செய்திருக்கிறார்.

+

இடைவேளை வரையிலான படம்

இடைவேளைக்குப் பிறகான படம்

Continue Reading

Movie Reviews

தனுசு ராசி நேயர்களே – விமர்சனம்

4 Tamil Cinema Rating – 2.25/5

Published

on

By

தனுசு ராசி நேயர்களே விமர்சனம்

கதை

ஜோசியத்தின் மீது அதிக நம்பிக்கை உள்ளவர் ஹரிஷ் கல்யாண். ஏற்கெனவே ஒரு காதல் தோல்வியடைந்தவருக்கு டிகங்கனா சூர்யவன்ஷி மீது காதல் வருகிறது. ஆனால், டிகங்கனா மார்ஸ் கிரகத்திற்குச் செல்லும் ஆசையில் இருப்பவர். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

நடிப்பு

இந்தக் கதை மீதும், தன் கதாபாத்திரம் மீதும் எப்படி நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தார் என்று தெரியவில்லை. கொஞ்சம் நகைச்சுவை கலந்த கதாபாத்திரம். ஆனால், அவருக்கு அந்த நடிப்பே வரவில்லை. காதலில் மட்டும் கொஞ்சம் ஜொலிக்கிறார்.

நாயகி டிகங்கனா மிக அழகாக இருக்கிறார், சிரிக்கிறார், கொஞ்சம் நடிக்கிறார், கிளாமர் காட்டவும் தயங்காமல் இருக்கிறார். நல்ல படங்களைத் தேர்வு செய்தால் தமிழ் சினிமாவில் தனி இடத்தைப் பிடிக்கலாம். இந்தப் படத்தில் இவருக்குத்தான் ராசி வேலை செய்யும் போலிருக்கிறது.

யோகி பாபு, ஒரு நடிகராகவே வந்து படத்தைத் தொகுத்து வழங்குகிறார். இவருக்கும், படத்திற்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை. ரெபா மோனிக்கா ஜான், ரேணுகா, முனிஷ்காந்த் கொடுக்கப்பட்ட வேடத்தில் நடித்துக் கொடுத்துள்ளார்கள்.

இசை, மற்றவை

ஜிப்ரான் இசையில் பாடல்கள் ஒன்று கூட தேறவில்லை. மற்றவர்களின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.

+

நாயகி டிகங்கனா சூர்யவன்ஷி

மற்றவை எல்லாம்…

 

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: