Connect with us

Tamil Cinema News

சர்கார் – நீக்கப்பட உள்ள காட்சிகள் எவையெவை ?

Published

on

sarkar stills

ஆளும் அதிமுக அரசு சார்பாக ‘சர்கார்’ படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளை நீக்க வேண்டும் என அமைச்சர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

அதைத் தொடர்ந்து ‘சர்கார்’ படம் திரையிடப்பட்ட சில தியேட்டர்கள் முன்பாக நேற்று அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தியேட்டர்கள் முன்பாக இருந்த ‘சர்கார்’ பட பேனர்களை அவர்கள் கிழித்து எறிந்தனர்.

இதனிடையே, ‘சர்கார்’ படத்தில் இடம் பெற்ற அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதித்ததாக பிரபல வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

‘சர்கார்’ படத்தில் இடம் பெற்றுள்ள அந்த சர்ச்சை காட்சிகளாக கருதப்படும் பின்வரும் காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்படலாம்.

படத்தில் முதல்வர் பழ. கருப்பையா மகளான வரலட்சுமி கதாபாத்திரப் பெயர் கோமளவல்லி என்பதைக் குறிப்பிடும் காட்சிகள்

வரலட்சுமி நடந்து வரும் போது கட்சிக்காரர்கள் குனிந்து வணங்கும் காட்சி

மருத்துவமனையில் மின்சாரத்துறை, போக்குவரத்துத் துறை, பொதுப்பணித்துறை ஆகியவற்றை விமர்சிக்கும் காட்சிகள்

மக்களை பாதிக்கும் திட்டங்களை வைத்துதான் பணம் சம்பாதிக்கிறோம் என முதல்வர் பழ. கருப்பையா மேடையில் பேசும் காட்சி

கந்து வட்டி கொடுமையால் ஒரு ஏழைக் குடும்பம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்கும் காட்சி

கண்டெய்னரில் பணம் பதுக்கி வைத்துள்ள காட்சி

மிக்சி, கிரைண்டர் ஆகிய இலவசப் பொருட்களை தீயில் தூக்கிப் போடும் காட்சி

ஆகிய காட்சிகள் நீக்கப்படலாம்.

ஆனால், படத்தில் விஜய் அடிக்கடி சிகரெட் பிடிக்கும் காட்சியை நீக்க வேண்டும் என யாரும் எதிர்ப்புக் குரல் எழுப்பவில்லை. பாமகவினர் மட்டும் அந்தக் காட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மறு தணிக்கை செய்யப்படும் வரை ‘சர்கார்’ படத்தின் காலை காட்சிகள் பல ஊர்களில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Cinema News

எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான் – ஏலியன் படம்

Published

on

By

Ellaam Mela Irukuravan Paathuppan

பல இயக்குநர்கள், நடிகர்களுக்கு முகவரி கொடுத்த ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’.

இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வாழ்த்தின் பேசினர்.

இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது,

‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ என்ற தலைப்பைப் பார்க்கும்போது, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை மேல இருக்கறவன் பாத்துப்பான் என்று விடாமல், அறிவியல் புனைக்கதையை வைத்துத் தமிழில் படமெடுக்க வேண்டுமென்று தயாரிப்பாளரும், இயக்குநரும் மெனக்கெட்டு முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்று ட்ரைலர் பார்க்கும்போது தெரிகிறது. ஆரியும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதே போல், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் கடின உழைப்பும் தெரிகிறது.

இப்ராஹிம் ராவுத்தர் நல்ல பெயர் சொல்லும் படங்கள் எடுத்தார். அவர் பெயரை சொல்லும் அளவிற்கு அவர் மகன் முகமது அபுபக்கர் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தமிழில் இனிமையாகப் பேசிய கதாநாயகிக்கு வாழ்த்துக்கள்,” என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது,

திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தவர்கள் இப்ராஹிம் ராவுத்தரும், விஜயகாந்த் அவர்களும் தான். இன்று அவரில்லாமல் அவருடைய மகன் முகமது அபுபக்கர் தலைமையில் இந்த விழா நடக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். கவிராஜ் இம்மாதிரி படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கவில்லை.

பொதுவாக கதாநாயகிகள் மேடையில் அதிகம் பேசமாட்டார்கள். ஆனால், இலங்கை பெண்ணாக இருந்தாலும் தமிழில் பேசி அசத்திவிட்டார். ஆரியின் நடிப்பும், படத்தேர்வின் பாணியும் எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்றார்.

இயக்குநர் அமீர் பேசும்போது,

என்னுடைய வாழ்வில் கேட்டுப் பெறக் கூடாத விஷயங்கள் மூன்று வைத்திருக்கிறேன். கைத்தட்டல், வாழ்த்து மற்றும் நன்றி, கைத்தட்டுங்கள் என்று கேட்பதில் கூச்சப்படுவேன். நாம் பேசுவது நன்றாக இருந்தால் கைத்தட்டல் தானாக வரும்.

நான் இந்த விழாவிற்கு வந்ததற்கு இரண்டு காரணங்கள் தான். ஒன்று ஆரியின் வற்புறுத்தல், இரண்டாவது ராவுத்தர் பிலிம்ஸ். அதுமட்டுமில்லாமல், நான் வந்தால் என் மூலம் இந்த படத்திற்கு விளம்பரம் கிடைக்கும் என்ற நோக்கத்தோடும், தரமான படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் தான் வந்தேன். என்னைப் பொறுத்தவரை திரைத்துறையில் புகழ் நிரந்தரமில்லை.

இப்ராஹிம் ராவுத்தர் மிக எளிமையான மனிதர். அவர் இன்று இருந்திருந்தால் இந்த அரங்கத்தில் எவ்வளவு பெரிய மனிதர்கள் இருந்திருப்பார்கள். மேடை நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட இந்த நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்திருக்கிறது.
விஜயகாந்திற்கு ‘கேப்டன்’ என்று பெயர் வைத்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக அவரை செதுக்கியவர் ராவுத்தர். அப்படி இருந்த நண்பர்கள் ஏன் பிரிந்தார்கள் ? சினிமா அவர்களைப் பிரித்து விடும். அதேபோல் தான் நானும் பாலாவும். திரைத்துறையில் நன்றி என்பது இருக்காது. அப்படியே இருந்தாலும் அது ஊசி அளவு தான் இருக்கும் என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே, நன்றியுள்ள சமுதாயத்தை உருவாக்குவோம்.

மேலும், ஜீவி இல்லாத சினிமா என்பதே இல்லை என்று ஒரு காலம் இருந்தது. அப்படிப்பட்ட அவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார். அதுதான் சினிமா.

சினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள் தெரியுமா ? நட்சத்திரம் என்பது மின்னி மறைவது, அதுபோல தான் சினிமாக்காரர்களும். ஆகவே, புகழும் வெற்றியும் நிரந்தரமில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக, சினிமாத்துறையில் இருப்பவர்கள் அதைப் புரிந்துக் கொண்டு வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஆகையால், வெற்றியடைந்தபின் மற்றவர்களையும் கை தூக்கி விடுங்கள். நீங்கள் வளரும் போதே உங்களுடன் பயணித்தவர்களை உங்களுடனே கூட்டிச் செல்ல வேண்டும்.

எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றிப் பேசுவது பிடிக்காது. இருந்தாலும், சேரன் அந்த நிகழ்ச்சியில் இருப்பதால் பேசுகிறேன். அவரை நான் பிரமிப்பாக பார்ப்பேன். ‘ஆட்டோகிராஃப்’ படத்திற்குப் பிறகு லயோலாவில் ஒரு விழாவிற்கு வருகை தந்த வேளையில் இரண்டாயிரம் பேர் எழுந்து நின்று கைத்தட்டினார்கள். அந்த மரியாதைக்குரிய மனிதர் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரின் நிலைமையைப் பார்த்ததும் கதவை உடைத்து அவரைத் தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது. அந்த நிகழ்ச்சியை நான் பார்த்ததுக் கிடையாது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் தான் பார்த்தேன். மேலும், அந்த நிகழ்ச்சியினால் சமுதாயத்திற்கு எந்த ஒரு பயனும் கிடையாது என்றார்.

இயக்குநர் யு.கவிராஜ் பேசும்போது,

நான் சின்னத்திரையில் இருந்து வந்தவன். என் சேனல் சன் டிவிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ராவுத்தர் பிலிம்ஸ்-ன் அபுபக்கர் கதை கேட்டதும் என் மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்புக் கொடுத்தார். அவரின் தந்தை இப்ராஹிம் ராவுத்தர் 1980, 90 களில் வெற்றிகரமான தயாரிப்பாளராக இருந்தார். அதேபோல அபுபக்கரும் வெற்றிபெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

ஆரியிடம் கதைக் கூற சென்றேன். பாதி கதையைக் கூறிக் கொண்டிருக்கும்போதே என் வீட்டில் இருந்து ஒரு போன் வந்தது. அதைப் புரிந்து கொண்டு மீதிக் கதையை பிறகு கேட்கிறேன் செல்லுங்கள் என்று என்னை அனுப்பி வைத்தார். மறுநாளே நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார். அவர் மிகவும் நல்ல மனிதர். இயக்குநர் அமீருடன் மேடையில் இருப்பதில் பெருமையடைகிறேன்.

மேலும், இப்படத்தின் தலைப்பு எதைக் குறிக்கிறது என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. பொதுவாக ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் கடவுள் என்று தான் கூறுவார்கள். ஆனால், இந்த படம் அறிவியல் சார்ந்த படம்.

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது இன்னமும் சர்ச்சைக்குரிய விஷயமாகத் தான் இருந்து வருகிறது. அதேபோல், வேற்று கிரக வாசிகள் இருக்கிறார்களா? என்று கேள்விக்கான பதிலாக இந்த படம் இருக்கும். இது போன்று அறிவியல் சார்ந்த விஷயங்களைத் தமிழில் ஹாலிவுட் தரத்திற்கு கொடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். இதுபோன்ற படங்களுக்கு ஆதரவு கொடுத்தால் தான் தமிழில் நல்ல திரைப்படங்கள் உருவாகும்,” என்றார்.

நடிகர் ஆரி பேசும்போது,

ராவுத்தர் பிலிம்ஸ் அறிமுகமில்லாத பல இயக்குநர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். முகவரியில்லாத பலருக்கும் முகவரி கொடுத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் இப்படத்தில் ஒப்பந்தமாகும் நேரத்தில் நான் நடித்த ‘நாகேஷ் திரையரங்கம்’ வெளியாகவிருந்தது. அப்படம் வெற்றியடைந்தாலும், தோல்வியடைந்தாலும் சம்பளத்தில் ஏற்ற இறக்கம் இருக்காது என்று கூறினார்கள் ராவுத்தர் பிலிம்ஸ் நிறுவனத்தார்கள். இந்த தலைமுறையில் ஏலியன் வைத்து எடுக்கும் படத்தில் நான் நடித்திருப்பதில் பெருமையடைகிறேன். இயக்குநர் கவிராஜ் கிராஃபிக்ஸ் பற்றிய அறிவு இருக்கிறது. அவர் பாதி கதை கூறும்போதே நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.

அறிவியல் புனைகதைகள் மற்றும் ஏலியன் சார்ந்த விஷயத்தைப் படமாக்க ஹாலிவுட்டில் ரூ.1000/- கோடி செலவு செய்வார்கள். ஆனால், நாங்கள் அந்த தரத்திற்கு இணையாக EFX என்று சொல்ல கூடிய கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ஒரு வருடம் உழைத்திருக்கிறோம்.

அபுபக்கரின் கதாபாத்திரம் அவர் இயல்பு போலவே அமைந்திருக்கிறது. அவர் மூலம் இன்னும் பல இயக்குநர்கள் உருவாவார்கள் என்பதில் ஐயமில்லை.

என் குழந்தையை அமைதியாக்கி விட்டார் இயக்குநர் அமீர். அந்த யுக்தியை கையாண்டு சட்டசபையிலும் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சார்யா பேசும்போது,

இந்த படத்திற்காக அனைவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். பொதுவாக இசையமைப்பாளர்கள் படப்பிடிப்புத் தளத்திற்கு வரமாட்டார்கள். ஆனால், எனக்கு படப்பிடிப்பு தளத்திற்கு செல்வது மிகவும் பிடிக்கும். அங்கு ஒவ்வொருவரின் கடின உழைப்பையும் பார்த்தேன். எனது தந்தை இளையராஜாவிடம் பணியாற்றியிருக்கிறார் என்றார்.

நடிகை ஷாஷூவி பாலா,

நான் இலங்கை பெண். படத்தின் தலைப்பிற்கேற்றவாறு என்னுடைய பயணத்தை தமிழ் சினிமாத் துறையில் ஆரம்பித்திருக்கிறேன். அதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. கதாநாயகன் ஆரி எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தார்.

தயாரிப்பாளர் முகமது அபுபக்கர் பேசியதாவது,

தந்தையின் ஆசியுடன் முதல் படம் நடித்து தயாரித்திருக்கிறேன். படக்குழுவிற்கு நன்றி. என் தந்தையின் புகழ் குறையாத வண்ணம் மேலும், இது போன்று தரமான படங்களைத் தயாரிப்பதன் மூலம் பல தொழில் நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன் என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில், இயக்குநர் கே.பாக்யராஜ் இசை தகட்டை வெளியிட்டார்.

Continue Reading

Tamil Cinema News

போஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’

Published

on

By

போஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’

பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்த போஸ் வெங்கட் ‘கன்னி மாடம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

அப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை சமீபத்தில் நடிகர் சூர்யா வெளியிட்டார்.

படம் பற்றி போஸ் வெங்கட் கூறுகையில்,

“நான் சென்னையில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கும் போது என் வாழ்க்கையில் நடந்த மற்றும் நான் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கினேன். இது பற்றி மேலும் துல்லியமாக சொல்லவேண்டும் என்றால் என் பக்கத்து வீட்டுக்காரரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம்தான் இந்த ‘கன்னி மாடம்’.

சாண்டில்யனின் ‘கன்னி மாடம்’ என்ற சரித்திர நாவல்தான் படத்தின் தலைப்புக்குத் தூண்டுதலாக அமைந்தது. மற்றொரு சூழலில் இந்த ‘கன்னி மாடம்’ என்பது ஒரு நினைவு இடமாக அனுசரிக்கப் படுகிறது.

மக்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கியவர்கள் மறைந்த பிறகு அவர்களை நினைவுகூறும் வகையில் விளக்குகளை ஏற்றி வைப்பர்.

ஸ்ரீராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை தயாரிக்கிறார். சென்னையில் உள்ள சூளைமேடு, மேட்டுக் குப்பம் மற்றும் விஜயராகவாபுரம் போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது

ஹரிஷ் சாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரோபோ ஷங்கர் மற்றும் அந்தோனி தாசன் இப்படத்தில் பாடல்கள் பாடியது இப்படத்தின் கூடுதல் சிறப்பு.

ஹரிஷ் J இனியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிஷல் ஜெய்னி எடிட்டிங், சிவ ஷங்கர் ஆர்ட், விவேகா பாடல், தினேஷ் சுப்புராயன் சண்டை என ஒவ்வொருவரும் அவர்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

மக்கள் அனைவரும் ரசிக்கும்படி இப்படம் இருக்கும்,” என்கிறார் இயக்குநர் போஸ் வெங்கட்.

Continue Reading

Tamil Cinema News

ஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை

Published

on

By

ஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ‘நேர்கொண்ட பார்வை’.

இப்படத்தை பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் உள்ள புகழ் பெற்ற ‘லீ கிரான்ட் ரெக்ஸ்’ தியேட்டரில் திரையிட்டார்கள்.

படத்தில் அஜித்தைப் பார்த்த ஆர்வக் கோளாறு ரசிகர்கள், தியேட்டர் ஸ்கிரீனை சேதப்படுத்தியுள்ளார்கள். அதைத் தொடர்ந்து அந்த தியேட்டர் நிர்வாகம் இனி தமிழ்ப் படங்களைத் திரையிட மாட்டோம் என அறிவித்துவிட்டதாம்.

இதை பிரான்ஸ் நாட்டில் உள்ள தமிழ்ப் படங்களின் வினியோக நிறுவனம் அவர்களது டுவிட்டரில் அறிவித்துள்ளது.

அந்த தியேட்டரில் இதற்கு முன்பு ‘கபாலி, மெர்சல், சர்கார், பேட்ட, விஸ்வாசம்’ உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை வெளியிட்ட வினியோகஸ்தரிடம் தியேட்டர் ஸ்கிரீனை மாற்றித் தரச் சொல்லி நிர்வாகம் கேட்டுள்ளதாம். 7000 யூரோ மதிப்பில், அதாவது 5 லட்சம் செலவில் அந்த ஸ்கிரீனை மாற்றித் தர அவர்களும் சம்மதம் சொல்லிவிட்டனராம்.

இனி, அந்த புகழ் பெற்ற தியேட்டரில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட மாட்டாது.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: