Connect with us

Trending

போட்ட பணத்தை எடுத்த ‘சத்யா’

Published

on

sathya-press-meet

நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரிப்பில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சைமன் கே கிங் இசையமைப்பில் சிபிராஜ், ரம்யா நம்பீசன், ஆனந்தராஜ், சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சத்யா’.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் சத்யராஜ், கதாநாயகன் சிபிராஜ், கதாநாயகி ரம்யா நம்பீசன், நடிகர் ஆனந்த்ராஜ், சதீஷ், இசையமைப்பாளர் சைமன் K கிங், ஒளிப்பதிவாளர் அருண் மணி, எடிட்டர் கெளதம் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு படம் பற்றிய அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

சத்யராஜ்

நான் ‘பாகுபலி’ படத்தின் படபிடிப்பில் இருந்த போது சிபிராஜ் என்னை தொடர்பு கொண்டு ‘ஷனம்’ படத்தைப் பற்றி விசாரிக்கும் படி கூறினார். நான் பிரபாஸிடம் ‘ஷனம்’ படத்தைப் பற்றிக் கேட்டேன். அவர் ‘ஷனம்’, நல்ல படம் எதற்காக கேட்குறீங்க என்றார். அதற்கு நான் என் மகன் சிபிராஜ் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கலாமா என்று கேட்கிறார் என்றேன்.

‘ஷனம்’ தரமான படம் கண்டிப்பாக வாங்கலாம் என்று சிபிராஜும் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அதன் பின் தான் நாங்கள் இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி படத்தை ஆரம்பித்தோம். நான் ‘சத்யா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கி பத்து நாள் கழித்துதான் ‘ஷனம்’ படத்தைப் பார்த்தேன். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தற்போது மிகச் சிறந்த நடிகர்களுடன் ‘சத்யா’ படம் நன்றாக வந்துள்ளது. கமல்ஹாசன் நடித்த ‘சத்யா’ படத்திற்கும் இப்படம் பெருமை சேர்க்கும்.

மிகப் பெரும் பொருட் செலவில் சரித்திரப் படங்களைத் தயாரிக்கும் எண்ணமில்லை. இந்தப் படத்தில் நான் முதலீட்டாளர் மட்டுமே. என் மனைவிதான் தயாரிப்பாளராக இருந்து கொண்டு அனைத்து செலவுகளையும் பார்த்தார். ‘சத்யா’ படம் போட்ட பணத்தை இப்போதே எடுத்துவிட்டது.

சிபிராஜ்

தெலுங்கில் வெளியான ‘ஷனம்’ திரைப்படத்தை நான் முதலில் திரையரங்கில் பார்த்தேன். ‘ஷனம்’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னுடைய அம்மாவும் , தங்கையும் படத்தைப் பார்த்தனர். அவர்களுக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் கலந்து பேசி ‘ஷனம்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கலாம் என்று முடிவு செய்து வாங்கினோம்.

நான் ‘ஷனம்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளேன் என்பதை ட்விட்டரில் அறிவித்தேன். இதை அறிந்த என் நண்பரான நடிகர் விஜய் ஆண்டனி என்னை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். படத்துக்கு டைரக்டர் பிக்ஸ் பண்ணியாச்சா என்று கேட்டார். இல்லை இன்னும் முடிவு பண்ணவில்லை பார்த்துக்கொண்டு இருக்கிறோம் என்றேன். அப்போது அவர் நடித்துக் கொண்டிருந்த ‘சைத்தான்’ திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி என்னிடம் கூறினார். அதன் பின் நான் பிரதீப்பை சந்தித்துப் பேசினேன்.

நாங்கள் முதல் முறை பேசும் போது படத்தைப் பற்றி அதிகம் பேசவில்லை. தமிழைப் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் தான் அதிகம் பேசினோம். பிரதீப் ஏன் படத்தைப் பற்றி கதையைப் பற்றி என்னிடம் அதிகம் பேசவில்லை என்று அடுத்த நாள் நான் அவரிடம் கேட்ட போது , நான் உங்கள் பாடி லாங்குவேஜை நோட் செய்து கொண்டிருந்தேன். உங்களை படத்தில் எப்படி கையாளுவது என்று எனக்குத் தெரிய வேண்டும் அல்லவா என்று கூறினார்.

படம் ஆரம்பிக்கும் போது என்னை புதுவிதமாகக் காட்டவேண்டும் என்று கூறினார். சொன்னது போல என்னை நிஜமாகவே வேற மாதிரி காட்டியுள்ளார். படத்தில் என்னோடு ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இது தவிர சதீஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சைமனின் இசையில் பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளது. யவன்னா பாடல் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. என்னை மட்டுமல்ல படத்தில் நடித்த அனைவரையும் நன்றாக வேலை வாங்கினார் இயக்குநர் பிரதீப். ரம்யா நம்பீசன் அனுபவம் உள்ள நடிகை அவரை இப்படித் தான் நீங்கள் நடிக்க வேண்டும் என்கிறாரே என்று யோசிப்பேன். வரலட்சுமி சரத்குமாரிடம் இயக்குநர் இப்படித் தான் நடிக்க வேண்டும் என்று கூறியதும் அவரை பார்த்து ‘போயா’ என்று கிண்டலாகக் கூறிவிட்டார். இப்படி சீரியசாகவும் , ஜாலியாகவும் சென்றது சத்யாவின் படபிடிப்பு.

இப்படத்தின் படப்பிடிப்பின் போது முத்தக் காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியது உண்மை தான். அதற்குக் காரணம் என்னுடைய மகன் தீரன். அவன் இப்போது சிறுவன் , என்னை ரோல் மாடலாக பார்க்கிறான். நான் எதைச் செய்தாலும் அதை அவன் திரும்ப செய்கிறான். நான் படத்தில் முத்தக் காட்சியில் நடிப்பதைப் பார்த்து, அதே போல் பள்ளிக்குச் சென்று செய்துவிட்டால் பிரச்சனை எனக்குதான். அதனால் இப்போது அது போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன். நிச்சயம் எதிர்காலத்தில் முத்தக் காட்சியில் நடிப்பேன்.

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ‘சத்யா’ படத்தின் டைட்டிலை அவரிடம் கேட்டு முறைப் படி வாங்கி இந்தப் படத்துக்கு வைத்துள்ளோம். கதையில் கதாநாயகனின் பெயர் சத்யா என்பதால் அதையே படத்தின் தலைப்பாக வைத்துவிட்டோம். இந்த டைட்டிலை வாங்கி தந்த ஜான்சன் சாருக்கு நன்றி,” என்றார் சிபிராஜ்.

ஆனந்த்ராஜ்

இந்தத் தலைமுறை நடிகர்கள் அனைவரும் தங்களுடைய சீனியர் நடிகர்களை மதிக்கும் பண்பை கடைபிடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. பெரியவர்களை மதித்தாலே அவர்கள் அடுத்த கட்டத்துக்கு நிச்சயம் செல்வார்கள். சத்யா படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் நான் இல்லாவிட்டால் அதில் சத்யராஜ் அண்ணன் தான் நடித்திருக்க முடியும். சத்யாராஜ் அண்ணன் இன்னும் பல ஆண்டு காலம் நன்றாக வாழவேண்டும். அனைவரையும் மதிக்கும் சிபிராஜ் அடுத்தக்கட்டத்துக்கு செல்வார்.

ரம்யா நம்பீசன்

மிகவும் ஒழுக்கமான நேர்மையான ‘சத்யா’ படக்குழுவினருடன் பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சி. ‘சத்யா’வில் ஒவ்வொரு நிமிடமும் மிகவும் பரபரப்பாக இருக்கப் போகிறது.

‘சத்யா’ படம் டிசம்பர் 8ம் தேதி வெளியாக உள்ளது.

Trending

யு டியூப் பாடல் வரிகள் வீடியோவில் ‘சொடக்கு’ நம்பர் 1

Published

on

By

tsk-sodakku

யு டியூப் வந்த பிறகு, அதில் பலரும் அவர்களது படங்களின் வீடியோக்களைச் சேர்த்து அவரவர் படங்களை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

யார் டீசர், டிரைலர், பாடல்கள் அதிகப் பார்வைகளைப் பெறும் என்பதிலும் போட்டி நிலவி வருகிறது.

டீசர், டிரைலரில் இருந்த அந்த போட்டி இப்போது பாடல்களுக்கும் தொற்றிக் கொண்டது. ஒரு படம் வெளிவருவதற்கு முன்பாக அந்தப் படத்தின் பாடல்களை லிரிக் வீடியோவாக, அதாவது பாடல் வரிகள் என்னவென்று தெரிந்து கொள்ளும் விதத்தில் புகைப்படங்கள் அடங்கிய வீடியோ வெளியிடுவது சமீபத்திய டிரென்ட்.

அதில் இதுவரை ‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்ற ‘ஆளப் போறான் தமிழன்’… பாடலின் லிரிக் வீடியோதான் அதிகப் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. அந்த சாதனையை தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம் பெற்ற ‘சொடக்கு மேல…’ பாடல் முறியடித்துள்ளது.

‘சொடக்கு…’ பாடல் இதுவரை 4,15,62,752 பார்வைகளையும், ‘ஆளப் போறான்…’ பாடல் இதுவரை 4,15,32,688 பார்வைகளையும் பெற்றுள்ளது. இருந்தாலும் லைக் விஷயத்தில் ஆளப் போறான் பாடலை சொடக்கு பாடலால் மிஞ்ச முடியவில்லை.

சொடக்கு லிரிக் வீடியோ

ஆளப் போறான் தமிழன் லிரிக் வீடியோ

Continue Reading

Trending

ஸ்டெர்லைட் போராட்டம், சுத்தமில்லாத நீரைக் குடித்த சரத்குமார்

Published

on

By

sarathkumar-sterlite

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் இன்று 48வது நாளை எட்டியுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பலரும் களத்தில் குதித்து மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு மக்களுக்கு அவருடைய ஆதரவைத் தெரிவித்தார்.

மேலும் போராட்டக்களத்தில் குமரெட்டியாபுரம் மக்கள் பயன்படுத்தும் மாசு கலந்த நீரை அருந்தி அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் குழந்தைகள், சிறுவர்கள், சிறுமியர்கள், பெண்கள் என மக்கள் குடும்பம், குடும்பமாய் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்தப் பகுதியில் நிலம், நீர், காற்று ஆகியவை மாசுபட்டு வருவதாக மக்கள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

Trending

இங்கிலாந்து நாட்டில் விருது வென்ற ‘மெர்சல்’

Published

on

By

mersal-records-and-awards

இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் தேசிய திரைப்பட அகாடமி வழங்கும் 2018ம் ஆண்டு விருதுக்கான போட்டியில் சிறந்த அயல்நாட்டுப் படத்துக்கான விருதை ‘மெர்சல்’ படம் வென்றுள்ளது.

சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் ‘மெர்சல்’ படத்துடன் பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி, ஸ்வீடன், சிலி, தென்னாப்பிரிக்கா, லெபனான ஆகிய நாடுகளின் படங்களும் போட்டியில் இருந்தன. அவற்றிலிருந்து ‘மெர்சல்’ படம் தேர்வாகியுள்ளது.

சிறந்த துணை நடிகர் விருதுக்காக விஜய்யும் போட்டியில் இருந்தார். ஆனால், அவர் விருதுக்கு தேர்வாகவில்லை.

போட்டியாளர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆன்லைன் வாக்குப்பதிவு ஜனவரி 15 முதல் ஆரம்பமாகி 20ம் தேதி வரை நடைபெற்றது.

இந்த வருட ஆல்லைன் வாக்குப்பதிவில் 24 லட்சம் பேர் வாக்களித்துள்ளார்கள். மொத்தம் 18 பிரிவுகளுக்கான தேர்வு நடைபெற்றது.

4வது தேதிய திரைப்பட விருதுகளைப் பெற்றவர்களின் விவரம் நேற்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தேசிய திரைப்பட அகாடமி 1999ம் ஆண்டு அமைக்கப்பட்டது. திரையுலகத்தினருக்கான வளர்ச்சியில் அந்த அமைப்பு ஈடுபடுகிறது. பல திரைப்பட விழாக்கள், காட்சிகள், மாநாடுகள், பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை இந்த அமைப்பு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடத்தி வருகிறது.

‘மெர்சல்’ படம் விருது பெற்றது தமிழ்த் திரையுலகத்திற்கும் பெருமையான ஒன்று.

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்த ‘மெர்சல்’ 2017 தீபாவளியை முன்னிட்டு வெளியானது.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: