Connect with us

Tamil Cinema News

4 கோடி ரூபாய் காரில் சிம்பு

Published

on

simbu bentley car

‘செக்கச் சிவந்த வானம்’ படத்திற்குப் பிறகு மீண்டும் சிம்புவின் மார்க்கெட் உயர்ந்து வருகிறது.

தற்போது ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து கமல்ஹாசனுடன் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கப் போகிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்திலும் நடிக்க உள்ளார்.

சிம்பு தற்போது 4 கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ட்லி கான்டினென்டல் காரை புக் செய்துள்ளாராம். விரைவில் அந்த கார் அவருக்கு டெலிவரி செய்யப்பட உள்ளது.

தமிழ் சினிமா நடிகர்களில் பலரும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள்.

பென்ட்லி காரை முதன் முதலில் வாங்கப் போகும் நடிகர் சிம்பு என்பது கூடுதல் தகவல்.

Tamil Cinema News

கோபி, சுதாகர் நடிக்கும் ‘ஹே மணி கம் டுடே கோ டுமாரோ யா’

Published

on

By

கோபி, சுதாகர் நடிக்கும் ஹே மணி கம் டுடே கோ டுமாரோ யா

தமிழ் ரசிகர்களிடம் யூ டியூப் பிரபலமானதைத் தொடர்ந்து, அதில் தனி திறமைசாலிகள் அவர்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் பல புதுப்புது விஷயங்களை செய்ய ஆரம்பித்தார்கள்.

நகைச்சுவை நிகழ்ச்சிகள், குறும் படங்கள், சினிமா விமர்சனங்கள், செய்திகள், சுவாரசியமான வீடியோக்கள் என பலர் வெளியிட்டதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அப்படி நகைச்சுவை நிகழ்ச்சிகளை வழங்கிய கோபி, சுதாகர் என்ற இருவர் யு டியூப் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றனர்.

தற்போது ‘கிரவுட் ஃபண்டிங்’, அதாவது மக்களிடமிருந்து நிதி திரட்டி, ஒரு சினிமா நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் ஒரு படத்தைத் தயாரிக்க உள்ளனர். மக்களிடமிருந்து சுமார் 6 கோடி நிதியை அவர்கள் திரட்டி உள்ளார்கள்.

அந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. முதலில் நிதி வழங்கிய 100 பேரை நேற்றைய விழாவுக்கு அழைத்து சிறப்பித்தனர்.

பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் என்ற கம்பெனி மூலம் அவர்கள் தயாரிக்கும் முதல் தயாரிப்பிற்கு ‘ஹே மணி கம் டுடே கோ டுமாரோ யா’ எனப் பெயர் வைத்துள்ளார்கள்.

இப்படத்தை SAK என்பவர் இயக்குகிறார். கோபி, சுதாகர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மற்ற நட்சத்திரத் தேர்வு நடைபெற்று வருகிறது.

‘துருவங்கள் 16, மாஃபியா’ படங்களக்கு இசையமைத்த ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க உள்ளார்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

கோபி, சுதாகர் நடிக்கும் ‘ஹே மணி கம் டுடே கோ டுமாரோ யா’

 

Continue Reading

Tamil Cinema News

வைபவ் நடிக்கும் ‘ஆலம்பனா’ ஆரம்பம்

Published

on

By

வைபவ் நடிக்கும் ஆலம்பனா ஆரம்பம் - 4 Tamil Cinema

கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பாரி கே விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நாயர் நாயகன், நாயகியாக நடிக்கும் படம் ‘ஆலம்பனா’.

இப்படத்தில் பாண்டியராஜன், முனிஷ்காந்த், திண்டுக்கல் லியோனி, காளி வெங்கட், ஆனந்தராஜ், கபீர் துபான் சிங், முரளிசர்மா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஹிப்ஹாப் தமிழா இசையமைக்க, வினோத் ராமசாமி ஒளிப்பதிவு செய்கிறார். லோகேஷ் எடிட்டிங்கை கவனிக்க, பீட்டர் ஹெய்ன் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார்.

இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் ரவிக்குமார், ராம்குமார், கல்யாண், சினிஸ், தாஸ் ராமசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

‘ஆலம்பனா’ ஒரு கமர்ஷியல் பேண்டசி படமாக உருவாக உள்ளது.

Continue Reading

Tamil Cinema News

கார்த்திக் சுப்பராஜ் வழங்கும் ‘அல்லி’

Published

on

By

கார்த்திக் சுப்பராஜ் வழங்கும் அல்லி - 4 Tamil Cinema

‘பேட்ட’ இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், அவருடைய ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்திலிருந்து  ‘அல்லி’ என்ற சுயாதீனா (Independent) படத்தை வெளியிட உள்ளார்.

இப்படத்தை சணல்குமார் சசிதரன் இயக்க நிமிஷா சஜயன், ஜோஜு ஜார்ஜ், அகில் விஸ்வநாத் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கார்த்திக் சுப்பராஜ் பேசுகையில்,

“நான் ஷார்ட் பிலிம் எடுத்துதான் வந்தேன். ஷார்ட் பிலிம்கறதே ஒரு இன்டிபென்டட் பிலிமோட ஒரு பகுதிதான். பெரிய தயாரிப்பு நிறுவனம் இல்லாம, பெரிய முதலீடு இல்லாம, குறைவான டெக்னீஷியன் வச்சிதான் நான் ஷார்ட் பிலிம் பண்ணேன்.

நான் முதன் முதலா சினிமா பண்ண வாய்ப்பு தேடி அலைஞ்ச போது சரியா அமையலை. ‘ஜிகர்தண்டா’ கதையை வச்சிக்கிட்டுதான் முதல்ல தயாரிப்பாளர் தேடினேன், கிடைக்கலை.சரி, ஒரு இன்டின்டென்ட் படம் பண்ணலாம்னு கதை எழுத ஆரம்பிச்சதுதான் ‘பீட்சா’ படம்.

நான் சொந்தமா கம்பெனி ஆரம்பிச்ச போது, புது கதைகள் வரணும், புது நடிகர்கள், நடிகைகள் வரணும், புது இயக்குனர்கள் வரணும்னுதான் ஆரம்பிச்சோம்.

ஷார்ட் பிலிம்ஸை தியேட்டர்ல ரிலீஸ் பண்ணோம். அதுல இருந்தவங்க இப்ப பெரிய படம்லாம் பண்ணிட்டிருக்காங்க.

சினிமா தயாரிப்பு, ஷார்ட் பிலிம், டிஜிட்டல் என படங்கள் தயாரிச்சிட்டிருக்கோம். சரி, இன்டிபென்டன்ட் படம் பண்ணலாம்னு முடிவு பண்ணி அதுக்கு தனி டிவிஷன் ஆரம்பிச்சிருக்கோம்.

சணல்குமார் இரு மொழிகள்ல படம் பண்ணியிருக்கேன் பாருங்கன்னு சொன்னாரு. பார்த்தேன், இந்தப் படம் ரொம்ப பாதிச்சது. இந்த மாதிரி படங்களை தியேட்டருக்குக் கொண்டு வர நினைச்சி பண்ணியிருக்கோம். அதோட முதல் முயற்சிதான் ‘அல்லி’.

இது சக்சஸ் ஆச்சின்னா, பலருக்கு வாய்ப்பா இருக்கும்.

வெளி உலகத்தைப் பார்க்காத, சிட்டி வாழ்க்கைன்னா என்னன்னு தெரியாத ஒரு பொண்ணும், அவளைக் காதலிக்கிற பையனும் இருக்காங்க. அந்தப் பெண்ணை கூட்டிக்கிட்டு காதலன் அப்படி ஒரு நாள் வெளிய கிளம்பறான். அப்ப, அந்த பெண்ணோட விருப்பத்துக்கு எதிரா, அந்த காதலனோட முதலாளியும் அவங்க கூட கிளம்பறாரு. அப்புறம் என்ன நடக்குதுங்கறதுதான் இந்தப் படத்தோட கதை.

கதைப்படி தமிழ்நாடு, கேரளா பார்டர்ல நடக்கிற கதை. ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு டிசைன் ரொம்ப பிரமாதமா இருக்கும். மூணே மூணு கேரக்டர்தான் படத்துல, மூவருமே ரொம்ப அற்புதமா நடிச்சிருக்காங்க.

பெரிய ஹீரோக்களோட படங்களையும் மக்கள் வரவேற்பாங்க, புது முயற்சிகளையும் வரவேற்பாங்க. அப்படித்தான் நானும் வந்தேன், அதனால இந்தப் படத்தையும் வரவேற்பாங்கன்னு நம்பிக்கை இருக்கு,” என்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.

‘அல்லி’ படத்தை இயக்கியுள்ள சணல்குமார் சசிதரன் மலையாளத்தில் ‘ஓரால்போக்கம், ஒஷிஉடிவசத்தே களி’ ஆகிய படங்களையும், ஹிந்தியில் ‘செக்சி துர்கா’ படத்தையும் இயக்கியவர்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: