Connect with us

Tamil Cinema News

இன்று ஜனவரி 9, 2020 வெளியான படம்

Published

on

இன்று ஜனவரி 9, 2020 வெளியான படம் - 4 Tamil Cinema

இன்று ஜனவரி 9, 2020  வெளியான படம்

தர்பார்

தயாரிப்பு – லைக்கா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – ஏஆர் முருகதாஸ்
நடிப்பு – ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு மற்றும் பலர்
வெளியான தேதி – 9 ஜனவரி 2020

https://youtu.be/1JlLi9pDaJE

Tamil Cinema News

எம்ஜிஆர் ஆக பலர் முயற்சி – இயக்குனர் அமீர்

Published

on

By

எம்ஜிஆர் ஆக பலர் முயற்சி - இயக்குனர் அமீர்

ஆர்.என்.ஆம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் மாயநதி.

அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபி சரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

பவதாரிணி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, இயக்குனர்கள் அமீர், சுப்பிரமணிய சிவா, எஸ்.ஆர்.பிரபாகரன், நடிகர் சவுந்தரராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குனர் அசோக் தியாகராஜன் பேசியதாவது,

‘‘இந்த மேடையை அலங்கரிக்கிற சினிமா ஜாம்பவான்களுக்கு நன்றி. நம் வாழ்க்கையும் நதி போல் தான், நம்மால் கணிக்க முடியாத ஒன்று. அதுதான் மாயநதி படம்.

நதி நிறைய திருப்பங்கள் கொண்டது. நம் வாழ்க்கையில் நிறைய பக்கங்களை பெண்கள்தான் நிரப்பி வருகிறார்கள். படத்தில் மிக எதார்த்தமாக நடித்துள்ள நாயகன் அபி சரவணன், நாயகி வெண்பா ஆகியோருக்கு நன்றி.

மேலும் படத்தில் ஒத்துழைத்து பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இந்த விழாவில் ஹீரோயின் இசை அமைப்பாளர் பவதாரிணி மேடம் தான். எல்லாப் பாடல்களையும் மிகச் சிறப்பாக தந்துள்ளார். இந்தப்படத்தை தனிப்பட்ட முறையில் உருவாக்கி விடவில்லை. ஒரு டீமாக இருந்து தான் உருவாக்கினோம்.

இசைஞானி இளையராஜா பாடல்கள் தான் நம் கவலைகளை ஆற்றுப்படுத்தியது, சந்தோஷத்தை அதிகப்படுத்தியது. அவர் வீட்டில் இருந்து இந்த விழாவிற்கு வருகை தந்த யுவன்சங்கர் ராஜாவிற்கு நன்றி,” என்றார்
.
இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில்,

‘‘பவதாரிணி இசை பற்றி நான் சொல்றது எப்படி இருக்கும்னு தெரியல. இந்தப்படத்தின் பாடல்கள் ரொம்ப நல்லாருக்கு. இசை எங்க ரத்தத்துல இருக்கு. என் கை பிடிச்சி வாசிக்க வைத்தது அக்கா பவதாரிணி தான். என்னை இந்தளவிற்கு கூட்டிட்டு வந்தது அக்கா தான். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்,’’ என்றார்.
.
அமீர் பேசியதாவது,

‘‘இரண்டு நாட்களுக்கு முன்னாடி சுப்பிரமணிய சிவா இந்த விழாவிற்கு கூப்பிட்டார், நான் யோசிச்சேன். அப்புறம் பவதாரிணி இசை என்று சொன்னார்கள். என்னால் எதுவும் பேச முடியல. உடனே வருகிறேன் என்றேன்.

நடிகர் அபி சரவணன், கேமராமேன், என எல்லாரும் எனக்கு நெருக்கமானவர்கள். உலக வரலாற்றிலே இளையராஜா குடும்பம் போன்று உலகத்தில் எங்கேயுமே கிடையாது. இப்படி ஒரு குடும்பம் தமிழ்க்குடும்பமாகக் கிடைத்தது நாம் செய்த பாக்கியம்.

எம்.ஜி.ஆர் இன்று வரை நினைவுகூரப்படுகிறார். அவரோடு வேலை செய்தவர்களிடம் நிறைய விசயங்களை கேட்டுப் பதிவு செய்ய வேண்டும்.

நம் தமிழ்நாட்டில் இன்று மூன்றே கலைஞர்கள் தான் பெரிய கலைஞர்கள். இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பற்றிய பதிவுகளை உடனடியாக பதிய வேண்டும். இளையராஜா பற்றிய பதிவுகளை யுவன்சங்கர் ராஜா பதிவு செய்ய வேண்டும். இதை எல்லாம் அரசு செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள்.

நம் சங்கங்கள் எல்லாம் இப்போது மூடுவிழா கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. வளரும் நடிகர்கள் சமூக சேவை செய்கிறார்கள். நல்ல விசயம் தான். ஆனால் அது அவர்களுக்கு நல்லதல்ல. இங்கு சேவை என்பது வேற. அரசியல் என்பது வேற.

இங்கு பொது விசயங்களை செய்தால் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதை நானே அனுபவித்து இருக்கிறேன். தமிழ் சினிமாவில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் சினிமா தான் இங்கு ஆண்டு கொண்டிருக்கிறது. ஆனால் சினிமா முன்னேறவே இல்லை.

இங்கு சினிமாவில் இருக்கும் பலரும் எம்.ஜி.ஆர் ஆக முயற்சிக்கிறார்கள். எம்.ஜி.ஆர், கலைஞர் ஆகியோரிடம் இருந்த ஆட்கள் எல்லாம் அவர்களுக்குத் தேவையானதைச் செய்து கொண்டார்கள். அவர்கள் சினிமாவிற்கு எதுவும் செய்யவில்லை.

கலைஞர், எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டியை அமைத்தார். ஜெயலலிதா வந்ததும் அந்தப் பெயரை மாற்றினார். ஆனால் சினிமா ஆட்கள் உடனே இதை மறுத்து ஜெயலலிதாவிடம் முறையிட்டிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. அதனால் கலைஞர் திரும்ப ஆட்சிக்கு வந்ததும் அந்த இடத்தில் பாதியை டைடல் பார்க்குக்கு கொடுத்து விட்டார்.

அதுபோல் கலைஞர் சினிமா தொழிலாளர்களுக்கு வீடு கொடுப்பதற்கு இடம் ஒதுக்கினார். அதுவும் நடக்கவில்லை. இங்கு இரண்டு பெரிய நடிகர்கள் அரசியலுக்கு வர இருப்பதால் தமிழக அரசு விருது கொடுக்க யோசிக்கிறது என்று யோசிக்கிறேன். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் பயப்பட வேண்டியதில்லை. ஏன் என்றால் அவர் எந்த பால் போட்டாலும் அடிக்கிறார். அதனால் அவரிடம் சினிமா விருதுகளை வழங்க வேண்டுமென கோரிக்கையாக வைக்கிறேன்.

இந்த ‘மாயநதி’ என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி அடையணும். ஒரு ஆரோக்கியமான சூழல் சினிமாவிற்கு வரணும். இந்த விழா சிறியதாக ஆரம்பித்து பெரிதாக முடிந்திருக்கிறது,” என்றார்.

Continue Reading

Tamil Cinema News

அமலா பால் இனி ஹீரோயின் இல்லை, ஹீரோ… !

Published

on

By

அமலா பால் இனி ஹீரோயின் இல்லை, ஹீரோ... !

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் ஜோன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகை அமலாபால், இயக்குனர் கே.ஆர்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், இயக்குனர் திருமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஜோன்ஸ் பேசும்போது,

“பல படங்களை ஜான் மேக்ஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளேன். மைனா படத்தில் இருந்து அமலாபால் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். ‘அதோ அந்த பறவை போல’ படத்தில் அவரின் அர்ப்பணிப்பு ரொம்ப உணர்வுபூர்வமானது. மிக வித்தியாசமான கதை. அமலாபாலிடம் இந்தக்கதையை சொன்னதும் ஓ.கே என்றார். கதை பிடித்ததால் இந்த ப்படத்தை இயக்குநர் கே.ஆர்.வினோத் சிறப்பாக இயக்கித் தந்துள்ளார்,‘’ என்றார்.

இயக்குனர் கே.ஆர்.வினோத் பேசும் போது,

‘என்னோட குடும்பத்தினர், நண்பர்கள் இல்லாமல் எனக்கு இந்த மேடை அமைந்திருக்காது. என் உழைப்பை நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. மற்றும் என்னுடைய படக் குழுவினருக்கு நன்றி. எங்கள் படத்தில் அமலாபால் ஹீரோயின் இல்லை, ஹீரோ. அவரை அப்படித்தான் அழைத்து வருகிறேன். அமலாபாலுக்கு இந்தப் படம் ரொம்ப சிறப்பா இருக்கும் என்று நம்புகிறோம்.

சண்டைக்காட்சிகள் எல்லாம் நாங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு அமலாபாலிடம் காட்டினோம். அதைப் பார்த்து பயிற்சி செய்து படத்திற்கு தயாரானார். அதை அப்படியே படப்பிடிப்பில் மிகச்சிறப்பாக செய்துவிட்டார். 60 அடி உயரமுள்ள மரத்தில் இருந்து இறங்குவது, சண்டை போடுவது என நடிப்பில் அமலாபால் அசத்தியுள்ளார். குறிப்பாக சேற்றுக்குள் இறங்கி மூச்சு விடாமல் நடிக்க வேண்டும். அதை நாங்கள் நினைத்துப் பார்க்க முடியாதளவிற்கு நடித்து கொடுத்தார். இந்த தைரியம் யாருக்கு வரும். எல்லாருக்கும் பிடிக்கும் வகையில் படம் சிறப்பாக வந்திருக்கிறது,” என்றார்.

அமலா பால் இனி ஹீரோயின் இல்லை, ஹீரோ... !

நடிகை அமலாபால் பேசுகையில்,

“இந்தப் படம் ரொம்ப சந்தோசத்தை கொடுத்தது. தயாரிப்பாளருக்கு கண்டிப்பாக நல்ல லாபத்தைக் கொடுக்கும். காரணம் படத்தோட கதை. ஒரு இளம்பெண் எந்த உதவியுமே இல்லாம தனி ஆளா காட்டுல சிக்கிக்கிட்ட பிறகு அதுல இருந்து எப்படி வெளியில வர்றாங்கறது தான் படம்.

இன்னிக்கு நாடு இருக்கற நிலையில பெண்கள் பாதுகாப்புங்கறது எந்த அளவுக்கு இருக்குங்கிறது தான் பெரிய விவாதமா இருக்கு. இந்த சூழ்நிலையில இப்படி ஒரு படம் வர்றது ஒட்டு மொத்த பெண்களுக்கான படமாக இருக்கும்.

இந்த படத்தோட டீம் பக்காவா திட்டமிட்டு உழைச்சாங்க. கதை சொல்லும் போது கூட பக்கா பிளான் பண்ணித்தான் வந்திருந்தாங்க. இந்த படத்துக்காக புதுசா ‘கிராமகா’ என்னும் தற்காப்பு கலையை கத்துக்கிட்டேன். ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் கூட ஒரு சண்டை போட்டுருக்கேன். அந்த சண்டை பெரிசா பேசப்படும்.

கதை ஆசிரியர் அருண் அவ்வளவு திறமையா இந்த கதையை எழுதி இருந்தாரு. படம் ஷூட் போறதுக்கு முன்னாடியே எனக்கான ஸ்டண்ட் காட்சிகளை ஷூட் பண்ணி டெமோ காட்டி எனக்கு நம்பிக்கை கொடுத்தாங்க.

இயக்குனர் வினோத், நிர்வாகத் தயாரிப்பாளர் கவாஸ்கர், கதாசிரியர் அருண் இவர்கள் எல்லாம் பெரிய போராட்டத்தைச் சந்தித்து இருக்கிறார்கள். இவர்கள் கஷ்டம் முன்னாடி படத்தில் நான் பட்ட கஷ்டம் எல்லாம் ஒன்றுமே இல்லை.

ரொம்ப இளமையான டீம். இவர்கள் இருக்கிற படத்தில் நான் இருக்கிறது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஒரு ஹீரோயின் காட்டுக்குள் ஆக்‌ஷன் பண்ணா எப்படி இருக்கும் என்று ஒரு பேச்சு இருந்தது. ஆனால் கதை அதை சரி செய்துவிடும்.

எங்க டீமில் எல்லாரும் பெண்கள் பலத்தை உணர்ந்தவர்கள். தயாரிப்பாளர் ஜோன்ஸ் மைனாவில் இருந்தே நல்ல நண்பர். சிறுவன் பிரவீன் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறான். நிச்சயமாக அவனுக்கு தேசிய விருது கிடைக்கும்.

மேலும் இந்த படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்னோடு நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் வேலை செய்த அனைவரும் இப்படத்தை ஒரு பேஷனாக எடுத்து வேலை செய்தார்கள்.

இந்தப்படத்திற்காக நான் கற்றுக்கொண்ட தற்காப்புக் கலை, எனக்கு நிஜ வாழ்க்கையிலும் ரொம்ப தைரியத்தைக் கொடுத்துள்ளது. கதை பிடித்திருந்தால் மட்டுமே படத்தில் நடிப்பேன். கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க நிறைய நடிகைகள் இருக்கிறார்கள்,’’ என்றார்.

Continue Reading

Tamil Cinema News

ஜீ திரை – நாளை முதல் புதிய சினிமா டிவி சேனல்

Published

on

By

ஜீ திரை - நாளை முதல் புதிய சினிமா டிவி சேனல்

தமிழில் ஒளிபரப்பாகும் பொதுவான பொழுதுபோக்கு சேனல்கள் (GEC) பிரிவில், ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்ப்ரைசஸ் லிமிடெட் (ZEEL) தனது ஜீ தமிழ் சேனலின் மூலமாக ஒரு வலுவான இடத்தைப் பிடித்துள்ளது.

தற்போது, இந்நிறுவனம் தமிழ் திரைப்பட பொழுதுபோக்கு பிரிவில் – ‘ஜீ திரை’ என்ற புதிய சேனலை நாளை முதல் ஆரம்பிக்க உள்ளது.

தென்னிந்தியாவில் இது, இந்த நெட்வொர்க்கின் ஆறாவது சேனலாகவும், தெலுங்கில் ‘ஜீ சினிமாலு’ சேனலை அடுத்து துவங்கப் பெற்ற இரண்டாவது சினிமா சேனலாகவும் திகழ்கிறது.

ஜீ சினி அவார்ட்ஸ் 2020 நிகழ்ச்சியின் போது, இந்த சேனல் துவங்கப்பட்ட அறிவிப்பானது வெளியிடப்பட்டது.

நடிகர் கமலஹாசன் மற்றும் ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்ப்ரைசஸ் லிமிடெட்டின் தலைமை நிர்வாக இயக்குனர் (உள்நாட்டு ஒளிபரப்புத் துறை) புனித் மிஷ்ரா ஆகியோர் இணைந்து இதனை அறிவித்தனர்.

உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு சினிமாவின் மீதுள்ள ஆழமான சமுதாய மற்றும் கலாச்சார ரீதியான அன்பினைப் புரிந்து கொண்டும், தமிழர்களின் உணர்வுகளோடு ஒத்துப்போகும் வகையிலும் ஜீ திரை சேனல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்னணி DTH ஆப்பரேட்டர்களான டாடா ஸ்கை (சேனல் எண். 1599), ஏர்டெல் DTH (சேனல் எண். 775), டிஷ் டிவி (சேனல் எண். 547) மற்றும் D2H (சேனல் எண். 547) ஆகியவற்றில் கிடைக்கும்.

கேபிள் சந்தாதாரர்கள் ரூபாய் 12 சந்தா செலுத்தி, ஜீ பிரைம் மூவி பேக் தமிழை பெறலாம்; இதில் ஜீ தமிழ், ஜீ திரை மற்றும் இதர ZEEL சேனல்கள் கிடைக்கும்.

ஜீ திரை சேனலின் அறிமுகம் குறித்து பேசிய, ZEEL நிறுவனத்தின் தென்னிந்திய பிரிவின் தலைவர் சிஜூ பிரபாகரன் அவர்கள் கூறியதாவது,

“இன்று, நமது சேனல்களான – ஜீ கன்னடா, ஜீ தெலுகு, ஜீ சினிமாலு, ஜீ தமிழ் மற்றும் சமீபத்தில் துவங்கப்பெற்ற ஜீ கேரளம் ஆகிய சேனல்கள் நமது நெட்வொர்க்கில் 28.5% மேலான பங்களிப்பினை வழங்குகிறது. இதன் மூலம் தென்னிந்திய மார்கெட்டில் நமக்கு உள்ள வலுவான இணைப்பு வெளிப்படுகிறது.

சினிமாவின் மீது தமிழர்கள் கொண்டுள்ள அன்பையும், பற்றையும் புரிந்துகொண்டு, அவர்கள் விரும்பும் சினிமாவை அவர்களுக்கு வழங்கும் பொருட்டு நாம் நமது ஜீ திரை சேனலை துவங்கியுள்ளோம்.

மேலும், தமிழ் நேயர்களுக்கு நமது நெட்வொர்க் வழங்கும் சேவைகளுக்கு வலுசேர்க்கும் விதத்திலும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை விரும்பும் ரசிகர்களின் தேடலுக்கான சிறந்த தேர்வாகவும் திகழ வேண்டுமென்ற இலக்கினை அடைவதில் இது ஒரு மைல் கல் ஆகும்.”என்றார்.

கடந்த பத்து ஆண்டுகளில், ZEEL நிறுவனத்தின் தமிழ் பொது பொழுதுபோக்கு சேனலான (GEC) – ஜீ தமிழ், உலகம் முழுவதும் உள்ள தமிழ் நேயர்களின் மனதிலும், இதயத்திலும் ஒரு பிரியமான இடத்தினைப் பெற்றுள்ளது. தனித்துவமான அனைத்து அம்சங்களும்  நிறைந்த இதன் நிகழ்ச்சிகளுள் செம்பருத்தி, யாரடி நீ மோகினி, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, கோகுலத்தில் சீதை போன்றகற்பனைதொடர்களும்; சூப்பர் மாம், ச ரி க ம ப, டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் போன்ற நிஜ பங்கேற்பு நிகழ்ச்சிகளும்தமிழ் தொலைக்காட்சி பொழுதுபோக்கிலேயே பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின. மேலும் இந்த சேனல் திரைப்பட உரிமைகளை பெறுவதில் முன்னணி வகித்ததன் மூலம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை சரியான விகிதத்தில் வழங்கியது.

தென்னிந்தியாவில் நேயர்கள் பற்றிய புரிதல், எண்ணற்ற நிகழ்ச்சிகளின் வலிமை மற்றும் புதிய முயற்சிகளின் மூலம் கற்றுக் கொண்டவை ஆகியவற்றின் துணையுடன் இந்த நெட்வொர்க் தனது ஜீ திரை சேனலின் மூலம்திரைப்பட பிரிவில் ஒரு சவாலான இடத்தை அடைய முயல்கிறது.

இந்த சேனலின் மிகப்பெரிய அம்சமாக திகழ்வது 52 புத்தம் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புவது; அதாவது வருடம் முழுவதும் வாரம் ஒரு புதிய திரைப்படம் – தமிழ் திரைப்பட சேனல்களில் முதல் முறையாக ஒளிபரப்பப்படும்.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையினை பூர்த்தி செய்யும் விதத்தில், மெகாஹிட் திரைப்படங்கள் மற்றும் பலரின் பாராட்டைப் பெற்ற படங்கள் என சரிவிகிதத்தில் சிறந்த திரைப்படங்களை ஜீ திரை வழங்கும்.

ஒவ்வொரு வாரமும்வெள்ளி தோறும் ஒளிபரப்பாகவிருக்கும் ‘தெறி ஃபிரைடேஸ்”, கடந்த கால சிறந்த படங்களை வழங்கும் ‘ஃபில்ட்டர் காவியம்’ மற்றும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விளம்பரம் இல்லாத ‘நடுவுல கொஞ்சம் பிரேக்க காணும்’ படங்கள் என இதுபோன்ற பல தனித்துவமான அம்சங்களை இந்த சேனல் தரவுள்ளது.

தமிழ் சினிமாத்துறையின் சிறந்த படைப்புகளை வழங்க ஒரு சேனலை துவங்கியதன் மூலம், சினிமா குறித்த உரையாடல்களை ‘என்ன’ என்பதிலிருந்து‘ ஏன்’ என்றஅ றிவார்ந்த புரிதல்களை நோக்கி செலுத்தும் இலக்கினை ஜீ திரை கொண்டுள்ளது.

‘மெர்சல், 2.0, கனா, நேர்கொண்ட பார்வை, இரும்புத்திரை, தில்லுக்கு துட்டு 2, கோலமாவு கோகிலா போன்ற சிறந்த திரைப்படங்கள் உட்பட 400-க்கும் மேலான பல வகை திரைப்படங்களை இந்த சேனல் ஒளிபரப்பும் உரிமையை வைத்துள்ளது.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: