Warning: session_start(): open(/var/cpanel/php/sessions/ea-php70/sess_ae5f07aae810750a8a2f5692c01f06bb, O_RDWR) failed: No such file or directory (2) in /home/tamilcin/public_html/wp-content/plugins/wccp-pro/preventer-index.php on line 2

Warning: session_start(): Failed to read session data: files (path: /var/cpanel/php/sessions/ea-php70) in /home/tamilcin/public_html/wp-content/plugins/wccp-pro/preventer-index.php on line 2
தமிழரசன் - விரைவில்...திரையில்... - 4 Tamil Cinema
Connect with us

Upcoming Movies

தமிழரசன் – விரைவில்…திரையில்…

Published

on

தமிழரசன் - விரைவில்...திரையில்... - 4 Tamil Cinema

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்க, பாபு யோகேஸ்வரன் இயக்கும் படம் ‘தமிழரசன்’.

இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கிறார்.

மற்றும் சுரேஷ்கோபி, ராதாரவி, சோனு சூட், யோகிபாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்

படம் பற்றி இயக்குனர் பாபு யோகேஸ்வரன் கூறுகையில்,

“படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஜய்ஆண்டனி சூழ்நிலை காரணமாக ஒரு போராளியாக மாறுவதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

இசைஞானி இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப் பெரிய பலம். இந்த படத்திற்காக S.P.B ஒரு பாடலையும், 12 வருடங்களுக்குப் பிறகு இளையராஜாவின் இசையில் கே.ஜே.யேசுதாஸ் ஒரு பாடலையும் பாடி இருக்கிறார்கள். அந்த பாடல்கள் 2020 ம் ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களாக வலம் வரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை,” என்கிறார்.

படம் இம்மாதம் வெளியாக உள்ளது.

தொழில்நுட்பக் கலைஞர்கள்

இசை – இளையராஜா
ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர்
பாடல்கள் – பழனிபாரதி, ஜெய்ராம்
கலை – மிலன்
ஸ்டண்ட் – அனல் அரசு
எடிட்டிங் – புவன் சந்திரசேகர்
நடனம் – பிருந்தா சதீஷ்
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி
தயாரிப்பு மேற்பார்வை – ராஜா ஸ்ரீதர்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் – பாபு யோகேஸ்வரன்
தயாரிப்பு – கெளசல்யா ராணி

Upcoming Movies

வால்டர் – விரைவில்…திரையில்…

Published

on

By

வால்டர் - விரைவில்...திரையில்...

11:11 புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அன்பு இயக்கத்தில் தர்ம பிரகாஷ் இசையமைப்பில் சிபி சத்யராஜ், சமுத்திரக்கனி, நட்டி, ஷிரின் கான்ச்வாலா மற்றும் பலர் நடிக்கும் படம் வால்டர்.

படம் பற்றி இயக்குனர் அன்பு கூறுகையில்,

“சிபிராஜ் திறமை குறித்து புதுமுகமான நான் கூறி தெரிய வேண்டியதில்லை. மொத்த சினிமா உலகமும் அறியும். அவரது திறமை குறித்து கூற வேண்டுமெனில் வெறும் முகப்பூச்சு செய்து கேமாரா முன் நிற்பவரல்ல அவர். அவரது தொழில்நுட்ப அறிவும், கதாபாத்திரத்தை அவர் கையாளும் விதமும், திரைப்படம் பற்றிய அவரது தெளிவும் அளப்பரியது. அவர் ‘வால்டர்’ படத்தில் போலீஸ் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

‘வால்டர்’ படத்தின் முக்கியமான பாத்திரத்திற்கு இயக்குநர் கௌதம் மேனனை அணுகியது அனைவரும் அறிந்ததே. அவரும் இந்த கதாபாத்திரத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு, நடிக்க ஒப்புக்கொண்டார். அவரது பிற படங்களை இயக்கும் பணிகளின் காரணத்தால் அவரது கால்ஷீட் எங்கள் படத்திற்கு ஒத்துவராமல் போனது. அதன் பிறகு பல நடிகர்களை இக்கதாபாதிரத்திற்கு பரிசீலித்தோம். கடைசியில் நடிகர் நட்டி அவர்களை இக்கதாபாத்திரத்திற்கு அணுகினோம்.

வரும் வாய்ப்புகளில் நல்லதை மட்டுமே செய்வேன் என்ற கொள்கையில் அவர் இருந்தார். கதையை முழுதாகக் கேட்ட பின்பே இப்படத்தில் நடிப்பதை பற்றிப் பேச முடியும் என்றார். கதை கேட்டதன் முடிவில் படத்தின் மீதும் அவரது பாத்திரம் மீதும் அவருக்கு பெரும் நம்பிக்கை வந்து உடனடியாக நடிக்க சம்மதித்தார். அவரது பாத்திரம் சம்பந்தமான காட்சிகளை 15 நாட்கள் முன்னதாக தொடங்கி கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை ஆகிய இடங்களில் படமாக்கியுள்ளோம்.

அவரது பாத்திரம் முழுக்க வில்லன் என சொல்லமுடியாது. ஆனாலும் படத்தில் அவர் நேர்மையானவரா அல்லது எதிர்மறையானவரா என கடைசி வரை ரசிகர்கள் குழம்பும்படி, அவரது கதாபாத்திரம் இருக்கும். கண்டிப்பாக ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெறும் பாத்திரமாக இருக்கும்,” என்றார்.

‘வால்டர்’ டீசர் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தொழில் நுட்பக் கலைஞர்கள் விபரம்

இயக்கம் – அன்பு
இசை – தர்மா பிரகாஷ்
ஒளிப்பதிவு – ராசாமதி
படத்தொகுப்பு – S. இளையராஜா
பாடல்கள் – அறிவுமதி, அருண் பாரதி, உமா தேவி
கலை இயக்கம் – A.R. மோகன்
நடனம் – தாஸ்தா
சண்டைப்பயிற்சி இயக்கம் – விக்கி
தயாரிப்பு மேற்பார்வை – K மனோஜ் குமார்
புகைப்படம் – தேனி முருகன்
டிசைன்ஸ் – J சபீர்

Continue Reading

Upcoming Movies

மாஸ்டர் – படப்பிடிப்பில்…

Published

on

By

விஜய் நடிக்கும் மாஸ்டர் - படப்பிடிப்பில்... 4 Tamil Cinema

எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’.

மற்றும் சாந்தனு, அர்ஜுன் தாஸ், அழகம்பெருமாள், ரம்யா சுப்ரமணியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் .

மாஸ்டர் படத்தின் முதல் பார்வை ஜனவரி 31 அன்று வெளியிடப்பட்டது. படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதம் படத்தைத் திரையிட திட்டமிட்டுள்ளனர்.

படப்பிடிப்பு ஆரம்பமான நாள் – 3 அக்டோபர் 2019

முதல் பார்வை வெளியிடப்பட்ட நாள் – 31 டிசம்பர் 2019

தொழில் நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் – லோகேஷ் கனகராஜ்
தயாரிப்பு – சேவியர் பிரிட்டோ ( XB பிலிம் கிரியேட்டர்ஸ்)
இசை – அனிருத்
வசனம் – லோகேஷ் கனகராஜ், ரத்ன குமார், பொன் பார்த்திபன்
ஒளிப்பதிவு – சத்யன் சூரியன்
படத்தொகுப்பு – பிலோமின் ராஜ்
லைன் புரொடியூசர்ஸ்- லலித் – ஜெகதீஷ்
நிர்வாகத் தயாரிப்பு – R .உதயகுமார்
சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா
விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா
ஆடை வடிவமைப்பு – பல்லவி சிங்
நடனம் – தினேஷ் , சதிஷ்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

Continue Reading

Upcoming Movies

பற – விடுதலையின் குறியீடு

Published

on

By

பற - விடுதலையின் குறியீடு

லெமுரியா மூவிஸ், V 5 மீடியா, மற்றும் வர்ணலயா ஆகிய நிறுவனங்கள் வழங்கும் படம் ‘பற’.

இப்படத்தை பெவின்ஸ்பால், விஜயா ராமச்சந்திரன், மூர்த்தி ஆகியோர் தயாரித்து இருக்கிறார்கள். இணைத் தயாரிப்பு s.p. முகில்.

மனிதன் அதிகாரத்தை முன்னிறுத்தியும் தனது சாதி, மதம் ஆகியவற்றை முன்னிறுத்தியும் பிற மனிதனுக்கு அநீதி இழைத்ததினால் அதைக் கண்டு பொருமியும் பொங்கியும் எழுந்தது தான் சமூகநீதி என்ற கோசம்.

நம் தமிழ்சினிமாவில் சமூகநீதி பேசும் படங்கள் தற்போது அதிகமாக வரத் துவங்கியுள்ள நிலையில் ஒடுக்குமுறைகளை கேள்வி கேட்டும், உளவியல் ரீதியான அடக்குமுறைகளை அம்பலப்படுத்தும் விதமாகவும், மேலும் விடுதலைக்கான விடியலை வேண்டியும் இந்தப் படம் தயாராகி உள்ளது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் கீரா. விமல்ராஜ், ஸ்ரீகாந்த் இசையமைத்துள்ளனர்.

படம் பற்றி இயக்குநர் கீரா பேசும்போது,

“நம் சமூகத்தில் ஆணவக் கொலைகள் அச்சுறுத்தி வரும் வேளையில் ‘பற’ படம் வெளிவருவது மிகத் தேவையான ஒன்றாக இருக்கும். ஆணவக் கொலையை மிக காத்திரமாக எதிர்க்கும் படமாக இது இருக்கும்.

இங்கு ஒடுக்குமுறை என்பதை சாதிய ஒடுக்குமுறையாக மட்டுமே சிலர் பார்க்கிறார்கள். அது அப்படியல்ல. மத ஒடுக்குமுறை, பாலின ஒடுக்குமுறை, பொருளாதார ஒடுக்குமுறை, தேசிய ஒடுக்குமுறை என இங்கு ஒடுக்குமுறைகள் நிறைய இருக்கின்றன.

இப்படத்தின் டைட்டிலை வைத்து சிலர் ‘பற’ என்பது சாதியத்தின் குறியீடா என்று கேட்கிறார்கள். பற என்பது சாதியத்தின் குறியீடு அல்ல. பற என்றால் பறத்தல். அது விடுதலையின் குறியீடு. ஓரே இரவில் நடக்கும் கதைதான் படம். படம் நெடுக சீரியசான விசயங்கள் மட்டும் இருக்காது. இன்றைய இளைஞர்களுக்கு சொல்ல வேண்டிய விசயத்தை அவர்கள் ரசிக்கும் விதமாகவே செய்திருக்கிறோம்.

படத்தில் அம்பேத்கர் என்ற கேரக்டரில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். சமூக நலனுக்காக போராடுபவர்களுக்கு ஆதரவாக இருக்கும் கேரக்டரை அம்பேத்கர் கேரக்டர் வெளிப்படுத்தும். அதை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார் சமுத்திரக்கனி.

வடசென்னை ப்ளாட்பார வாசியாக நித்திஷ் வீரா நடித்துள்ளார். அவரையே நம்பி நாம் வாழும் மண்ணில் நமக்கு ஒரு துண்டு நிலம் கிடைத்து விடாதா என்று ஏங்கி வாழும் கதாபாத்திரம் சாவந்திகாவிற்கு. பார் டான்சராக அஷ்மிதா தோன்றுகிறார்.

கிராமத்தில் இருந்து தப்பித்து வரும் காதலர்களாக சாந்தினி மற்றும் சாஜூ மோன் நடித்துள்ளனர். சின்னச் சின்னத் திருட்டு வேலைகளில் ஈடுபடும் கேரக்டரில் முனிஷ்காந்த் நடித்துள்ளார். நடிகர் முத்துராமன் ‘பழுத்த’ அரசியல் வாதியாக நடித்துள்ளார். படத்தில் அவர் பெயர் ஆண்டவர்.

இவர்களின் கதைகள் தனித்தனியே வந்து மொத்தமாய் ஒரு புள்ளியில் இணைவது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியும் வீரிய மிக்கவையாக இருக்கும் என்று நம்புகிறோம்.

ஒரே இரவில் நடக்கும் இக்கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு விடியலைத் தேடுவார்கள். அந்த விடியல் கிடைத்ததா என்பது உங்கள் முன் காட்சிகளாக விரியும் போது நிச்சயம் நாங்கள் கவனிக்கப்படுவோம் என்று நம்புகிறோம்,” என்றார்.

சிபின்சிவன் ஒளிப்பதிவை கவனிக்க ஷாபஜோசப் எடிட்டிங் செய்துள்ளார். ஆர்ட் டைரக்டராக ராகுல் பணியாற்றியுள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: