Connect with us

Tamil Cinema News

1000 கோடி முடங்கிக் கிடக்கிறது – ஆர்.வி. உதயகுமார்

Published

on

1000 கோடி முடங்கிக் கிடக்கிறது - ஆர்வி உதயகுமார்

‘தண்டகன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் வி. இளங்கோவன் தயாரித்துள்ளார்.

அபிஷேக் .அஞ்சு கிருஷ்ணா, ராட்சசன் வில்லன் ‘நான்’சரவணன், எஸ்.பி. கஜராஜ், ஆதவ், ராம், வீரா, ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம், இசையமைப்பாளர் ஷ்யாம் மோகன், எடிட்டர் வசந்த் நாகராஜ் , சண்டைப் பயிற்சியாளர் பில்லா ஜெகன், நடன இயக்குநர் ஸ்ரீ ஷெல்லி , ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், ‘மேகா’ பட நாயகன் அஸ்வின், ஆர் .பி .பாலா, நடிகை சனம் ஷெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர் .

விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது ,

“இங்கே இயக்குநரைப் பற்றி நடிகை தீபா பேசும் போது அப்பா என்று அழைத்தார். அதைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. உலகம் சினிமாவைப் பற்றி தவறாகப் பேசும் போது ஒரு நடிகை இயக்குநரை அப்பா என்று அழைப்பது எவ்வளவு பெரிய விஷயம் ?
எவ்வளவு பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்திருந்தால் இப்படிக் கூறி இருப்பார் ?.

சினிமா ஒரு நல்ல அருமையான தொழில். இங்கே ஒரே குடும்பம் என்ற உணர்வு இருக்கிறது. இங்கு அன்பும் பாசமும் இருக்கிறது. அது பலருக்கும் தெரிவதில்லை .

நான் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் . இதுவரை சொல்லாத விஷயம் அது. நான் ‘பொன்னுமணி’ படத்தில் சௌந்தர்யாவை அறிமுகப்படுத்தினேன்.

கார்த்திக்குடன் அவரை ஒரு நாள் படப்பிடிப்பில் நடிக்க வைத்தேன். அவர்தான் கதாநாயகி என்று உறுதி செய்யப்படவில்லை. நடிப்பை பார்த்துவிட்டுச் சொல்லலாம் என்று இருந்தேன். அவருக்கு சாவித்திரி நடித்த பழைய வீடியோ கேசட்டுகளை கொடுத்து பார்க்கச் சொன்னேன். ஒரே ஒரு நாள் நடித்திருந்தார். அப்போது நாங்கள் பொள்ளாச்சியில் இருந்தோம். அப்போது அவர் நடித்த காட்சிகளை சென்னையில் பிராசசிங் செய்து, ரஷ்ஷை வரவழைத்து அங்கு உள்ள ஒரு தியேட்டரில் போட்டுப் பார்த்தோம் . கூடவே மனோரமா ஆச்சியும் சிவகுமார் அண்ணனும் பார்த்தார்கள். அவர்கள் அவரவர் ஒரு கருத்து சொன்னார்கள். ஆச்சி அப்போது சொன்னார், இவள் சாவித்திரி மாதிரி வருவாள் என்று. இது எவ்வளவு பெரிய வார்த்தை.

சௌந்தர்யா முதலில் என்னை அண்ணா என்றார். பிறகு அழைக்கும் போதெல்லாம் அண்ணன் என்றழைத்தார். எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. இன்னொருவர் மத்தியில் பேசும் போது சார் என்று கூப்பிடு என்றேன்.

ஆனால் அவர் அண்ணா என்று அழைத்தது முதல் நான் அண்ணனாகவே இருந்தேன். கடைசிவரை சௌந்தர்யாவுக்கு நான் அண்ணனாகவே இருந்தேன். என் மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும் அன்பும் அதிகம் உள்ள நடிகை சௌந்தர்யா .பொன்னுமணி படத்தில் நடித்த போதே இரண்டாவது படம் சிரஞ்சீவி படத்திற்கு நான்தான் சிபாரிசு செய்தேன். விரைவில் பெரிய நடிகையாகி விட்டார்.

அவர் வளர்ந்து நடிகையாகி ஆயிரம் பிரச்சினைகளிலும் காதல் பிரச்சினைகளிலும் சிக்கிய போதெல்லாம் நான் தான் சென்னை, ஹைதராபாத் என்று போய் பஞ்சாயத்து செய்து விட்டு வருவேன். அவர் சொந்த வீடு கட்டியபோது என்னை அழைத்திருந்தார்.

நீங்கள் வந்தால்தான் வீட்டுக்குள் செல்வேன் என்றெல்லாம் கூறிய போதும் என்னால் செல்ல முடியவில்லை. மாமன் மகனைத் திருமணம் செய்ய முடிவான போதும் அழைத்தார், போக முடியவில்லை. தமிழில் ‘சந்திரமுகி’யாக வெற்றி பெற்ற படம் கன்னடத்தில் ‘ஆப்தமித்ரா ‘என்ற பெயரில் வாசு எடுத்திருந்தார் . அதில் சௌந்தர்யா தான் நடித்திருந்தார்.

எனக்கு ஒருநாள் போன் செய்தார். “அண்ணா என் சினிமா கதை இத்துடன் முடிந்து விட்டது. நடிப்பு வாழ்க்கை முடிந்துவிட்டது. இனிமேல் நான் படங்களில் நடிக்க மாட்டேன். ஆப் த மித்ரா தான் என் கடைசி படம். நான் இப்போது இரண்டு மாத கர்ப்பமாக இருக்கிறேன் என்று என்னிடமும் என் மனைவியிடமும் மாலை ஏழரை மணிமுதல் எட்டரை மணி வரை ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

தன் அண்ணனின் வற்புறுத்தலால் பிஜேபி கட்சிக்காக பிரச்சாரத்துக்கு செல்வதாகக் கூறினார். மறுநாள் காலை ஏழு முப்பதுக்கு டிவி பார்த்தபோது என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. அவர் விபத்தில் இறந்துவிட்டார். அவர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு செல்ல முடியவில்லை. திருமணத்திற்கு செல்ல முடியவில்லை. இறப்புக்கு செல்லலாம் என்று அவர் வீட்டுக்குச் சென்றேன். மிக பிரம்மாண்டமான வீடு கட்டியிருந்தார். உள்ளே சென்ற போது எனது படத்தை பெரிதாகப் போட்டு மாட்டியிருந்தார். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. அப்படிப்பட்ட நடிகை சௌந்தர்யா. இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் சினிமா அருமையான ஒரே குடும்பம் போன்ற உணர்வுள்ள தொழில்.

இங்கே இயக்குநரை நடிகை தீபா அப்பா என்று அழைத்தார். அதற்காக இயக்குநர் வருத்தப்படத் தேவையில்லை. அது பெருமையான விஷயம் .

அப்படிப்பட்ட சினிமா இன்று எப்படி இருக்கிறது ?. இன்று ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமமாக இருக்கிறது ?. அதை வெளியிடுவது எவ்வளவு சிரமமாக இருக்கிறது ?.

இன்று எல்லா படங்களையும் வெளியிட முடிகிறதா ? பல புதிய பெரிய படங்கள் வெளியாகின்றன. சிறிய படங்கள் வெளியாகின்றன வசூல் தான் வரமாட்டேன் என்கிறது. அண்ணா, கலைஞர், புரட்சித்தலைவர், அம்மா என்று பல சினிமா ஆளுமைகள் இருந்த துறை இது. சினிமா அழியக்கூடாது. ஒரு டிக்கெட் 100 ரூபாய் விற்கிறது என்றால் தயாரிப்பாளர்களுக்கும் 30 ரூபாய். தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு 30 ரூபாய் என்றும் 40 ரூபாய் தியேட்டர்காரர்களுக்கும் சேருமாறு முறைப்படுத்த வேண்டும்.

ஒரு நடிகர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றால் 10 லட்சத்தை முன்பணமாகக் கொடுத்து விட்டு 90 லட்சத்தை வசூலில் இருந்து எடுத்துக் கொடுக்கும்படி வரைமுறைப்படுத்த வேண்டும்.

பெரிய ஹீரோக்கள் தங்கள் படம் மட்டும் ஓடினால் போதும் என்று நினைக்கிறார்கள். சினிமா பற்றி யாரும் கவலைப்படவில்லை. 100 கோடி, 60 கோடி, 50 கோடி என்று வாங்கி விட்டு தன் படம் ஓடினால் மட்டும் போதுமென்று நினைப்பதை மாற்ற வேண்டும் .

அமெரிக்காவில் இருப்பது போல் இங்கேயும் வசூலில் பங்கு என்கிற முறை வரவேண்டும். அதனால் தான் அமெரிக்காவில் எல்லா படங்களும் ஓடுகின்றன. ஒன்றை ஒன்று வசூலில் முறியடிக்கின்றன. இது போன்ற ஏற்பாடு செய்து இருப்பதால்தான் அங்கே எல்லாப் படங்களும் வெற்றி பெறுகின்றன.

இது புதிய விஷயம் அல்ல. இந்த முறைப்படுத்துதல் செய்தால் தான் சினிமா நன்றாக இருக்கும். இங்கே ஒரு கூட்டம் மட்டும் சம்பாதித்துக் கொண்டே இருக்கிறது .ஒரு கூட்டம் மட்டும் இழந்து கொண்டே இருக்கிறது.

திரையைப்பார்க்க முடியாமல் இங்கே 450 படங்கள் முடங்கிக் கிடக்கின்றன. ஒரு படத்திற்கு இரண்டு கோடி என்றால் கூட ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இப்படி முடங்கிக் கிடக்கிறது. தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட வர்த்தக சபை, நடிகர் சங்கம் என்று பல சங்கங்கள் இருக்கின்றன ஆனால் யார் என்ன செய்கிறார்கள் என்று யாருக்குமே தெரியாது.

இப்படி இருந்தால் எப்படி சினிமா வளரும் ? இதில் மாற்றம் செய்ய வேண்டும் .

சினிமாவில் உள்ள ஒரு தவறான போக்கு ஒரு படம் ஓடி விட்டால் இயக்குநர்கள் தன்னால் தான் எல்லாம் நடந்தது என்று தானாகவே முளைத்து வந்தது போல் தலைகால் புரியாமல் ஆடுகிறார்கள். ஒரு பட வெற்றிக்கு அகந்தையுடன் இருந்தால் அடுத்தப்படம் தோல்வியடையும் போது யாரும் கூட இருப்பதில்லை.

இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் நல்ல இயக்குநரை யாரும் கண்டு கொள்வதில்லை. நடிகர்கள் யாருடனும் நட்புறவுடன் இருப்பதில்லை. திறமைசாலிகளை யாரும் கண்டு கொள்வதில்லை. இது மாற வேண்டும்,” என ஆர்.வி.உதயகுமார் பேசினார்.

Tamil Cinema News

அசுரன் – வியந்து பாராட்டும் இயக்குனர் வசந்தபாலன்

Published

on

By

அசுரன் - வியந்து பாராட்டும் இயக்குனர் வசந்தபாலன்

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து வெளிவந்த ‘அசுரன்’ படம் 100 நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.

அப்படம் பற்றி இயக்குனர் வசந்தபாலன் அவருடைய முகப்புத்தகத்தில் வியப்பான பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில்,

பூமணி அவர்கள் எழுதிய வெக்கை நாவல் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக மலர்ந்து 100 நாட்கள் கடந்து விஸ்வரூப வெற்றி அடைந்திருப்பதை பார்க்கிறபோது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

20 ஆண்டுகளுக்கு முன்பு கேகே நகர் அறையில் நானும் இயக்குனர் லிங்குசாமி உட்பட்ட சில திரைப்பட நண்பர்களும் வெக்கை நாவலை திரைப்படம் ஆக்குவது குறித்து பேசிக்கொண்டிருந்தோம். இது சிறிய கதையாக இருக்கிறது இதை எப்படி திரைப்படமாக மாற்றுவது என்று அதுகுறித்து பலவாறு யோசித்த வண்ணம் இருந்தோம். கடைசியில் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதன்பிறகு பல்வேறு சமயங்களில் நான் அடுத்த திரைப்படம் இயக்குவதற்கான சூழ்நிலை வரும்போது என்னுடைய நண்பன் வரதன் வெக்கை நாவலை திரைப்படமாக்கலாம் என்று கூறிக் கொண்டே இருப்பான்.

சிறிய கதையாக இருக்கிறது அதை விரிவாக ஆக்குவது எப்படி என்று தொடர்ந்து விவாதிப்போம். திட்டம் அவ்வப்போது கையில் எடுக்கப்பட்டு கைவிடப்படும் . என்னை போன்று திரை உலகம் முழுக்க வெக்கை நாவலை திரைப்படமாக ஆக்குகிற முயற்சிகள் தொடர்ந்து கையில் எடுக்கப்பட்டு கைவிடப்பட்டுக் கொண்டே இருந்தது.

ஒருசமயம் நடிகர் சத்யராஜ் அவர்கள் நடிக்க இருப்பதாக இருந்து திரைப்படம் கைவிடப்பட்டதாக திரை உலகத்தில் பல கதைகள் உலவும். நானும் விருதுநகர் செல்லும்போதெல்லாம் கோவில்பட்டிக்கு சென்று எழுத்தாளர் பூமணியை சந்தித்து வெக்கை நாவலை திரைப்படம் ஆக்குவது குறித்து உரையாடியிருக்கிறேன்.அவரும் திரைப்படமாக மாறினால் சந்தோஷம் என்று ஒரு விட்டேத்தியான மனநிலையோடு அந்த பேச்சைத் தொடர்வார் ஆனாலும் அவருக்குள் வெக்கை நாவல் திரைப்படமாக ஆகவேண்டும் என்ற எண்ணம் மிக வலுவாக இருந்தது.

அப்பொழுது சுசீந்திரன் அவர்கள் இயக்கத்தில் பாண்டிய நாடு திரைப்படம் வெளிவந்து இருந்தது. ஏறக்குறைய வெக்கை நாவலின் பல்வேறு கூறுகள் வேறு வடிவத்தில் பாண்டிய நாடு திரைப்படத்தில் இருப்பதை பரவலாக நண்பர்கள் அனைவரும் பேசிக் கொண்டோம்.பாண்டியநாடு திரைப்படத்தின் திரைக்கதை மூத்த மகன் கொலைக்கு, தந்தையும் இளைய மகனும் தனித்தனியாக பழி வாங்குவதாக அமைந்திருக்கும். ஆகவே இனிமேல் வெக்கை நாவலை திரைப்படம் ஆக்குவது குறித்து யோசிப்பது வீண் என்று என் நண்பர்கள் உட்பட நானும் அந்த முடிவுக்கு வந்துவிட்டோம்.

எழுத்தாளர் பூமணி அவர்களை சந்தித்தபோது பாண்டியநாடு திரைப்படத்தின் கதையை அவரிடம் விவரித்தேன். பூமணி மிகவும் வருத்தத்துக்கு உள்ளானார். இந்த சமயத்தில்தான் வெக்கை நாவலை வெற்றிமாறன் திரைப்படமாக எடுப்பது குறித்த அறிவிப்பு வெளியானது. மிகப்பெரிய ஆச்சரியமும், மிகப்பெரிய எதிர்பார்ப்பும் என்னிடம் உருவானது. எப்படி வெக்கை நாவலை ஒரு திரைப்படமாக வெற்றிமாறன் உருவாக்கப் போகிறார் என்ற பல்வேறு ஆச்சரியங்களும் கேள்விகளும் என் மனதில் சுழன்ற வண்ணம் இருந்தன. சிறிய கதையை வைத்துக்கொண்டு இவர் எப்படி திரைப்படமாக மாற்றுவார் என்று நான் யோசித்துக் கொண்டே இருந்தேன்.

பொல்லாதவன் திரைப்படம் கமர்ஷியல் தன்மையுடன் உள்ள திரைப்படம் அதன் திரைக்கதை வேறு வகை சேர்ந்தது. ஆடுகளம் திரைப்படத்தின் திரைக்கதையும் விசாரணை படத்தின் திரைக்கதையும் ஒரே வடிவமைப்பைக் கொண்டவை. வெற்றிமாறன் இரு சிறுகதைகளை ஒரே நேர்கோட்டில் இணைப்பதில் தேர்ந்தவர். .

ஆடுகளத்தில் பேட்டைக்காரனுக்கும் இன்ஸ்பெக்டருக்கும் நடக்கும் சண்டையை முதல் பாதியிலும் குருவுக்கும் சீடனுக்கும் நடக்கிற சண்டை இரண்டாம் பாதியிலும் அமைந்திருக்கும். அதே போன்று விசாரணை திரைப்படத்திலும் ஆந்திரா காவல்துறையிடம் மாட்டிக் கொண்ட இளைஞர்களை இன்ஸ்பெக்டர் மீட்பது முதல் பாதியிலும் , இரண்டாம் பாதியில் காவல் நிலையத்தை சுத்தம் செய்ய வந்த இளைஞர்கள் எப்படி என்கவுண்டர் செய்யப்பட்டனர் என்பது விவரிக்கப்பட்டிருக்கும்..

இப்படி திரைக்கதையில் இரு வேறு சம்பவங்களை அல்லது கதைகளை ஒன்றாக இணைத்து ஒரே திரைக்கதையாக எழுதுகிற ஆற்றல் வெற்றிமாறனுக்கு மிக எளிதாக கைகூடி வந்திருக்கிறது.வெற்றிமாறனுடைய கடந்த நான்கு படங்களை நாம் கூர்ந்து பார்க்கும் போது ஒரு சிறிய கதையை வைத்துக்கொண்டு மிக அழகாக திரைக்கதை அமைந்திருப்பதை கண்டிருக்கிறோம்.

ஒரு பைக் திருடு போன கதையை மட்டும் வைத்துக்கொண்டு பொல்லாதவன் மிக அழகான கமர்சியல் திரைக்கதையாக மாற்றியது. சேவற்சண்டையை வைத்துக்கொண்டு ஆடுகளம். அப்பாவி இளைஞர்கள் குற்றவாளிகளாக எப்படி ஆக்கப்படுகிறார்கள் என்பது விசாரணை. வடசென்னையை எடுத்துக்கொண்டால் பல்வேறு கதாபாத்திரங்களுடைய கதையை ஒரே நேர்கோட்டில் இணைக்கிற லாவகம் வெற்றிமாறனுக்கு எளிதாகவே உள்ளது.

ஆகவே வெக்கை நாவலை வெற்றிமாறன் மிக அழகான திரைக்கதையாக மாற்றி விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. திரைப்படம் வெளியான நாளில் திரைப்படத்தைக் கண்டபோது, அவர் விசாரணையிலும் ஆடுகளத்திலும் கையாண்ட அதே யுக்தியை அசுரன் திரைப்படத்திலும் கையாண்டு இருப்பதை பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்தது.

முதல் பாதி வெக்கை இரண்டாவது பாதி கீழ் வெண்மணி சம்பவம் மற்றும் பஞ்சமி நில மீட்பு என்று இருவேறு கதைகளை ஒரே நேர்கோட்டில் உணர்ச்சிகள் மாறாமல் கதையின் கருத்து மாறாமல் நிலம் சம்மந்தமான பிரச்சனையை அடிநாதமாக வைத்துக் கொண்டு மொத்த கதையையும் அழகாக எழுதியிருந்தார்.

திரைக்கதை அமைப்பில் மட்டுமல்ல அந்த படத்திற்கான படமாக்கத்திலும் உணர்வுக் கடத்தலை பார்வையாளனுக்கு கடத்தியது தான் வெற்றி. இந்த காலகட்டத்தில் அசுரனுடைய வெற்றி என்பது மிக முக்கியமானதாக நான் கருதுகிறேன் ஏனெனில் தமிழ் மண் மணத்துடன் கூடிய தமிழ் வாழ்க்கையை மிக அழகாக பதிவு செய்தது.

ஒரு நாவலில் இருந்து ஒரு தமிழ்த்திரைப்படம் உருவாவது மிக மிக ஆரோக்கியமான விஷயம். நாளைய உதவி இயக்குனர்களுக்கு புதிய வழிகாட்டியாக அசுரன் மாறி இருக்கிறது.

தமிழ்ச்சிறுகதைகள், தமிழ் நாவல்களில் இருந்து திரைப்படங்கள் உருவாக்குகிற புதிய பாணியை ( பழைய பாணி தான்.ஆனால் அசுரன் வெற்றி அதை புதிய பாணியை பார்க்க வைக்கிறது.) வெற்றிமாறன் வெற்றிகரமாக நிறுவியிருக்கிறார்.

அசுரன் திரைப்படத்தின் மூலம், அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அவர் அடுத்து இயக்க இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தைக் காண கோடிக்கண்களுடன் காத்திருக்கிறேன்,” என வியந்து பாராட்டியிருக்கிறார்.

 

Continue Reading

Tamil Cinema News

மாஸ்டர் – வாங்கியது யார், யார் ?

Published

on

By

விஜய் நடிக்கும் மாஸ்டர் - படப்பிடிப்பில்... 4 Tamil Cinema

எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’.

இப்படத்தின் வினியோக உரிமையை யார், யார் வாங்கியிருக்கிறார்கள் என்பதை பட நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாய் அறிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள படத்தின் வியாபாரத்தை ஜனவரி மாதத்திலேயே முடித்து திரையுலக வட்டாரங்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்கள்.

சென்னை ஏரியா

ஸ்ரீ கற்பக வினாயகா பிலிம் சர்க்யூட்ஸ்

செங்கல்பட்டு

தனம் பிக்சர்ஸ்

வட ஆற்காடு, தென்னாற்காடு

கே.செந்தில் (5 ஸ்டார்)

சேலம்

ஸ்ரீராஜ் பிலிம்ஸ்

கோவை

கந்தசுவாமி ஆர்ட்ஸ் சென்டர் பிலிம் டிஸ்டிரிபியூட்டர்ஸ்

திருச்சி, தஞ்சாவூர்

பிளஸ் மேக்ஸ் பிலிம்ஸ்

மதுரை

சுஷ்மா சினி ஆர்ட்ஸ்

திருநெல்வேலி, கன்னியாகுமரி

ஸ்ரீ சாய் கம்பைன்ஸ்

கேரளா

மலபார், கொச்சின்

பார்ச்சூன் சினிமாஸ்

திருவாங்கூர்

மேஜிக் பிரேம்ஸ்

ஆந்திரா, தெலங்கானா

ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்ஷன்ஸ்

கர்நாடகா

தீரஜ் என்டர்பிரைசஸ்

Continue Reading

Tamil Cinema News

‘மூக்குத்தி அம்மன்’ – 90 சதவீத படப்பிடிப்பு நிறைவு

Published

on

By

மூக்குத்தி அம்மன் - 90 சதவீத படப்பிடிப்பு நிறைவு

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில், ஆர்ஜே பாலாஜி, என்ஜே சரவணன் இணைந்து இயக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’.

நயன்தாரா இப்படத்தின் நாயகியாக நடிக்கிறார். மௌலி, ஊர்வசி மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு 44 நாட்களில் 90 சதவீதம் முடிந்துவிட்டது.

‘அவள்’ படத்தின் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ‘தானா சேர்ந்த கூட்டம்’” பட ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி ஆர்ஜே பாலாஜி கூறுகையில்,

“ஐசரி கணேஷ் போன்ற ஒரு தயாரிப்பாளர் நம் பக்கம் இருந்தால் எதுவும் சாத்தியமே. அவர் போன்ற ஒரு தயாரிப்பாளர் இருக்கும் போது நாம் படப்பிடிப்பில் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. நாம் கவலைகொள்ள வேண்டிய ஒரே விஷயம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அளவில்லா சுதந்திரத்தை எப்படி வீணாக்காமல் பயன்படுத்துவது என்பது தான். அதைப் படக்குழு தெளிவாக உணர்ந்து வேலை செய்திருக்கிறோம்.

படத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவது ஒன்று தான் எங்கள் குறிக்கோள். அவர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாகப் பூர்த்தி செய்வோம். மொத்த படக்குழுவும் படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறது. நவம்பர் 29, 2019 அன்று படப்பிடிப்பை துவக்கி 44 நாட்களில் 90 சதவீத படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். இன்னும் ஒரே ஒரு வார சென்னை படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கவுள்ளோம்.

இயக்குநர் என்ஜ சரவணன் இல்லையென்றால் இத்தனை சீக்கிரம் படப்பிடிப்பை முடித்திருக்க முடியாது. அவரது உழைப்பு அபாரமானது. நயன்தாரா இப்படத்திற்காக தந்திருக்கும் அர்ப்பணிப்பு வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. இந்த கதாபாத்திரத்திற்காக அவர் விரதம் இருந்திருக்கிறார். தன் முழு ஆத்மாவையும் ஒருங்கிணைத்து பணிபுரிந்திருக்கிறார். இப்படம் அவர் சினிமா வாழ்வில் வெகு முக்கியமான படமாக என்றென்றும் நிலைத்திருக்கும். மேலும் அவரது கதாபாத்திரம் படத்திற்கு பெரும் பலமாகவும் இருக்கும்,” என்றார்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: