Connect with us

Tamil Cinema News

பேருந்து காட்சியை 10 நாள் படமாக்கினோம் – ரோஹித் பதக்

Published

on

rohit pathak

வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் ரோஹித் பதக். இவரும் கார்த்தியும் இடம் பெற்ற ஓடும் பேருந்தில் படமாக்கப்பட்ட ஆக்ஷன் காட்சியை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

படம் பற்றி அவர் கூறியதாவது,

“கார்த்தி போன்ற தலைசிறந்த நடிகருடன் நடித்தது மகிழ்ச்சியான ஒன்று. அவர் அதிகம் ஒத்துழைக்கக் கூடிய சிறந்த நபர். நானும் கார்த்தியும் அவரவர் திரைத் துறையை பற்றி அதிகம் விவாதிப்பது உண்டு. அவர் மிகவும் அமைதியானவர் , என்னோடு நட்பாக பழகுவார்.

முக்கியமான காட்சிகளில் எனக்கு உதவுவார். சில நேரங்களில் நான் மிகவும் பயங்கரமான சண்டை மற்றும் சேசிங் காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கும். பஸ் மேல் படமாக்கப்பட்ட பரபரப்பான ஆக்சன் காட்சியை படம் பிடிக்க 9 முதல் 10 நாள் ஆகியது. தினமும் அந்தக் காட்சியை படமாக்கும் போது நானும் கார்த்தியும் பஸ் மேல் ஏறி அமர்ந்திருப்போம். இந்தக் காட்சியை படமாக்க ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷ் எங்களுக்கு அதிக அளவில் ஒத்துழைப்பு தந்தார். இப்போது நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். சண்டைக் காட்சியை படமாக்கும் போது தன்னுடைய உதவியாளர்களை என்னோடு இருக்குமாறு கூறி பாதுகாப்பாக அக்காட்சிகளை படம்பிடித்தார் தினேஷ்.

நான் எப்போதும் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னேரே படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விடுவேன். இயக்குநர் வினோத் தான் எப்போதும் படப்பிடிப்பு தளத்துக்கு முதல் ஆளாக வருபவர். நான் சீக்கிரம் வருவதைப் பார்த்து, அவருடைய உதவி இயக்குநர்களிடம் கூறி என்னை படப்பிடிப்பு தளத்துக்கு கடைசியாக அழைத்து வருமாறு கூறினார் வினோத்.

படம் ரிலீஸ் ஆகும் நாள் அன்று என்னுடைய கைபேசியை அனைத்து வைத்திருந்தேன். படத்துக்கு என்ன ரிசல்ட் வருமோ. எல்லோரும் படத்தை பற்றிப் என்ன எழுதப் போகிறார்களோ என்றோ பயந்துகொண்டு இருந்தேன். ஆனால் படத்துக்கு நல்ல விமர்சனம் வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கே தென்னிந்திய சினிமாவில் எல்லாம் சரியாக உள்ளது என்றும். தயாரிப்பு நிர்வாகம் மிகச் சிறப்பாக உள்ளது,” என்கிறார் ரோஹித் பதக்.

Tamil Cinema News

ஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’

Published

on

By

ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் - 4 Tamil Cinema

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெயின்மென்ட் அடுத்து தயாரிக்க உள்ள படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ‘பொன்மகள் வந்தாள்’ எனப் பெயர் வைத்துள்ளார்கள். இயக்குனர்கள் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள். இயக்குனர், நடிகர் பிரதாப் போத்தனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அறிமுக இயக்குனர் ஜேஜே. பிரட்ரிக் இப்படத்தை இயக்குகிறார். ‘96’ படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். பல தரமான படங்களை ஒளிப்பதிவு செய்த ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார், 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனரும் தயாரிப்பாளருமான சூர்யா, நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் ஹரி, பிரம்மா, முத்தையா, T.J.ஞானவேல், 2 D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, எஸ்.ஆர் பிரகாஷ் பாபு விநியோகஸ்தர் B.சக்திவேலன் ஆகியோரும், மற்றும் படத்தின் நட்சத்திரங்கள் ஜோதிகா, பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் படத்தின் இயக்குநர் பிரட்ரிக் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

Continue Reading

Tamil Cinema News

‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…

Published

on

By

V 1 - கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்...

பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா மூவ்மெண்ட் வழங்க, பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் வெளியிடும் படம் ‘V 1’.

“வடசென்னை, பேரன்பு, மகளிர் மட்டும், குற்றம் கடிதல், மெட்ராஸ்” போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பாவல் நவகீதன் இப்படத்தை இயக்குகிறார். இவர் பல குறும்படங்களை இயக்கி விருதுகளையும் பெற்றுள்ளார்.

இப்படத்தின் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார். மற்றும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒரு சிலருக்கு கூட்டத்தைப் பார்த்தால் பயம், அதிலும் சிலருக்கு அந்த கூட்டத்தின் முன் பேச வேண்டும் என்றால் அதைவிட பயம். கத்தியை பார்த்தால் பயம், இரத்தத்தை பார்த்தால் பயம் என பலருக்கு பல வகையான பயம் இருக்கும். இப்படத்தின் கதாநாயகனுக்கு இருட்டு என்றாலே பயம்.

கதைப்படி கதாநாயகன் காவல்துறையில் வேலை பார்க்கும் ஒரு போலீஸ் அதிகாரி. ‘V 1’ என்ற எண்ணை கொண்ட வீட்டில் ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலை பற்றி விசாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு கதாநாயகன் உட்படுத்தபடுகிறான். இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன் அந்த கொலைக்கான மர்மத்தையும், கொலைகாரனையும் கண்டுப்பிடித்தாரா என்பதே படத்தின் கதை.

இன்வஸ்டிகேட்டிவ் திரில்லரான இப்படம் முழுக்க விறுவிறுப்பாகவும், காட்சிக்குக் காட்சி புதுப்புது யுக்திகளையும் அமைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

விரையில் வெளியாகவுள்ள ‘V 1’ படப்பிடிப்பு முற்றிலுமாக சென்னையில் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளது.

Continue Reading

Tamil Cinema News

சினிமா கேட்பாரற்ற தொழில் அல்ல – தயாரிப்பாளர் டி.சிவா

Published

on

By

சினிமா கேட்பாரற்ற தொழில் அல்ல - தயாரிப்பாளர் டி சிவா

ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், ஏகே இயக்கத்தில் துருவா, இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டூப்பர்’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் இயக்குநர் ஏகே, நாயகன் துருவா, நாயகி இந்துஜா, நடிகர் ஷாரா, ஆதித்யா, படத்தின் ஒளிப்பதிவாளர்கள் தளபதி ரத்னம், சுந்தர்ராம், இசை அமைப்பாளர் திவாகரா தியாகராஜன், கலை இயக்குநர் சூர்யா, படத்தொகுப்பாளர் வேல்முகன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் அருண் கார்த்திக் என்கிற ஏ.கே. பேசும்போது ,

“இது என் 15 ஆண்டு காலக் கனவு. நான் இங்கே சிரமப்பட்டு வந்தேன் என்று சொல்வதைவிட பலரைச் சிரமப்படுத்தி, கஷ்டப்படுத்தி வந்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். இதை ஒரு சாதாரண காமெடி படமாகத்தான் ஆரம்பித்தோம். ஆனால் அப்படியே இருக்கக்கூடாது என்று யோசித்தோம்.

பலவித வண்ணங்களையும் வாசனைகளையும் கலந்து இதை வேறு வகையான படமாக உருவாக்கி இருக்கிறோம். இதில் பலரது உழைப்பு இருக்கிறது .ஒரு புதிய படக்குழு செய்துள்ள புதிய முயற்சி இது. ஊடகங்கள் ஆதரவு தர வேண்டும். பொதுவாகக் கண்டிப்பவர்களை யாருக்கும் பிடிக்காது, அப்பாவாக இருந்தாலும் சரி அம்மாவாக இருந்தாலும் சரி. ஆனால் ஊடகங்கள்தான் கண்டிக்கிற போதும் நண்பர்களாக இருப்பவர்கள். இப்படத்திற்கு அவர்களின் ஆதரவு வேண்டும்,” என்றார் .

நாயகன் துருவா பேசும்போது,

“இயக்குநர் ஏ.கே ஒன்மேன் ஷோ-வாக பலவற்றை படத்தில் செய்திருக்கிறார். 90 களில் சிம்ரன் இருந்த மாதிரி கவர்ச்சியாகவும் இருந்து நடிப்பையும் கொடுத்திருக்கிறார் இந்துஜா. இதில் எங்களுடன் இணைந்து நடித்திருக்கும் ஷாரா, ஆதித்யா நல்ல பெயர் பெறுவார்கள். ஒரு படத்திற்குக் கதைதான் முக்கியம் என்றாலும், விநியோகம் மிக முக்கியம், என்று இப்போது மாறியிருக்கிறது. இன்று சின்ன படம் பெரிய படம் என்றில்லை . வெற்றிப்படம் தோல்விப்படம் என்று மட்டுமே பேசப்படுகிறது. இந்த படத்திற்கு ஆதரவு தாருங்கள்,” என்றார்.

நாயகி இந்துஜா பேசும்போது,

“இந்தப் படக்குழு குறும்பட உலகத்தில் இருந்து வந்தாலும் தங்கள் பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள். குறும்படக் கலைஞர்கள் இருப்பதைக் கொண்டு சிறப்பாக செய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். அப்படி இதிலும் செய்திருக்கிறார்கள்,” என்றார்.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசும்போது

“இது ஒரு நம்பிக்கை தரும் பட முயற்சி என்று சொல்லலாம். குறும்படத்திலிருந்து நிறைய நம்பிக்கையானவர்கள் வருகிறார்கள். சமீபத்தில் ஏழு குறும் படங்கள் பார்த்தேன். அதில் ஒருவர் பிரமாதமாக நடித்திருந்தார்.

ஒன்றை இங்கே சொல்ல வேண்டும். ஊடகங்களில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அதனால் இந்த விளக்கம் தர வேண்டி உள்ளது. தயாரிப்பாளர்கள் விமர்சனத்திற்கு எதிரானவர்கள் அல்ல. என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன் .ஒரு போதும் தயாரிப்பாளர்கள் விமர்சனங்களை எதிர்ப்பதில்லை. தரக்குறைவான விமர்சனங்களைத்தான் எதிர்க்கிறோம்.

மோசமாக விமர்சனம் செய்த படங்களும் ஓடிஇருக்கின்றன. விமர்சனங்கள் நாகரிகத்தின் எல்லை தாண்டாமல் இருக்க வேண்டும். அதற்கு வரம்பு உண்டு. அந்த எல்லை மீறிப் போகக்கூடாது. என்ன படம் எடுத்திருக்கிறார் ? தியேட்டருக்குப் போகாதீர்கள், என்று எல்லாம் கேவலமாகப் பேசக் கூடாது.

தி.நகரில் ஒரு கடை வாசலில் நின்று கொண்டு “அந்த கடையில் பொருள் வாங்காதே, எதுவும் எடுக்காதே” என்று கூறினால் அவர் அந்த நேரம் எந்தச் சட்டை போட்டு இருந்தாலும் அதைக் கிழித்து விடுவார்கள். சினிமா அவ்வளவு தூரம் கேட்பாரற்ற தொழில் அல்ல. படத்தின் முடிவு என்ன என்பதை ரசிகர்கள் தீர்மானிக்கட்டும். முதல் நாள் முதல் ஷோவே வெற்றி பெறுவதில்லை. அவன் பார்க்க அவகாசம் கொடுங்கள்.

விமர்சனங்களால் ஓடிய படம் நிறைய உண்டு. நல்ல விமர்சனங்களால் ஓடாத படங்களும் உண்டு. விமர்சனம் என்கிற பெயரில் சிலர் செய்யும் இந்த செயல்களால் வருத்தப்படுகிறோம். இது எல்லை மீறிச் சென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரிக்கிறோம்,” என்றார்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!