Connect with us

Upcoming Movies

திரி – விரைவில்…திரையில்…

Published

on

thiri tamil movie

சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.கே. பாலமுருகன் மற்றும் ஆர். பி. பாலகோபி தயாரிக்க, எம். வெற்றிக்குமரன், எஸ். ஆண்டோன் ரஞ்சித் மற்றும் எஸ். ஜான் பீட்டர் இணைந்து தயாரிக்க உருவாகியுள்ள படம் ‘திரி’.

அசோக் அமிர்தராஜ் இயக்குனராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் அஸ்வின் கக்கமனு – சுவாதி நாயகன், நாயகியாக நடித்துள்ளார்கள்.

அஸ்வினின் அப்பாவாக ஜெயபிரகாஷ், அம்மாவாக அனுபமா குமார், மிரட்டலான வில்லனாக ஏ.எல். அழகப்பன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன், சென்ட்ராயன், டேனியல் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இசையமைப்பாளராக ‘சூப்பர் சிங்கர்’ புகழ் அஜீஸ் அறிமுகமாகிறார். வைரமுத்து அனைத்துப் பாடல்களையும் எழுதுகிறார். ஒரு பாடலுக்கு இசையமைப்பாளர் எஸ் எஸ் தமன் இசையமைத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தந்தை – மகன் உறவை மையமாக வைத்து வந்த படங்கள் குறைவு என்றாலும், அவை யாவும் தமிழக ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிந்த திரைப்படங்கள் ஆகும். தற்போது அந்த வரிசையில் இணைய தயாராகிவிட்டது ‘திரி’.

“நாம் எவ்வளவு தான் வாழ்க்கையில் வெற்றிகளைக் குவித்தாலும், நம்முடைய தாய் – தந்தை அதை பார்க்க இல்லையென்றால் அந்த வெற்றிகள் யாவும் முழுமை பெறாது. இந்தக் கருத்தை ‘திரி’ படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகர்களும் உணருவர்.

நாம் ஒவ்வொருவரும் நம் நிஜ வாழ்க்கையில் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கும், சந்திக்கப் போகும் முக்கியமான பிரச்சனையை எங்களது ‘திரி’ படமானது ரசிகர்களுக்கு எடுத்துரைக்கும்.

படத்தின் காட்சிகள் யாவும் மிக யதார்த்தமாக இருக்க வேண்டும் என எண்ணி, பெரும்பாலான காட்சிகளை இயற்கையான சூழ்நிலைகளில் தான் படமாக்கி இருக்கிறோம்.

மிக பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்டிருக்கும் எங்களது ‘திரி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியானது நிச்சயம் எல்லா ரசிகர்களையும் வியப்படைய வைக்கும்,”என்கிறார் இயக்குனர் அசோக் அமிர்தராஜ். குடும்ப
உறவுகளை மிக நுணுக்கமாக சொல்ல இருக்கும் ‘திரி’ படம் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இசை – அஜிஸ் (அறிமுகம்), தமன் ( ஒரு பாடல்)
பாடல்கள் – வைரமுத்து
ஒளிப்பதிவு – கே.ஜி. வெங்கடேஷ் (சதுரங்க வேட்டை),
படத் தொகுப்பு – எஸ்.பி. ராஜா சேதுபதி (சதுரங்க வேட்டை)
நடனம் – தினேஷ்
ஸ்டன்ட் – தளபதி தினேஷ்
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா
இணை தயாரிப்பு – எம். வெற்றிக்குமரன், எஸ். ஆண்டோன் ரஞ்சித், எஸ். ஜான் பீட்டர்
தயாரிப்பு – ஏ.கே. பாலமுருகன், ஆர். பி. பாலகோபி
இயக்கம் – அசோக் அமிர்தராஜ்

Upcoming Movies

பூவே போகாதே – விரைவில்…திரையில்…

Published

on

By

பூவே போகாதே - விரைவில்...திரையில்...

கோல்ட் டைம் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சத்யபிரமீலா தயாரிக்கும் படம் ‘பூவே போகாதே’.

நவீன் நயனி இயக்கும் இப் படத்தில் தருண் தேஜ் கதாநாயகனாகவும், லாவண்யா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மற்றும் கிடார் ஷங்கர், அஜெய் கோஸ், சீனியர் சூர்யா, சத்யகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது..

“இது 1980களில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட காதல் திரைப்படம். முழுக்க முழுக்க நாயகன், நாயகியைச் சுற்றி நடக்கும் திரைக்கதை. கல்லூரியில் படிக்கும் நாயகன், நாயகி இருவருக்கும் காதல் மலர்கிறது. அதனால் அவர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் மற்றும் எதிர்ப்புகளை எப்படி கையாள்கிறார்கள். அந்த காலகட்டத்தில் காதலை இந்த சமூகம் எப்படிப் பார்த்தது என்பதை அழுத்தமாகப் பதிவிட்டுள்ளோம்.

தங்களின் காதலுக்கு வந்த எதிர்ப்புக்களை மீறி எப்படி காதல் ஜோடி சேர்ந்தார்கள் என்பதை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறோம்,” என்கிறார் இயக்குனர் நவீன் நயனி.

இசை – சபு வர்கீஸ்
ஒளிப்பதிவு – ஸ்ரீனிவாஸ் வின்னகொட்டா
பாடல்கள் – விவேகா, டாக்டர் லிங்கேஸ்வர்
எடிட்டிங் – ஜே.பி
நடனம் – நரேஷ் ஆனந்த்
ஸ்டன்ட் – ராம் சுங்கரா, நபா சுப்பு.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நயனி.

Continue Reading

Upcoming Movies

மோசடி – விரைவில்…திரையில்…

Published

on

By

மோசடி - விரைவில்...திரையில்...

JCS மூவீஸ் பட நிறுவனம் தயாரிப்பில் ஜெகதீசன் இயக்கும் படம் ‘மோசடி’.

இந்த படத்தில் விஜூ நாயகனாக நடிக்க, நாயகியாக பல்லவி டோரா நடித்துள்ளார். மற்றும் அஜெய்குமார், N.C.B.விஜயன், வெங்கடாச்சலம், நீலு சுகுமாரன், O.S.சரவணன், மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இது முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படமாம்.

படம் பற்றி இயக்குனர் ஜெகதீசன் கூறியதாவது,

“கடந்த 2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி இரவு 8 மணியளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து பெரும் புள்ளிகள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எப்படி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றினார்கள். அதனால் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள். இந்த அறிவிப்பைப் பயன்படுத்தி எப்படி குறுக்கு வழியில் மோசடி செய்தார்கள். இந்த அறிவிப்பு சரியா? தவறா? என்பதை கிரைம் மற்றும் திரில்லருடன் கமர்ஷியல் கலந்து உருவாக்கி உள்ளேன்,” என்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவு – R.மணிகண்டன்
இசை – ஷாஜகான்
பாடல்கள் – மணிஅமுதவன், K.ஜெகதீசன்
எடிட்டிங் – S.M.V.சுப்பு, கோபி ரா நாத்
நடனம் – விமல், பாலா
தயாரிப்பு – JCS மூவீஸ்
கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் – K.ஜெகதீசன்

Continue Reading

Upcoming Movies

சிறகு – விரைவில்…திரையில்…

Published

on

By

சிறகு - விரைவில்...திரையில்...

உறவுகளின் புரிதல் தேடிப் பயணிக்கும் இரு இளைஞர்களின் கதை. இசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம்.

சென்னையில் தொடங்கும் இப்பயணம் கன்னியாகுமரி வரை நீள்கிறது. எல்லோரும் இயந்திர கதியில் ஓடிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இயற்கையோடு இயைந்த பயணமும் இசையுமே புத்துணர்வைக் கொடுக்கும் என்கிறது ‘சிறகு’.

‘மெட்ராஸ் ‘, ‘கபாலி’, ‘வடசென்னை ‘, ‘சண்டைக்கோழி-2 ‘, ‘பரியேறும் பெருமாள் ‘, ஆகிய படங்களில் நடித்த ஹரி கிருஷ்ணன் இப்படத்தின் நாயகன். நடனத்திலும், யோகாவிலும் பயிற்சி பெறற அக்ஷிதா இப்படத்தின் நாயகி.

டாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் ஆகியோர் இரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். காளி வெங்கட் நட்புக்காக இணைந்துள்ளார் .

மனதை வருடும் பாடல், இதயத்தை நனைக்கும் பாடல், துள்ளலான பாடல் என இசை வடிவம் கொடுத்திருக்கிறார் அரோல் கொரேலி.

திரைப்படத்துறையில் அனுபவம் மிக்க எக்சிகியூடிவ் புரொடியூசராக பல ஆண்டுகள் பணியாற்றிய மாலா மணியன் தனது ஃபர்ஸ்ட் காப்பி புரொடக்ஷன்ஸ் மூலம் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட குட்டி ரேவதி இப்படத்தை இயக்கியிருக்கிறார் .

தயாரிப்பு : மாலா மணியன்
எழுத்து & இயக்கம் : குட்டி ரேவதி
ஒளிப்பதிவு : ராஜா பட்டச்சார்ஜி
இசை : அரோல் கொரேலி
படத்தொகுப்பு : அருண் குமார் VS
பாடல்கள் : குட்டி ரேவதி, அறிவு
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!