Connect with us

Tamil Cinema News

மகன்களை நினைத்து ‘ஃபீல்’ பண்ண பாக்யராஜ், பாண்டியராஜன்

Published

on

Thodraa Audio Launch

ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’. இயக்குநர் பாக்யராஜின் உதவியாளரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ள இந்தப் படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன், கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா, ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். உத்தமராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஏ.வெங்கடேஷ், ​ மீரா கதிரவன், ​தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஜே எஸ் கே, சுரேஷ் காமாட்சி, விடியல் ராஜூ, கனியமுதன், பி. டி. செல்வகுமார் நடிகர்கள் பரத், ஸ்ரீகாந்த், கலையரசன், அரீஷ் குமார்,​ நடிகை நமீதாவின் கணவரும் நடிகருமான வீரா, ​ ஷரண், போஸ் வெங்கட், லொள்ளு சபா ஜீவா, நடிகைகள் நமீதா, வசுந்தரா, கோமல் ஷர்மா தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், உள்ளிட்ட பலரும் மற்றும் படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.

படத்தின் நாயகன் பிருத்விராஜன் அப்பா இயக்குனர், நடிகர் பாண்டியராஜன் பேசும் போது,

“பிருத்வி இவ்வளவு நண்பர்களை சேர்த்து வைத்திருப்பான் என நினைத்தே பார்க்கவில்லை. என் கவலையெல்லாம் இன்னும் அவன் சினிமாவில் ஒரு நல்ல நிலைக்கு வரவில்லையே என்பதுதான். வெற்றி அவ்வளவு சாதாரணமாக வந்துவிடாது. உடனே வந்துவிட்டால் அதற்கு மரியாதையும் கிடையாது. எதற்கும் ஒரு நல்ல நேரம் வரவேண்டும். ஆனால், இந்தப் படத்தைப் பார்த்ததும் பிருத்விக்கு அந்த நல்ல நேரம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது. அந்த அளவுக்கு இந்தப் படத்தில் பிருத்வியை பார்க்கும்போது புது தேஜஸ் தெரிகிறது,” என நெகிழ்ச்சியுடன் கூறி கண் கலங்கினார்.

பின்னர், இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது,

“பாண்டியராஜன் தனது மகனைப் பற்றி ரொம்பவே ஃபீல் பண்ணிப் பேசினார். அவரே அப்படி ஃபீல் பண்ணினால், அவருக்கு முன்னாடி வந்த நான், என் மகன் சாந்தனுவை பற்றி எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பேன். பத்து வருடங்களுக்கு முன் ‘காதல்’ படத்தில் நடிக்கச் சொல்லி சாந்தனுவுக்குத்தான் அந்த வாய்ப்பு வந்தது. படம் நிச்சயம் ஹிட்டாகும் என நன்றாகவே தெரிந்தது. ஆனாலும், அப்போது அந்தப் படத்தில் நடிக்கும் அளவுக்கு அவருக்கான வயது இல்லை என மறுத்துவிட்டேன். அதற்குப்பின் அந்த வாய்ப்பு பரத்திற்குப் போய், படமும் மிகப் பெரிய ஹிட்டாகி விட்டது. அதனால் யாருக்கு என்ன கிடைக்கவேண்டுமோ அது எல்லாமே வரும் நேரத்தில் தான் வரும். அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

என்னுடைய உதவி இயக்குநர் என்பதற்காகவே மதுராஜுக்கு படம் கொடுத்ததாக தயாரிப்பாளர் சொன்னார். அந்த வகையில் இந்தப் படத்தை நல்லபடியாக முடித்து ஆடியோ ரிலீஸ் அளவுக்குக் கொண்டு வந்ததிலும் தயாரிப்பாளருடன் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் படத்தை முடித்ததிலும் இயக்குநர் மதுராஜ் என் பெயரைக் காப்பாற்றி விட்டார். சினிமாவில் பலரும் வில்லனாக நடித்து ஹீரோவாக உயர்ந்தவர்கள் தான். அதனால் இந்தப் படத்தில் நடித்த எம்.எஸ்.குமாரும் ஹீரோவாக மாற வாழ்த்துகள்,” என வாழ்த்திப் பேசினார்.

தயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணக்குமார் பேசும்போது,

“என் மாமியாரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாகவும் எனது கணவரை நடிகராக பார்க்கவேண்டும் என்பதற்காகவும் தான் தயாரிப்பாளராக மாறினேன். என் வாழ்க்கையில் இதுவரை இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே நான் பார்த்துள்ளேன். இயக்குநர் மதுராஜ் சொன்ன கதை என்னைக் கவர்ந்துவிட்டது. அதற்காக எடுத்ததுமே என் கணவரை ஹீரோவாகப் பார்க்க என்னால் முடியவில்லை. ஹீரோவாக அவருக்கு செட்டாகுமா எனத் தீர்மானிக்க முடியவில்லை. இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களிடம் அவருக்கான வரவேற்பு கிடைத்தால், அடுத்துவரும் படங்களில் அவர் ஹீரோவாக நடிப்பதை மக்களும், இயக்குநர்களும் தீர்மானிக்கட்டும்,” என்றார்.

Tamil Cinema News

ஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை

Published

on

By

ஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ‘நேர்கொண்ட பார்வை’.

இப்படத்தை பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் உள்ள புகழ் பெற்ற ‘லீ கிரான்ட் ரெக்ஸ்’ தியேட்டரில் திரையிட்டார்கள்.

படத்தில் அஜித்தைப் பார்த்த ஆர்வக் கோளாறு ரசிகர்கள், தியேட்டர் ஸ்கிரீனை சேதப்படுத்தியுள்ளார்கள். அதைத் தொடர்ந்து அந்த தியேட்டர் நிர்வாகம் இனி தமிழ்ப் படங்களைத் திரையிட மாட்டோம் என அறிவித்துவிட்டதாம்.

இதை பிரான்ஸ் நாட்டில் உள்ள தமிழ்ப் படங்களின் வினியோக நிறுவனம் அவர்களது டுவிட்டரில் அறிவித்துள்ளது.

அந்த தியேட்டரில் இதற்கு முன்பு ‘கபாலி, மெர்சல், சர்கார், பேட்ட, விஸ்வாசம்’ உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை வெளியிட்ட வினியோகஸ்தரிடம் தியேட்டர் ஸ்கிரீனை மாற்றித் தரச் சொல்லி நிர்வாகம் கேட்டுள்ளதாம். 7000 யூரோ மதிப்பில், அதாவது 5 லட்சம் செலவில் அந்த ஸ்கிரீனை மாற்றித் தர அவர்களும் சம்மதம் சொல்லிவிட்டனராம்.

இனி, அந்த புகழ் பெற்ற தியேட்டரில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட மாட்டாது.

Continue Reading

Tamil Cinema News

சுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’

Published

on

By

சுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’

டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘ஆக்ஷன்’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு முழு நீள ஆக்ஷன் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறதாம்.

இப்படத்தில் விஷால் மிலிட்டரி கமாண்டோ ஆபீஸராக நடிக்கிறார். ஒரு உண்மையைக் கண்டு பிடிக்க பல நாடுகள் செல்கிறார். அங்கே ஆக்ஷ்ன், சேசிங் என விறுவிறுப்பான ஸ்டன்ட் காட்சிகளை அன்பறிவ் அமைத்துள்ளார்கள். சமீபத்தில் தேசிய விருது பெற்ற இவர்கள் இப்படத்தில் பல வித்தியாமான சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்களாம்.

இதில் பல காட்சிகளில் விஷால் டூப் போடலாமலேயே நடித்திருக்கிறாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கி, அசர்பைசான், கேப்படோசியா, பாகு, இஸ்தான்புல், தாய்லாந்து நாட்டில் உள்ள கிராபி தீவு, பேங்காக் உள்ளிட்ட இடங்களில் 50 நாள்கள் நடைபெற்றுள்ளன.

மேலும் இந்தியாவில் ஜெய்ப்பூர், ரிஷிகேஷ் ,டேராடூன், ஹைதராபாத், சென்னை, போன்ற இடங்களிலும் 50 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளதாம்.

விஷால் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக மலையாளத்தில் பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமி இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இவர்களுடன் யோகி பாபு, ராம்கி, சாயாசிங், ஷாரா, பழ .கருப்பைய்யா, பிரபல இந்தி நடிகர் கபீர் சிங் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Continue Reading

Tamil Cinema News

‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து

Published

on

By

சர்க்கார் வழியில் முடிந்த கோமாளி கதை பஞ்சாயத்து

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த வருடம் வெளிவந்த படம் ‘சர்க்கார்’. அந்தப் படத்தின் கதை தன்னுடையது என வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தமிழ்த் திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் அதற்கான பஞ்சாயத்து நடைபெற்றது. படத்தின் ஆரம்பத்தில் வருண் ராஜேந்திரனுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் ஒரு கார்டு போடப்பட்டது.

அது போன வருடம், இந்த வருடம் ‘கோமாளி’ படத்திற்காக மீண்டும் ஒரு திருட்டுக் கதை பஞ்சாயத்து வந்தது. இயக்குனர், நடிகர் பார்த்திபனின் உதவி இயக்குனரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் ‘கோமாளி’ படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் சங்கத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

ஏற்கெனவே ரஜினிகாந்த்தை டிரைலரில் கிண்டலடித்தது ஒரு சர்ச்சையாகி அதை முடித்து வைத்தார்கள். கடந்த ஒரு வார காலமாக இந்த கதைத் திருட்டு பஞ்சாயத்து நடந்தது. கடைசியில் ‘சர்க்கார்’ பட வழியில் ‘கோமாளி’ படத்தின் கதைத் திருட்டு பஞ்சாயத்தையும் முடித்து வைத்திருக்கிறார்கள்.

‘கோமாளி’ படத்தின் ஆரம்பத்தில் கிருஷ்ணமூர்த்தியை கௌரவப்படுத்தும் விதத்தில் ஒரு கார்டு போட உள்ளார்களாம்.

திரை மறைவில் சில பல லட்சங்களை கிருஷ்ணமூர்த்திக்கு ‘கோமாளி’ தயாரிப்பாளர் தந்திருக்கலாம் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: