Connect with us

Tamil Cinema News

என் மக்களின் பாராட்டே மிகப் பெரிய விருது – செழியன்

32 சர்வதேச விருதுகளை வென்ற டூ லெட், பிப்ரவரி 21 வெளியீடு

Published

on

tolet movie news

“கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர்” உள்ளிட்ட சிறந்த படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் இயக்குநர் செழியன்.

அவர் முதல் முறையாக இயக்கியுள்ள ‘டு லெட்’ படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி வெளியாகிறது.

கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் முதன் முதலாகக் கலந்துகொண்டது ‘ டு லெட்’ படம். 2017ல் கொல்கத்தாவில் நடைபெற்ற 23வது சர்வதேசத் திரைப்பட விழாவில் 23வது சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியப் படங்களுக்கானப் பிரிவில் சிறந்த படம் எனத் தேர்வாகியது. உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 32 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது.

படம் பற்றி இயக்குனர் செழியன் அவரது எண்ணங்களைப் பகிர்ந்தார்.

“தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மென்பொருள் துறை வளர்ச்சியடைந்ததும் வீடு வாடகைக்குக் கிடைப்பது எவ்வளவு பிரச்சனைக்குரியதாக மாறியுள்ளது. நடுத்தர மக்கள்தான் இதில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் அப்படி வாடகைக்கு வீடு தேடி அலையும் ஒரு சாமானியனின் பிரச்சினைதான் ‘டு லெட்’ படத்தின் மையக்கரு.

பொதுவாகவே இங்கே ஒரு முழு நீள திரைப்படத்தை ஆரம்பித்து எடுத்து முடிப்பதற்குக் குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆகி விடுகிறது. இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதற்கு கூடுதலாக ஒரு வருடம் எடுத்துக்கொண்டது. அவ்வளவுதான் அதனால் இதில் எந்த தாமதமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இப்போது சரியான நேரம் என்பதால் தியேட்டரில் ரிலீஸ் செய்கிறோம்.

பொதுவாகவே இங்கே குறைந்த பட்ஜெட் படங்கள் என்றால், அதிலும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலரிடம் இளக்காரமான பார்வை இருக்கவே செய்கிறது.

மலையாள, வங்காள மொழி படங்கள் தேசியவிருது வாங்கினால், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அந்த அரசுகள் 25 லட்சம், 40 லட்சம் அல்லது சொந்த வீடு என கொடுத்து ஊக்கப்படுத்துகிறார்கள். இன்னும் நம் ஊரில் அந்த நிலை வரவில்லை. ஒருவேளை ‘ டு லெட் ’ மாதிரி வருடத்திற்கு பத்து படங்கள் வரும் போது நம்மூரிலும் தேசிய விருது படங்கள் கவனிக்கப்பட வாய்ப்பு உருவாகலாம்.

விருதுகளுக்கு அனுப்பியதாலேயே அதை கலைப்படைப்புதானே என ஒதுக்கிவிடத் தேவையில்லை. சொல்லப்போனால் இதுதான் சிறந்த கமர்சியல் படம். பட்ஜெட்டில் படம் எடுத்தால், பட்ஜெட்டை தாண்டிய லாபம் கிடைப்பது உறுதி.

ஆம். இதில் பலருக்கும் தெரியாத உண்மை என்னவென்றால் இது போன்ற படங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் போது, ஒரு பக்கம் நம் தமிழ் சினிமாவின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.

அதே சமயம் இன்னொரு பக்கம் இப்படி திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதன் மூலம் பொருளாதார ரீதியாக நீங்கள் ஒரு படத்திற்கு செலவு செய்த தொகை கிட்டத்தட்ட உங்களிடமே திரும்பி வந்துவிடும், அதுவும் ரிலீசுக்கு முன்னதாகவே.
.
பிரபல மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், என்னிடம் படமெடுக்க 50 லட்ச ரூபாய் இருந்தால் போதும். அதை வைத்து நான் பத்து கோடி சம்பாதித்து விடுவேன் எனக் கூறுவார். அது எப்படி என்றால் இப்படித்தான். திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வது, விருது பெறுவது, இவை அனைத்துமே படத்திற்கான அங்கீகாரத்தைத் தாண்டி அவற்றிற்கு பொருளாதார ரீதியாக உதவுகின்றன.

சில திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டும் படத்திற்கு விருது கிடைக்காவிட்டால் கூட அது நல்ல படம் என்பதை உணர்ந்து அங்குள்ள சேனல்கள் சில அந்தப் படத்தை ஒருமுறை ஒளிபரப்புவதற்கான உரிமையைக் கேட்டு அதற்காக ஒரு தொகையைக் கொடுக்கின்றன. இப்படி பல நாடுகளில் மொத்தம் ஆயிரக்கணக்கில் சேனல்கள் இருக்கின்றன. இந்த வணிகம் இங்கே பலருக்குத் தெரியவே இல்லை.

இந்த படத்தைத் தயாரிப்பது குறித்து ஒரு தயாரிப்பாளரிடம் சொன்னபோது பெரிய நடிகர்களை வைத்து, பெரிய பட்ஜெட்டில் பண்ணலாம் எனக் கூறினார். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அடுத்தவர் பணத்தில் அப்படி பரிசோதனை செய்து பார்க்க நான் விரும்பவில்லை. அதனால் தான் என் மனைவியே இந்த படத்தைத் தயாரித்தார்.

உலகம் முழுதும் சுற்றி பல விருதுகளை வாங்கிய இந்த படம், இங்கே என் மக்களிடம் பாராட்டைப் பெறும் போதுதான் அதை இன்னும் மிகப் பெரிய விருதாக நான் கருதுகிறேன். அதனால் வரும் பிப்-21ஆம் தேதிக்காகக் காத்திருக்கிறேன்” என்கிறார் இயக்குநர் செழியன்.

இந்தப்படத்தில் சந்தோஷ் நம்பிராஜன், ஷீலா ராஜ்குமார், ஆதிரா பாண்டிலட்சுமி, மாஸ்டர் தருண்பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Tamil Cinema News

பிகில் – வழக்கு தொடர்ந்த உதவி இயக்குனரின் பதிவு

Published

on

By

பிகில் - வழக்கு தொடர்ந்த உதவி இயக்குனரின் பதிவு

‘பிகில்’ படத்தின் கதை சம்பந்தமாக உதவி இயக்குனர் கே.பி. செல்வா என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அது பற்றி கே.பி. செல்வா அவருடைய பேஸ்புக் பக்கத்தில் தற்போது பதிவிட்டிருப்பதாவது,

“ஒரு தயாரிப்பாளர் கிட்ட கதையை கொடுத்துட்டு வந்ததுக்கப்பறம் அவங்க கிட்ட இருந்து ஒரு கால் வராதா நம்ம வாழ்க்க மாறாதான்னு யோசிக்கிற நிறைய உதவி இயக்குனர்கள்ல நானும் ஒருத்தன்,

போன தீபாவளிக்கு இந்த நேரம் எங்களுக்குள்ள இந்த கதை பிரச்னை தொடங்குச்சு !! உங்க கிட்ட நான் காசு கேட்டு வந்தனா இல்ல எதுக்கு வந்தேன்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல ஏன்னா நானும் உங்க ஆட்களும் பேசின conversation வாய்ஸ் ரெகார்ட் உங்க கிட்ட இருக்கு ஒரு வேல மறந்து இருந்தா அத கேளுங்க !! அண்ட் இது விஷயமா ஜனவரி 2019 எழுத்தாளர் சங்கத்துல நான் புகார் கொடுத்த !!

அப்ப அவங்க ஷூட்டிங் கூட ஆரம்பிக்கல, அப்புறம் உண்மையாவே அந்த இயக்குனர் ஜூலை 2019 கதை பதிவு பண்ணி இருந்தா ஏன் என்கிட்ட அத பத்தி எழுத்தாளர் சங்கம் என்னோட புகாரை விசாரிக்கும் போதே இத சொல்லல !! எதுக்கு என்ன நீதிமன்றத்துக்கு போங்கன்னு எழுத்தாளர் சங்கம் சொல்லணும் !!

இப்ப வர அவங்க கிட்ட இருந்து எந்த பதிலும் வரல !! நாங்க படத்தை தடை செய்யணும்ன்னு ஒரு விதத்துலையும் நினைக்கல !! எங்க நோக்கமும் அது இல்ல !! காசுக்காக விளம்பரத்துக்காக வர்றான், இவனுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு இவ்ளோ பெரிய இயக்குனர பத்தி பேசன்னு நிறைய பேர் சொல்றீங்க, என் உரிமையை எனக்கான அங்கீகாரத்தை கேக்கணும்ன்னு நெனச்ச கேட்ட அவ்ளோதான், இதுக்காக ஒவ்வொரு நாளும் அந்த இயக்குனர் ஆபீஸ் வாசல்ல நிக்கும்போது அவரோட ஆட்கள், செக்யூரிட்டி என்ன பாக்குற விதம் இருக்கே அந்த வலி யாருக்கும் புரியாது, எங்க நோக்கம் இவ்ளோ கோடி இன்வெஸ்ட்மென்ட் பண்ண படத்தை தடை செய்றது இல்ல, அந்த மாதிரி ஒரு கேவலமான எண்ணம் உள்ள ஆட்களும் நாங்க இல்ல, எனக்கு கடவுள் தொணைக்கு இருக்காரு,
நீங்க என்ன பத்தி பொய்யா பேசி உங்க தரத்தை நீங்களே கொறச்சிக்காதிங்க !! Respect your enemy !! அதனால உண்மையா நேர்மையா பேசுங்க !! அதவிட்டுட்டு பணம் கேட்டான் அத கேட்டான்னு சில்ற மாதிரி பேசாதீங்க !!
Ignore negativity !! படத்துல கூட negative கேரக்டர் இல்லனா positive character ஹீரோவுக்கு வேலையும் இல்ல valueவும் இல்ல !! So im happy that im in negative shade in your point of view !! End of the day நான் உங்கள ஜெயிக்கல ஆனா உங்களுக்கு நிகரா சண்ட செஞ்ச !! அது போதும் நெறைய கத்துக்கிட்டு எக்கச்சக்க அனுபவம் இந்த ஒரு வருஷத்துல இது நீங்க சொல்ற காச விட பெருசு so எல்லாத்துக்கும் நன்றி !!

Kp.Selvah

என அவர் பதிவிட்டுள்ளார்.

Continue Reading

Tamil Cinema News

பிகில் – அமெரிக்காவில் எவ்வளவு தியேட்டர்களில் ரிலீஸ்

Published

on

By

பிகில் - அமெரிக்காவில் எவ்வளவு தியேட்டர்களில் ரிலீஸ்

எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராப், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பிகில்’.

இப்படம் அடுத்த வாரம் அக்டோபர் 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

அமெரிக்காவில் இப்படத்தை இதற்கு முன் இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

அது பற்றி அமெரிக்காவில் படத்தை வெளியிடும் பிரைம் மீடியா நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 24ம் தேதியே அமெரிக்காவில் பிரிமீயர் காட்சிகளை நடத்த உள்ளார்களாம். மேலும் அக்டோபர் 25ம் தேதி அமெரிக்கா முழுவதும் 41 மாநிலங்களில், 160 நகரங்களில் 250க்கும் அதிகமான தியேட்டர்களில் படத்தை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

வரும் திங்கள் கிழமை அது பற்றிய முழு விவரத்தையும் அளிக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

Continue Reading

Tamil Cinema News

பிகில், கைதி – அக்டோபர் 25ல் ரிலீஸ்

Published

on

By

பிகில், கைதி - அக்டோபர் 25ல் ரிலீஸ்

2019ம் வருடத்தின் தீபாவளி வெளியீடாக விஜய் நடிக்கும் ‘பிகில்’, கார்த்தி நடிக்கும் ‘கைதி’ ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.

இந்த வருடத்தின் தீபாவளி அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு முன்னதாகவே அந்தப் படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இன்று மாலை இரண்டு படங்களின் வெளியீடு பற்றியும் அடுத்தடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

அதன்படி ‘பிகில், கைதி’ படங்கள் அக்டோபர் 25ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ளன.

இந்த வருட தீபாவளி சினிமா கொண்டாட்டம் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பமாகிறது.

விஜய், கார்த்தி படங்கள் முதல் முறையாக ஒரே நாளில் போட்டியில் குதிக்கின்றன.

கார்த்தியின் ‘கைதி’ பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தான், விஜய்யின் அடுத்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

 

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: