Connect with us

Upcoming Movies

எலி – முன்னோட்டம்

Published

on

சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி.சதீஷ்குமார் தயாரிக்கும் படம் ‘எலி’.

‘தெனாலிராமன்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் யுவராஜ், வடிவேலு கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் இது.

1960களில் பின்னணியில் முழுக்க முழுக்க நகைச்சுவைக் காட்சிகளால் மட்டுமே இப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

பிப்ரவரி 5ம் தேதி சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இரவு பகலாக இடைவிடாமல் நடைபெற்று வருகிறது.

சென்னை, பின்னி மில் வளாகத்தில் அமைக்கப் பெற்ற நட்சத்திர வீடு, பழமையான வீடுகள், பிரம்மாண்டமான வீடுகளின் உள்கட்டமைப்புகள், வில்லனின் ரகசிய இருப்பிடம் என 15க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட அரங்குகள் கலை இயக்குனர் தோட்டாதரணியால் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு, படத்தின் வசனக் காட்சிகள், சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன.

மேலும் பல கோடி ருபாய் செலவில் ஒரு வீடு செட் அமைக்கப்பட்டு, அதில் 15 நாட்களுக்கு மேலாக, புகழ்பெற்ற மும்பை நடனக்கலைஞர்கள் ஆட, பழம் புகழ் நடன இயக்குனர் தாரா அவர்களின் நடன அமைப்பில் ஒரு பாடல் படமாக்கப்பட்டது.

இந்தப் படத்தின் கதையையும், தனது புதுவிதமான கதாபாத்திரத்தையும் கேட்டு கதாநாயகியாக நடிக்க சதா சம்மதித்து, கவர்ச்சியிலும் காமெடியிலும் கலக்கலாக நடித்து வருகிறாராம்.

தொடர்ந்து படப்பிடிப்பில் இருக்கும் ‘எலி’ ஏப்ரல் இறுதியில் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று மே மாதம் திரைக்கு வருகிறது.

குழந்தைகள், பெண்கள் என அனைவரும் பார்க்கும் விதத்தில் நகைச்சுவைக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து இந்த ஆண்டின் கோடைக் கொண்டாட்டமாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப்படத்தில் புகழ்பெற்ற சிறப்பம்சம் ஒன்றும் உண்டு. பூனைகள் துரத்தும் போது எலி எப்படி சமாளிக்குமோ, அதே போன்று சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சியில், வடிவேலு தனது நடிப்பில் ‘எலி’யாக ஒரு பிரம்மாண்டமான சண்டைக்காட்சியில் நகைச்சுவையால் அசத்தியிருக்கிறாராம்.

உலகில் யாரும் இதுவரை செய்திராத வடிவேலுவின் ‘எலி’ நடிப்பு, குழந்தைகளுக்கு சம்மர் ட்ரீட் ஆக இருக்குமாம்.

நடிகர்கள்:

வடிவேலு
சதா
‘கஜினி’ வில்லன் பிரதிப் ராவத்
பெசன்ட் ரவி
மகாநதி சங்கர்
சந்தானபாரதி
பாவா லட்சுமணன்
போஸ் வெங்கட்
பூச்சி முருகன்
ராஜ்கபூர்
வெங்கல் ராவ்
கிருஷணமூர்த்தி

தொழில்நுட்ப கலைஞர்கள்:

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – யுவராஜ் தயாளன்
இசை – வித்யாசாகர்
ஓளிப்பதிவு – பால் லிவிங்ஸ்டன்
படத்தொகுப்பு – VT விஜயன்
கலை – தோட்டாதரணி
பாடல்கள் – புலமைப்பித்தன். விவேகா
நடனம் – தாரா, சிவசங்கர்
சண்டை – சூப்பர் சுப்புராயன்
மேக்கப் – நேரு, பாபு
உடைகள் – முருகன்
தயாரிப்பு மேற்பார்வை – பன்னீர் செல்வம்
தயாரிப்பு நிர்வாகம் – சிவராஜ், வெங்கடேஷ்
டிசைன்ஸ் – மித்ராமீடியா
மக்கள் தொடர்பு – நிகில்
தயாரிப்பு – G சதிஷ் குமார், S அமர்நாத்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Upcoming Movies

மோசடி – விரைவில்…திரையில்…

Published

on

By

மோசடி - விரைவில்...திரையில்...

JCS மூவீஸ் பட நிறுவனம் தயாரிப்பில் ஜெகதீசன் இயக்கும் படம் ‘மோசடி’.

இந்த படத்தில் விஜூ நாயகனாக நடிக்க, நாயகியாக பல்லவி டோரா நடித்துள்ளார். மற்றும் அஜெய்குமார், N.C.B.விஜயன், வெங்கடாச்சலம், நீலு சுகுமாரன், O.S.சரவணன், மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இது முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படமாம்.

படம் பற்றி இயக்குனர் ஜெகதீசன் கூறியதாவது,

“கடந்த 2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி இரவு 8 மணியளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து பெரும் புள்ளிகள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எப்படி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றினார்கள். அதனால் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள். இந்த அறிவிப்பைப் பயன்படுத்தி எப்படி குறுக்கு வழியில் மோசடி செய்தார்கள். இந்த அறிவிப்பு சரியா? தவறா? என்பதை கிரைம் மற்றும் திரில்லருடன் கமர்ஷியல் கலந்து உருவாக்கி உள்ளேன்,” என்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவு – R.மணிகண்டன்
இசை – ஷாஜகான்
பாடல்கள் – மணிஅமுதவன், K.ஜெகதீசன்
எடிட்டிங் – S.M.V.சுப்பு, கோபி ரா நாத்
நடனம் – விமல், பாலா
தயாரிப்பு – JCS மூவீஸ்
கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் – K.ஜெகதீசன்

Continue Reading

Upcoming Movies

சிறகு – விரைவில்…திரையில்…

Published

on

By

சிறகு - விரைவில்...திரையில்...

உறவுகளின் புரிதல் தேடிப் பயணிக்கும் இரு இளைஞர்களின் கதை. இசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம்.

சென்னையில் தொடங்கும் இப்பயணம் கன்னியாகுமரி வரை நீள்கிறது. எல்லோரும் இயந்திர கதியில் ஓடிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இயற்கையோடு இயைந்த பயணமும் இசையுமே புத்துணர்வைக் கொடுக்கும் என்கிறது ‘சிறகு’.

‘மெட்ராஸ் ‘, ‘கபாலி’, ‘வடசென்னை ‘, ‘சண்டைக்கோழி-2 ‘, ‘பரியேறும் பெருமாள் ‘, ஆகிய படங்களில் நடித்த ஹரி கிருஷ்ணன் இப்படத்தின் நாயகன். நடனத்திலும், யோகாவிலும் பயிற்சி பெறற அக்ஷிதா இப்படத்தின் நாயகி.

டாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் ஆகியோர் இரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். காளி வெங்கட் நட்புக்காக இணைந்துள்ளார் .

மனதை வருடும் பாடல், இதயத்தை நனைக்கும் பாடல், துள்ளலான பாடல் என இசை வடிவம் கொடுத்திருக்கிறார் அரோல் கொரேலி.

திரைப்படத்துறையில் அனுபவம் மிக்க எக்சிகியூடிவ் புரொடியூசராக பல ஆண்டுகள் பணியாற்றிய மாலா மணியன் தனது ஃபர்ஸ்ட் காப்பி புரொடக்ஷன்ஸ் மூலம் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட குட்டி ரேவதி இப்படத்தை இயக்கியிருக்கிறார் .

தயாரிப்பு : மாலா மணியன்
எழுத்து & இயக்கம் : குட்டி ரேவதி
ஒளிப்பதிவு : ராஜா பட்டச்சார்ஜி
இசை : அரோல் கொரேலி
படத்தொகுப்பு : அருண் குமார் VS
பாடல்கள் : குட்டி ரேவதி, அறிவு
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Continue Reading

Upcoming Movies

பைரி – விரைவில்…திரையில்…

Published

on

By

பைரி - விரைவில்...திரையில்... - 4 Tamil Cinema

டிகே புரொடக்‌ஷன்ஸ் சார்பாக, V. துரைராஜ் தயாரிக்கும் முதல் திரைப்படம் ‘பைரி’.

புறா பந்தயத்தை மையமாக வைத்து, இந்திய சினிமாவில் சில திரைப்படங்கள் வந்திருந்தாலும், புறா பந்தயத்தின் தீவிரத்தையும், அதில் ஈடுபடுபவர்களின் வாழ்வியலையும் குறித்தும் முழுமையாகப் பேசும் ஒரு திரைப்படமாக உருவாகி வருகிறது ‘பைரி’.

குமரி மாவட்டத்தின் தலைநகரமான, நாகர்கோவிலும், அதன் சிறப்புகளும் அனைவரும் அறிந்ததே. ஆனால் 100 ஆண்டுகளுக்கு மேலாக நாகர்கோவில் நகரில், நடந்த புறா பந்தயங்கள் பற்றிய பெரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், பலருக்கும் இது குறித்து தெரியாமலேயே இருந்து வருகிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, நாகர்கோவில் நகரில் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்த புறா பந்தயத்தை மையமாக வைத்து, நடந்த பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், உருவாகி வரும் திரைப்படமே ‘பைரி’.

நாளைய இயக்குநர் சீஸன் 5-ல் கலந்து கொண்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, ‘நெடுஞ்சாலை நாய்கள்’ என்ற குறும் படத்திற்காக சீஸன் 5-ன் சிறந்த வசனகர்த்தா விருது பெற்ற ஜான் கிளாடி இத்திரைப்படத்தை இயக்குகிறார். இவர் சஞ்சீவ், மற்றும் சில இயக்குநர்களிடமும் உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்று நாளைய இயக்குநர் சீஸன் 3– ல் முதல் பரிசு வென்ற, ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ உட்பட பல குறும்படங்களை, நண்பர்களின் வளர்ச்சிக்காக தயாரித்து, 25-க்கும் மேற்பட்ட குறும்படங்களில் கதாநாயகனாக நடித்த சையத் மஜீத் , இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

கதாநாயகிகளாக மேக்னா, சரண்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் விஜி சேகர், SR.ஆனந்த குமார், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், கார்த்திக் பிரசன்னா, தினேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் நாகர்கோவில் நகரைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு, நாகர்கோவிலையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வேகமாக நடந்து வருகிறது.

ஒளிப்பதிவு – ஏ.வி. வசந்த்
படத்தொகுப்பு – R.S சதீஸ் குமார்
இசை – அருண் ராஜ்
பாடல்கள் – பிரான்சிஸ் கிருபா, கவித்ரன்
ஆக்‌ஷன் – விக்கி
ஒலிப்பதிவு – ராஜா
நடனம் – சிவ கிரிஷ்
தயாரிப்பு மேற்பார்வை – மாரியப்பன், விசு
பி.ஆர்.ஓ.– சக்தி சரவணன்

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!