Connect with us

Tamil Cinema News

சோபிக்காத 37 இசையமைப்பாளர்கள் – வைரமுத்து பேச்சு

Published

on

சோபிக்காத 37 இசையமைப்பாளர்கள் - வைரமுத்து பேச்சு

தமிழ் சினிமா தந்த தரமான இயக்குனர்களில் ஒருவர் கே. பாலசந்தர். அவரின் உதவியாளர் மோகன் நடத்திய ‘கே பி 90’ நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், திரையலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் சிவகுமார் பேசுகையில்,

‘இயக்குனர் ஐயா அவர்களுக்கு பிடித்த ஐந்து படங்களில், மூன்று படங்களில் நான் தான் ஹீரோ. இதை விட ஒரு பெருமை வேண்டுமா ?. என் வாழ்வில் நான் ரசித்த, நான் நெகிழ்ந்த, நான் மகிழ்ந்த ஒரு இயக்குனர் என்றால் அது ஐயா கே பாலசந்தர் அவர்கள் தான்.

வளரும் இயக்குனர்கள் பலர், இவரது வாழ்க்கை வரலாறை எடுத்து பார்த்தாலே போதும், ஒரு நல்ல இயக்குனருக்கான அங்கீகாரத்தை நீங்கள் பெறுவீர்கள்.

காதல் கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதை எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக அவர் உருவாக்கிய படம் தான் ‘அக்னி சாட்சி’. அதை விட தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான படத்தை வேறு எந்த இயக்குனரும் இயக்கிவிட முடியுமா?.

ஒரே ஒரு இயக்குனர், ஒரே ஒரு சிகரம், அது கே பாலசந்தர் மட்டுமே. அவரது இடத்தை வேறு யாரும் பூர்த்தி செய்ய முடியாது,” என்றார்.’

வைரமுத்து பேசுகையில்,

“ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றினேன். ஒரு நிலையில் அந்த இசையமைப்பாளருடன் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது . என்ன செய்வது என்று அறியாமல் ஏழு ஆண்டுகள் இருந்தேன் . காரணம் நான் பிரிந்த அந்த இசை அமைப்பாளரின் திறமையும் ஆளுமையும் பெரியது.

அந்த ஏழு ஆண்டுகளில் ஒரு நல்ல இசை அமைப்பாளரை உருவாக்குவோம் என்று எண்ணி 37 இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றினேன், யாரும் சோபிக்கவில்லை .

அந்த நிலையில் ஒரு நாள் பாலச்சந்தரிடம் இருந்து அழைப்பு வந்தது . போனால் திலீப் என்ற புது இசை அமைப்பளார் . பாலசந்தரின் மூன்று படங்களுக்கு என் பாடல், திலீப்பின் இசை . மூன்று படத்திலும் பாடல்கள் ஹிட் . திலீப்தான் ஏ ஆர் ரகுமான் . மீண்டும் களம் எனக்கு வந்தது. திரையுலகில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா . மீட்டெடுத்தவர் பாலச்சந்தர்.

‘புன்னைகை மன்னன்’ படத்தில் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ பாடலில் ‘ஆதரவாய் சாய்ந்து விட்டாள் ஆரிரரோ பாடு’ என்ற வரிகளில் கேமராவை தாலாட்டிய தொழில் நுட்ப மேதை அவர் .

பாலசந்தரின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அதை அரசே செய்ய வேண்டும் . பாலச்சந்தர் மட்டுமல்ல பல சாதனையாளர்களின் சாதனைகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அது பாலச்சந்தரில் இருந்து துவங்க வேண்டும்,” என்றார்.

இவ்விழாவில், சமுத்திரக்கனி, கலைப்புலி எஸ் தாணு, விவேக், டெல்லி கணேஷ், சச்சு, மனோபாலா, இயக்குனர் பேரரசு, ரமேஷ் கண்ணா, இயக்குனர் சுரேஷ் , எம் எஸ் பாஸ்கர், ராஜேஷ், ஆர் கே செல்வமணி, ஆர்வி உதயகுமார், படவா கோபி, கணேஷ் ஆர்த்தி, இயக்குனர் அஸ்லாம், ஐந்து கோவிலன், மற்றும் நூற்றுக்கணக்கான சீரியல் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு பாலசந்தருக்கு அஞ்சலி செலுத்தினர்.

Tamil Cinema News

திட்டம் போட்டு திருடுற கூட்டம் – என்ன புதுமை ?

Published

on

By

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - என்ன புதுமை ?

டு மூவி பஃப் நிறுவனம் தயாரிப்பில் சுதர் இயக்கத்தில் பார்த்திபன், கயல் சந்திரன் மற்றும் பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’.

இப்படத்தை SDC பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 27ம் தேதியன்று வெளியிடுகிறது.

படம் பற்றி இயக்குனர் சுதர் கூறுகையில்,

“கிரிக்கெட் உலகக் கோப்பையை திருடுவதே ஒரு தனித்துவமான யோசனை தான். அதையும் தாண்டி திட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் நான் என்ன தனித்துவம் பார்க்கிறேன் என்றால், இதில் எல்லா காட்சிகளும் இதுவரை யாரும் பார்க்காத காட்சிகளாக இருக்கும்.

பொதுவாக மற்ற படங்களில் சென்டிமென்ட் காட்சியோ, காதல் காட்சியோதான் பொதுவாக இருக்கும், நடிகர்கள் மட்டும் தான் ஒவ்வொரு படத்திற்கும் மாறிக் கொண்டிருப்பாரகள். ஆனால் இந்தப் படத்தில் காட்சிக்கு காட்சி புதுமை இருக்கும். ஒவ்வொரு காட்சியும் வேறு எந்த படத்திலும் எந்த வடிவிலுமே பார்த்திருக்காத வகையில் இருக்கும்.

கலை இயக்கத்தை பற்றி சொல்லியாக வேண்டும், எங்கள் கலை இயக்குனர் மிகச் சிறப்பாக தன் பங்கை அளித்துள்ளார். மியூசியம் செட் ஒன்று படத்தில் உள்ளது. அது செட் என்றே தெரியாத வகையில் அத்தனை வெண்கல சிற்பங்களை கொண்டு துல்லியமாக வடிவமைத்து உள்ளார்.

எங்கள் ஒளிப்பதிவாளர் அவரின் ஒளிப்பதிவின் மூலம் படத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றுள்ளார். படம் அவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும்,” என்கிறார்.

Continue Reading

Tamil Cinema News

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்

Published

on

By

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன்பென்ச் பிலிம்ஸ், ‘மேயாத மான், மெர்க்குரி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஒரே சமயத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்களைத் தயாரிக்கிறது.

இரண்டு படங்களுமே நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள். ஒரு படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார்.

அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை ரதீந்திரன் ஆர் பிரசாத் இயக்குகிறார்.

பிரித்வி சந்திரசேகர் இசையமைக்க. இத்தாலிய ஒளிப்பதிவாளர் ரொபர்டோ ஸஸ்ஸாரா ஒளிப்பதிவு செய்கிறார்.

ஒரு த்ரில்லர் படமாக உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் ஆரம்பமாகியுள்ளது.

தொடர்ந்து நடைபெற்று அடுத்து ஆண்டு துவக்கத்தில் படத்தை வெளியிட உள்ளார்கள்.

Continue Reading

Tamil Cinema News

பாதுகாப்பு அதிகாரியின் பரபரப்பு ‘காப்பான்’

Published

on

By

பாதுகாப்பு அதிகாரியின் பரபரப்பு காப்பான் - 4 Tamil Cinema

‘அயன், மாற்றான்’ ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குனர் கே.வி.ஆனந்த், சூர்யா இணைந்துள்ள மூன்றாவது படம் ‘காப்பான்’.

ஒரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படம் இந்த வாரம் செப்டம்பர் 20ம் தேதி வெளியாகிறது.

படத்தின் சிறப்புகள் பற்றி இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறியதாவது,

1987, 88 கால கட்டங்களில் நாவல் ஆசிரியர்களான சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோர் எழுதிய நாவல்களுக்கு அட்டைப்பட புகைப்படங்கள் எடுத்து கொடுத்திருக்கிறேன்.

இயக்குனர் ஆன பிறகு சுபா அவர்களுடன் இணைந்து பல படங்கள் பணியாற்றினேன். பட்டுக்கோட்டை பிரபாகருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நினைத்த போது இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், அவர்களின் சாகசம் ஆகியவற்றைப் பற்றிய கரு ஒன்று கிடைத்தது.

‘அயன், மாற்றான்’ படங்களில் என்னுடன் இணைந்த சூர்யாவிடம் ‘காப்பான்’ கதையைச் சொன்னேன். அவருக்கும் பிடிக்கவே இப்படம் ஆரம்பமானது.

பிரமதராக மோகன்லால், அவருடைய பாதுகாப்பு சிறப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். அவர் பிரதமரைக் காப்பாற்றுகிறாரா, வேறு சதி செய்கிறாரா, கொலை செய்ய நினைக்கிறாரா, தனது உயிரை விடவும் தயாராக இருக்கிறாரா என பல கோணங்களில் இந்தக் கதை நகர்கிறது.

இப்படத்திற்காக டில்லியில் உள்ள தேசிய பாதுகாப்புப்படை பிரிவில் துப்பாக்கி சுடுதல், உடற்பயிற்சி உள்ளிட்ட சில பயிற்சிகளை சூர்யா மேற்கொண்டார்.

போலீஸ், மிலிட்டரி வேலைகளும், தேசிய பாதுகாப்புப் படை பணியும் வெவ்வேறானாவை. இவர்கள் யாருடைய அதிகாரத்திற்கும் கட்டுப்படத் தேவையில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கலாம்.

போலீஸ், மிலிட்டரி, எல்லை பாதுகாப்புப் படை ஆகியவற்றில் பணியாற்றும் திறமையான, விசுவாசமான வீரர்களை பல கட்ட தேர்வுக்குப் பின் இந்த பாதுகாப்புப் பிரிவுக்குத் தேர்வு செய்வார்கள்.

த்ரில்லர் பாணியில் இந்தப் படத்தின் கதை இருக்கும். இப்போதெல்லாம் படம் பார்க்க வருபவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். திரைக்கதை வேகமாகப் போக வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்கேற்பட இந்தப் படத்தில் காட்சிகளை வைத்திருக்கிறேன்.

மோகன்லால் வித்தியாசமான ஒரு நடிகர். சினிமா மீது அவ்வளவு காதல் இருப்பதால்தான் இன்றும் நடித்துக் கொண்டிருக்கிறார். ரொம்பவும் இயல்பாக நடிப்பார். மிகவும் டெடிகேஷனாக நடிப்பார்.

இப்படத்தில் சமுத்திரக்கனி சூர்யாவுன் பணிபுரியும் சக அதிகாரியாக நடிக்கிறார். ஆர்யாவும் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ரசிகர்களுக்கும் எனக்கும் செட்டாகவில்லை என்று தெரிந்தால் சினிமாவை விட்டு வேறு வேலைக்குப் போய்விட வேண்டும் என்பது என் பாலிசி,” என்கிறார்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: