Connect with us

Tamil Cinema News

‘வெள்ளைப் பூக்கள்’ குழுவினர், ஓர் அறிமுகம்

Published

on

வெள்ளைப் பூக்கள் குழுவினர், ஓர் அறிமுகம்

இன்டஸ் என்டர்டெயின்மென்ட்ஸ், டென்ட் கொட்டா தயாரிப்பில், விவேக் இளங்கோவன் இயக்கத்தில், ராம்கோபால் இசையமைப்பில், விவேக், சார்லி, தேவ், பூஜா தேவரியா மற்றும் பலர் நடிக்கும் படம் வெள்ளைப் பூக்கள். ஏப்ரல் 19ம் தேதி வெளிவர உள்ள இப்படத்தை அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கியுள்ளார்கள். அவர்களைப் பற்றிய ஓர் சிறிய அறிமுகம்…

விவேக் இளங்கோவன் : இயக்குனர்

மென்பொருள் பொறியாளராக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தாலும், விவேக் நாடகத்துறையில் அனுபவமிக்கவராக, ஒரு இயக்குனராக, ஒரு எழுத்தாளராக தன்னை பதிவு செய்வதில் பேரார்வம் கொண்டவர். இண்டஸ் குழுமத்தின் பல்வேறு நாடக மற்றும் திரைப்படத் தயாரிப்புகளில் இயக்குனர் குழுவில் பங்கு பெற்றிருக்கிறார். அவரது குறும்படங்களான ‘ஓடம்’ மற்றும் ‘நவம்’ சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றிருப்பது அவரது ஆளுமைக்கு சான்றாக அமைகிறது.

ஜெரால்ட் பீட்டர் : ஒளிப்பதிவாளர்

மென்பொருள் பொறியாளராக / வணிக ஆய்வாளராக பணிபுரிந்தாலும், ஜெரால்ட் நாடகம் மற்றும் நாட்டியத்தில் அனுபவமும், ஈடுபாடு மிக்கவராக, ஒரு ஒளிப்பதிவாளராக, தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் பேரார்வம் கொண்டவர். ‘ஓடம்’ மற்றும் ‘நவம்’ உள்ளிட்ட குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு குழுவை தலைமையேற்று நடத்தி, அவற்றை பல்வேறு சர்வதேச விருதுகளுக்கு தகுதி பெறச் செய்ததில் இவரது பங்கு அளப்பரியது.

இராம்கோபால் கிருஷ்ணராஜூ : இசை அமைப்பாளர்

மென் பொருள் பொறியாளராக அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்தாலும், பாரம்பரிய இசையில் தேர்ச்சி பெற்ற ஓர் இசையமைப்பாளர். தமிழக அரசால் ‘கலை இளமணி’ விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டவர். பல்வேறு இண்டஸ் குழும நாடகங்களுக்கும், குறும்படங்களுக்கும் இசை அமைத்திருக்கும் இவர், ‘ஓடம்’ மற்றும் ‘நவம்’ குறும்படங்களுக்கும் இவருடைய இசை மிகப் பெரிய பலமாக அமைந்தது எனலாம்.

திகா சேகரன் : தயாரிப்பாளர்

ஒரு அனுபவமிக்க தொழிட்நுட்ப நிர்வாகியும் மற்றும் முன்னாள் மைக்ரோசாப்ட் / ஸ்கைப் இயக்குனர். இண்டஸ் குழுமத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இக்குழுமத்தின் பல்வேறு படைப்புகளுக்கு இவரது பங்கு அளப்பரியது. கலை, படைப்புத்திறன், மற்றும் ஒத்த கருத்துடைய மாந்தர்களோடு சேர்ந்து பணியாற்றுவது இவரது பேரார்வம்.

வருண் குமார் : தயாரிப்பாளர்

மென்பொருள் பொறியாளரான வருண் டென்ட் கோட்டாவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். திரைப்படத்தின் மீதான இவரது பேரார்வம் முறையாக, சட்டரீதியாக நல்ல உயர் தரமான திரைப்படங்கள் மக்களுக்குக் கிடைக்க வேண்டுமென்பதே. அமெரிக்காவில் ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் விநியோக உரிமை பெற்றவராகவும் இருக்கிறார்.

அஜய் சம்பத் : தயாரிப்பாளர்

அஜய் ஒரு தரவு விஞ்ஞானியாக இருந்த போதும், இண்டஸ் தயாரிப்பு குழுமத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகவே தன்னை நிலைநிறுத்தியுள்ளார். பல்வேறு சர்வதேச விருதுகளை வென்ற ‘ஒடம்’ மற்றும் ‘நவம்’ குறும்படத்தின் பிரதான தயாரிப்பாளரும் இவரே. படைப்பாற்றலை நிஜமாக, நிதர்சனமாக மடைமாற்றுவது இவரது விசித்திரமான திறமைகளுள் ஒன்று.

விவேக் : நடிகர்

இந்திய திரைப்பட நடிகரான பத்மஸ்ரீ விவேக் 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். இவர் ஒரு சமூக ஆர்வலரும் கூட. சத்யபாமா பல்கலைகழகம் திரைத்துறையின் மூலம் சமுதாய பங்களிப்பிற்காக இவருக்கு ‘கௌரவ டாக்டர்’ பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

சார்லி : நடிகர்

சார்லி, ஏறத்தாழ 670க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் துணை வேடங்களில் நடித்திருக்கும் ஒரு இந்திய நடிகர். நடிப்பு திறனுக்காகவும், பிறர் பாணியில் பிரதிபலிப்பு திறமைகளுக்காகவும் போற்றபடுகிறார்.

பூஜா தேவரியா : நடிகை

இயக்குனர் செல்வராகவனின் ‘மயக்கமென்ன’ திரைப்பட நாயகி. ‘ஸ்ட்ரே பாக்டரி’ நிறுவனத்துடன் இணைந்து விரிவாக பணியாற்றியிருக்கிறார். ‘இறைவி’ மற்றும் ‘குற்றமே தண்டனை’ திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்.

தேவ் : நடிகர்

‘வாயை மூடி பேசவும்’ மற்றும் ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படங்களில் இவரது நடிப்பு விமர்சன ரீதியாக வெகுவாக பாராட்டப்பட்டுள்ளது. இவர் ‘மேட் பாய்ஸ் கிரியேடிவ்ஸ்’ என்ற விளம்பர, குறும்பட, மற்றும் பெரு நிறுவன காணொளி தயாரிக்கும் நிறுவனத்தில் மேலாண்மை பங்குதாரராகவும் இருக்கிறார்.

பெய்ஜ் ஹெண்டர்சன் : நடிகை

நடிகை, தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்ட ஹாலிவுட் நடிகையான இவர், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை தனது இருப்பிடமாக கொண்டிருக்கிறார். ‘ஸ்வெல்ட் டாக் ப்ரொடக்ஷன்ஸ்’ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை தலைமையாக கொண்டு இயங்கும் நாடக நிறுவனமான ‘லிமினல் ஸ்பேஸ் பிளேயர்ஸ்’ நிறுவனத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர்.

பிரவீன் KLகே எல் : படத்தொகுப்பாளர்

‘ஆரண்ய காண்டம்’ என்ற தமிழ் திரைப்படத்திற்காக இந்திய அரசின் தேசிய விருதை பெற்றவர். நான்கு மொழிகளில் ஏறத்தாழ 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார். மேலும் ‘சரோஜா’ திரைப்படத்திற்காக, கடந்த 2008 ஆண்டு தமிழக அரசின் ‘சிறந்த படத்தொகுப்பாளர்’ விருதையும் வென்றிருக்கிறார்.

குனால் ராஜன் : ஒலி பொறியாளர்

இவர் ஹாலிவுட் படங்களில் பணியாற்றும் சிறந்த ஒலி பொறியாளர்களில் ஒருவர். விஸ்வரூபம், தூங்காவனம், பேட்ட, உத்தமவில்லன், மெர்க்குரி உள்ளிட்ட முன்னணி திரைப்படங்களில் பணியாற்றியவர். மேலும், ‘ரேஸ் டு விட்ச் மவுண்டைன்’ மற்றும் ‘பேன்டாஸ்டிக் 4’ உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களிலும் பணியாற்றிய அனுபவமிக்கவர்.

பாலாஜி கோபால் : கலரிஸ்ட்

பாலாஜி, விருதுகள் பல வென்ற ஒரு சிறந்த இந்திய கலரிஸ்ட் மற்றும் டிஜிட்டல் திரைப்பட வடிவமைப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 60க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியவர். லிங்கா, மெட்ராஸ், வேலைக்காரன், லென்ஸ், ஆண்டவன் கட்டளை, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் இவரது பணி சிறப்பித்து போற்றப்படுகிறது.

மதன் கார்க்கி : பாடலாசிரியர்

மதன் கார்க்கி வைரமுத்து ஒரு இந்திய பாடலாசிரியர், திரை எழுத்தாளர், ஆராய்ச்சி இணைப்பாளர், மென்பொருள் பொறியாளர், மற்றும் தொழிலதிபர். மாபெரும் வெற்றி படங்களான எந்திரன், 2.0, பாகுபலி 1,2, துப்பாக்கி மற்றும் கத்தி திரைப்படங்களில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

Tamil Cinema News

வெளியில் இருந்த நான் உள்ளே – யோகி பாபு

Published

on

By

வெளியில் இருந்த நான் உள்ளே - யோகி பாபு

4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, கனடா மாடல் எலிஸா நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் கூர்கா.

ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கும் படத்தை லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டு, வாழ்த்தி பேசினார்.

நிகழ்சசியில் பேசிய இயக்குனர் சாம் ஆண்டன்,

“ஒரு ஜாலியான படம் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் உருவான படம்தான் ‘கூர்கா’. 34 நாட்களில் படத்தை முடிக்க வேண்டும், நாங்களே தயாரிக்கிறோம் என்ற போது நிறைய சிரமங்கள் இருந்தது. யோகிபாபு யாருக்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை எங்களுக்கு கொடுத்திருக்கிறார். ஒரே கட்டமாக மொத்தமாக தேதிகளைக் கொடுத்தார். ரொம்ப பிஸியாக இருந்தாலும், தனக்கென ஓய்வுக்கு நேரம் ஒதுக்காமல் எல்லா படங்களுக்கும் தேதிகளைக் கொடுத்து, அவர் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார்,” என்றார் இயக்குனர் சாம் ஆண்டன்.

“எனக்கும், சாம் ஆண்டனுக்கும் நட்பு உருவானதே ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தில் இருந்துதான். எனக்கு மிகவும் சுதந்திரம் கொடுத்த ஒரு இயக்குனர். அதுதான் அடுத்தடுத்து அவர் இயக்கத்தில் தொடர்ந்து என்னை நடிக்க வைக்கிறது. சத்யம் தியேட்டர் வெளியில் இருந்த நான் இந்த இடத்தில், மேடையில் இருக்கிறேன், அதற்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி,” என்றார் நடிகர் யோகி பாபு.

“எனக்கு பாடல் பாடுவது மட்டுமே தெரியும். மற்ற விஷயங்களைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. ஆனாலும், சினிமா துறையில் எவ்வளவோ பேர் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். ஒரு படம் வெற்றியடைந்தால்தான் அனைவருக்கும் வாழ்க்கை. இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். தண்ணீரை யாரும் வீணாக்க வேண்டாம், தண்ணீர் என்பது தங்கம், பிளாட்டினத்தை விட விலை மதிப்புடையது. தண்ணீர் சேமிப்பு என்பது மிக முக்கியம். அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டு செல்வது அது ஒன்றே,” என்றார் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம்.

‘கூர்கா’ ஜுன் 28ம் தேதி வெளியாக உள்ளது.

Continue Reading

Tamil Cinema News

‘சிந்துபாத்’ கதையைச் சொன்னால் அதுவே தலைப்புச் செய்தி

விஜய் சேதுபதி பேச்சு

Published

on

By

'சிந்துபாத்' கதையைச் சொன்னால் அதுவே தலைப்புச் செய்தி

கே புரொடக்ஷன்ஸ், வன்சன் மூவீஸ் தயாரிப்பில், அருண்குமார் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, அஞ்சலி மற்றும் பலர் நடிக்கும் படம் சிந்துபாத்.

இப்படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, இயக்குனர் அருண்குமார், தயாரிப்பாளர் ராஜராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

விஜய் சேதுபதி பேசுகையில்,

“பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அருண் உடனான அறிமுகம் நட்பாக மாறியது. அதன் பிறகு அவர் எனக்கு சௌகரியமான நண்பராக மாறினார். பிறகு அவரிடம், என்னைத் தவிர்த்து வேறு நடிகர்களை வைத்து இயக்குவதற்கு முயற்சி செய் என்று அறிவுரை கூறினேன். ஆனால் திரையுலகில் யாரும் அவரை நம்பவில்லை. பிறகு நானே அழைத்து ‘சேதுபதி’ பட வாய்ப்பைக் கொடுத்தேன். அதன் பிறகு நானே சில முன்னணி ஹீரோக்களிடம் கதை சொல்லுமாறு வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்தேன். ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக அந்த முயற்சியும் நடைபெறவில்லை. பிறகு மீண்டும் அவரை அழைத்து இந்த பட வாய்ப்பினை அளித்தேன். தற்போதும் இந்த படம் ஹிட் ஆன பிறகு வெளியில் சென்று வேறு இயக்குனர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

அருணின் தனி சிறப்பு என்னவென்றால் நாயகனை மிக மிக நல்லவனாகவும், நாயகியை கண்ணியமானவளாகவும், அழகுணர்ச்சி மிக்கவளாகவும், இயல்பானவளாகவும் வடிவமைப்பார். அதேபோல் வாழ்க்கையில் இடம் பெறக்கூடிய சின்ன சின்ன அழகான சம்பவங்களை ரசித்து, அதனை நேர்த்தியாக காட்சிப்படுத்த கூடிய திறமைசாலியும் கூட. அழகை நன்றாக ரசிக்கக் கூடியவர். சினிமாவில் தொடங்கிய அவருடைய நட்பு, பிறகு என்னுடைய குடும்ப நண்பரானார். அதனால் தான் என்னுடைய மகன் சூர்யாவை இந்த படத்தில் நடிக்க வைப்பதற்கு ஒப்புக் கொண்டேன். இந்த படத்தில் நான் நடிக்கிறோனோ இல்லையோ சூர்யா நடிப்பது உறுதி என்று இந்த படத்தின் பணிகள் தொடங்குவதற்கு முன்பே அருண் என்னிடம் கூறியிருந்தார்.

சிந்துபாத் நமக்கு எல்லோருக்கும் நன்கு தெரிந்த அறிமுகமான கணவன் மனைவி பற்றிய எமோஷனல் படம். இதில் ஏராளமான சுவராசியமான காரணிகள் இருக்கிறது. அதனை விவரித்தால் அதுவே நாளை தலைப்பு செய்தியாகிவிடும். அதனால் அதை கடந்து விடுகிறேன். ஒருவனுடைய மனைவியை, ஒரு கும்பல் கடத்தி சென்று, கடல் கடந்து ஒரிடத்தில் சிறை வைத்திருக்கிறது. அந்த மனைவியை கணவன் கஷ்டப்பட்டு, போராடி எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை.

இந்த படத்தில் அஞ்சலி, விவேக் பிரசன்னா, லிங்கா ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கிறது. இவர்கள் கதையின் தூண்களும் கூட. படத்தில் நாயகனுக்கு காது சற்று மந்தம். உரத்துப் பேசினால் தான் கேட்கும். இது ஒரு சுவாரசியமான அம்சம். நடிகை அஞ்சலி இயல்பாகவே சத்தமாக பேசக்கூடிய கேரக்டர் . அவர் இந்த கேரக்டரில் பொருத்தமாக நடித்திருந்தார். அவரைத் தவிர வேறு யாரையும் இந்த கதாபாத்திரத்தில் சிந்திக்க முடியவில்லை.

இந்த படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார் லிங்கா. நல்ல பையன். சற்று படபடப்பாகவும் பதற்றமாகவும் இருப்பார். ஆனால் நல்ல நடிகன். தன்னுடைய வேலையை மிகச் சரியாக நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்று எண்ணக் கூடியவர். மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனே அதை எனக்கு அனுப்பி, இவர்களுக்கு என்ன செய்யலாம் என்று கேட்பார். அவருக்கு நான் கோபப்படாதே நாம் வருத்தம் மட்டும் தான் பட முடியும். அதிகாரம் யார் கையில் இருக்கிறதோ அவர்கள்தான் இதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நாம் வருத்தம் மட்டுமே பட முடியும். மக்களுடைய வாழ்க்கை அழகாக இருக்க வேண்டும் என்று அவர்களின் அணுக்கமாக இருந்து நினைக்கக் கூடிய நல்ல உள்ளம் படைத்தவன். அவர் எதிர்காலத்தில் என்னைவிட சிறந்த நடிகராக வளரக் கூடும் என்று நம்புகிறேன்.

விவேக் பிரசன்னா ரொம்ப சின்சியரான நடிகர். தன்னை சுற்றி இருப்பவர்களை எளிதாக கிரகிக்கக்கூடியவர். இந்த படத்தில் 23 வயதுடைய பெண்ணுக்கு தந்தையாக அற்புதமான கேரக்டரில் நடித்திருக்கிறார் .அவரால் மட்டுமே இதுபோல் வித்தியாசமாக நடிக்க முடியும். மேயாத மான் படத்தில் 25 வயது நாயகனுக்கு நண்பனாகவும் நடிக்க முடிகிறது.

படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் கிளைமாக்ஸ் போலிருக்கும். ஏனென்றால் தொடர்ந்து சேசிங் இருக்கும். யுவனைப் பற்றி நான் சொல்லி எதுவும் ஆகப்போவதில்லை. நான் மிகவும் ரசிக்கும் ஆளுமை யுவன் சங்கர் ராஜா. அவருடைய இசை தன்மையாக இருக்கும். மனதிற்கு நெருக்கமாக இருக்கும். எந்த சூழலிலும் இடையூறு ஏற்படுத்தாத, நம்பகத்தன்மை மிக்கதாக இருக்கும். அவருடைய இசையை கேட்கும்போது, நம்முடைய இசை கேட்பது போல் இருக்கும். ராஜா சார் இசை மீது இருக்கும் ஈர்ப்பு போல, இவருடைய இசை மீது ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது,” என்றார்.

Continue Reading

Tamil Cinema News

எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்‘

Published

on

By

ஜிவி பிரகாஷ் நடிக்கும் ஆயிரம் ஜென்மங்கள்

அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரிப்பில் எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், ஈஷா ரெபா மற்றும் பலர் நடிக்கும் படத்திற்கு ‘ஆயிரம் ஜென்மங்கள்’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

சதீஷ், ஆனந்தராஜ், சாம்ஸ், நிகிஷா பட்டேல், சாக்ஷி அகர்வால், கோவை சரளா, மதுமிதா, ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், வையாபுரி, வெண்பா, மனோபாலா, சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

ரஜினிகாந்த் நடித்து 1978ல் வெளிவந்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் பெயரை 41 வருடங்கள் கழித்து மீண்டும் வைத்திருக்கிறார்கள்.

தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், ‘வேதாளம், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி, 1, சென்னை 28 – 2ம் பாகம், இது நம்ம ஆளும் காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன்’ உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் பி பிள்ளை, தற்போது தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக புதிய பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வருகிறார்.

முதல் படமாக ‘சொல்லாமலே’ துவங்கி, ‘பிச்சைகாரன்’ வரை பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி வி பிரகாஷ் குமார் நடிக்க ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்.

அதைத் தொடர்ந்து இந்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தைத் தயாரித்து வருகிறார்கள்.

‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பூவெல்லாம் உன் வாசம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ போன்ற வெற்றிப் படங்களைத் தந்த இயக்குனர் எழில், இந்த முறை ஒரு வித்தியாசமான திகில் கதையை, அவருக்கே உரிய பாணியில் படமாக்கி வருகீறார்.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் வேலை தேடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனுக்கு, வெளி நாட்டில் பேய் பிடித்த ஒரு நபரிடம் இருந்து, பேயை விரட்ட வேண்டும் என்ற சவாலான வேலை வருகிறது. அந்த சவாலான வேலையை ஏற்றுக்கொண்ட ஹீரோ, பேயை விரட்டி அந்த நபரை காப்பாற்றினாரா, இல்லையா என்பதே இப்படத்தின் கதை.

யூகே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை கோபி கிருஷ்ணா கவனிக்கிறார்.

சத்யா இசையமைக்க, யுகபாரதி, விவேக், ராகேஷ், கருங்குயில் கணேஷ் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். கதை, வசனத்தை எ முருகன் எழுதுகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!